Banner 468 x 60px

 

Monday, December 31, 2012

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

0 comments

புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

LIFEBOAT
என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படகானது 70  இருக்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் கடல்சார் கட்டிடங்களில் தொழில்புரிபவர்கள் அவசர நிலைமைகளின்போது இப்படகின் மூலம் உயிர்தப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படகின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பரிசோதனை நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. இவ்வாறான படகை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும் செயற்திட்டம் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக படகை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படகானது 154 அடி உயரத்திலிருந்து விழும் வகையிலே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதற் பரிசோதனையின்போது அதிகூடிய உயரத்திலிருந்து வீழ்ந்துள்ளது.

ஒவ்வொரு இருக்கைகளுக்கும் 220 இறாத்தல் மணல் பைகள் வைக்கப்பட்ட நிலையில் இப்படகின் முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரீட்சார்;த்த முயற்சியானது நோர்வேயின் எரென்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு படகை தயாரிக்கும் நோர்சேப் நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் இதன்வெற்றிக் குறித்து பெருமிதம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான படகினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

Read more...

விண்கல்லை இழுத்துச்சென்று எரிபொருள் நிலையமாக பயன்படுத்த நாசா திட்டம்

0 comments


விண்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத விண்கல்லொன்றை இழுத்துச் சென்று சென்று சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தின் எரிபொருள் நிலையமாக பயன்படுத்தும் முயற்சியில் நாசா திட்டமிட்டுள்ளது.  இதற்கான திட்டம் நாசா மற்றும் கலிபோர்னியா அறிவியல் தொழில்நுட்ப மத்திய நிலையம்  ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்துள்ள அமெரிக்கா,  அதற்காக, இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேவையான பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் வழியில் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான எரிபொருள் நிலையம் அமைக்க 5 இலட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லொன்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணில் சுற்றி திரியும் அந்த விண்கல் அட்லஸ் 5 ரொக்கெட் மூலம் இழுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அட்லஸ் 5 ரொக்கெட்டுடன் விண்கல்லை பிடிக்கக்கூடிய பெரிய கூண்டு ஒன்றும் அந்த ரொக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்படவுள்ளது.

அது விண்கல்லை பிடித்து அப்படியே இழுத்து சென்று சர்வதேச விண்வெளி மையம் அருகே நிலை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாசா மையம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், விண்கல்லொன்றை நகர்த்தும் முதலாவது மனித முயற்சியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Read more...

மைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1

0 comments

Read more...

கோரல்ட்ரா அறிமுகம் பாடம் 1

0 comments


Read more...

போட்டோசாப் பாடம் 1

0 comments

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

Read more...

வெள்ள அனர்த்தத்தினால் தொற்றுநோய்கள் பெருகும் அபாயம்!

0 comments
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கரையோர பிரதேச மக்கள் கடும் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக GREENCO சுற்றாடல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எதிர் கொண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக காத்தான்குடியின் ஆற்றங்கரை பிரதேசங்களில் நுளம்புகள் பெறுகியுள்ளன என்று அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உயிர்கொல்லி நோய்கள், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாலும் அவ்அமைப்பு எச்சரித்துள்ளது.
புதியகாத்தான்குடி பிரதேசத்தில் சில வீதிகளிலும், வீடுகளிலும் இன்னும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும் உரிய முறையில் திட்டமிடப்படாமல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொங்கிறிட் வீதிகளினால் வெள்ளம் வழிந்தோடாமல் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலங்களில் இவ்வாறான வெள்ள அணர்த்தங்களை எதிர்கொள்வதற்காக அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ள அணர்த்தத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு மற்றும் நுளம்பு பெருக்கம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் GREENCO அமைப்பு அறிவித்துள்ளதோடு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் GREENCO சுற்றாடல் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
.

Read more...

Sunday, December 30, 2012

இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்தை முறியடிக்க சமூக ஒற்றுமையே இன்றைய அவசரத் தேவை

0 comments


கேள்வி: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில தீவிரப் போக்குடையவர்கள் இஸ்லாத்தை இகழ்ந்தும் முஸ்லிம்களை புண்படுத்தியும் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்களே?
பதில்: நமது நாட்டிலே வாழும் பெளத்த மதத்தவருள் 99 சதவீதமானோர் உண்மையாகவே புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்கள் தாமும் தமது வாழ்க்கையும் என யாருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்கிறார்கள். புத்தபிரான் ஒரு பெரிய மகான். அவர் அன்பாலும், கருணையாலும் மக்களைக் கவர்ந்தார். நமது எண்ணங்களும் செயல்களும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது. நல்லனவற்றையே எண்ணவேண்டும். செய்யவும் வேண்டும் எனப் போதித்தார். அதிக ஆசை துன்பத்தை விளைவிக்கும் என்று கூறினார். புத்த பிரானின் இந்தப் போதனையின் அர்த்தத்தைச் சரியாகப் பின்பற்றினால் கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரியாக மாறி இருக்க மாட்டார்கள். பிற மதங்களைத் தூஷித்தும் இகழ்ந்தும் அவர் பெளத்தத்தை வளர்க்கவில்லை. சர்வமத இணக்கத்தோடு சமாதான வழியில் புத்த மதத்தை வளர்த்தார்.
அதனாலேதான் ஆசியாவில் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் புத்தமதம் தழுவி வாழ்வதைக் காண்கிறோம். இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, தாய்வான், வியட்னாம், மியன்மார் போன்ற நாடுகளில் புத்த மதத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்களால் மற்ற மதத்தவருக்கு எத்துன்பமும் இழைக்கப்படுவதில்லை. தத்தம் வழியிலே ஒவ்வொருவரும் தாம் போற்றும் சமயத்தைப் பின்பற்றிச் சந்தோஷமாக வாழ்கின்றார்கள். நம் நாட்டிலும் இதுகாலவரை புத்த மதத்தவர்கள் முஸ்லிம்கள் மீது வசைமாரி பாடியதில்லை. மத சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்த வரலாறு பசுமையானது. ஆனால் தற்காலம் ஒரு சிறுகூட்டம் மட்டும் இல்லாத பொல்லாத விஷயங்களைச் சோடித்து முஸ்லிம் சமூகத்தின் மனதைப் புண்படுத்தி வருகின்றது. இது வேதனை தரும் சம்பவமே. பெரும்பான்மைச் சமூகத்தை முஸ்லிம்களாகிய நாம் பகைப்பதற்கில்லை.
நமது உண்மையான நிலவரத்தை, நமது நியாயங்களை எடுத்துக் கூறி அமைதியை நிலைநாட்டவே முயற்சிக்க வேண்டும். நமது தஃவா அமைப்புகளும், உலமாப் பெருமக்களும் விழிப்புணர்வோடு செயற்பட்டு கடும்போக்காளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: பள்ளிகளை இக்கடும் போக்காளர்கள் உடைப்பதற்கான காரணங்கள் எவையாக இருக்கும்?
பதில்: முஸ்லிம் பள்ளிகளில் நாளாந்தம் இறைவணக்கமே இடம்பெறுகிறது. அத்துடன் இஸ்லாமிய தத்துவங்கள், கொள்கைகள், சட்ட திட்டங்கள், நல்லொழுக்கம் போன்றவை போதிக்கப்படுகின்றன. மதரசாக்களில் புனித குர்ஆன் கற்பிக்கப்படுகிற்து. ஒழுக்க நெறிகளும் போதிக்கப்படுகின்றன. பெளத்தம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்கள் பற்றியோ ஒரு வார்த்தையேனும் பேசப்படுவதில்லை. பேசவேண்டிய அவசியமுமில்லை. முழுக்க முழுக்க இஸ்லாம் பற்றிய பணிகளே இடம்பெறுகின்றன. ஆனால் இந்தக் கடும் போக்காளர்கள் பள்ளியில் நடைபெறும் பணிகளைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.. பெளத்தத்துக்கெதிரான போதனை நடைபெறுவதாக கற்பனை பண்ணிக் கதை அளக்கிறார்கள்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் வெறும் மனப்பிராந்தி கொண்டே பள்ளிகளை உடைத்தும், கபZகரம் செய்தும் தமது குரோத வெளிப்பாட்டைக் காட்டுகிறார்கள். குருநாகல் மாவட்டத்திலே இரண்டு பள்ளிகைகளை முற்றுகையிட்டனர். ஆரிய சிங்காவத்தைப்பள்ளி, தெதுறு ஓயா கடப்பள்ளிகளில் குழப்பம் விளைவிக்கப்பட்ட போது எனக்குத் தெரியவந்தது. நான் குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு சமாதானத்தை நிலைநாட்டினேன். தொழுகை அப்பள்ளிகளில் வழமைபோலவே நடைபெற்று வருகிறது. இதுபோன்று பல இடங்களில் பள்ளிகள் கபZகரம் செய்யப்பட்டன. இவற்றை நிறுத்த அரச தலையீடு முக்கியமானது. அரசாங்கம் விழிப்பாக இருந்தால் பிரச்சினைகளை தீர்க்க உதவும் அந்தந்தப் பிரதேசத்துக்குரிய முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் தஃவா அமைப்புகள் உடன் செயல்பட்டு அரசின் உதவியுடன் இவற்றைத் தடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசாரத்திணைக்கள வக்பு சபை போன்றவை தமது கடமைகளுடன் இவ்வித பிரச்சினைகளையும் கவனித்து சமூக நலனை மேம்படுத்தலாம்.
கேள்வி: இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரம் எவ்வெவ்வகையாக நடைபெறுகின்றது என்று கூறுவீர்களா?
பதில்: கடும் போக்காளர்கள் பல வழிகளில் தமது பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள். துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், கேலிச்சித்திரங்கள் மூலம் தமது பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். பாராளுமன்றில் கூட ஒரு ஐ.தே.க உறுப்பினர் இஸ்லாமிய ஷர்ஆ சட்டத்தை இழிவுபடுத்திப் பேசியபோது அங்கிருந்த இரண்டு மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.
அந்தவேளை பாராளுமன்றத்திலிருந்த அனைத்து முஸ்லிம் எம்.பிக்களுமே எதிர்ப்புத் தெரிவித்து அந்தத் துவேஷப் பேச்சை வாபஸ் பெறச் செய்திருக்க வேண்டும். இஸ்லாமிய ஷரிஆ சட்டம் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லாத காரணத்தினாலே அந்த எம்.பி இவ்வாறு பேசி இருக்கின்றார். இவ்வாறான தொடர்ச்சியான துவேஷக்கருத்துக்கள் தொடர்பில் ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் சட்ட அறிஞர்கள் கொண்ட தூதுக்குழு கடும் போக்காளர்களுக்கு இஸ்லாமியர்களின் வழிமுறைகளை விளக்கியுள்ளமை பாராட்டத்தக்கதே.
கடும் போக்காளர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பாரதூரமானவை. 2090ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் நாடாகிவிடும். திட்டமிட்டு முஸ்லிம்கள் தமது இனத்தைப் பெருக்குகின்றனர். நாட்டின் வர்த்தகத்தை முஸ்லிம்கள் கையில் எடுத்து கொள்ளை இலாபமீட்டுகின்றனர். என்றவாறாகப் பல ஆதாரமற்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது துரதிஷ்டமானதாகும். மதரஸாக்களும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையே போதிக்கின்றன என்றவாறாக பல ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்களை கடும் போக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
கேள்வி: ஹலால் சான்றிதழ் பற்றி அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றதே?
பதில்: ஹலால் அல்லாத உணவுகளை முஸ்லிம்கள் உண்பது மார்க்கப் படி தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு அவ்வாறான விதிகள் இல்லை. முஸ்லிம்கள் மார்க்கக் கட்டளைக்கமைவாக உணவைப் பெறவேண்டும் என்பதற்காகவே ஹலால் அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலில் வந்தது. இந்த முறையானது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் கருமமாகும். சுகாதார முறைப்படியான உணவை உண்டு தேகாரோக்கியமாக நாம் வாழ இவ்வத்தாட்சிப்பத்திரம் உதவுகிறது. இதைத் தவறாக விளங்கிக் கொண்ட கடும் போக்காளர்கள் அதையும் விமர்சிக்கின்றனர். ஹலால் அத்தாட்சிப் பத்திரம் மூலம் ஆண்டொன்றில் 100 கோடி ரூபாவை ஜம்இய்யதுல் உலமா வருமானமாகப் பெறுவதாகவும் இப்பணம்
இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பட்டமான பொய்யையும் புரளியையும் கிளப்பி முஸ்லிம்களின் மனதை உடைக்கிறார்கள். ஹலால் அத்தாட்சிப் பத்திரத்தின் அவசியம் பற்றி இந்தக் கடும் போக்காளர்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நமது மார்க்க அறிஞர்கள் முன்வந்து அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
கேள்வி: பாராளுமன்ற உணவுச் சாலையில் பன்றி இறைச்சி வேண்டுமென்ற கோரிக்கை எவ்வாறு இருக்கின்றது?
பதில்: ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பிரபல ஆட்சிமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரோசி சேனாநாயக்க, இருவருமே இந்த யோசனையை பாராளுமன்றில் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்பதில்லையென்பது அவர்களுக்குத் தெரியாததல்ல. இருந்தபோதும் ஏதோ உள்நோக்கத்துடன் கூறப்பட்ட இந்த யோசனையை பாராளுமன்றத்தில் பிரசன்னமாயிருந்த ஓரிரண்டு முஸ்லிம் எம்.பிக்கள் எதிர்த்துக் கதைத்து மறுப்புத் தெரிவித்தமை பாராட்டுக்குரியதாகும். முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இதுவாகும்.
கேள்வி: இஸ்லாத்துக்கெதிரான இந்தக் கேவலமான நடவடிக்கைகளை எவ்வாறு தடுக்கலாம் என்று கூறுவீர்களா?
பதில்: பொது எதிரியைக் கட்டுப்படுத்த ஒற்றுமை வேண்டும். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் என்ற நபிமொழியை நாம் மறந்து செயல்படுகின்றோம். முஸ்லிம்கள் மத்தியிலே பல பிளவுகள், பிரிவினைகள் உள்ளன. தப்லீக் ஜமா அத் என்றும் தெளஹீதுக் கூட்டம் என்றும் ஜமா அதே இஸ்லாமி என்றும் சிறுச்சிறு கொள்கை வேறுபாட்டால் அடிதடிப்பட்டு பொலிஸில் முறைப்பாடு, நடவடிக்கை வரை செல்கின்றோம். ஒரே மதத்தவர்கள் ஒருவரொடொருவர் அடிபடும் மார்க்கம் தேவையா என்று பிற மதத்தவர் கேட்கும் அளவுக்குப் புத்திசாதுரியமின்றிச் செயல்பட்டு சமூகத்தையும் மார்க்கத்தையும் இழிவுபடுத்துகின்றோம். ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் முஸ்லிமாக இருந்தும் கொள்கை வேறுபாட்டால் கருத்துவேற்றுமைப்பட்டு பிரிந்து விடுவதுடன் குடும்பத்தில் நடக்கும் நன்மையான காரியங்கள் துக்ககரமான நிகழ்வுகளில் கூடப்பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய கொள்கை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது வேற்றுமை களைந்து நமக்குள்ளே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நம்மிடையேயான ஒற்றுமை மூலம்தான் பொது எதிராளிகளைத் தோற்கடிக்க முடியும்.
கடும் போக்காளர்களின் கருத்துகளைக் கவனித்து அதனை முறியடிக்க அதனை விளக்கமளிக்க நமது மார்க்க அறிஞர்கள் தகைமை பெற வேண்டும். துறைபோன மார்க்க அறிவும் சரளமாகச் சிங்களத்தில் வேண்டிய கருத்துக்களை எடுத்துரைக்கும் ஆற்றலும் மெளலவிமாருக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சமூகத் தலைவர்களுக் கும் இருக்க வேண்டும். நமது பாடசாலை களிலே மதரசாக்களிலே சிங்களம் திறம்படக் கற்பிக்கப்பட வேண்டும். தீகவாபி பிரச்சினையிலே மர்ஹும் அஷ்ரப் முத்தான கருத்துக்களை அழகிய சிங்கள மொழியில் எடுத்துரைத்தே மதத்தலைவர்களை வெற்றிகொண்டார்.
அத்தகைய தகைமை நமது சமூகத்தை வழிநடத்தும் அரசியல்வாதிகள், முஸ்லிம் தலைவர்கள், ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், மெளலவிமார் போன்ற அனைவருக்கும் தேவை. இஸ்லாம் பற்றிய உண்மை விளக்கங்களைக் கடும் போக்காளர்கள் புரிந்து கொண்டால இனவாதமும் பழிகளும் தாமாகவே மறையும் என எதிர்பார்க்கலாம்.
Read more...

அப்பிளின் அதி நவீன (i)Watch

0 comments
தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. 

அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல.
ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய ஓ.எல்.ஈ.டி வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.ஓ.எஸ் மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது.
இன்னும் உத்தியோகபூர்வமில்லா இச் சாதனம் தொடர்பில் தொழிநுட்ப உலகின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.
இதேவேளை இதேபோன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
.

Read more...

வன்புணர்வில் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி

0 comments

2012 டிசம்பர் மாதம 30 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 07:13

டில்கியில் பேருந்து ஒன்றில் வைத்து குழு ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சல் செலுத்தியுள்ளனர். 

ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் நேற்றைய தினம் டில்கியில் மெழுவர்த்தியை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த 16ம் திகதி பேருந்து ஒன்றினுள் வைத்து 6 பேரினால் குறித்த மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்காக சிங்கபூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை அவர் உயரிழந்தார்.

அவரது பூதவுடல் நேற்றைய தினம் டில்கிக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்  வானூர்தி நிலையகத்துக்கு சென்றிருந்தனர்.

இந்தசம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Read more...

Saturday, December 29, 2012

கிaஸ் தலைநகர் ஏதென்ஸில் நிலத்தடி அறையில் தொழும் முஸ்லிம்கள்

0 comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் பள்ளிவாசல் இல்லாத தலைநகர்

கிaஸ் தலைநகர் ஏதென்ஸிலுள்ள முஸ்லிம்கள் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட சிறு சுரங்க அறைகளிலேயே வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தி வருகின்றனர்.
கிaஸில் இவ்வாறான சுரங்க அறைகள் அமைப்பது சட்டவிரோதம் என்றாலும் ஏனென்ஸில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு தமது மதக் கடமையை நிறைவேற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பள்ளிவாசல் இல்லாத ஒரே தலைநகரம் ஏனென்ஸ் ஆகும்.
துருக்கியின் அயல் நாடான கிaஸ் உஸ்மானிய சாம்ராஜ்யத்திலிருந்து 1832 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின் அங்கு ஆட்சியில் இருந்த எந்த அரசும் தலைநகரில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கவில்லை. பழமைவாத கிறிஸ்தவர்களை 90 வீதம் கொண்ட கிaஸில் பள்ளிவாசல் கட்டுவது கிரேக்கத்துக்கு எதிரானது என பலர் நம்புகிறார்கள்.
எனினும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்கான பிரதான வாயிலாக கிaஸ் அமைந்துள்ளது.
இதில் சுமார் 5 மில்லியன் சனத்தொகை கொண்ட கிaஸ் தலைநகர் ஏனென்ஸில் சுமார் 300,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். “இது மிகப் பெரிய கவலைக்கிடமானது. இங்கு தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் இல்லை” என்று ஏதென்ஸில் வாழும் மொஹமத் ஜமில் என்பவர் குறிப்பிட்டார். “கிaஸ் உலகுக்கு ஜனநாயகம், நாகரிகம் மற்றும் ஏனைய மதங்களை மதிக்கும் பன்பை கற்றுத் தந்துள்ளது. ஆனால் எமது முஸ்லிம்களை மதிக்கத்தவறிவிட்டது. எமக்கு சட்டபூர்வமான பள்ளிவாசல் ஒன்றை அமைக்க அனுமதிக்கவில்லை” என்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய மொஹத் ஜமில் கூறினார்.
எவ்வாறாயினும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் குடியேற்றவாசிகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கோல்டன் டவுன் கட்சியின் ஆதரவு பெருகி வரும் நிலையில் முஸ்லிம்களை மற்றும் பள்ளிவாசல்களை பாதுகாப்பதில் கிaஸ் அரசு கடும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த கட்சி உறுப்பினர்கள் நிலத்தடி தொழுகை அறைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கோல்டன் டவுன் கட்சியின் துணைத் தலைவர் இல்யஸ் பனக்கியோட்ரோஸ், கிaஸின் துருக்கி எல்லையில் கண்ணி வெடிகளை புதைக்க வேண்டும் என பரிந்துரைந்திருந்தார். “எமது நாட்டுக்குள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் நுழைய முயலும் போது கண்ணிவெடியில் சிக்கி இறந்தால் அது அவர்களுடைய பிரச்சினை” என்றார்.
இந் நிலையில் ஏதன்ஸின் மத்தியிலுள்ள இராணுவ முகாமுக்கு அருகில் முதலாவது பள்ளிவாசலை கட்ட தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பலமான நுழைவாயில் சுவரைக் கொண்ட உடைந்த கட்டிடம் ஒன்றை ஏதென்ஸின் முதலாவது பள்ளிவாசலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 500 பேர் தொழக்கூடிய வகையில் பள்ளிவாசல் வடிவமைக்கப்படவுள்ளது. இங்கு பள்ளிவாசல் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசின் முடிவை கிaஸ் கிறிஸ்தவ தேவாலயம் வரவேற்றபோதும், முன்னணி கிறிஸ்தவ தலைவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைமை வாத கிறிஸ்தவ பிரிவின் பாதிரியார் செரபின் இது குறித்து கூறும்போது, “துருக்கியின் கொடுங்கோலாட்சியில் கிaஸ் 5 நூற்றாண்டுகள் அவதிப்பட்டது. இந்த நிலையில் பள்ளிவாசல் ஒன்றை கட்ட அனுமதிப்பது எமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை அவமதிப்பதாக அமையும்” என்றார்.
கிaஸில் அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் தலைநகரில் பள்ளிவாசல் கட்டும் அரசின் முடிவு ஐரோப்பாவில் கிaஸ் தனித்து இருக்கப்போவதில்லை என்பதை வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Read more...

அரசை கவிழ்க்க சதி: எகிப்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது விசாரணை

0 comments

அல் பரதி, அம்ர் மூஸா, சபாஹி மீது குற்றச்சாட்டு

எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்க்க சதி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு தொடர்பில் எதிர்ப்பாளர்களின் முன்னணி தலைவர்கள் மீது விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை ஆரம் பிக்கப்பட்டதாக செய்திகள் தெரி விக்கின்றன. இதில் எதிர்க்கட்சித் தலைவர்களான நோபல் விருது வென்ற ஐ. நா. வின் அணு கண்காணிப்புப் பிரிவு முன்னாள் தலைவர் மொஹமட் அல் பரதி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அம்ர் மூஸா மற்றும் ஹம்தீன் சபாஹி ஆகியோர் மீதே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களுள் அம்ர் மூஸா மற்றும் சபாஹி ஆகியோர் கடந்த ஜனா திபதித் தேர்தலில் மொஹமட் முர்சியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாவர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சாதாரண எகிப்து மக்களை நாட்டின் இறை யாண்மைக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்படத் தூண்டுவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இணைய தளத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
எனினும் முரண்பாடுகளைக் களைய எதிர்த்தரப்பினரை பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து ஒரு தினத்திலேயே மேற்படி மூவர் மீது விசாரணை ஆரம் பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசாரணை எதிர்ப்பாளர்களுக்கும் ஜனாதிபதி ஆதரவாளர்களுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது விசாரணைக் குள்ளாகியுள்ள மூன்று எதிர்க்கட்சி தலைவர்களும் இணைந்து அண்மையில் தேசிய மீட்பு முன்னணி என்ற கூட்டணியை அமைத்து ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களினால் வன்முறைகளும் பதிவாயின. குறிப்பாக எதிர்ப்பாளர்களும், முர்சி ஆதரவு இஸ்லாமியவாதிகளுக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றன.
மறுபுறத்தில் எகிப்தின் பாராளு மன்றத்துறை அமைச்சர் மொஹமத் மஹ்சூப் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
தனது நம்பிக்கைக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதால் தாம் பதவி விலகுவதாக மஹ்சூப் காரணம் கூறியிருந்தார். மஹ்சூப் நவீன இஸ்லாமிய சிந்தனை கொண்ட வாஸ்த் கட்சியை சேர்ந்தவராவார். இவரது பதவி விலகலுடன் இந்த வாரத்தில் அமைச்சரவையில் இருந்து இரண்டாமவர் இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இரு வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமையவே எகிப்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் ஹொஸ்னி முபாரக் அரசை அமைக்க சதி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அல் பரதி தலைமையிலான எதிர்க்கட்சியின் செயலாளர் நாயகம் இமாம் அபு காசி குறிப்பிடும் போது, “இந்த விசாரணை மூலம் அரசு தனது அரசியல் எதிர்ப்பாளர்களை இல்லாதொழிக்க முயற்சிப்பது தெளிவாகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் முர்சியும் முபாரக் போன்றே தனது எதிர்ப்பாளர்களை நடத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான சபாஹியின் பேச்சாளர் கூறும் போது, சபாஹி முபாரக் அரசிலும் இவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டார் என்றார்.
ஜனாதிபதி முர்சி கடந்த புதன்கிழமை தொலைக்காட்சி மூலமான தனது உரையில்:- நாட்டின் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர தேசிய பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அனைத்து தரப்பும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். எகிப்தில் அரசியலமைப்புக்கு எதிராக ஒருமாத காலமாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த டிசம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற இவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் முர்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மூண்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் எகிப்தின் புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக தொடர்ந்து போராட எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சட்டம் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் பெண்கள் மற்றும் சிறுப்பான்மையினரின் உரிமையை பாதுகாக்கத்தவறிவிட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றனர்.
Read more...

நஷ்டத்தை தடுக்க விலை அதிகரிப்பு

0 comments


2012 டிசம்பர் மாதம 28 வெள்ளிக் கிழமை- பி.ப 07:56
மின்சாரதுறைக்காக வழங்கப்படும் கழிவு எண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனியவளத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


மின்சார உற்பத்திகளுக்காக நிவாரண விலையில் எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய அளவில் நஷ்டம் ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் நோக்கிலே, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிவாரண விலையில் எரிபொருட்கள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக மாதம் ஒன்றிற்கு நாநூற்று பத்து கோடியே 40 லட்சம் ரூபாவிற்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
Read more...

Friday, December 28, 2012

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

0 comments

Friday, December 28, 2012 - 14:53
பொலனறுவையில் பெய்துவரும் கடும் மழையை அடுத்து பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா மற்றும் கவுடல்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கவுடுல்ல கிரிமெட்டிய பிரதேசத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பொலனறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி கூறியுள்ளார்.
இதேவேளை, சீரற்ற வானிலையால் 340,000ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Read more...

அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 comments

Friday, December 28, 2012 - 11:36
அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தை ஊடறுத்து வீசிய பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
நியூ இங்கிலண்ட் மாநிலங்களில் அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், இந்த பகுதிகளில் 30 சென்றிமீற்றர் வரை பனிப்படலம் ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் மத்திய பகுதியிலுள்ள வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல இலட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more...

அங்கீகரிக்கப்பட்ட எகிப்தின் புதிய அரசியலமைப்புக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த எதிப்பாளர்கள் திட்டம்

0 comments

பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்பும் நிராகரிப்பு

எகிப்தின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதற்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மொஹமட் முர்சி ஒருமைப்பாட்டுக்கான தேசிய அளவில் பேச்சுவார்த்தைக்கு அனைத்துத் தரப்பும் தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவு வழங்கியதை அடுத்து அதனை சட்டமாக அங்கீகரிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி முர்சி தொலைக்காட்சியூடே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதற்காக தேவைப்பட்டால் அமைச்சர வையிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சர்ச்சையை கிளப்பிய புதிய அரசியலமைப்புக்கு 63.8 வீதமானோர் ஆதரவாக வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் புதிய அரசியலமைப்பில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள எதிர்ப்பாளர்கள், பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்பையும் நிராகரித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தற்போதைய பதற்ற நிலையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே ஹொஸ்னி முபாரக். அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தியடையும் தினமான ஜனவரி 25 ஆம் திகதி தலைநகர் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிரதான எதிர்த் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின் முதல் முறையாக உரையாற்றிய ஜனாதிபதி முர்சி, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் என விபரித்தார். ஒரு ஆக்கிரமிப்பாளரோ, மன்னரோ அல்லது ஜனாதிபதியோ ஆதிக்கம் செலுத்த முடியாத வகையில் எகிப்துக்கு இப்போது சுதந்திரமான அரசியலமைப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் மூலம் எகிப்து பாதுகாப்பு மற்றும் ஸ்திரமான நிலையை நோக்கி முன் நகர்ந்திருப்பதாக முர்சி தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதற்காக முதலீட்டாளர்களை கவரும் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“எகிப்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எனது அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பொருளாதாரம் பாரிய சவாலை சந்தித்தாலும் அதில் முன்னேற்றம் காண சந்தர்ப்பம் உள்ளது. இந்த இலக்கை எட்ட தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்வேன்” என்றும் முர்சி உறுதி அளித்தார்.
கடந்த புதன்கிழமை எகிப்து பவுன்ட், டொலருக்கு எதிராக எட்டு ஆண்டுகளில் பாரிய சரிவை எதிர்கொண்டது. இந்நிலையில் வரியை அதிகரித்து செலவுகளை குறைக்காத பட்சத்தில் எகிப்து அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடுகளின் கடன் அந்தஸ்தை கண்காணிக்கும் ஸ்டான்டர் அன்ட் புவர்ஸ் நிறுவனம் எகிப்தின் நீண்டகால தர நிலையை ‘கி-’ ஆக குறைத்துள்ளது.
இதில் புதிய அரசியலமைப்புக்கு பலர் எதிராக வாக்களித்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக முர்சி குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் போன்றே அதனை நிராகரித்தவர்களையும் நான் வரவேற்கிறேன். இதன் மூலம் எகிப்து ஒரு கருத்தை கொண்ட யுகத்திற்கு மீளவும் திரும்பாது என்பதை உறுதி செய்கிறது. எனினும் கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு முர்சி கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துடன் தேசிய பேச்சுவார்த்தை ஒன்றுக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதில் நிர்வாக ரீதியில் தவறுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை தேசத்தின் நலனுக்கு அப்பால் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என மொஹமட் முர்சி வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் உரை குறித்து கருத்து வெளியிட்ட எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியின் பேச்சாளர் ஹுஸைன் அப்துல் கானி, அரசு மதத்தின் பேரால் கொடுங்கோலாட்சியை நிறுவ முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். “இந்த உரையில் பொடுபோக்குத் தனமின்மை மிகக் குறைவாகவே இருந்தது” என்று அப்துல் கானி குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் 52 மில்லியன் வாக்காளர்களில் 32.9 வீதமானோரே தமது வாக்குகளை அளித்திருந்தனர். உத்தியோகபூர்வ முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த அரசியலமைப்பு கடும்போக்கு இஸ்லாமிய சட்டங்களை கொண்டது என்றும் பெண்கள் அல்லது கிறிஸ்தவர்களின் உரிமையை பாதுகாக்க வில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பிரசாரம் நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எகிப்தின் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் உள்ளது.
Read more...

வெள்ளத்தால் மூன்று கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை

0 comments


Thursday, December 28, 2012 - 05:15
வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது
மல்வத்து ஓயா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள வாவிகள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக சில கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
பறப்பன் கடந்தான், அடம்பன் தாழ்வு மற்றும் பாளையடி கிராமங்களிலே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Read more...

Thursday, December 27, 2012

மசுரங் நெல்லில் புற்றுநோய் உயிரணுவை அழிக்கும் இரசாயனக் கலவை

0 comments

 December 27, 2012 - 
மசுரங் எனப்படும் ஒரு வகை நெல்லில் இருந்து புற்றுநோய் உயிரணுக்களை  அழிப்பதற்கான இரசாயனக் கலவை அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழில்நுட்ப பரிசோதனை மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக புத்தலகோட நெல் ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மனித உடலில் அவ்வப்போது புற்றுநோய் உயிரணுக்கள் உருவாகி அழிகின்றமை வழமையாகும் என நிலையத்தின் தலைவர் கலாநிதி நிமல் திசாநாயக்க கூறியுள்ளார்.
எனினும் மசுரங் எனப்படும் நெல்லினால் பெறப்படும் அரிசியை உட்கொள்ளும்போது புற்றுநோய் உயிரணுக்கள் துரிதமாக அழிவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நெல்லில் புற்றுநோய் எதிர்ப்புக்கான இரசாயனக் கலவை அடங்கியுள்ளமை ஆய்வுகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
Read more...

ஜப்பானிய அமைச்சரவை இராஜினாமா

0 comments


Wednesday, December 26, 2012 - 12:45
ஜப்பானில் அமைச்சரவை இராஜினமாச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஆளும் கட்சி தோல்வியடைந்து எதிர்க் கட்சி வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வரவுள்ளதை அடுத்து அமைச்சரவை இராஜினமாச் செய்துள்ளது.
ஷீன்சோ அபே ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படவுள்ளது.
ஜப்பானில் ஷீன்சோ அபே ஏற்கனவே பிரதமராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Read more...

உலகில் மிக நீளமான அதிவேக ரயில் மார்க்கம் சீனாவில்

0 comments

Wednesday, December 27, 2012 - 12:30
உலகில் மிக நீளமான அதிவேக ரயில் மார்க்கத்தை சீனா உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்துள்ளது.
பீஜிங்கிற்கும் கங்சூ நகருக்கும் இடையில் இந்த அதிவேக ரயில் மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து 298 கிலோமீற்றர்கள் நீளம் கொண்ட இந்த மார்க்கத்தில் 35 இடங்களில் மாத்திரமே ரயில்கள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய ரயில் பாதையின் மூலம் 22 மணித்தியாலங்களுக்கான பயணம் 10 மணித்தியாலங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
உலக தொழில்நுட்பத்தின் முக்கிய ஒரு விடயமாக சீனாவினால் புதிய ரயில் மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் முன்னாள் தலைவர் மாசேதுங்கின் ஜனன தினத்தை நினைவு கூரும் வகையில் அதிக நீளமான ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read more...

சிவப்பு மழை - உயிரியல் துகல்கள்

0 comments



பிரித்தானிய பக்கிங்கம் பல்கலைகழத்தில், பரிசோதனை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்து எடுத்து சென்ற சிவப்பு மழையின் மாதரிகளில் உயிரியல் துகல்கள் காணப்படுகின்றமை மீண்டும் உறுதியாகியுள்ளன.
சிவப்பு மழை தொடர்பான தகவல்கள் கடந்த நொவம்பர் மாதம் 14 ஆம் திகதி பதிவானது.

செவனகல பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையின் மாதிரியே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
.
இதனிடையே, சிவப்பு மழை தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செவனல மாத்திரமின்றி தனமல்வில, மனம்பிட்டிய, ஹிங்குரக்கொட, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் சிவப்பு மழை பெய்திருந்தது.

இதனிடையே, இன்றைய தினம் இரண்டு இடங்களில் மஞ்சள் மழை பெய்துள்ளது.

பொலன்னறுவ - வெலிகந்த, கடவத்மடுவ ஆகிய பிரதேசங்களில் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது
.
Read more...

Wednesday, December 26, 2012

ஹலால் சான்றிதழ் மூலமான வருவாய்

0 comments


ஹலால் சான்றிதழ் மூலமான வருவாய் பள்ளிவாசல், ஜிகாத் அமைப்புக்கான நிதிமார்க்கமாக திகழ்கின்றது: ஹெல உறுமய

 
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலமாக அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையானது ஆண்டொன்றுக்கு சுமார் 700 கோடி வருவாய் ஈட்டிக்கொள்வதாக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வருவாயை ஜம் இயத்துல் உலமா சபையானது பள்ளிவாசல்கள், ஷரியா சட்டத்திற்கான மத்திய நிலையம் மற்றும் ஜிகாத் போன்றவற்றிற்கான நிதிமார்க்கமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சகோதரர்களுடன் எங்களுக்கு பிரச்சினையில்லை. ஜம் இயத்துல் உலமா சபையுடனேயே பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சிங்கள மக்கள் பெருமளவில் சுரண்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Al - Humaija Pre school Concert 2012 - Vidios

0 comments
Fancy Dressing 2012 
Good performance our children...


Part 1


Part 2


Part 3














Read more...

Tuesday, December 25, 2012

படியுங்கள்! பகிர்ந்துகொள்ளுங்கள்!

0 comments



  • Read more...

    முஸ்லிம் சமூகத்திற்கான மூல உபாயத் திட்டத்தின் (Strategic Plan) தேவை

    0 comments


    Strategic-Plan0சிராஜ் மஷ்ஹூர்
    முஸ்லிம் சமூகம் தாமாக முன்வந்து (Proactive) செயற்படுவது குறைவு. அது அதிகமான சந்தர்ப்பங்களில் எதிர்வினையாற்றும் (Reactive) சமூகமாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு விவகாரம் (Issue) வந்த வண்ணமே உள்ளது.
    அதனை உடனுக்குடன் எவ்வாறு எதிர் கொள்வது பற்றியே எமது சிந்தனையும் செயற்பாடுகளும் சுருங்கியுள்ளன. செயற்படுபவர்கள் மட்டுமல்லசும்மா இருந்து கொண்டு விமர்சிப்பவர்களது நிலையும் இதுதான். எல்லோரும் அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிச் சூழலுள் சிறைப்பட்டிருக்கின்றனர். 
    குறுங்காலப் பிரச்சினைகள் (Short Term Issues) என்ற வட்டத்திலிருந்துநடுத்தர- நீண்டகால இலக்குகளை (Mid Term & Long Term Targets) நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிப்படுத்த வேண்டியுள்ளது. தொலைநோக்கோடு செயற்படும் தலைமைகளே (Visionary Leaders) இன்று எமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.
    ஒரே வகையான பணியை பலரும் திரும்பத் திரும்ப செய்வதை மிகப் பரவலாக அவதானிக்கலாம். இதனால் மனித வளங்களும் பௌதிக வளங்களும் பொருளாதாரமும் நேரமும் பெருமளவு விரயமாகின்றது. அத்துடன் விஞ்ஞானபூர்வமாக நவீன உத்திகளுடன் செயற்படுவதற்கான திறனும் புத்தாக்க சிந்தனையும் எம்மத்தியில் குறைவாகவே உள்ளது.
    2012 இல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற பல சம்பவங்களின் பின்புலத்தைக் கவனமாக ஆராய்ந்தால்முஸ்லிம் சமூகம் நீண்ட கால நோக்கில் பாரிய அபாயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் எனக் கருத முடியும். அதற்கான நோய்க் குறிகள் மிகத் தெளிவாக வெளித் தெரிகின்றன. நோய் முற்ற முன்னே இதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்.
    போர்க் கால இலங்கையில் ஆயுதப் போராட்டக் குழுக்களே முக்கிய இலக்காக இருந்தன. அதன் விளைவாக தமிழ் சமூகம் பெருமளவு இழப்புகளை எதிர்கொண்டது. முஸ்லிம் சமூகமும் சிங்கள சமூகமும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன. இப்போது அந்த நிலமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    Strategic-Plan1போருக்குப் பிந்திய இலங்கை எவ்வாறு வடிவம் கொள்ளும் என்பதற்கான அறிகுறிகளே இப்போது மேலெழுந்துள்ளன. இப்போது முஸ்லிம் சமூகம் குறிவைக்கப்படுவதை உணர முடிகிறது. எமக்கெதிரான  எதிர்மறை வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதை,ஆழ்ந்து நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.
    இதனை நுணுக்கமாக அடையாளம் கண்டு,இப்போதே பரிகாரம் காண வேண்டும். நிலமை  மோசமடைந்ததன் பின்னர் தடுமாறி நிற்பதை விட,ஆழ்ந்த கவனத்தோடு முன்னோக்கி நகரும் மூல உபாயங்கள் எமக்கு மிகவும் இன்றியமையாதவை.
    முஸ்லிம் சமூகத்தின் அக முரண்பாடுகளைத் தணித்தல்முரண்பாட்டு முகாமைத்துவம்மாற்றுக் கருத்துகளையும் பன்மைத்துவ அணுகுமுறையையும் மதித்து செயற்படும் பக்குவம்எமது பலவீனங்களை இனங்கண்டு நீக்குதல்குறைந்தபட்சம் உடன்பட முடியுமான பொது வேலைத் திட்டத்தை அடையாளம் காணல்அதில் ஒன்று பட்டு உழைத்தல்நம்மிடையே நிலவும் சங்கடமான மௌனத்தைக் கலைத்தல் போன்ற நடவடிக்கைகள் உள்நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும்.
    நேச சக்திகளை அடையாளம் கண்டுஅவர்களது உள்ளங்களை வெல்லுதல்முரண்பாடான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளோருடன் உரையாடல்களை மேற்கொள்ளல்,புரிந்துணர்வை வளர்த்தல்பொது வேலைத் திட்டங்களில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக மாறுதல்நாட்டை வளப்படுத்தப் பங்களித்தல்நாட்டைக் கட்டியெழுப்ப உதவிக் கரம் நீட்டல்முரண்பாடுகளைத் தீர்க்க உதவுதல் போன்ற  வெளிநோக்கிய நடவடிக்கைகளும் அவசியம்.
    இந்த வகையில் சமூகத்தின் உள்ளேயும் வெளியேயுமான (Intra and Inter Community) செயற்பாடுகளில் நாம் நமது பார்வையை செலுத்த வேண்டும். அதன் பின்னர் இவற்றை முதன்மைப்படுத்தி (Prioritization) அந்த முன்னுரிமைகளில் எமது கவனத்தைக் குவிமையப்படுத்த வேண்டும்.
    அடுத்தவர்களின் குறைகளைத் தேடும் எதிர்மறை மனோபாவத்திலிருந்து (‡Negative Attitude) எமது சமூகத்தை விடுவித்துநேர்மைய அணுகுமுறைக்கு (Potive Approach) பழக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அறுவடை பாரியதாய் மாறும்.
    இந்தப் பின்னணியில் எமது சமூகத்திற்கென்று தனியான மூல உபாயத் திட்டமொன்று (Strategic Plan) இன்றியமையாததாக மாறியுள்ளது. இதற்கு யார் முன்கையெடுப்பது என்ற வாதப் பிரதிவாதங்கள் இப்போது தேவையில்லை. எண்ணங்களை (Ideas) செயல்களாக (Action) மொழி மாற்றுவதற்கான மிகச் சிறந்த தருணம் இதுதான். இனியும் நாம் தாமதிக்க முடியாது.
    எமது நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்துஅதற்கான மூல உபாயங்களை வகுக்க வேண்டும். அது நடைமுறைச் சாத்தியமான திட்டமாக வரையப்பட வேண்டும். அந்த செயற் திட்டம் சமூகத்தின் எல்லா மட்ட நிறுவனங்கள்இயக்கங்கள்தலைமைகள்ஆளுமைகள்,ஆய்வறிவாளர்கள்செயற்பாட்டாளர்கள்... என்ற விரிந்த வட்டத்தின் முன்னே வைக்கப்பட வேண்டும்.
    இவ்வாறான உரையாடல்கலந்துரையாடல் மூலம்தேசியபிராந்தியஉள்ளூர் மட்ட செயற்பாடுகள் அனைத்தும் எமது மூல உபாய இலக்குகளை நோக்கிய வகையில் முன்னெடுக்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
    சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும்இந்தப் பொது இலக்குகளை நோக்கி பங்களிப்புச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த வேலைத் திட்டம் பரவலாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால்,நமது சமூகத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாய் அமையும். இந்த இலக்குகளை நோக்கி வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவோம்.
     
    Read more...