Banner 468 x 60px

 

Thursday, November 14, 2013

வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 20 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

0 comments


நிகவெரடிய கல்வி வலயத்திட்குட்பட்ட வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வௌியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளியின் படி 30 பேர் பரீட்சைக்கு தோற்றி 20 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றல் பெரும் சாதனையாகும்.
இப்பாரிய சாதனையைினை நடத்துவதற்கு பங்களிப்பு செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் SEEDS நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறோம்.
Read more...

Wednesday, October 2, 2013

AH1NI வைரஸ் தொற்று: சிறுவர்களே! கர்ப்பிணி தாய்மாரே கவனம்!

0 comments
சுகாதாரக் கல்விப் பணியகம் 
from puttalamonline.com

இனபுளுயென்சா நோய் சுவாசத் தொகுதியூடன் தொடர்பான ஒரு நோயாகும். அது மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றக் கூடியது. நோயாளியொருவர் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளியாகும் சளி சுகதேகியான ஒருவரை அடையூம் பொழுது நோய் தொற்றிக் கொள்ளலாம். அது புதிய வகை வைரஸ் ஒன்றினால் பரவூவதனால் சமூகத்தினரிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாதலால் இந்த நோய் விரைவாகப் பரவக் கூடியதாயிருக்கிறது.
நோய்க்காரணி
இன்புளுயென்சா வைரஸ் – A H1N1 வகை
நோய்க்காரணி உடலினுள் செயற்படும் விதம்
இன்புளுயென்சா வைரஸ் உடலினுள் நுழைவது சுவாசத் தொகுதியினூடாகவே. அதாவது வாய், மூக்கு வழியாக உட்புகும் வைரஸ் பல்கிப் பெருகி விருத்தியடைந்து சுவாசத் தொகுதியினைப் பாதிப்படையச் செய்கிறது.
நோய் அறிகுறி
காய்ச்சல், தலையிடி, உடல்வலி, தொண்டைவலி, நாசியிலிருந்து நீர் வடிதல், தும்மல், இருமல் சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
மோசமான விளைவுகள்
சிறிய அளவினருக்கு நியூமோனியா ஏற்படலாம். நோய் அறிகுறிகள் நாட்செல்லச் செல்ல அதிகரிக்குமானால் அல்லது சுவாசிப்பதில் சிரமம், உணர்வூ மாற்றம், கடும் காய்ச்சல், வலிப்பு போன்றவை இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும். சில வேளைகளில் மரணமும் சம்பவிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுக்கள்
வயது 2 ஐ விடக் குறைந்தவர்கள் மற்றும் 65 ஐ விடக் கூடியவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்று நோயாளிகள், நீண்ட காலம் ப்ரிட்னிசொலோன் போன்ற மாத்திரைகளைப் பாவிப்போர், நீரிழிவூ நோயாளர்.
சிகிச்சை
வைரஸிற்கு எதிரான மருந்துகள். உதா:- ஒசல்டாமிவிர் போன்றவை கடுமையாக நோய் வாய்ப்பட்டோருக்கும் நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குழுவினருக்கும் பாவிக்கப்படுகின்றன.
நோயைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் சுகாதார மேம்பாடும்
  • சனங்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவூம்
  • அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு தூய நீரினால் கழுவிக் கொள்ளவூம்.
  • அடிக்கடி கைகளினால் வாய் மற்றும் மூக்கினைத் தொடுவதனைத் தவிர்க்கவூம்
உங்களுக்கு தற்போது நோய் அறிகுறிகள் இருந்தால்
  • இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையூம் வாயையூம் கைக்குட்டை அல்லது வீசக்கூடிய டிசு கடதாசி கொண்டு மூடிக் கொள்ளவூம்.
  • பயன்படுத்திய டிசு கடதாசியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவூம்இ கைக்குட்டையை அடிக்கடி கழுவிக் கொள்ளவூம்.
  • போஷாக்கான உணவூகளை உண்ணவூம், நீராகாரங்களை அதிகம் உட்கொள்ளவூம்
  • நன்கு ஓய்வெடுக்கவூம்
Influensa_English Preparing_for_pandemic_flu WHO_InfluenzaPoster_Eng
Read more...

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

0 comments


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
Read more...

நீங்கள் சிறுநீரக பிரச்சனை உள்ளவரா?இதோ எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...

0 comments


  சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
Read more...

Tuesday, October 1, 2013

Grade 5 Scholarship Results - Welpothuwewa MMV

0 comments
 immurai 5m thara pulamaipparisil pareetchayil welpothuwewa AL- Ilmiya muslim maha vidyilayathil 4 maanavarhal sithi adainthullanar. 
Aneeka173,
Ammar169,
Husny165,
Ishra159
oru maanawaruku 2 pullihal kurai ulladhu Arsath - 154 marks cut out marks 156
Ivarhalukku Emadhu SEEDS saarpaaha emadhu vaalthukkalai therivithukkolhirom.
Congratulation for our kids, And we kindly thanks to our principal MSS Musthafa and Our school and  teachers and parents.

Read more...

Saturday, September 28, 2013

இஸ்லாம் கூறும் ஒற்றுமை

0 comments

ஒரிறையின் நற்பெயரால்
ஏனைய மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு ஒற்றுமை குறித்து எந்த ஒரு கிரகந்தந்தகளும்,கோட்பாடுகளும் கூறாதது உண்மையே!அதை விட உண்மை அவ்வொற்றுமைக் குறித்து முஸ்லிம்கள் போதிய விழிப்புணர்வு அடையாததே!
அல்லாஹ் தன் மறையில்
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (03:103)

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(8:46)

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)
இவ்வாறு மிக அழகாக,ஆழமாக ஒற்றுமையின் அவசியத்தையும் அவ்வாறு அதனை விடுக்கும்போது ஏற்படும் விளைவையும் விரிவாக தெளிவுறுத்தி என்றும் ஒற்றுமையோடு வாழ ஏதுவாக "நீங்கள் யாவரும் சகோதரர்களே" என சகோதரத்துவத்தின் அடிப்படை வேரை தன்னுள் தக்கவைத்த சிறப்பு இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.மேலும் சகோதரத்துவம் என்ற ஒரு நிலைப்பாட்டை முன்னிறுத்தி மட்டுமே உலகளாவிய ஒற்றுமையே நிலை நாட்டமுடியும் என்பதே அறிவுச்செறிந்தவர்கள் இன்று அனுபவபூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே தான் மனித மனங்களைப் படித்த மா நபி முஹம்மது (ஸல்)அவர்கள் மற்ற எந்த தலைவர்களும் வலியுறுத்தாத அளவிற்கு ஒற்றுமை பற்றியும்,சகோதரத்துவம் பற்றியும் மிக அதிகமாக இயம்புயிருக்கிறார்கள்.மேலும் நிரந்தர ஒற்றுமைக்கு கேடு உண்டாக்கும் அனைத்து சுயநல வாசல்களையும் சகிப்புதன்மை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற சகோதரத்துவ சாவிக்கொண்டு பூட்டியதே பூமான் நபி அவர்களின் சிறப்பு.
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.காட்டிக் கொடுக்கக் கூடாது.யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி

ஆக,தனக்கு நன்மைப்பயக்கும் அனைத்து செய்கைகளும் தனது உள்ளத்தாலும், செயல்களாலும் பிறிதொரு மனிதனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையே உலகிற்கு தந்த அந்த மாநபி வழிவந்தவர்களாகிய -நாம் இன்று இருக்கும் நிலை சற்று கவலைக்குறியதாய் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறையும்,மறையும் ஒன்றென ஏற்றுக்கொண்ட நாம் உலகளாவிய "ஒற்றுமையென்னும் ஆணிவேர் நமக்குள் ஆழமாய் உன்றிருந்தப்போதிலும் தம்மில் வளர்ந்த தன்னலம் என்ற விழுதுகள் நம்மை பல்வேறாய் வி(பி)ரிந்து கிடக்கச்செய்கிறது.பாலஸ்தீனிலும்,ஆப்கானிலும் நம் சகோதரர்கள் படும்பாட்டை உரக்கச்சொல்லக்கூட திரானியற்று தம் உமிழ் நீரை உறிஞ்சுவோர் நம்மில் பலர்.அதனிலும் அவர்கள் நிலைக்கூற முன் செல்வோர் கூட தாம் சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தி சொல்ல முனைவதுதான் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று யாரும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒற்றுமைக் குறித்து ஓராயிரம் முறை எழுதினாலும், பேசினாலும் உள்ளூர் நிலையென வரும்போது ஒரு சார்புக்கொள்கை பக்கமாக பேச தலைப்படுவது தான் வருத்தப்படக்கூடிய விசயம்!
அறியாமை மற்றும் தன்னலம் போன்ற அடிப்படையே மையமாக வைத்து ஒருவர் செயல்படும்போதுதான் இது போன்ற ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் உருவாக்கத்திற்கு காரணம். இதை மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு இன்று உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையே சீர்குலைக்க யுத நஸ்ரானிய சக்திகள் முயல்கின்றன என்பதை விட அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதே இங்கு சரி!அத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம் பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும் வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்! அத்தகையே உலக ஒற்றுமையே நம் உயிருடன் உணர்வாய் கலக்க எல்லாம் அறிந்த நாயன் அருள்பாலிப்பானாக!
ஒற்றுமையின் இலக்கணமாக நாம் இல்லாவிட்டாலும் உலகளாகவிய ஒற்றுமை நமது இலக்காக இருக்கட்டும். "
Read more...

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"

0 comments

விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.

இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர! இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.

இறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி? என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.

ஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்

இப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.

ஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

இறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.

ஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல.,  நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும்! அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.

இணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.

இங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.

கட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.

யாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு!
ஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.
Read more...

கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் - பாரதூரமான மனநோய் ( OCD )

1 comments

HSM IHTHISHAM
MLS, Faculty of Medicine
University of Ruhuna
சிலர் வுழு செய்யும் போது, தக்பிர் கட்டும் போது ஒரே செயற்பாட்டை திரும்ப திரும்ப செய்வதை பார்த்திருப்பீர்ககள். இவ்வாறான மனப்பயநிலை மேலும் அதிகரிக்கும் போது நாம் கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் (OCD - Occessive compulsive disorder) என அழைக்கிறோம்.Obsession எனப்படுவது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிந்தனைகளைக் குறிக்கும். இந்த சிந்தனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பாதிப்பதுடன் அவரினால் கட்டுப் படுத்த முடியாதவையாகவும் இருக்கும். இந்த Obssession பல வகைப்படும். 
Obsessional thoughts -ஒரு சொல், சிந்தனை திரும்ப எழுதல்.
Obsessional Images - கெட்ட ஒரு படம் திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருத்தல்.
Obsessional Doubts - சந்தேகங்கள் திரும்ப எழுதல். அதாவது வீடு பூட்டினோமா ? கை கழுவிநோமா? கையில் ஏதோ கிருமி இருக்கிறதா?

 compulsion எனப்படுவது அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும்
சிந்தனைகளுக்கு அச்சப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்தல்.அதாவது கையில் ஏதோ கிருமி இருக்கிறது என்று சிந்தனை எழுபவர்கள் மீண்டும் மீண்டும் கை கழிவிக்  கொண்டே இருப்பது போன்றவை.இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை சில உதாரணங்களே .இது போல அவர்களுக்கு பல்வேறுவிதாமான சிந்த -னைகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம். 

   இன்னும் சிலருக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டால் பொதுாவாக உடலில் பல வகையான ஓமோனகள்,இரசாயனப்பதாரத்தங்கள் சுரக்கும். இதில் முக்கியமாக ஒரு இரசாயனப்பதாரத்தம் Serotenin ஆகும். இதன் தொழிலாக மூளையை அமைதியாக வைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் அளவு குறையும் போது மாறுபட்ட சிந்தனைகளை திரும்ப ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாலோ, சாப்பிருப்பாலோ போன்ற எண்ணங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். இதனால் எந்நேரமும் தொடர்பு கொண்டு சாப்பிட்டியா, என்ன செய்கிறாய் என்று கேட்டு கொண்டு இருப்பார். இவ்வாறான நிலை முற்றும் போது OCD ஏற்படும்.
   
    தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்தச் சிந்தனைகள் தொடர்ச்சியாக ஏற்படும். தீவிரம் குறைந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாமல் விட்டு விட்டு சில காலங்களில் மட்டும் ஏற்படும். இது தீவிரமாகும் போது வேறு விதமான நோய்களுக்கு  இட்டுச் செல்லும். கடும் கவலை (Anxiety), மன அழுத்தம் (Deppression ) , தன்னிலை இழத்தல் (depersonalization) போன்ற மனநோய்களுக்கு இட்டுச்செல்லும். 
 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மன நல வைத்தியரின் ஆலோசனையுடன் மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் மன நிலை ரீதியாக நோயாளிக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப் படுத்தும் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு சரிவராவிட்டால் மருந்துகள் பாவிக்கப்படும்… எனவே இவ்வாறான நிலை உள்ளவர்கள் அதிகரிக்கு முன் சிகிச்சை பெறுவது சிறந்தது.

Read more...

Friday, September 27, 2013

கேள்விகுறியாகிவிட்ட பள்ளி மாணவர்களின் வளர்ப்புமுறை…

1 comments
அறிவையும், ஒழுக்க மாண்புகளையும், நற்பண்பு களையும் போதிக்கின்ற கேந்திரங்கள் தான் பள்ளிக் கூடங்கள், பாலர் பருவத்திலிருந்தே முறையான பயிற்சிப் போதனைகள் கொடுத்தால் தான் அவர்கள் சிறந்த சந்ததிகளாக உருவாகுவார்கள். இதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்கின்ற நல்லொழுக்கப் பயிற்சியைப் பொறுத்துத்தான் மாணவர்கள் உருவாகுவார்கள்.முதல் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு நற்பண்பு களைச் சொல்லிக் கொடுப்பதில் தான் அவர்களைப் பழக்க வேண்டும்.
பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? கல்வி போதிக்கும் ஆசிரியரை எவ்வாறு மதிக்க வேண்டும்? சக மாணவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும்? பிற உயிரினங்கள் மீது எவ்வாறு இரக்கம் காட்ட வேண்டும்? பிறருடைய உடமைகளும் உரிமைகளும் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன போன்ற பண்புகள் மாணவர்களுக்கு ஒவ்வொரு நேரமும் வலியுறுத்தப்பட்டு வரவேண்டும்.இப்படிப்பட்ட பயிற்சியின் மூலமாகத்தான் சிறந்த சந்ததிகளாக உருவாகுவார்கள். எந்த மாணவனிடத்திலா வது இதற்கு விரோதமான குணங்கள் காணப்படுமானால், அவனுடைய பாதிப்பு மற்ற மாணவர்களையும் தாக்கி விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு, அவன் மீது தனிக் கவனம் செலுத்தி, அவனை நல்லவனாக மாற்றி எடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுடைய கையில் இருக்கிறது. மாணவர்கள் எக்கேடுகெட்டால் என்ன, நமக்கு வேண்டியது சம்பளம் மட்டும் தான் என்ற எண்ணத்தில் ஆசிரியர்கள் செயல்படும் போது தான் மாணவர்கள் தறுதலைகளாக உருவாகுகின்றனர். இன்றைய கல்விக் கூடங்களில் உருவாகும் பெரும்பாலான மாணவ மாணவியரின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்படும்
சிறுசிறு பிரச்சினைகளை பூதாகரமாக ஆக்கி, அதைக் காரணம் காட்டி, வன்முறைகளிலும், தீவிரவாதச் செயல்களி லும் ஈடுபடுகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் அதிக மான கல்விக் கூடங்களில் வன்முறை சம்பவங்களை மாணவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மோச்சம் பள்ளி என்ற ஊரில் ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தேரிய வன்முறை சம்பவங்கள் நெஞ்சை உறையச் செய்கின்றன. அந்த பள்ளியில் பயின்றுவந்த ஒரு மாணவன் மீது அந்தப் பள்ளிக்கூட வாகனம் தவறுதலாக மோதிய காரணத்தினால் அந்த மாணவன் பலியாகி விடுகின்றான். இதைக் காரணம் காட்டி, அந்த பள்ளி மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் திரண்டு பள்ளி வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் அனைத்து வகுப்பறைக்குள்ளும் நுழைந்து அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். கணினி ஆய்வகத்திற்குள் சென்று அறுபதிற்கும் மேற்பட்ட கம்பியூட்டர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளனர். பள்ளி தாளாளரின் வீட்டைத் தேடிச் சென்று வீட்டிற்குள் புகுந்து வீட்டை சூறையாடியுள்ளனர். பள்ளிக் கூடத்திற்குள் சென்று பள்ளி தாளாளர் அறையை சூறையாடி மேஜையிலிருந்த ஆவணங்கள், பள்ளி ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் கள், பள்ளி நிர்வாக ஆவணங்கள் அனைத்திற்கும் தீவைத்து சாம்பலாக்கியுள்ளனர்.
தவறுதலாக நடந்த ஒரு சம்பவத்திற்காக மாணவர் களும், அவர்களுடைய பெற்றோர்களும் சேர்ந்து இவ் வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளிக்கூடத்தை தீவைத்து சாம்பலாக்கி விடுவதினால் இவர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா? மாண்ட மாணவனின் உயிர் மீண்டுவிட்டதா? இது தான் அவர்கள் தங்கள் பள்ளிக்கூடத்தில் பயின்ற பாடமா?மாணவர்கள் ஒழுக்கப்பயிற்சி பெறாதது தான் இதற்கெல்லாம் காரணம். வினாத் தாளில் கேட்கப் பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும், வெற்றி பெற்று கை நிறைய ஊதியம் கிடைக்கும் வேலை களில் அமர வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிலுகின்ற கார ணத்தினால் தான் ஒழுக்கத்தைப் பற்றியோ நற்பண்புகளைப் பற்றியோமாணவர்கள் கவலைப்படுவதில்லை. சமீப நாட்களாக பள்ளிக்கூடங் களிலும் கல்லூரிகளிலும் வன்முறைச் சம்பவங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், ராகிங் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முற்றிலுமாகஒழிக்க வேண்டுமானால் கல்வித் துறை மாணவர்களுக்கு நற்குணங் களைப் போதிக்கும் விதத்தில் பாடத் திட்டத்தை அமைக்க வேண்டும். அது சரியான முறையில் ஆசிரியர் களால் பயிற்றுவிக்கப்படுகின்றதா என்று கண்காணிக்க வேண்டும்.
Read more...

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

0 comments
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத் தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்து வார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருட னும் பேசாமல் உம்மென்று இருப்பார் கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத் திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலை யோடு காணப்படுவார்கள். இதற்கெல் லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன:
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்கு வாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உற வினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல் நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத் தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளி வட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள் 11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாக வும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூடஅதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகு விரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியவை மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர் களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாட­ல் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன:
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும்.
இதுசொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப் பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல் லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்வி கள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தைத் திசை திருப்பு வதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்­ அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல் வதன் மூலமாக பெற்றோர் தன்னைக் கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.
இந்த எண்ணம் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். இவ்வாறு அவர் களுடன் கலந்துரையாடி மன அழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல் களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை. மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்:
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முத­ல் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர் களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்து வது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதைஉணர்ந்ததும் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயி­ருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்து வது என்பதை அவர்களுக்கு சொல் ­க் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல் லி த் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களைச் செய் வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள் . 11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களு டன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்தமாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சி களை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்­ குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளைக் கடைப்பிடித்த பிறகும், மன அழுத் தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என் றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாம லும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கே­ செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள். 18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனத்தில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள். 19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட் சியம் செய்வதே, குழந்தையின்மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரி யானது தான் என்று பாராட்டுவார்கள். நீங்கள் நன்மையிலும், இறை யச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்தி லும் வரம்பு மீறலிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாதீர் கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்குர்ஆன் : 5:2)
Read more...

Thursday, September 26, 2013

தீங்கை விளைவிக்கும் புகைத்தல்

0 comments


Man-smoking-a-cigarette-006இன்று புகைத்தல் பழக்கம் சர்வசாதாரணமாகி சமூகத்தின் வயது வந்தவர்களையும் கடந்து பாடசாலை செல்லும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமதிகம் இழையோடிக் காணப்படுவது கவலை தரும் அம்சமாகும். அதேநேரம், அதுவே ஒரு கலாசாரமாகவும் பருவ வயதை அடைகின்ற போது நாகரீகமாகவும் சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமூகத்தின் நடத்தைகளுடன் இரண்டறக் கலந்திருப்பது சமூகத்தின் உயிர்த்துடிப்பை நசுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செயலாகும்.
சமூகத்தில் எழுப்பப்படும் எதிர்மறையான சுயகருத்துகளும் அப்பால் இவ்வாக்கம் இஸ்லாத்தின் நிழலில் புகைத்தல் தொடர்பாக விரிவாகப் பேசுகின்றது.
புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இடம்பெற்ற ஒன்றல்ல. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும் தீங்குகளையும் அறிஞர்களால் உடன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது என்பதை உணர்ந்து ‘புகைத்தல் ஹராம்’ என்றே தீர்ப்பளித்துள்ளனர்.
“தீங்கிழைக்கக்கூடிய அனைத்தும் ஹராம்” என்பது இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்றாகும். இவ்வகையில் புகையிலையும் கூட மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிப்பதால் ஹராமானவற்றின் பட்டியலிலேயே உள்ளடக்கப்படுகின்றது. அல்குர்ஆன், சுன்னா, இஜ்மாஃ கியாஸ் முதலிய சட்ட மூலாதாரங்களினூடாக இது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.no smokig-cancer-stop smoking-nethiram-cicarete-pukaiththal (13)
நீங்கள் உங்களை அழித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா-195)
இவ்வசனம் மனிதனுக்கு தீங்கின் பக்கம் இட்டுச் செல்லும் அனைத்தையும் தடை செய்வதாக அமைகின்றது. இவ்வகையில் மனிதனை தீங்கிற்கு உட்படுத்தும் புகைத்தல் உட்பட கண்ணாடி, கல், விஷம் போன்று எவற்றையெல்லாம் உட்கொள்வதால் தீங்கேற்படுமோ அவற்றையெல்லாம் உண்பது ஹராமாகும். அருவருக்கத்தக்கவற்றைத் தவிர எவற்றையெல்லாம் உட்கொள்வதன் மூலம் தீங்கேற்படாதோ அவற்றை உண்பது ஹலாலாகும் என இமாம் நவவீ ‘அர்ரவ்ழா நதிய்யா’ எனும் நூலில் விளக்குகின்றார்.
“நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் கருணையுடையவனாக இருக்கின்றான்.” (அந்நிஸா 29)
அதேநேரம் புகைத்தல் (தடுக்கப்பட்ட) ‘ஃபாஹிஷா’ என அல்குர்ஆன் குறிப்பிடும் மிக மோசமான அருவருக்கத்தக்க பாவங்களுள் ஒன்றாகும். மேலும் சிறந்தவற்றையே புசிக்குமாறும், அவையல்லாதவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி பல வசனங்கள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.
“மக்களே! பூமியில் நீங்கள் ஹலாலான, சிறந்தவற்றையே உட்கொள்ளுங்கள்!” (பகரா)
“தூதர்களே! நல்லதையே புசித்து நற்காரியங்களைப் புரியுங்கள்!” (முஃமினூன்)
விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அளித்ததில் சிறந்தவற்றையே உண்ணுங்கள்!” (பகரா)
மேலும், மோசமானவை, அசிங்கமானவை பற்றியும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “மோசமானவை அதிகமாக இருந்த போதிலும், நல்லதும், மோசமானதும் ஒரு போதும் நிகராகமாட்டாது. அறிவுள்ளவர்களே! ஜெயம் பெற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (மாயிதா – 100)
எனவே சிறந்தவை எப்போதும் சிறந்தவைதாம். மோசமானவை என்றும் மோசமானவைதாம். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றாயிருக்க முடியாது. சுத்தமான மனித வாழ்வுக்கு பயன்மிக்க சிறந்த விடயங்கள் அனைத்தும் ஹலால் எனவும் அழுக்கான தீங்கு பயக்கின்ற மோசமான அனைத்தும் ஹராம் எனவும் ஒரு சட்ட விதி குறிப்பிடுகின்றது.
மேற்குறித்த இவ்விதியானது உணவாகவும், பானமாகவும் கொள்ளப்படுகின்ற அனைத்துக்கும் பொருந்துவதாக அமையும். அதேநேரம், மேற்சொன்ன குர்ஆன் வசனத்தில் “மோசமானது” எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கபீஸ்’ எனும் சொல் வெருக்கத்தக்க சுவையும் வாசனையும் கொண்ட அருவருக்கத்தக்க ஒன்றைக் குறிக்க அரபு மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பின்புலத்தில் புகைத்தல் என்பது தீங்கிழைக்கின்ற அதேவேளை பிரயோசனமற்றதாகவும் உள்ளது. பிரயோசனமற்ற ஒன்றிலே செல்வத்தை வீண்விரயம் செய்வது ‘ஹராம்’ என்பது தெளிவானதே.dont-waste-your-money
“உண்ணுங்கள், பருகுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள்.”
இவ்வசனத்தில் அல்லாஹ்த்தஆலா வீண்விரயம் செய்வதைத் தடுத்துள்ளான். இது ஹராமான விடயங்களுக்காக செலவு செய்வதையோ அநாவசியமாக செலவளிப்பதையோ, அளவு மீறி செலவளிப்பதையோ குறிக்கலாம். மற்றுமோர் இடத்தில்….
“நீங்கள் வீண்விரயம் செய்ய வேண்டாம்.” (இஸ்ராஃ – 26)
வீண்விரயம் என்பது பின்வருனவற்றை உணர்த்துகின்றது.
01. செல்வத்தை ஹராமான ஒன்றில் செலவு செய்தல்.
02. செல்வத்தை பிரயோசனமற்ற, அவசியமற்ற விடயங்களில் செலவு செய்தல்.
03. செல்வத்தை அளவுக்கதிகமாக விரயம் செய்தல். (ஆகுமான விடயங்களிலும் சரியே..)
மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற அநியாயமான விடயங்களில் செலவு செய்வதை (வீண்விரயம் செய்தலை) ‘தப்தீர்’ எனும் பதம் குறிப்பதாக இமாம் கதாதா விவரிக்கின்றார். எனவே, இந்த விளக்கத்தினூடாகப் பார்ப்பினும், புகைத்தலுக்காகச் செலவு செய்வது வீண்விரயம் என்பது வெள்ளிடைமலை போன்றதாகும்.
“தனக்குத் தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது.” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்க, இமாம் அஹ்மத், இப்னு மாஜா போன்றோர் பதிவு செய்துள்ளனர்.save_money
மேற்குறித்த நபிமொழி மூலம் தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பது புலனாகின்றது. சமூக சூழலில் பலர் இத்தகைய பாவச் செயலை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டுமல்லாது வீட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைத்தலை மேற்கொள்வதால் சூழலியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை புகையிலை உடலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பை உண்டு பண்ணும் எனும் உண்மையை வைத்தியர்கள், துறைசார் அறிஞர்கள் வாயிலாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் ஆதாரமின்றி பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீண்விரயம் தடுத்துள்ளார்கள்” என அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்க்ள. மற்றுமோர் அறிவிப்பில்… “தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தான். தன் உடம்பை எதில் அழித்தான். தன் செல்வத்தை எங்கிருந்து பெற்றான். ஆகிய நான்கு விடயங்கள் வினவப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் நகரமாட்டாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம்: திர்மிதி)What are you Smoking_Image
இந் நபிமொழியின் அடிப்படையில் நான்கு விடயங்களுக்கு அவன் மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
01 வாழ்நாள்:
புகைப்பிடிப்பவன் வாழ்நாட்களை வீணாக்கி அழித்துக் கொள்வதனால் இறைவனுக்கு மாறு செய்கிறான்.
02. அறிவு:
புகைப்பிடிப்பவன் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களையும் அது ஷரீஆவில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிந்த பின்னரும் அப்பழக்கத்திலே பிடிவாதமாயிருப்பானாயின் அவனுக்களிக்கப்பட்ட அறிவு அவனுக்கெதிராகவே மறுமையில் சாட்சி சொல்லும்.
03. செல்வம்:
புகைத்தலுக்காக பணம் ஒதுக்குவது, செல்வத்தைப் பிரயோசனமற்ற வகையில் வீண்விரயம் செய்வதாகும். செல்வமானது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அமானிதம். அதனை அவன் திருப்தியுறும் வகையில், ஆகுமான விடயங்களில் செலவளித்தல் அவனது பொறுப்பாகும்.
04. உடல்:
மனித உடல், அதனுள் பொதிந்துள்ள பலம், சக்தி என்பன அவனது ஒவ்வொரு உறுப்பையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அமானிதங்களாகும். இதற்கு மாற்றமாக அவன் தனதுடலை நோய்களின் பாவங்களின் உறைவிடமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. புகைத்தல் எனம் துறையினூடாக அவனது உடலினுள் ஷைத்தான் நுழைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.World-Anti-Tobacco-Day
“கேள்வி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்” என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“யார் வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டை உண்கிறாரோ அவர் பள்ளியினுள் நுழையாது வீட்டிலே இருந்து கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
இந்நபிமொழியினூடாக நபி (ஸல்) அவர்கள் வெங்காயம், வெள்ளைப் பூண்டை உண்டவர்களுக்கு முஸ்லிம்களின் அவை, பள்ளிவாசல் என்பவற்றிலிருந்து ஒதுங்கி இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மேற்குறிப்பிட்டவை போலன்றி ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்ற அதேவேளை அசிங்கமான மிகவும் வெறுக்கத்தக்க வாசனையை வெளிப்படுத்தும் புகைத்தலுக்கு அடிமையானவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவது என்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நுஃமான் பின் பiர் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
“ஹலாலான விடயங்கள் தெளிவானவை. ஹராமான விடயங்கள் தெளிவானவை. இவற்றுக்கிடையே அனேகமானோர் புரிந்து கொள்ளாத சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளன.
யார் இவற்றைத் தவிர்ந்து கொள்கிறாரோ அவர்தன் மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்.
யார் அவற்றில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராத்தில் விழுந்து விடுகிறார்.” (குதுபுஸ் ஸித்தா)
தற்கொலை செய்து கொண்டோரைப் பற்றி கூற வந்த நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“உலகிலேயே ஒருவர் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ அதன் மூலம் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான்.” (அஹ்மத்) எனவே நிக்கோடின் என்ற விஷத்தினால் தற்கொலை செய்பவனின் முடிவும் மறுமையில் பயங்கரமாக இருக்கும்.
அல் இஜ்மாஃ, அல் கியாஸ்
போதையூட்டுபவை, விறைப்பூட்டுபவை, அருவருக்கத்தக்கவை, நஞ்சு என்பவற்றோடு புகையிலை ஒப்பீடு செய்யப்படுகின்றது. அடிப்படையில் மேற்சொன்னவை அனைத்தும் ஹராமாக்கப்படக் காரணம் (இல்லத்), போதையூட்டல், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தலாகும். இவ்வகையில் புகைத்தலும் இந்நியாயத்தைக் கொண்டிருப்பதால் ஹராமெனத் தீர்மானிக்கப்படுகின்றது.
ஷரீஆ விதிகள் (கவாஇத் பிக்ஹிய்யா)
பல்லாயிரக்கணக்கான சட்டங்களைப் பெறத்தக்க அல்குர்ஆன், ஸ¤ன்னாவின் அடியாகப் பெறப்பட்ட சில அடிப்படை ஷரீஆ விதிகள் இஸ்லாமிய சட்டவாக்க கலையிலே காணப்படுகின்றன. இவற்றின் மூலம் காலவோட்டத்தில் புதிதாகத் தோன்றுகின்ற பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வகையில் புகைத்தலை தடை செய்யும், ஹராமாக்கும் சில சட்ட விதிகள் பின்வருமாறு…bad-effect-of-smoking
01 தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைக்கக் கூடாது.
இதன் உப பிரிவுகளில் ஒன்றே. ‘தீங்கு தவிர்க்கப்பட வேண்டும்.’ என்பதாகும். இவ்விதி பற்றி அறிஞர் ‘முஸ்தபா ஸர்கா’ அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள். ‘இவ்விதியானது ஷரீஆவின் தூண்களில் ஒன்று. இதற்கு ஏராளமாக குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. தீங்கையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுத்து நிறுத்துவதற்கான அஸ்திவாரம் இதுவே. நலன்களை நிலை நிறுத்தவும் கேடுகளை கலைந்தெறியவும் உதவும் அடிப்படையும் இதுவே. நிகழ்வுகளுக்கு ஷரீஆ சட்ட விதிகளைப் பெறுவதில் சட்டவியல் விற்பன்னர்களின் அளவு கோலும் இதுவே.’
(அல் மத்கல் – பக். 02
02 பிரயோசனமளிப்பவை அடிப்படையில் ஆகுமானவையாகும்.
புகைத்தல் அடிப்படையில் பிரயோசனமளிக்காத அதேவேளை தீங்கையும் அழிவையும் ஏற்படுத்துவதனால் அது ஹராமானதாகும்.
03. நலன்களை நிலை நிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது.
புகைத்தல் ஆரோக்கியத்திற்கும் செல்வத்திற்கும் கேடு விளைவிப்பதோடு மக்களுக்குத் தீங்கையும் ஏற்படுத்துகின்றது. நலனும் கேடும் ஒரே நேரத்தில் எதிர்ப்படின், கேட்டினைத் தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். ஏனெனில் ஷரீஆவானது விதிக்கப்பட்டவற்றை விட விலக்கப்பட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ‘நான் ஏவியவற்றை நீங்கள் முடிந்தளவு எடுத்து நடவுங்கள். தடுத்தவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்.’ என்றார்கள்.
04. தீமைகளுக்கான வாயில்கள் அடைக்கப்பட வேண்டும்.
ஹராத்திற்கு இட்டுச் செல்பவையும் ஹராமானதாகவே ஷரீஆவில் கருதப்படுகின்றது. புகைத்தல் பலவீனத்தை 2|@னிrஜிகின்ற அதேவேளை மேற்சொன்ன விதியினடிப்படையில் புகைத்தலானது இன்னும் பல ஹராமான விடயங்களுக்கு இட்டுச் செல்வதால் ஹராமானதாகி விடுகின்றது.
05. ஹலால் ஹராம் என்பன ஒன்று சேர்ந்திருப்பின் ஹராமே முதன்மை பெறும்.
இமாம் ஜுவைனி அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.
“ஒரு விடயத்தில் அதிகமான ஹலால், ஹராம் என்பன கலந்திருப்பின் அது ஹராமாகவே கருதப்படும்.” இவ்விதியினூடாகவும் புகைத்தல் ஹராம் என நிரூபிக்கப்படுகின்றது. புகைத்தலில் ஒரு சில நலன்கள் இருப்பதாக சிலர் வாதிட்டால் இவ்விதியினூடாக அவர்களது வாதம் முறியடிக்கப்படுகின்றது. உண்மையில் நவீன விஞ்ஞானம் நாளுக்கு நாள் புகைத்தலினால் விளையும் புதுப்புது பாதகங்களை கேடுகளை கண்டுபிடிக்கிறதே தவிற அதனால் ஏற்படும் சாதகங்களை முன்வைக்கவில்லை என்பது யதார்த்தம்.
எனவே மேலே விளக்கிய அடிப்படைகள் மற்றும் ஆதாரங்களின் ஊடாக புகைத்தல் ஹராமானது என்பது மிகவும் தெளிவாகிறது. இவற்றையும் மீறி ஒருவர் இப்பழக்கத்தில் தொடர்ந்திருப்பின் அவர் பிடிவாதக்காரராக அல்லது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவராகவே நிச்சயம் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை புகைத்தல் ஹராம் என்பது போல அதனை விற்பனை செய்வதும் ஹராமாகும். எனினும், சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இத்தகைய செயலை அலட்சியமாக கருதி விடுகின்றனர். தாம் செய்யும் தொழிலில் இவை சேர்க்கப்படாத போது வியாபாரம் பின்னடைந்து விடுகின்றது என்ற வாதங்களை முன்வைப்போரும் உள்ளனர்.
யதார்த்தத்தில் அல்லாஹ்வின் அருளை புரிந்து கொள்ளாத இத்தகைய கொடுக்கல், வாங்கல்கள் ஒரு போதும் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தாது என்பது திண்ணம். பின்வருமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்தவற்றில் இருந்து நல்லவற்றையே செலவு செய்யுங்கள்….”
இன்று சமூகத்தின் ஹராம் அலட்சியமான நிலையில், சிலபோது புரிந்து கொள்ள முடியாத நிலையில் பரவலாக மனித செயற்பாடுகளுடன் கலந்து விடுகின்றது. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் “ஒரு காலம் வரும் அப்போது மனிதர்கள் ஹலால், ஹராம் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அலட்சியமாக இருப்பார்கள்” என குறிப்பிட்டார்கள்.
அவ்வாறான சூழலில் நாம் அதீத கவனம், பாதுகாப்பு இல்லாத போது எமது மறுமை வாழ்க்கையும் பாலாகிவிடும் என்ற அச்சம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் அணிவிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் பரவலடையச் செய்ய வேண்டும்.
தொகுப்பு:-
எஸ்.எம். இர்ஸாத் இஸ்லாஹி விரிவுரையாளர்,
சிறாஜிய்யா அரபுக் கல்லுரி, ஓட்டமாவடி.
Read more...

கணிதமேதை அல் குவாரிஸ்மி

0 comments


indexகணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை
யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக
எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன.இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்ற அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில்நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன்காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறைவழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இந்தியர்களிடமிருந்து கணித எங்களைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.இன்னும்
பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர்.zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த
காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் அல்ஜீப்ரா என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry),முக்கோணக்கணிதம்
(Trigonometry) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின்நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர்
அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 – 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.
Read more...

Wednesday, September 25, 2013

வரதட்சணை ஓர் பாவச்செயல்

0 comments
புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் இறைவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.

படித்தவர் முதல் பாமரர் வரை... மகளை கரையேற்ற கடனை வாங்கி தத்தளிக்கும் பெற்றோர்கள். பட்டு சேலைக்கு மட்டும் பல இலட்சம் செலவழிக்கும்இ நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினர் வரை... அனைவருக்கும் பரிட்சயமான விஷயம்தான் வரதட்சணை.
ஒரு ஆணுக்கு திருமணம் பேச்சு துவங்கி விடுமானால், நல்ல பெண் கிடைத்தால் சொல்லுங்களேன் என்ற ரீதியில் தொடங்குகிறது இந்த பெண் பார்க்கும் படலம். நல்ல பெண் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு தனிமனித அகராதியிலும் வேறுபட்ட பல அர்த்தங்கள்;. நல்ல பெண் என்பவள் தீன்வழி நடக்கும் குணமான பெண்ணா?... என்றால் நிச்சயமாக இல்லை.

இவர்களுக்கு ஒரே மகள் தான், தகப்பனாரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றார், எனவே கரக்கும் வரை கரக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் களத்தில் இறங்குகின்றனர். தகுதி ஏற்றாப்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதிக இலாபம் ஈட்டித்தர வீடு, நிலம் விற்க தரகர்கள் இருப்பது போல் மாப்பிள்ளை விற்கவும் தரகர்கள் இல்லாமலில்லை.

மாப்பிள்ளை வீட்டார் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்கள் சொல்லி மாளாது. சாம்பார் கொண்டு வந்தால்தான் பிரியாணியில் கை வைப்பேன் என்று மாப்பிள்ளையின் உணர்ச்சி வசப்பேச்சு ஆகியவற்றிற்கு பெண்ணைப் பெற்ற காரணத்தால் பொறுமையுடன் கேட்டதை கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. மொத்தத்தில் இஸ்லாம் கூறும் வாழ்க்கை ஒப்பந்தம் இங்கு கேலிக் கூத்தாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை (ஒப்பந்தம்) செய்துள்ளனர் (அல்குர்ஆன் 4:21)

அல்லாஹ் தனது திருமறையில் திருமணம் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே என்பதாக குறிப்பிடுகிறான்.

வரதட்சணை என்ற பெயரில் இவர்கள் பணம் சம்பாதிக்க பிரயோகிக்கும் விய+கம் அலாதியானது. பணம் வேண்டாம் நகை மட்டும் போதும் உங்கள் பெண்ணுக்கு தானே போடுகிறீர்கள் என்ற ரீதியில் சிலரும், வரதட்சணை வாங்காத திருமணம் என்று விளம்பரபடுத்தி விலை உயர்ந்த சீர்வரிசைகளை மட்டும் திரைமறையில் பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது.

இவர்கள் மேடையில் பெறப்படும் ரொக்கப் பணம் மட்டும் தான் வரதட்சணை என்றும் இதுவல்லாது தரப்படுகின்ற அனைத்தும் வரதட்சணையை சேராது என்றும் மேம்போக்கு வாதம் செய்கின்றனர். தனது கனவுகளை நினைவாக்கவும் தமது சொத்துக்களை விரிவடையச் செய்யவும் இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் தான் வரதட்சணை என்பது. மேடையில் வாங்கப்படும் ரொக்கப்பணம் மட்டும்தான் வரதட்சணை என்றால்?

o கை நீட்டி வாங்கும் கைக்கடிகாரமும், மாப்பிள்ளைக்கு என பெறப்படும் கழுத்துச் செயினும், மோதிரமும், வீடும், நிலமும் வரதட்சணை இல்லையா?

o நிச்சயதார்த்தம் என்ற பெயரில் பெரும்படை திரட்டி, உண்டு கூத்தாடி, பணச்சசுமயை பெண் வீட்டார் மீது சுமத்துவது வரதட்சணை இல்லையா?

o புகுந்த வீட்டிற்கு பெண்ணை அழைத்து வரும் போது கேட்கும், பஞ்சு மெத்தையும், பட்டுத் தலையணையும், ஓலை விசிரியிலிருந்து, பண்டு பாத்திரங்கள், அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள் வரை சுருட்டிக் கொண்டு வருவதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?

o பண்டிகை நாளுக்காக காத்திருந்து பாத்திரங்கள் நிரப்பி பண்டங்கள் கேட்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?

o தலைப் பெருநாள் சாக்கில் புத்தாடை கேட்பதும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை தூண்டி மடியை நிரப்பிக்கொள்தற்க்கும் பெயர் வரதட்சணை இல்லையா?

o கர்பிணி மனைவியின் கவலை மணம் பார்க்காமல் பிரசவச் செலவு முதல் குழந்தைக்கு பவுடர் சோப்பு வரை மாமனாரை தரச் சொல்லி நிற்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?

o பிரசவம் முடிந்து திரும்பி வரும் போது குழந்தைக்கு வெள்ளி அரைஞான் கயிறும், வெள்ளிக் கொலுசும்இ தங்க நகைகளும் கேட்பதற்கு என்ன பெயர்?

o மனிதர்களே, நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! மேற்கண்டது மட்டும் வரதட்சணை சார்ந்தது அல்ல! இதுவல்லாது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பணமாகவோ, பொருளாகவோ, நிலமாகவோ, சொத்தாகவோ, வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையே!

o பெண்ணை பெற்ற ஓரே பாவத்திற்காக ஊர் வழக்கம் என்ற பெயரில் இவ்வளவு சுமையை பெண் வீட்டார்; மீது சுமத்துவது எவ்வளவு பெரிய கொடுமை. கருணை என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இல்லையா?

o பணம் படைத்த பல மாடிக் கட்டிடத்திற்கு சொந்தக்காரர்களுக்கு வேண்டுமானால் இவை சாத்தியப்படலாம். அன்றாடப் பிழைப்புக்கு சைக்கிள் கடை நடத்தி வரும் நடுத்தர வர்கத்தினருக்கு?

o 30 வயது மூத்தமகள் வீற்றிருக்க சமீபத்தில் வயதுக்கு வந்த நான்காவது மகளின் எதிர்காலம் குறித்து கண்ணீர் சிந்தும் ஏழை முஸ்லிமின் நிலை உங்கள் மனக் கண்களுக்கு தெரியாதது ஏன்?!

o இவ்வாறு பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திருமணத்தில் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்த பின்பும் இத்தோடு வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதில் என்ன நிச்சயம்!

o மேலும் கொடுக்க முடியாத பட்சத்தில் தன் இரத்தத்தை ஊட்டி வளர்த்த பெண் புகுந்த விட்டில் இந்த பணத்தாசை முதலைகளின் பிடியில் நிலைத்திருப்பாள் என்ற எதிர்காலப் புதிருக்கு விடையில்லை?!

ஸ்டவ் வெடிப்புக்கள் பெருகி வருவது எதைக் காட்டுகிறது! கவனக் குறைவினால் வெடித்த ஸடவ்கள் எத்தனை?! வசூலிக்க முடியாத வரதட்சணை பாக்கியால் வெடித்த ஸ்டவ்கள் எத்தனை?! என்று வினாக்கள் எழுந்தாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது வரதட்சணை பின்னணியிலும் ஸ்டவ்கள் வெடிக்கின்றன என்பதுதான்.

கல்நெஞ்சம் படைத்தவர்களே! பெற்ற கடனுக்காக கொடுத்து கொடுத்து ஓட்டாண்டியாகி ஓலைக் குடிசையில் ஒடுங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட ஏழை, படைத்த இறைவனிடம் கையேந்தினால் உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்?. சிந்திக்க மாட்டீர்களா?!

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அவனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே திரை இல்லை என்கிறது நபிமொழி.
Read more...

Tuesday, September 24, 2013

பன்றி இறைச்சியின் பாதிப்புக்கள்

0 comments

பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
இது பற்றி DR.ஜாகிர் நாயக் கூறுகிறார்
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்து இருக்கிறது ?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குரானின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் இறைவன் (அல்லாஹ்) அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கபட்டது) ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி உங்களுக்கு தடுக்கப்பட்ட உணவு.இது அல்லா குர்கானில் சொல்லபட்டது. அறிவியலில் பன்றி கறியை சாப்பிட்டால் மனிதவுடம்பில் ஒருவிதமான நாற்றம் தோன்றும்,நாளடைவில் தோளில் கரும்புள்ளி (அதாவது தோல் வியாதி வரும்),பன்றியினஉடம்பில் உள்ள கிருமிகள் சில எவளவு அதிகமான கொதிநிலயுளும் சாகாது அந்த கிருமி மனித உடம்பில் சென்று எந்த எடத்தில் தங்குகிறதோ அங்கு நம் உடம்பில் உள்ள நோய் எதிப்பு சக்தி கிருமிகளை கொள்ளுகிறது,பன்றியின் கிருமி நம் மூலையில் போய் தங்கும்போது மூளைக்காய்ச்சல் தோன்றுகிறது.இது நான் படித்தது மற்றதை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறய்ன் (கற்றது கையளவு கல்லாலது உலகளவு)

Taken from-இஸ்லாம் தனி மனித சொத்தல்ல-
Read more...

Saturday, September 21, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

0 comments


(சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்)

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் விடை தேட வேண்டிய முக்கியமான ஐந்து கேள்விகள் காணப்படுகின்றன. அவை எப்போது, ஏன், யார், எங்கே,எவ்வாறு? என்ற கேள்விகளாகும். இவற்றிற்கு மிகச் சரியாக விடையளிக்கின்ற பொழுது, அவர்களிடம் திருமணத்திற்கான முறையான ஒரு திட்டம் தயாராக இருக்கும். இவ்வாறான ஒரு திட்டம் இளமையின் ஆரம்பப் பருவத்திலேயே காணப்படுவது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். நபியவர்கள் கூறினார்கள், ஒருவன் தனது இளமைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்கின்ற பொழுது, ஷைத்தானுக்குரிய பாதை தடை செய்யப்பட்டு விடுகிறது. அப்போது ஷைத்தான் சொல்லுவான் ஐயோ, எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதே. இவன் என்னிடத்திலிருந்து தனது மார்க்கத்தின் மூன்றில் இரண்டு பகுதியை பாதுகாத்துக்கொண்டு விட்டானே, மீதமுள்ள மூன்றில் ஒன்றில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் என்பான். – தபரானி -
இந்த ஹதீஸ் இளமைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்வதன் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் வலியுறுத்துகிறது. அந்தவகையில் அதற்கான திட்டமும் ஆரம்பத்திலேயே அமைவது மிகவும் பயனுள்ள ஒரு விடயமாக இருக்கும்.
கடந்த அமர்வுகளில் எப்போது என்ற கேள்விக்குப் பதில் தேடும் போது, அங்கு திருமண வயது குறித்தும், பொருளாதார வசதிகள் குறித்தும் சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இன்றைய அமர்வில், திருமணத்திற்காக சகோதரிகள் பெற்றிருக்க வேண்டிய முதிர்ச்சி நிலை தொடர்பில் சற்று கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இன்றைய அமர்வு சகோதரர்களை விடவும் கூடுதலாக சகோதரிகளுக்கு அதிகம் பயனளிக்கலாம் என நினைக்கிறேன்.
எம்மில் சில பெற்றோர்கள், தமது பெண் பிள்ளைகளை, வீட்டில் இளவரசி போல் வளர்க்க முற்படுகின்றனர். வீட்டில் அவர்களாக எதையும் செய்ய மாட்டார்கள். மாற்றமாக எல்லாமே அவர்களுக்கு செய்து கொடுக்கப்படும். மற்றும் சில வீடுகளில் அவள் இன்னும் சின்னப் பிள்ளை என்ற மனோநிலை பெற்றோர்களிடத்தில் காணப்படும். சில சமயம் தமது பிள்ளை இருபத்தி ஐந்து வயதைக் கடந்த பின்னரும் இதே மனநிலையுடன் இருப்பவர்கள் இன்னும் காணப்படுகிறார்கள். இன்னும் சில வீடுகள், மகள் படிக்கிறாள் அவளை சிரமப்படுத்தக் கூடாது என்று அவளது போக்கிலேயே அவளை விட்டு விடுகிறார்கள்.
இந்த மூன்று நிலைகளுமே பிள்ளை வளர்ப்பில், குறிப்பாக பெண் பிள்ளை வளர்ப்பில் விடப்படுகின்ற தவறு என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டிருக்கிறார்கள்.
இன்றைய மிக முக்கிய பிரச்சினை, ஒரு புறத்தில் இன்றைய திறந்த உலகம் இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் காதலையும் காமத்தையும் ஆரம்பப் பருவத்திலேயே தூண்டி விடுவதில் பெரும் பங்களிப்புச் செய்கின்றது. ஆனால் மறுபுறத்தில் குடும்ப வாழ்வை ஒரு பொறுப்பாகச் சுமந்து, வீட்டை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் தயார்படுத்தப்படுவதில்லை. எனவே, இளைஞர்கள் திருமணத்தை வெறுமனே காதலாகவும் காமமாகவும் மாத்திரமே பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதனை ஒரு பொறுப்பாகப் பார்ப்பதில்லை. இந்த இடைவெளியை பாடசாலைகளோ, பல்கலைக்கழகங்களோ நிரப்பியதாகத் தெரியவில்லை. பள்ளிவாயல்களும் நிச்சயமாக நிரப்பவில்லை. ஊடகங்கள் இடைவெளியை இன்னும் அதிகரிக்கவே உதவுகின்றன. வீடுகளும் அந்தப் பணியை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டன என்பதைத்தான் நான் மேலே அடையாளப்படுத்திக் காட்டிய பெற்றோர்களின் மனோநிலைகள் சொல்கின்றன.
திருமணம் என்பது ஒரு பொறுப்பு. குடும்ப வாழ்வு என்பது ஒரு பொறுப்பு. நிச்சயமாக அந்தப் பொறுப்பை நாம் மிகச் சரியாக நிறைவேற்றினோமா? என்பது குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். அல்லாஹ்தஆலா கூறுகிறான் “ஈமான் கொண்டவர்களே, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்…” (தஹ்ரீம் - 06) நரகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வது மாத்திரமல்ல எனது குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதும் எனது பொறுப்பாகும் என்று இந்த அல்குர்ஆன் வசனம் கூறுகிறது.
நபியவர்கள் கூறினார்கள் “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்திற்குப் பொறுப்பானவன். ஒரு பெண் தனது கணவனுடைய வீட்டிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இவர்கள் தமது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்.” – புஹாரி-
இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக குடும்பப் பொறுப்பை வலியுறுத்துகிறது. இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி இதுதான். குடும்பம் ஒரு பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எமது இளைஞர்களும் யுவதிகளும் அந்தப் பொறுப்பை சுமக்கத் தகுதியானவர்களாக காணப்படுகிறார்களா?
இங்குதான் முதிர்ச்சி என்ற கருதுகோள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் வீடுகளின் பங்களிப்பு தான் மிகவும் முக்கியமானது. இளைஞர்களிடத்தில் இந்த முதிர்ச்சியை உருவாக்குவதற்கான உழைப்பு என்ற காரணி குறித்து கடந்த அமர்வில் விரிவாக கலந்துரையாடினோம். இந்த அமர்வில் சகோதரிகளின் பக்கம் சற்று கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.
பொதுவாக வீட்டினுள்ளே ஒரு பெண்ணின் பாத்திரம் குறித்து இஸ்லாம் வலியுறுத்தியுள்ள சில உண்மைகளை உதாரணத்திற்காகத் தருகிறேன்.
நபியவர்கள் கூறினார்கள் “ஒரு அடியான் இந்த உலகில் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகவும் பயனுள்ள பொருள் ஸாலிஹான மனைவியாகும். அவளைக் காண்கின்ற போதே அவன் சந்தோஷம் கொள்வான். அவன் வீட்டில் இல்லாதபோது, தன்னையும் தனது கணவனது செல்வத்தையும் பாதுகாப்பாள்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் சொல்லுகின்ற சில உண்மைகளை அவதானியுங்கள்.
- மனைவி என்பவள் ஆணுக்குப் பயனளிக்கக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். ஆணுடைய வாழ்வுக்குப் பாரமானவளாகவன்றி அவனுக்கு உந்துசக்தியாய் இருக்க வேண்டும். அவனுடைய வாழ்வை முழுமைப்படுத்துபவளாக இருக்க வேண்டும்.
- இத்தகைய ஒரு பயனுள்ள மனைவியைத்தான் ஸாலிஹான மனைவி என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
- கணவனுக்குப் பயனளித்தல் என்பதன் பொருள் என்ன? அல்லது ஸாலிஹான மனைவி என்பதன் பொருள் என்ன என்பதை இந்த ஹதீஸ் மூன்று கோணங்களில் விளங்கப்படுத்துகிறது.
1. அவளைப் பார்த்தாலேயே சந்தோசம் வரும், இங்கு சந்தோஷம் என்பது வெறுமனே புற அழகில் மாத்திரம் தங்கியிருக்கும் ஒரு விடயமல்ல. மனைவியின் புற அழகு கணவனைப் பொறுத்தவரை முக்கியமானதுதான். ஆனால் கணவனின் சந்தோஷம் அதில் மாத்திரம் தங்கியிருக்க மாட்டாது. மாற்றமாக அந்தப் பெண்ணின் நடத்தை, பேச்சு, வீட்டை சுத்தமாக வைத்திருத்தல், பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்தல் என்ற பல விடயங்களில் தங்கியிருக்கிறது. வீட்டின் அசுத்தமும் ஒழுங்கீனமும் கணவனின் கோபத்திற்கும் அமைதியின்மைக்கும் ஒரு முக்கிய காரணம் என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். வீட்டில் கணவன் சந்தோஷமாக இருப்பதே சமூக வாழ்வில் அவனை ஒரு சிறந்த தலைவனாக மாற்றுகிறது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “அருளாளனின் அடியார்கள் சொல்வார்கள் எமது இரட்சகனே, எமது மனைவி பிள்ளைகள் மூலம் எமக்கு கண்குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக. எம்மை முத்தகீன்களுக்கு தலைவர்களாகவும் ஆக்கி வைப்பாயாக”- புர்கான் 74-
2. அடுத்து கணவன் உடன் இல்லாத சமயங்களில் அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். இங்கு தன்னைப் பாதுகாத்தல் என்பது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பது போல், சூழ்நிலைகளை வெற்றி கொள்ளும், திறனையும் குறித்து நிற்கின்றது.
3. கணவனது சொத்துக்களைப் பாதுகாக்கக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். இங்கு சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பது, வீண்விரயம் என்ற பண்பு காணப்படக் கூடாது என்ற கருத்து மாத்திரமன்றி, சொத்துக்களை நிர்வகித்தல், மேற்பார்வை செய்தல், பாதுகாத்தல், வளர்த்தல் என்ற எல்லாக் கருத்துக்களையும் குறித்து நிற்கிறது.
எனவே, ஸாலிஹான மனைவி என்பவள் அல்லது கணவனுக்குப் பயனளிப்பவள் வீட்டில் அவனுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளித்து அவனை சமூக வாழ்வில் சாதிக்க வைப்பவள். கணவன் உடன் இல்லாத போதும், தனது ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காத்து நிலைமைகளை சமாளிக்கத் தெரிந்தவள். கணவனது சொத்துக்கள் அழிந்து விடாமல் நிர்வகிக்கத் தெரிந்தவள்.
இங்கு உதாரணத்திற்காக ஒரு ஹதீஸ் மாத்திரமே குறித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் பணியை விளங்கப்படுத்தக் கூடிய இது போன்ற பல நூறு ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எங்களுக்குச் சொல்லும் உண்மை இதுதான்.
மனைவி என்ற பாத்திரம் மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பாத்திரம். அதனை சுமக்கத் தகுதியான முதிர்ச்சியை இன்றைய சகோதரிகள் பெற்றுக்கொள்வதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை வழங்குகின்ற இடங்களாக எமது வீடுகள் மாற வேண்டும்.
அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபாக்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, அவள் தனது கணவனுக்குப் பணிவிடை செய்வது பற்றியும், கணவனுடைய உரிமைகளைக் காப்பது பற்றியும், பிள்ளைகளை வளர்ப்பது பற்றியும் அவளுக்குக் கற்றுக் கொடுப்பார்கள் என்றார்கள்.
எனவே, ஒரு பெண்ணை குடும்ப வாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்ற பணி குடும்பங்களையே சார்கின்றது. அந்தவகையில் ஒரு குடும்பம் தனது பெண் பிள்ளையிடம் முதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சில ஆலோசணைகளைக் கீழே தருகிறேன்.
• சிறுபராயம் முதலே பெண் பிள்ளைகளை வீட்டு வேலைகளில் இணைத்துக் கொள்வது முக்கியமானது. இந்த விடயத்தில் தாயின் பணியே முதன்மையானது.
• பிள்ளை சற்று வளர்கின்ற போது, வீட்டின் நிர்வாக விடயங்களிலும் அவர்களைப் பங்கெடுக்கச் செய்யுங்கள். குறிப்பாக வீட்டின் நிதியை நிர்வகிக்கின்ற விடயத்திலும் அவர்கள் பங்கு கொள்வது சிறந்தது.
• குடும்பத்தின் கஷ்டங்கள், பிரச்சினைகள் போன்றவற்றை முழுமையாக பிள்ளைகளை விட்டு மறைக்காதீர்கள். பிரச்சினைகளின் ஆழ அகலங்களை அவர்களது வயதிற்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமளியுங்கள்.
• குடும்ப விவகாரங்களில் தீர்மானம் மேற்கொள்கின்றபோது அவர்களது கருத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். சில சமயங்களில் வளர்ந்தவர்களின் கருத்துக்களை விடவும் அவர்களது கருத்து பெறுமதி வாய்ந்ததாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.
• சில சமயங்களில் ஓரிரு தினங்கள் தாய் வீட்டில் இல்லாதிருந்து வீட்டின் முழுப் பொறுப்பையும் மகளிடத்தில் ஒப்படைத்துப் பாருங்கள். வீட்டின் நிர்வாகத்தை அவள் சிறந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது காணப்படும். குறித்த நாட்களில் உங்கள் மகளின் சாதனையை கட்டாயம் பாராட்டுங்கள். ஏன் பரிசில்கள் கூட வழங்கி கௌரவிக்கலாம்.
• திருமண வயதை நெருங்குகின்ற பொழுது சில மாதங்களுக்கு வீட்டின் பொறுப்பை முழுமையாக மகளிடத்தில் ஒப்படைத்துப் பார்க்க வேண்டும். அங்கு விடப்படும் தவறுகள் கண்டிப்பாக சிறந்த முறையில் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்படல் வேண்டும்.
• திருமணம், கணவன், குடும்ப வாழ்க்கை போன்றனவற்றில் கற்பனையான ஒரு உலகிலேயே அதிகமான யுவதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வின் யதார்த்தத்தைப் புரிய வைப்பது தாயின் மீது காணப்படும் ஒரு முக்கிய பொறுப்பாகும். இதற்காக உங்கள் மகளுடன் கருத்துப் பரிமாறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சமயலறையில் இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பங்கள் இதற்கு மிகவும் பொறுத்தமானவை.
• இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் என்ன தெரியுமா? வீட்டில் தாய் ஒரு சிறந்த முன்மாதிரியாய் நடந்து கொள்வதாகும். தாய்மார்களே, நீங்கள் ஒரு சிறந்த மனைவியாய் தொழிற்பட்டால் உங்கள் மகள் ஒரு சிறந்த மனைவியாய் செயற்படுவதை உங்களிடம் கற்றுக் கொள்வாள். நீங்கள் வீட்டை சிறந்து நிர்வகித்தால் உங்கள் மகளும் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வாள். குறிப்பாக உங்கள் கணவன் மீதான கோபங்களை உங்கள் மகளின் முன்னே வெளிப்படுத்தாதீர்கள்.
திருமணத்திற்குத் தயாராகக் காத்திருக்கும் சகோதரிகளே, கடைசியாக உங்களிடம் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். உண்மையில் இந்தப் பத்தியை உங்களை நோக்கி மாத்திரமே எழுதியிருக்க வேண்டும். ஆனால் இந்தத் தலைப்பு உங்களுடன் தொடர்புபடுவதுபோல் உங்கள் குடும்பத்துடனும் தொடர்புபடுவதால் குடும்பத்தை நோக்கி அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் இங்கு பேசப்பட்டுள்ள எல்லா விடயங்களும் உங்களைச் சுற்றித்தான் சுழலுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் உங்களில்தான் ஏற்பட வேண்டும். இந்த முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களாக மாற வேண்டியவர்கள் நீங்கள்தான்.
இந்த மாற்றங்களின் ஆரம்பத் திறவுகோள் எது என்று கேட்கிறீர்களா?
நிச்சயமாக உங்களுடைய உளரீதியான தயார்நிலையே இங்கு மிகவும் அவசியமானதாகும். அல்லாஹ்தஆலா கூறுகிறான் “ஒரு சமூகம் தனது உள்ளத்தை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்றப் போவதில்லை” (ரஃத் - 11) எனவே. மாற்றம் ஆரம்பிக்க வேண்டிய இடம் உங்களது உள்ளம். குடும்ப வாழ்வை சுமக்கத் தகுதியான ஒரு பெண்ணாக நான் மாற வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நல்ல மாற்றத்தைக் கண்டுகொள்வது சாத்தியமாகிறது. மாத்திரமன்றி, அதற்கான உண்மையான ஈடுபாடும் உங்களிடத்தில் காணப்பட வேண்டும். உள்ளத்தில் விருப்பமும் உண்மையான ஈடுபாடும் காணப்படுகின்ற போது நிச்சயமாக குடும்ப வாழ்வை சுமக்கத் தகுதியான ஒரு பெண்ணாக நிச்சயம் நீங்கள் மாறுவீர்கள்.
அடுத்ததாக, மற்றொரு விடயம் பற்றியும் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் செல்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன். குடும்ப வாழ்வுக்கான முதிர்ச்சியைத் தருவதில் தொழில் அல்லது வருமானம் உழைத்தல் எனும் செயற்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. இது சகோதரர்களுக்கு மாத்திரமன்றி நிச்சயமாக சகோதரிகளுக்கும் பொறுந்தும். அந்தவகையில் ஆரம்பம் முதலே வருமானத்திற்கான ஒரு உழைப்பு உங்களிடத்தில் காணப்படுவது சிறந்தது. நிச்சயமாக குடும்பத்திற்காக செலவு செய்தல் கணவனின் கடமைதான். இருப்பினும் இன்றைய வாழ்வொழுங்கில் குடும்பப் பாரத்தை சுமப்பதில் மனைவிக்கும் ஒரு பங்கு காணப்படுவது சிறந்தது.
அபூபக்ர் (றழி) அவர்களின் மகள், அஸ்மா (றழி) அவர்கள் தனது கணவருடன் இணைந்து குடும்ப பாரத்தை சுமந்திருக்கிறார்கள். ஒரு தடவை இரண்டு அன்ஸாரிப் பெண்கள் நபியவர்களிடம் வந்து எங்களது ஸதகாவை கணவருக்கு வழங்கலாமா? எனக் கேட்டபோது, நபியவர்கள் ஆம் எனப் பதிலளித்ததுடன், அவர்களுக்கு இரண்டு வகையான கூலி கிடைக்கும் என்றார்கள். ஒன்று உறவைப் பேணிய கூலி. மற்றது ஸதகா செய்த கூலி என்றார்கள். – புஹாரி-
எனவே, ஒரு பெண்ணின் உழைப்பு என்பது வாழ்க்கை பற்றிய அனுபவத்தையும் முதிர்ச்சியையும் அவளுக்கு வழங்குகிறது என்பதற்கப்பால் கணவனுடன் இணைந்து குடும்ப செலவை சுமக்கக்கூடிய தகைமையையும் அவளுக்கு வழங்குகிறது.
சகோதரிகளே, இந்த அனைத்து தகைமைகளுடனும் நீங்கள் குடும்ப வாழ்க்கைக்குள்ளே நுழைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.
-அஷ்ஷெ்ஹ் அக்ரம் அப்துல் ஸமத்-
Read more...