Banner 468 x 60px

 

Wednesday, April 23, 2014

மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு..!

0 comments


                               
பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucailleதலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Mauriceஅவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும்
ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார்.
அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும், மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.
Read more...

மஹ்ஷரும் முஸ்லிம் இளைஞர்களும்

0 comments

                        

அன்புள்ள சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)முன்னுரைஇன்றைய  காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு  இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை  ஒவ்வொரு  குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான்.இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள்  உள்ளன.

ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம்  கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில்  பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்.
மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள்!  இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை  திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும்  அவர்கள் மனம் உடைந்து  போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக  என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம்  இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்.

மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்
1) வாழ்நாளை எப்படி கழித்தான்,
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

குறிப்பு-
இங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே! தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)

இனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்! நான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன்! இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்! அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்!

அல்லாஹ்:-
ஆதமின் மகனே! நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்?

இன்றைய இளைஞன்
என் இறைவா! கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.

அல்லாஹ்:-
ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன?
இன்றைய இளைஞன்:-
என் இறைவா! நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!

அல்லாஹ் (இவ்வாறு சொன்னால்)
ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்!
விதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள் நீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள்!  அழுதாள்! (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா? இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)

அநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள் ஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான்! பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல! என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி! தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான்? இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா? என்று அல்லாஹ் நம்மை கேட்பானே!)

அநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள் நீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான் பெற்றேன்”  என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்! நீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள்!  அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்!

இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்? இந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா?  கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா? நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள்! உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் ? ? ? ? (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)

இளைஞர்களே இதோ  குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை
”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்!  ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்!  (திருக்குர்அன் 2:83)

எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான்.(திருக் குர்ஆன் 65: 2-3)

இளைஞர்களே
“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!  (திருக்குர்ஆன் 7:199)

“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)

“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்! (திருக் குர்ஆன் 39:53)

ஆதமனின் சந்ததிகளே! இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்!

”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (திருக்குர்அன் 46:15)
என் அருமை மூமின்களே! தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!என் அருமை மூமின்களே! கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்! என் அருமை மூமின்களே! பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள்! அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!
மூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள் (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” (அல்-குர்ஆன் 107:1-3)
“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும்,  மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,  வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச்
செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)
குறிப்பு:-
மூமின்களே! இங்கு பதியப்பட்ட இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும்! இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம்! இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம்! இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும்! பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக! அமீன்!
Read more...

Thursday, January 9, 2014

மாபெரும் அறிவியல் கண்காட்சியும் கலைவிழாவும்

0 comments
வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 60 ​ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் அறிவியல் கண்காட்சியும் கலைவிழாவும் இம்மாதம் 21,22,23 ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாபெரும் கண்காட்சியை கண்டுகளிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஊடக அனுசரனை சக்தி TV , ITN



Read more...

Thursday, November 14, 2013

வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 20 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

0 comments


நிகவெரடிய கல்வி வலயத்திட்குட்பட்ட வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வௌியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளியின் படி 30 பேர் பரீட்சைக்கு தோற்றி 20 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றல் பெரும் சாதனையாகும்.
இப்பாரிய சாதனையைினை நடத்துவதற்கு பங்களிப்பு செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் SEEDS நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறோம்.
Read more...

Wednesday, October 2, 2013

AH1NI வைரஸ் தொற்று: சிறுவர்களே! கர்ப்பிணி தாய்மாரே கவனம்!

0 comments
சுகாதாரக் கல்விப் பணியகம் 
from puttalamonline.com

இனபுளுயென்சா நோய் சுவாசத் தொகுதியூடன் தொடர்பான ஒரு நோயாகும். அது மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றக் கூடியது. நோயாளியொருவர் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளியாகும் சளி சுகதேகியான ஒருவரை அடையூம் பொழுது நோய் தொற்றிக் கொள்ளலாம். அது புதிய வகை வைரஸ் ஒன்றினால் பரவூவதனால் சமூகத்தினரிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாதலால் இந்த நோய் விரைவாகப் பரவக் கூடியதாயிருக்கிறது.
நோய்க்காரணி
இன்புளுயென்சா வைரஸ் – A H1N1 வகை
நோய்க்காரணி உடலினுள் செயற்படும் விதம்
இன்புளுயென்சா வைரஸ் உடலினுள் நுழைவது சுவாசத் தொகுதியினூடாகவே. அதாவது வாய், மூக்கு வழியாக உட்புகும் வைரஸ் பல்கிப் பெருகி விருத்தியடைந்து சுவாசத் தொகுதியினைப் பாதிப்படையச் செய்கிறது.
நோய் அறிகுறி
காய்ச்சல், தலையிடி, உடல்வலி, தொண்டைவலி, நாசியிலிருந்து நீர் வடிதல், தும்மல், இருமல் சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
மோசமான விளைவுகள்
சிறிய அளவினருக்கு நியூமோனியா ஏற்படலாம். நோய் அறிகுறிகள் நாட்செல்லச் செல்ல அதிகரிக்குமானால் அல்லது சுவாசிப்பதில் சிரமம், உணர்வூ மாற்றம், கடும் காய்ச்சல், வலிப்பு போன்றவை இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும். சில வேளைகளில் மரணமும் சம்பவிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுக்கள்
வயது 2 ஐ விடக் குறைந்தவர்கள் மற்றும் 65 ஐ விடக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்று நோயாளிகள், நீண்ட காலம் ப்ரிட்னிசொலோன் போன்ற மாத்திரைகளைப் பாவிப்போர், நீரிழிவூ நோயாளர்.
சிகிச்சை
வைரஸிற்கு எதிரான மருந்துகள். உதா:- ஒசல்டாமிவிர் போன்றவை கடுமையாக நோய் வாய்ப்பட்டோருக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுவினருக்கும் பாவிக்கப்படுகின்றன.
நோயைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் சுகாதார மேம்பாடும்
  • சனங்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவூம்
  • அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு தூய நீரினால் கழுவிக் கொள்ளவூம்.
  • அடிக்கடி கைகளினால் வாய் மற்றும் மூக்கினைத் தொடுவதனைத் தவிர்க்கவூம்
உங்களுக்கு தற்போது நோய் அறிகுறிகள் இருந்தால்
  • இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையூம் வாயையூம் கைக்குட்டை அல்லது வீசக்கூடிய டிசு கடதாசி கொண்டு மூடிக் கொள்ளவூம்.
  • பயன்படுத்திய டிசு கடதாசியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவூம்இ கைக்குட்டையை அடிக்கடி கழுவிக் கொள்ளவூம்.
  • போஷாக்கான உணவூகளை உண்ணவூம், நீராகாரங்களை அதிகம் உட்கொள்ளவூம்
  • நன்கு ஓய்வெடுக்கவூம்
Influensa_English Preparing_for_pandemic_flu WHO_InfluenzaPoster_Eng
Read more...

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

0 comments


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
Read more...