Banner 468 x 60px

 

Friday, November 30, 2012

இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம் ?

0 comments
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம் ?

                                           
ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி (அதீரோஸ்குளோரோசிஸ்) அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிக
ள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்து கொள்வது அவசியம்.

எண்ணெய், நெய், டால்டா, பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி -பால்- கோவா, முந்திரி, உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் ‘நான்-ஸ்டிக்’ பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரியகாந்தி எண்ணெய், நல்லெண் ணெய், கடலை எண்ணெய் போன்ற வற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்úஸச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்úஸச்சுரேடெட் எண்ணெய் கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.

ஒலிவ் எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ் (antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

தேங்காயில் உள்ள ச்ஹற்ற்ஹ் அஸ்ரீண்க் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையைக் குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.

தேங்காய் எண்ணெயில் ‘medium chain Faltty Acid’அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும் Capric Acid மற்றும் ‘Lauric Acid’ ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

எருமை பாலில் கொழுப்பு அதிகம். பசும் பால் நல்லது. கொழுப்புசத்து குறைந்த ஸ்டாண் டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்பு சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்

அசைவ உணவு வகைகளில் ஆட்டுக் கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் கொலஸ்டிரால் உள்ளது. இதனால் இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ் டிரால் அதிகம். முட்டையில் கொலஸ்டிரால் இருப்பது உண்மை ஆனால், அதை அளவுடன் சாப்பிட் டால் இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின் களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unsatuarated Fat) முட்டையில் உள்ளன என்கிறார் டாக்டர் டொனால்ட் மெக்மைரா.

இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிட லாம். ஆனால் அதை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்டு சாப்பி டலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே.

மாமிசத்திலுள்ள தோல்கள் மற்றும் கொழுப்பை, சமைப்பதற்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்.

மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்தகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

கொட்டை வகைகள் : முந்திரி பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்: இதனால் கலோரிச் சத்து அதிகம்.
எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.

வால் நாட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குண முடையது.

பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.

ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்துண்ணும் உணவு களை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்தோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

கொழுப்பு நீக்கிய பால் (Skimmed milk), அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk) வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.

டோனட்ஸ் (dough nuts) மஃப்பின்ஸ் (muffins) போன்ற பாஸ்டரி வகை துரித உணவு (fast food) களைத் தவிர்க்க வேண்டும்.

பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.

வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையி லான மார்கரின் பயன்படுத்தலாம்.

உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்வது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.

இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.

ஓட்ஸில் (oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது. கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகைய கரைக்கக்கூடிய நார்சத்து அதிகம் உள்ளது. வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது - நல்லது
Read more...

வென்றது பலஸ்தீன்! தோற்றன அமெரிக்காவும் இஸ்ரேலும் !!

0 comments
வென்றது பலஸ்தீன்! தோற்றன அமெரிக்காவும் இஸ்ரேலும் !!






அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்தினை பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.

193 நாடுகளில் பலஸ்தீனுக்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீனை அங்கீகரித்து அதற்கான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்காக வாக்களிக்குமாறு சகலரிடமும் வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார் .

பலஸ்தீனுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரமானது, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம், காஸா பள்ளத்தாக்கு என்பன பலஸ்தீனின் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளே என்பதற்காக மறைமுக அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தின் மூலம் பலஸ்தீன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஐ.நா. முகவர் நிறுவனங்களுடனும் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, செக் குடியரசு, மார்ஷல் தீவு, மிக்ரோனேசியா, நாஉரு, பலாஉ, பனாமா ஆகிய 9 நாடுகளே பலஸ்தீனுக்கு எதிராக வாக்களித்தவையாகும்.

பலஸ்தீனுக்கு ஐ.நா.வில் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு பாரிய மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப் பாடியும் பலஸ்தீன கொடிகளை அசைத்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறுவதை முன்னிட்டு பலஸ்தீனிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பலஸ்தீனுக்கு ஆதரவான பாரிய பேரணிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Read more...

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு

0 comments

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு

புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுக்கிறது.
புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.
நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை "அழுகச் செய்கிறது" என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
நமது பழக்க வழக்கங்கள் நமது உடல் ஆற்றலை எவ்வாறு பாதிக்கின்றனவோ அதேபோல நமது சிந்தனை ஆற்றல்களையும் பாதிக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கிறார்.
ஏஜ் அண்ட் ஏஜிங் என்ற மருத்துவ சஞ்சிகையில் இவர்களது ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பதை கிங்ஸ் காலேஜ் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

ஆய்வு முறை

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரின் உடல் ஆரோக்கியம், பழக்க வழங்க்கங்கள் ஆகியவற்றையும் அவர்களுடைய மூளையின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.
புதிய வார்த்தைகளையோ கற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனை, ஒரு நிமிடத்தில் எத்தனை பெயர்களை, எத்தனை விலங்குகளின் பெயர்களை சொல்லமுடிகிறது என்ற பரிசோதனை போன்றவற்றின் மூலம் இவர்களுடைய மூளையின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகள் கழித்து இதே நபர்களிடம் இதே உடல் மற்றும் மூளை பரிசோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டு முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
மூளையின் ஆரோக்கியம் குன்றிப்போனவர்களிடையே மாரடைப்பு அபாயமும், மூளையில் ரத்தக் கசிவு அபாயமும் அதிகமாக உள்ளது என முடிவுகள் காட்டியிருக்கின்றன.
தவிர மூளை ஆற்றல் பரிசோதனைகளில் ஒருவர் குறைந்த புள்ளிகள் வாங்குவதற்கும் புகைப்பழக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதையும் இந்தப் பரிசோதனைகள் காட்டியுள்ளன.
Read more...

உலகின் மிகச் சிறிய முட்டை?

0 comments

உலகின் மிகச் சிறிய முட்டை?


வட ஹம்ப்லேன்ட்டை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்  ஒருவர் வளர்த்து வந்த கோழியொன்று உலகிலேயே மிகச் சிறிய முட்டை என கருதப்படும் முட்டையை இட்டுள்ளது.

வட ஹம்ப்லேன்ட், ஹம்சாக் பகுதியை சேர்ந்த போல் ரே என்ற 52 வயது நபரின் கோழி பண்ணையிலேயே இந்த முட்டை இடப்பட்டுள்ளது.

இம்முட்டை 5 கிராம் நிறை கொண்டதாக காணப்படுகின்றது. 2 சென்றி மீற்றர் அகலமும் 2.5 சென்றி மீற்றர் நீளமும் கொண்ட இந்த முட்டை உலகின் மிகச் சிறிய முட்டை என்ற கின்னஸ் சாதனையை படைக்கலாமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தனது கோழி பண்ணையில் இவ்வாறு முட்டை இடப்பட்டுள்ளதை அவதானித்த மேற்படி ஹோட்டல் உரிமையாளர் ஆச்சர்யமடைந்ததுடன் அதனை மிகவும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார்.

'கின்னஸ் உலக சாதனை நிலையத்தை நான் தொடர்புகொள்ள வேண்டுமென எனது நண்பர்கள் தெரிவித்தனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

7.3 கிராம் நிறையுடைய முட்டையே உலகின் மிகச் சிறிய முட்டை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more...

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை:

0 comments

சர்வதேசம் தூண்டிவருவதால் சிலர் அரசியல் சுயலாபம் தேட முயற்சி
* அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் விசாரணை
* எவ்வித பக்கச்சார்புகளுக்கும் இடமில்லை
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருத்து
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையினைக் கொண்டு அரசியல் வாதிகள் தமக்கும் கட்சிக்கும் இலாபம் ஈட்ட முனைவது தவறான செயலென திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக்க தெரிவித்தார்.
குற்றப் பிரேரணை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் அரசியலமைப்புக்குட்பட்டே முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இங்கு பக்கச்சார்பான முறையில் தவறிழைக்கப்பட மாட்டாது.
எனவே நாட்டு மக்கள் இது குறித்து குழப்பமடைய தேவையில்லை எனவும் விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக்க தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தினரின் தூண்டுதலின் பேரில் சில அரசியல்வாதிகள் தமது சுயலாபத்திற்காக பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணை தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து நாட்டு மக்களை குழப்பி வருகின்றனர். மக்கள் தவறான கருத்துக்களை உள்வாங்கி அச்சம் கொண்டு குழப்பமடையும் பட்சத்தில் நாடு தோல்வியை தழுவுவதற்கான அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகையால் மக்கள் போலிக் கருத்துக்களை மற்றும் கொள்கைகளில் ஏமாறாது விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றுக் காலை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதன்போதே விரிவுரையாளர் நெம்சிறி மேற்கண்டவாறு கூறினார்.
குற்றப் பிரேரணை விவகாரத்தில் பாராளுமன்றமும் நீதித் துறையுமே சம்பந்தப்பட்டுள்ளது. இவை ஒரு நாட்டின் உயர்ந்த ஸ்தானத்திலுள்ள இரு அமைப்புக்கள் ஆகும். நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் இந்த அமைப்புக்களை நம்பியே ஆக வேண்டும். இது சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே முன்னெடுக்கப்படுவதனால் அநீதி இழைக்கப்படுவதற்கே. ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்குவதற்கோ வாய்ப்பேயில்லை என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இது தொடர்பில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமது சுயலாபம் கருதி அரசாங்கம் தொடர்பில் பலதரப்பட்ட எதிர்மறையான கருத்துக்களை மக்களிடம் திணிக்கின்றனர். இது உண்மையில் நியாமற்ற செயலாகும். ஒரு நாட்டின் அரசியலமைப்பின்படி சட்டத்துறை மற்றும் நீதித்துறை சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசியல் வாதிகள் கருத்துக் கூறுவதற்கு இடமேயில்லை என்றும் விரிவுரையாளர் நெம்சிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக் குழு உறுப்பினர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளாகவிருப்பதனால் அதன் தீர்மானம் ஒருதலைப் பட்சமானதாகி விடுமா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு, அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவி ருந்த போதும் இவர்கள் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் பதில் கூறவேண்டிய கடப்பாட்டினைக் கொண்டிருப்பதனால் அவ்வாறான அநீதி இழைக்கப்படமாட்டாது எனவும் விரிவுரையாளர் நெம்சிறி கூறினார்.
மேலும் இலங்கையில் இவ்வாறான குற்றப் பிரேரணை முன்னெடுக்கப்படுவது இது முதல் தடவையல்லவென கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பீட விரிவு ரையாளர் கலாநிதி டி. ஏ. சி சுரங்க சில்வா இதன்போது கருத்து கூறினார்.
Read more...

Thursday, November 29, 2012

யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம்

0 comments

யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம்

கிரிமிட்டியாவ ரயில்வே கடவையில் சம்பவம்
‘யாழ்தேவி’ ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். அம்பன்பொல, கிரிமிட்டியாவ பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் நான்கு சிறார்களும், கண வன், மனைவி மற்றும் அவரது நண்பியும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். கிரிமெடியாவ பிரதேசத்திலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியான பியகம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யு. எம். உதய ஆசிரி விஜேகோன் என்பவர் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் தனது குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான பெண் மற்றும் மேலும் 2 பிள்ளைகளையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஏழு பேரும் நேற்று நெலும்பத் வெவ பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். குறித்த முச் சக்கர வண்டி கிரிமெட்டியாவ பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த யாழ்தேவி ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராத விதத்தில் ரயிலில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாரிய சத்தத்துடன் சுமார் 300 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதில் அந்த முச்சக்கர வண்டியில் இருந்த ஏழு பேரும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்துச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது. ரயிலுடன் மோதுண்ட முச்சக்கர வண்டி முற்றாக சுக்கு நூறாகி யுள்ளது.
இதில் சிலர் ஸ்தலத்தில் உயிரிழந் துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்து விழுந்து கிடந்த நிலையில் பிரதேசவாசி களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், எந்தவித பலனும் இன்றி அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
Read more...

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?

0 comments

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?: மூளையைக் குடைந்து விடை கூறும் ஆராய்ச்சியாளர்கள்!

அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர்.

இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார்.

இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.



ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை.

அவரின் மரணத்திற்கு பின்னரும் அவரது மூளை மருத்துவரான தோம்ஸ் ஹார்வேயினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என அக்காலப்பகுதியிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் நவீன பௌதிகவியலின் தந்தையாகக் கருதப்படும் ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐன்ஸ்டைன் மற்றும் தமது மூளையைக் குடைந்து பதில் கண்டுபிடித்துள்ளார்கள் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் மற்றும் குழுவினர்.



அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனின் மூளையின் 14 அரிய புகைப்படங்களை சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு மற்றும் நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன சாதாரண மனித மூளையிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களது ஆராய்சியான The cerebral cortex of Albert Einstein: a descriptioன் and preliminary analysis of unpublished photographs தற்போது வெளியாகியுள்ளது.

Read more...

Wednesday, November 28, 2012

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை

0 comments

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?


health

கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.
வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.

பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும்.  பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’
Read more...

யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்

0 comments
யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.

 
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நீதியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
"இந்நாட்டில் சட்டம் என்பது ஒரு பாரதூரமான நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித் துறையின் சுயாதீனத் தன்மையானது பாதாளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
 
நான் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் யாழ். பல்கலைக்கழக வளாகம் ஒரு பதற்ற நிலையில் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அடித்து உதைத்து அட்டூழியம் புரியப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிலைமை நாட்டுக்கு நல்லதாகப் படவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்
.

Read more...

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

0 comments
பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிகின்றார்.
 

Read more...

செம்சுங்கின் மற்றுமொரு மைல்கல்!

0 comments
செம்சுங் நிறுவனம் தனது விற்பனை வரலாற்றில் புதிய மைல்கல்லொன்றை எட்டியுள்ளது. 

கெலக்ஸி S III ஸ்மார்ட் போன் மூலமே இதனை செம்சுங் எட்டியுள்ளது.

ஆம், உலகம் பூராகவும் சுமார் 30 மில்லியன் கெலக்ஸி S III ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.


சுமார் 5 மாத காலப்பகுதியில் இம் மைல்கல்லை செம்சுங் எட்டியுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிக்குமென செம்சுங் எதிர்ப்பார்த்துள்ளது.

இக்காலப்பகுதியில் அதிகம் விற்பனையாகும் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட் போனாக செம்சுங் கெலக்ஸி S III உள்ளது.

இதேவேளை கெலக்ஸி நோட் II ஸ்மார்ட் போனானது வெளியிடப்பட்டு 37 நாட்களில் 3 மில்லியன் விற்பனையாகியுள்ளதாகவும் செம்சுங் அறிவித்துள்ளது.


செம்சுங் கெலக்ஸி S III இன் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதே வரிசையில் குறைந்த விலையில் கெலக்ஸி S III மினி என்ற இன்னொமொரு 'ஸ்மார்ட் போன்' ஒன்றினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விற்பனைக்கு வருகின்றது கெலக்ஸி S III மினி.

ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.

இதன் தோற்றமானது செம்சுங் கெலக்ஸி S III ஐ போன்றது எனினும் சற்று சிறியது.

இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில.


General: GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/2100 MHz, HSDPA 14.4 Mbps

Form factor: Touchscreen bar

Dimensions: 121.55 x 63 x 9.85 mm, 111.5 g

Display: 4" 16M-color WVGA (480 x 800 pixels) Super AMOLED capacitive touchscreen

Chipset: 1GHz dual-core processor, Mali-400MP GPU, 1GB RAM
OS: Android 4.1 (Jelly Bean); TouchWiz UX

Memory: 16 GB of inbuilt storage, microSD card slot (up to 32 GB)

Camera: 5 megapixel auto-focus, face and smile detection; 720p (1280 x 720) video recording at 30fps

Connectivity: Wi-Fi b/g/n, Wi-Fi hotspot, Wi-Fi Direct, DLNA, stereo Bluetooth 4.0, standard microUSB port, GPS receiver with A-GPS and GLONASS, 3.5mm audio jack, stereo FM radio with RDS, NFC

Misc: built-in accelerometer, multi-touch input, proximity sensor, Swype text input

இதுவும் விற்பனையில் சாதனை படைக்குமான என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
.

Read more...

தகவல் தொழில்நுட்ப கல்விக்கு அரசு முன்னுரிமை அளிக்கின்றது

0 comments

தேசியப் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் அரசாங்கம் புரட்சி கரமான மாற்றங்களை ஏற்படுத்தி, கொழும்பிலும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாத்திரமே விஞ்ஞானக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற் கான வசதிகளையும் பட்டதாரி ஆசிரியர்களையும் பெருமளவில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கடந்த காலத்து மாயையை இல் லாமல் செய்வதற்கு இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன.

கொழும்பு மற்றும் பிரதான நகரங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கே கிரிக்கெட், உதைபந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வசதிகளும், மைதானங் களும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
வசதியுள்ள பிரதேசங்களின் மாணவ, மாணவியரை விட பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விளையாட்டுத் துறையில் இன்று சிறப்புற்று விளங்குகின்றார்கள்.
முன்னர் கொழும்பு பாடசாலைகளிலும் பிரதான நகரங்களின் பாடசா லைகளிலும் இருந்து வந்த மாணவர்களுக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று சனத் ஜய சூரிய, ரங்கன ஹேரத் போன்றவர்கள் கிராமத்துப் பாடசாலைகளில் இருந்து வந்து இலங்கையின் கிரிக்கெட் அணியில் சிறப்புற்று விள ங்குவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
இது பற்றி ஒரு நல்ல யோசனையை அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள் ளார். அரசியலில் இருந்து கல்வித்துறை விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த இந்த இளைஞர், கல்வித்துறையை சில அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவது நல்ல தல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை நாம் உள்ளூரில் இருந்தே தயாரிக்கப்படும் முன்மாதிரியான ஒரு திட்டத்தினால் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் எமது கல்வித் திட்டமும் ஆக்கபூர்வமான முறையில் மாற்றம் செய்யப்பட வேண் டும் என்றும் அவர் கூறினார்.
1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டம் பற் றிக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ எம்.பி., கல்வி நிர்வாகி களும் பெற்றோரும் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளின் அபிவி ருத்திக்கு முன்னுரிமை அளிக்கும் தப்பான போக்கை மறந்து நாட் டில் உள்ள சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்து இந்நா ட்டு மாணவ, மாணவிகளின் கல்வி அறிவைப் பெருக்கக் கூடிய ஒரு நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று கூறினார்.
இதேவேளையில் பிரதிக் கல்வி அமைச்சர் விஜித்விஜயமுனி சொய்சா, அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக 306 பில்லி யன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் இதில் பெரும்பகுதி கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு பகிர்ந்துகொடுக்கும் செயற்பாடு இனிமேல் கையாளப்பட மாட்டாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார்.
கல்வித்துறைக்கு அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் முழுத் தொகையும் நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள குறிப்பாக வடக்கு கிழக்கி லும், தென்னிலங்கையிலும், மலையகத்திலும் உள்ள சகல அரசாங் கப் பாடசாலைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண் டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கை இன்று கல்வித்துறையில் உயர்நிலையில் இருக்கின்றது. எங்கள் நாட் டில் உள்ள வயது வந்தவர்களில் 98 சதவீதமானோருக்கு இன்று எழுத வாசிக்கும் அளவுக்கு கல்வித்துறை வியாபித்துள்ளது. அத்து டன் நாட்டின் சனத்தொகையில் 38 சதவீதமானோருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் அதாவது கணனி இயந்திரங்களை நிர்வகிப்பதில் நல்ல தேர்ச்சி இருக்கின்றது.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இன்று அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து சகல பாடசாலைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்பிப்பதற்குத் தேவையான கணனி இயந்திரங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் கணனி இயந்திரங்களை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு செல்வம் படைத்திருக்காத பெற்றோரின் பிள்ளைகளுக்கு கணனிக் கல்வி அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் வகை செய்கின்றது.
"நனச" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து பிள்ளைகள் இன்று கணிதம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய பாடங்களை இலகுவில் கற் றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார்கள். பாடசாலைப் பிள் ளைகளுக்கு கணனி இயந்திரங்களை இயக்குவதற்கான மென்பொ ருள் சாதனம் ஒன்று இப்போது பாடசாலைகளுக்கு விநியோகிக்கப் படுகின்றது. இந்நிகழ்ச்சிகள் தமிழிலிலும் ஒளிபரப்பப்படுகின்றன.
ஒரு பிள்ளைக்கு ஒரு மடிக்கணனி என்ற திட்டத்தின் கீழ் இன்று 17 பாடசாலைகளில் 1463 பிள்ளைகளுக்கு மடிக்கணனிகள் வழங்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தை அடுத்த சில வருடங்களில் விஸ்தரித்து சகல பிள்ளைகளுக்கும் ஒரு மடிக்கணனியை வழங்குவதற்கும் அர சாங்கம் திட்டமிட்டுள்ளது.
எங்கள் நாட்டின் எதிர்காலத்தை வளம் மிக்கதாக மாற்றும் பொறுப்பை மாணவ, மாணவியரே ஏற்கவுள்ளார்கள். எனவே, அவர்களின் கல் வித்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் நல்ல பல திட்டங்களை அர சாங்கம் நடைமுறைப்படுத்தி வருவது உண்மையிலேயே நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு செயற்பாடாகும்.
Read more...

வுழு செய்யும் முறை....!

0 comments
நிய்யத் எனும் எண்ணம்.
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.

உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது. அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.

நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
பல் துலக்குதல்.

உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும். பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),                 நூல்: முஸ்லிம் 1233
பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ’உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ’பல் துலக்கினார்கள்’ என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.

மேலும் பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்‘ என்று நபி (ஸல்)அவர்கள்கூறியுள்ளார்கள்அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 888

பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்‘ எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072
என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும்பல்துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 9548 

அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும். 
நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள்அப்போது நபி (ஸல்அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர்கொண்டுவரப்பட்டவுடன்அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால்உளூச்செய்யுங்கள்‘ என்று கூறினார்கள்அவர்களின் விரல்களுக்கு இடையிருந்துதண்ணீர்வெளியேறியதை நான் பார்த்தேன்கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள்.
இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ’மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: கதாதா, நூல்: நஸயீ 77 

முன் கைகளைக் கழுவுதல்.
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். 

… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறுபாவங்கள்விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி), நூல்: நஸயீ 147


 

 

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்.
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.நபி (ஸல்அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்குஉஸ்மான் (ரலிஅவர்கள் செயல்விளக்கம் அளித்த போது, ‘தமது இருகைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர்எடுத்துவாய்கொப்புளித்துமூக்கையும் சுத்தம் செய்தார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.  நூல்: புகாரீ 160, 164 

வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் உளூச் செய்தார்கள்அப்போது ஒரு கையில்தண்ணீர் எடுத்துஅதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர்செலுத்தினார்கள்… (பின்னர்) ’இப்படித்தான் நபி (ஸல்அவர்கள் உளூச் செய்யநான் பார்த்தேன்‘ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி)கூறினார்கள்.  அறிவிப்பவர்: அதா பின் யஸார், நூல்: புகாரீ 140 

ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்யவேண்டும்.நபி (ஸல்அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலிஅவர்கள்விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்துமூக்கையும்சீந்தினார்கள்‘ என்றுகூறப்பட்டுள்ளதுநூல்: புகாரீ 160, 164
அலீ (ரலிஅவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச்செய்துவாய்கொப்பளித்து,மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திஇடது கையால் சுத்தம் செய்தார்கள்.பின்னர் ’இது தான் நபி (ஸல்)அவர்கள் உளூச் செய்த முறையாகும்என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்து கைர், நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696 

 


முகத்தைக் கழுவுதல்.
இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். 

இரு கைகளால் கழுவுதல். 

நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் விளக்கும் போதுஒரு கைத்தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக்கழுவினார்கள்.அறிவிப்பவர்: அதா பின் யஸார்,                  நூல்: புகாரீ 140 

ஒரு கையால் கழுவுதல். 

நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும்போது,தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யாநூல்: புகாரீ 186



தாடியைக் கோதிக் கழுவுதல்.
தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். 

நபி (ஸல்அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமதுதாடியைக் கோதிக்கழுவுவார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24779
இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல். 

முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும். நபி (ஸல்அவர்கள்உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலிஅவர்கள் விளக்கும்போதுமுகத்தையும்மூட்டு வரை இருகைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160

 





முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை. 

உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம்கைகால்கள்வெண்மையானவர்கள்‘ என்றுஅழைக்கப்படுவார்கள்யார் தமது வெண்மையை அதிகப்படுத்தவிரும்புகின்றாரோ அவர் அவ்வாறுசெய்து கொள்ளட்டும்‘ என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),                             நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362
எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
தலைக்கு மஸஹ் செய்தல்

இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். நபி(ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும்போதுதம்இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டுசென்று பிறகு அப்படியேஎந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத்திரும்பக் கொண்டு வந்தார்கள்.அறிவிப்பவர்: யஹ்யா, நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346
இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும். 





தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.




எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?

தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம். நபி (ஸல்அவர்கள் உளூச்செய்த முறையைஅப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும் போதுகையை (பாத்திரத்தில்)நுழைத்து இருகைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்துபின்னர்பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள்இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.அறிவிப்பவர்: யஹ்யா,        நூல்: புகாரீ 186
நபி (ஸல்அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: நஸயீ 98 

காதுகளுக்கு மஸஹ் செய்தல்.
தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும். 

நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும்தமது ஆட்காட்டி விரல்களைக்காதுகளின்உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும்மஸஹ்செய்தார்கள்அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),  நூல்: நஸயீ 101




பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா?
தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.
இரண்டு கால்களையும் கழுவுதல். 

இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் விளக்கும்போதுஒரு கைத்தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிஅதனைக் கழுவினார்கள்.பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில்ஊற்றிக் கழுவினார்கள்அறிவிப்பவர்: அதா பின் யஸார்,   நூல்: புகாரீ 140 





கால்களைக் கரண்டைவரைகவனமாகக்கழுவுதல்.

கால்களைக் கரண்டை வரை கவனமாகக்கழுவுவது அவசியமாகும்நபி (ஸல்அவர்கள்உளூச் செய்தமுறையை உஸ்மான் (ரலி)அவர்கள் விளக்கும் போதுஇருகால்களையும் கரண்டை வரை மூன்றுதடவைகழுவினார்கள்.  அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியேசென்றஅபூஹுரைரா (ரலிஅவர்கள் (எங்களைப் பார்த்து) ’உளூவை முழுமையாகச்செய்யுங்கள்.குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்‘ என்று நிச்சயமாக முஹம்மத்(ஸல்)அவர்கள் கூறினார்கள்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத், நூல்: புகாரீ 165




எத்தனை தடவை கழுவ வேண்டும்?

தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 157
நபி (ஸல்அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: புகாரீ 158

நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலிஅவர்கள் விளக்கும் போதுதமதுகைகளில்மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள்பின்னர் தமது வலதுகையை விட்டு (தண்ணீர்எடுத்துவாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர்பின்னர்முகத்தையும்மூட்டு வரை இருகைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்பின்னர் தலைக்குமஸஹ் செய்தார்கள்பின்னர் இருகால்களையும் கரண்டை வரை மூன்று தடவைகழுவினார்கள்.அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160
எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.

ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346

மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது.
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)                        நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397
வரிசையாகச் செய்தல்.

மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.
உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.

காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா (ரலி), நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404 

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா?

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். 

மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.
காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள்.

ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408 

காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம். கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும். 

ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம். 

சலுகையின் கால அளவு.
உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது. 

தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும். 

காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், ‘அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். ’பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஷுரைஹ்,              நூல்: முஸ்லிம் 414
குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை.

குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396 

மேற்புறத்தில் மஸஹ் செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699 

எவ்வாறு மஸஹ் செய்வது?
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை. 

எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்’ என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல். 

காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.   அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி), நூல்: புகாரீ 205 

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர். 
அறிவிப்பவர்: பிலால் (ரலி), நூல்: முஸ்லிம் 413 

முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டையும் குறிக்கும். பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள ’குமுரிஹின்ன’ என்பது கிமார்’ என்பதன் பன்மையாகும். 

புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்’ என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை. 

காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான்.
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர். 
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது. உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். 

உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவதுநபிவழியாகும்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹுவஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு 

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். 

அல்லது
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு. 

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 345 

ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை.
 சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை. 

எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
Read more...