Banner 468 x 60px

 

Tuesday, April 30, 2013

சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு

0 comments

இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது. இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள், அவர்களது பொறுப்பு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்ய முயல்கிறது.


 ஒரு சமூகத்தின் சொத்து, செல்வம் என்பது அதன் பௌதீக வளங்கள், பெருட் செல்வங்களல்ல. அவையெல்லாம் சமூகம் அடைய விரும்பும் இளக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே. மனிதனே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம். அடிப்படை வளம். அந்த மனிதன் செயலூக்கமும் செயற்திறனும் அற்றவனாக இருக்கும் போது பௌதீக வளங்கள் பயனற்றுப் போகும். அவற்றால் எதனையும் சாதிக்க முடியாது போகும். மனிதர்களில் உழைப்புத் திறனும் வேகமும், வீரயமும் கொண்ட காலப்பிரிவு இளமை. எனவே இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக அமைகிறார்கள். ஒரு சமூகத்தின் இளைஞர்களது நாடித் துடிப்பை பரீட்சித்துப்பார்த்து விட்டால் அந்த சமூகத்தின் நிகழ், எதிர்கால நிலையையே மட்டிட்டு விட முடியும். இப்பின்னணியிலே எந்த சமூகமும், நாடும், இளைஞர்களின் சமூகப்பங்களிப்பை பெரிதும் எதிர்பார்க்கிறது.

 எந்தப்புரட்சியின் போதும், போராட்டத்தின் போதும் இளைஞர்களே போராட்ட சக்தியாகிறார்கள். அதன் இயக்க சக்தியாக   -டைனமோவாக- அவர்களே அமைகிறார்கள். ஏனெனில் துடிப்பும், வீரியமும், வேகமும் நிறைந்த இப்பருவம் எப்போராட்டத்திலும் அவர்களை;க் குதிக்கச் செய்கிறது. இளமை தூய்மையும் அர்ப்பனிப்பும் நிறைந்தது. இலாப நஷ்டக்கணக்குப் பார்த்து அது செலவழிப்பதில்லை. எனவே மாற்றமொன்று தேவையென என்னும் சமூகமொன்று அதற்காக இளைஞர்களையே எதிர்ப்பார்க்கிறது.

 சமூகமென்பது அதன் கௌ;கை, தனித்துவம், ஆளுமையையே குறிக்கின்றது. குறிப்பாக இஸ்லாமிய சமூகமென்பது வெறும் இனமோ, மொழியோ, பௌதீக எல்லைகளோவன்று கொள்கையும் சிந்தனைத் தனித்துவமுமே அதனை அடையாளப்படுத்துகிறது. எனவே சமூக அழிவு என்பது குறிப்பிட்ட சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் அழிந்து விடலை, இறந்து போவதை குறிக்காது. குறிப்பிட்ட சமூகம் தன் சிந்தனைத் தனித்துவத்தை, நாகரீக கலாச்சார, அடையாளத்தை இழந்து விடலையே அது குறிக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த சமூகமொன்று அழிந்துபோய் விட்டது எனக் கூறும் போது அது அந்நாகரீகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் தொடராது இடைநடுவே பௌதீக ரீதியாக அழிந்து போனார்கள் என்ற கருத்தை குறிக்காது மாற்றமாக அந்நாகரீகத்தின் தனிமனிதர்கள் இன்னொரு கொள்கை;கு, நாகரீத்திற்கு மாறிப்போனார்கள். மானசீக அழிவுக் குற்பட்டார்கள் என்பதையே குறிக்கும். இவ்வாறான அழிவுக்கு இரு காரணங்களைக் கூறமுடியும் .

1. குறிப்பிட்டதொரு சமூகத்தின் சிந்தனைகளும். கொள்கைகளும், தொடரான அடுத்தத்த தலைமுறையினருக் நகர்த்தப்படாது அறுந்து போதல்.

2. பிறசமூகமொன்றின் சிந்தனை ஆதிக்கத்திற்குட்பட்டு அச்சமூகத்தின் நாகரீகத்தை, சிந்தனையையும் தழுவிக் கொள்ளல்.

 அடுத்து வரும் தலைமுறையினருக்கு குறிப்பிட்ட சமூகத்தின் நாகரீகத்தையும், நகர்த்தும் பிரதான ஊடகம் குடும்பம். அக்குடும்பத்தின் தலைமை ஆணாயினும், பெண்ணாயினும் இளைஞர்களிடமே உள்ளது. அத்தோடு முற்பரம்பரையிடமிருந்து நாகரீகம் என்ற அமானிதத்தை கையேற்பவர்களும் இளைஞர்களே.
 பிறநாகரீகமொன்று சிந்தனைப் படையெடுப் பொன்றை நிகழ்த்தும் போது தமது பிரதான இலக்காகக் கொள்வது இளைஞர்களையே. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் சமூகத்தையே மாற்றிவிடமுடியும் என்பது முற்றிலும் உண்மையே. நவீன காலப்பிரிவில் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிந்தனைப் படையெடுப்பின் அமைப்பையும், அதன் தாக்கங்களையும், ஆய்பவர்கள் இந்த உண்மையை நன்கு புரிந்து பொள்ள முடியும்.

 இந்த வகையில் இளைஞர்கள் என்போர் ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரணாகவும் அமைகிறார்கள். இவ்வரண் விழும்போது சமூகம் அழிவு, அபாயத்தை எதிர்நோக்குகிறது.

அல்குர்ஆனில் இளைஞர்கள்
 இளைஞர்களே போராட்ட சக்தி என்ற உண்மையை அல்குர்ஆன் உறுதிப்படுத்திக் காட்டுகிறது. இக்கருத்தை விளக்கும் வகையிலான சில வசனங்கள் கீழே தரப்படுகின்றன.

நபிமார்களைப் பின்பற்றியோர் சிலர் இளைஞர்களே! :
 அல்குர்ஆன் மூஸா (அலை) அவர்களது பிரச்சார வாழ்வு பற்றி விளக்கும் போது கீழ்வருமாறு கூறுகிறது.

  பிர்அவ்னுக்கு அஞ்சியும் அவன் கொடுமைப்டுத்துவானோ எனப்பயந்த தம் சமூகப்பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவர்களுடைய சமூகத்தாரில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சில இளைஞர்களைத் தவிர!|| (யூனுஸ்: 83)

 பனூ இஸ்ரேல் சமூகத்தினர் பிர்அவ்னின் கீழ் அடிமைப்பட்டு வாழ்ந்த அந்த வாழ்வை ஏற்றுப் பழகிப் போனார்கள். தம் மீது இழைக்கப்படும் அநியாயங்களின் முன்னால் பணிந்து, சரணடைந்து அதுவே இயல்பான வாழ்வு எனக் கண்டு வாழ்ந்தார்கள். இந்நிலையில் மூஸா (அலை) அவர்கள் அச்சமூக விடுதலைக்காகப் போராட எழுந்த போது அவரோடு ஒத்துழைத்து உண்மையாகவே போராட முன்வந்தவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே.

 அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் போராட்ட சக்தியாக எஞ்சி நிற்கக் கூடியவர்கள் இளைஞர்களே, என்ற ஆழ்ந்த சமூக உண்மையை இந்த இறைவசனம் எமக்குத் தெளிவுபடுத்துகிறது.

குகையில் வாழ்ந்த சில இளைஞர்கள்:
 சுற்றியிருக்கும் ஜாஹிலிய்யத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முற்பட்டு குகையில் போய்த்தஞ்சமடைந்தோர் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

 ஷஅவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட இளைஞர்கள். அவர்களுக்கு தாம் மேலும் நேர்வழியை அதிகரித்துக் கொடுத்தோம்.| (கஹ்ப்: 13)

 இளமை அனுபவிக்கும் வயது. உலக சுகபோகங்களின் பக்கம் ஈர்க்கப்படும் வயதும் அதுவே. ஆனால் கொள்கைப் பற்றும், துடிப்பும் மிகுந்த, இந்த இளைஞர்கள் அவை அனைத்தையும் விட்டு எவ்வசதியும் அற்ற குகையே மேல் எனக் கருதி அங்கு வாழ முற்பட்டார்கள்.

 இளைஞர்கள் ஒரு கொள்கையை ஏற்கும் போது முழுமையாக முழுமனதோடு ஏற்கிறார்கள். அர்ப்பணிப்போடு அதற்காக உழைக்கிறார்கள். அக்கொள்கையின் பாதையில் எதனை அர்ப்பணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை, என்ற உண்மையை இந்த வசனங்கள் எமக்குச் சொல்கின்றன.

இளைஞர் இப்றாஹிம் (அலை):
 இப்றாஹீம் (அலை) அவர்களின் போராட்ட வாழ்வின் ஒரு கட்டத்தில் அவர்கள் சிலைகளை உடைக்கிறார்கள். அது பற்றி அல்குர்ஆன் கீழ் வருமாறு கூறுகிறது:

 ஷஷசிலர் கூறினர்: இப்றாஹீம் என்ற பெயருடைய ஓர் இளைஞன் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருந்தோம்|| (அன்பியா:60)

 இங்கும் இப்றாஹீம் (அலை) என்ற இளைஞன் தனக்கு வரக்கூடிய மிகப் பெரும் அபாயத்தைப் பற்றி எத்தகைய கவலையுமற்று சிலைகளை உடைக்கும் மிக அபாயகரமான பணியில் இறங்குகிறார்கள். உண்மையில் உயிரை இழக்கும் பெருத்த அபாயத்திற்கு அது இட்டுச் செல்கிறது.
 இளமை இவ்வாறானதுதான். வரப் போகும் எத்தகைய அபாயகரமான விளைவுகளையும் பொருட்படுத்தாது. பெருந்துணிகரக் காரியங்களில் ஈடுபடும். போராட்ட வாழ்வின் போது தேவையான பண்பு இது.

இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்கள்:
 இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இறைதூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே இது ஆரம்பமாகிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் மிக அதிகமானோர் இளைஞர்கள். மிக முக்கிய கட்டங்களின் போது எவ்வாறு இளைஞர்கள் பங்களிப்பு செய்தார்கள் என்பதை மட்டும் கீழே தருகிறோம்.

 மக்காவில் முஸ்லிம்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது தம் வீட்டைக் கொடுத்துதவியவர் அர்க்கம் இப்னு அபில்அர்க்கம் (ரழி) என்ற 16 வயது மட்டு நிரம்பிய இளைஞரே.

 மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற சந்தர்ப்பத்தில் நிராகரிப்பாளர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வீட்டை சூழ்ந்திருந்த போது அவர்களது படுக்கையில் படுத்தவர் அலி (ரழி) என்ற இளைஞரே. அது அவரது மரணப்படுக்கையாகக் கூட அமைந்திருக்க முடியும்.

 அபூபக்கர் (ரழி) அவர்களின் காலப்பிரிவில் அல்குர்ஆனை ஒன்றுதிரட்டும் பாரிய பணியை திறன்பட செய்து முடித்தவர் ஸைத் இப்னு தாபித் (ரழி) என்ற இளைஞரே, உமையாக்களின் காலபப்பிரிவில் மூன்று பெரும் தளங்களில் போராடிய பெரும் தளபதிகள் தாரிக் இப்னு ஜியாத், முஸ்லிம் இப்னு குதைபா முஹம்மத் இப்னு காஸிம் என்பவர்களேயாவர். அவர்களும் சாதித்தார் அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே.

 இறுதியில் நவீன காலப்பிரிவுக்கு வந்தால் நவீன இஸ்லாமிய எழுச்சியின் பிதாமகன் எனக் கருதப்படும் இமாம் ஹசன் அல் பன்னா 43 வருடங்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தார். தனது 25வது வயதிலேயே அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வாறு மிக இளம் வயதிலேயே மிகப் பாரிய இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டு தனது இளமைக் காலம் முடிய முன்னரே அதனை உறுதி பெற்றதாக ஆக்கிவிட்டு அவர் மரணிக்கிறார்.

 இஸ்லாமி எழுச்சியின் அடுத்த முன்னோடிகளான மௌலானா அபுல் அஃலா மௌதூதியும், ஷஹீத் செய்யத் குதுபும் தமது இளமைப் பருவத்திலேயே இஸ்லாமியப் போராட்டத்தில் கலந்தார்கள்.

 சமூகவியற்கலைகளை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பதன் முக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஹாமித் ரபீஃ. அவர் எட்டுத்துறைகளில் கலாநிதிப்பட்டத்தை முடித்துக் கொண்டபோது அவருக்கு வயது 34 மட்டுமே.

 இவ்வாறு வரலாறு நெடுகிலும் முஸலிம் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றி இஸ்லாமிய சமூகத்தை நிலைக்கச்செய்து பலப்படுத்தினர். அரண்களாக நின்று காத்தனர்.

 இளமைக்கு இப்படியொரு சக்தியும் ஆற்றலும் உள்ளது, என்பது உண்மை, எனின் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்நாட்டிலும் முஸ்லிம் சமூக எழுச்சிக்கு இளைஞர்களால் பாரியதொரு பங்காற்ற முடியும். அவர்களிம் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் பங்களிப்பு என்ன? என்பது இனி நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை முஸ்லிம் சிறுபான்மையும் இளைஞர்களின் பங்களிப்பும்

 இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு சிறுபான்மை சமூகம். இந்த யதார்த்தத்தை ஒட்டியே முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பும் அமைய வேண்டும். இந்தப்பின்னணியிலிருந்து இப்பிரச்சினை இங்கு நோக்கப்படுகிறது.

 முஸ்லிம் சிறுபான்மை என்னும் போது இரு முக்கிய சவால்கள் அவர்கள் முன்நிற்கின்றன:

1. தனித்துவம் காத்து அடுத்த சமூகங்களுடனும் உறவைப் பேணல்.

2. அடுத்த சமூகங்களுக்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைத்தல்.
 இவ்விரு சவால்களும் முஸ்லிம் சறுபான்மையின் அடிப்படை சவால்களாகும். இதனை சற்று விளக்கமாக நோக்குவது இளைஞர்களின் பொறுப்பைச் சற்று சரியாக புரிந்து கொள்ள உதவும்.

 பெரும் பான்மையாக முஸ்லிம் வாழும் சமூகத்தில் இஸ்லாமிய அரசு, சமூகம் என்பவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பன முதன்மைப்பட்டுக் காணப்படும். அதற்கெதிரான சக்திகளுடனான போராட்டம் அடிப்படையாக அமையும். அந்நிலையில் வேகமான போராட்டப் போக்கு நிறைந்த அரசியல் போராட்டங்கள் அங்கு வலுப்பெற்றிருக்க முடியும். இளமைத்துடிப்புக்கும், வேகத்திற்கும் அங்கு இடமிருக்க முடியும். ஆனால் சிறுபான்மை சமூகத்தில் இஸ்லாமிய அரசு, முழுமையான இஸ்லாமிய சமூக அமைப்பு என்பது மிகத் தூரத்தில் தெரியும் இலக்காகவே இருக்கும். அங்கு சறுபான்மை பெரும்பான்மையில் கலந்து அழியும் அபாயமிருக்கும். நெருக்குதலுக்கும், அநியாயங்களும் உட்படும். இந்நிலையில் முஸ்லிம் இளைஞன் மிகுந்த நிதானம், பொறுமை, கவனமாக திட்டமிடப்பட்ட போராட்ட உபாயங்கள் உத்திகள் கொண்டவனாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

 இக்கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்ட சவால்களை கவனமாக விளங்க முயழ்வோம். முஸ்லிம் சமூகம் தன் தனித்துவத்தைக் காத்துக்கொள்வது என்பது இரு வகைப்படுகிறது.

அ. கல்வி பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பவற்றில் பலம் பெற்றிருத்தல்.

ஆ. இஸ்லாமிய அறிவுப் பலமும், ஆன்மீகப்பலமும் பெற்றிருத்தல்.

 முஸலிம் சமூகத்தின் குறிப்பிட்ட சிறியதொரு வீதத்தினரே இன்று இஸ்லாமிய அறிவைப் பெறுகின்றனர். பெருந்தொகையினர் மிகவும் மேலோட்டமான இஸ்லாமிய அறிவும், மிகவும் பலவீனமான ஆன்மீக நிலையும் கொண்டவர்களாகவே உள்ளனர். இது முஸ்லிம்களின் அதிகமானோர் இஸ்லாமிய ஆளமைச் சிதைவுக்குட்படும் நிலையையும், படிப்படியாக முஸ்லிம் சமூகம் அடுத்த சமூகங்களின் கலாச்சார ஆதிக்கத்திற்கு உட்படும் நிலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு சமூகத்தின் அழிவு இவ்வாறு தான் நிகழ்கிறது.

 கல்வி, பொருளாதாரப் பகுதியில் பலம் பெற்றில்லாத போதும் தவிர்க்க முடியாது பலவீனப்பட்டு அடுத்த சமூகங்களுக்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே ஏற்படும். இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது கல்வியில் பின்தங்கிய சமூகம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. வறுமை முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகப் பரவிப் போய்க் காணப்படுவது சாதாரணமாகவே அவதானிக்கத்தக்கதாகும். வன்முறையால் பாதிக்கப்பட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்டும் கோடிக்கான சொத்துக்களை அவர்கள் இழந்தமை அவர்களது வறுமை நிழைமையை மேலும் கூட்டிவிட்டது.

முஸ்லிம் சமூகத்தில் இப்பகுதிகளில் இரு விடயங்களை அவதானிக்க முடிகிறது.
1. மருத்துவம், பொரியியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்று வெளியாவோர் குறிப்பிடத் தக்களவு அதிகரித்துள்ளனர். ஆனால், பொருளாதாரம், அரசியல், சமூகவியல், இலக்கியம் போன்ற சமூகம் சார் கலைகளில் ஈடுபாடு காட்டுவதுவும் அத்துறைகளில் துறைபோகக் கற்பதுவும் மிகக் குறைவு. இதன் காரணமாக சமூக ரீதியான ஆய்வுகள், வழி நடாத்தல்கள், போராட்டங்களை மிகச் சரியாக வழிநடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் சாத்தியமற்றே செல்கிறது. அத்தோடு முஸ்லிம் சமூகத்தில் துறைபோகக் கற்ற துறைசார் நிபுணர்கள் மிகவும் குறைவு. அப்படியாரும் உருவாகினாலும் அவர்கள் இலங்கையில் இருப்பதில்லை. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு சென்று விடுகின்றனர். இருக்கும் மிகச் சொற்பத் தொகை மூளைசாலிகள் வெளியேற்றம் மிகப்பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.

2. வெளிநாடுகளில் தொழில் புரிவோர் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வருகின்றனர். இவர்களில் மிகப் பெரும் பணக்காரர்களும் உள்ளனர். இவர்களைப் பொருத்தவரையில் இலங்கை, பொருட்கள் வாங்கும் சந்தை மட்டுமே. இவர்களில் பெரும்பாலானோர் நல்ல அறிவுப் பின்னணி அற்றவர்கள் என்பதால் தம்
செல்வத்தால் காத்திரமான பணிகள் எதையும் செய்ய அவர்களால் முடிவதில்லை.

 முஸ்லிம் சமூகத்தின் அடுத்த பொறுப்பு அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்தல் என்பதாகும். இது செயலூக்கம் மிக்க ஒரு செயற்பாடாக மாற வேண்டுமாயின் 3 ஷர்த்துகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. அடுத்த சமூகங்களின் மொழியில் ஆழ்ந்த புலமை வேண்டும்.

2. அச்சமூகங்களின் சமூக நிலப்பற்றி அழ்ந்த அறிவு அவசியம். அவர்களின் மதம், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்கள் மத்தியில் காணப்படும். சிந்தனைப்போக்குகள், அவர்களின் பலம், பலவீனம் போன்ற அவர்களது சமூக நெளிவு, களிவுகள் பற்றிய அழ்ந்த அறிவையே இங்கு குறிப்பிடுகிறோம்.

3. நாகரீக சமநிலை: அதாவது பிரச்சாரம் செய்யும் சமூகத்தின் நாகரீக தரத்தில் அறிவு, வாழ்வுத் தரம், பிரச்சாரத்திற்குட்படும். சமூகத்தின் நாகரீக நிலைக்கு ஓரளவாவது சமனாக இருக்க வேண்டும். ஒரு பின்தங்கிய சமூகத்தின் நாகரீகம், சிந்தனை, மார்க்கம் பற்றி அடுத்த சமூகங்கள் சாதாரண சூழலில் கவனமெடுப்பதில்லை அவர்களின் பின்தங்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் மார்க்கமும், சிந்தனையுமே காரணம் என இயல்பாக அவர்கள் கருதுவர். அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை அதற்கான உபாயங்களும், குறுகிய, நீண்ட கால இலக்குகளும் யாவை என்பதாகும். இங்கு இது பற்றி விவாதிப்பது நோக்கமன்று. இலங்கை முஸ்லிம் சமூகம் இப்பகுதியில் முதலடியைக் கூட சரியாக எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்த்தவே இவ்விடயங்கள் இங்கு தரப்பட்டது.

 முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்கள் இங்கே சுறுக்கமாக விளக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் நிலையும் ஓரளவு இங்கே தரப்பட்டது. இப்போது இந்த சமூகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் இளைஞர்கள் என்ன பணியாற்ற வேண்டியுள்ளது என்பது தெளிவாக விளங்கும்.
 நாம் ஒரு சிறுபான்மை இனத்தின் இளைஞர்கள்...

 கல்வி, பொருளாதாரம், என்ற பல்வேறு துறைகளிலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன சமூகத்தின் இளைஞர்கள். இஸ்லாமிய அறிவும், பயிற்சியும் பரவலாக கொடுக்கப்படாததன் காரணமாக நிறைய ஆளமைச் சிதைவையும், தனித்துவ இழப்புக்களையும் கொண்டுள்ள சமூகத்தின் இளைஞர்கள் நாம்...

 அடுத்த சமூகத்திற்கு தூதை எத்திவைத்தல் எப்படிப் போனாலும் தாமாக விரும்பி இஸ்லாத்தில் நுழைந்தோரை பயிற்றுவிக்கக்கூட முறையான, போதிய வசதிகள் கொண்ட நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடச் சக்தியற்ற சமூகம் நாம். போராடியவர்கள் வேறு இரு சமூகம். ஆனால் வடக்கின் மிகப் பெரியதொரு பிரதேசத்தை இழந்தவர்கள் நாம். அப்பிரதேசத்தில் மீள் குடியேற எந்தக் காத்திரமான செயற்பாடுகளிலும் இறங்காது இன்னமும் அகதிகளாகவும், சக்தி படைத்தவர்கள் இப்பகுதிகளிலேயே தோட்டங்கள், வீடுகள் வாங்கி நிரந்தரமாகத் தங்கி வாழவும் முனைகிறோம். எவ்வளவு பாரிய அவல நிலை இது. அங்கு மட்டுமா நிலமிழந்தோம், சொத்துக்களை இழந்தோம் கிழக்கிலும் பல இடங்கள் இப்படிப்பல அவலங்கள் நிறைந்த சமூகம் நாம்...

 அத்தோடு சேர்த்து நாம் அரசியல் அநாதைகள்...

 இது தான் எம் சமூகம் பற்றிய சுருக்கம். இப்போது இந்த சமூகத்தின் இளைஞர்கள் பங்களிப்பு என்ன? இந்த சமூகத்தையே மீள் எழுப்பும், மீள் புணரமைக்கும் பணி அவர்களுக்குரியது. பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் மன நிலையும், அச்சவால்களை ஏற்றுப் போராடும் துடிப்பும், வேகமும் கொண்டவர்கள் இளைஞர்களே. எனவே அவர்களே இப்பங்காற்ற வரலாற்றால் அழைக்கப்படுகிறார்கள்.

 இங்கு அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டியவை கீழ்வருவனவையாகும்.

ழூ இது ஒரு சமூகத்தின் மீள் புணரமைப்புக்கான, விடிவுக்கான போராட்டம் ஓட்டைகளை சீர் செய்யும் சாதாரண சீர்திருத்த முயற்சியல்ல.

ழூ இது முஸ்லிம் சமூகம், எனவே இஸ்லாமிய பார்வையின் ஊடாகவே இம்முயற்சி கொண்டுசெல்லப்பட வேண்டும். எனவே இஸ்லாத்தை தெளிவாகவும், ஆழ்ந்தும் படித்த ஒரு இளைஞர் கூட்டம் தேவை இஸ்லாம் பற்றிய வெறும் மேலோட்டமான அறிவு கொண்டோர் சமூகத்தின் புணரமைப்பாளர்களாக ஒரு போதும் இருக்க முடியாது.

ழூ ஒரு சமூகத்தையும் அதன், பிரச்சினைகளையும், அதன் நெளிவு சுளிவுகளையும் புரிந்து கொள்ள சமூகவியல் கலைகளில் நிபுணத்துவம் தேவை. அத்தகைய அறிவுப்பின்னணியையும் இவ்விளைஞர் பிரிவினர் கொண்டிருக்க வேண்டும்.

ழூ இது சிறுபாண்மை சமூகம் எம்மைச் சூழ இருப்பவை பெரும்பான்மை சமூகங்கள். எனவே போராட்டத்தில் ஓரளவு நிதானமும், பொருமையும், கவனமும், தேவை வித்தியாசமான உபாயங்களும், உத்திகளும் அவசியம்.

ழூ பெரும் பான்மை முஸ்லிம் சமூகத்தை விட்டு வாழ்வு முறையாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாலும், சவால்களாலும் நாம் வேறுபடுகிறோம். எனவே போராட்ட பழிமுறைபற்றிய தனியான கொள்கைகளும் சித்தாந்தங்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.

ழூ சிறுபான்மை கல்வி, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியின் போது தன்னில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது. அரசோடு போராடியே அவற்றை பெறவேண்டும். என்ற ஒற்றைப்போராட்ட ஒழுங்குமுறை காணப்படக் கூடாது. ஏனெனில் பெரும்பான்மை அரசு மிகப் பெரும்பாலும் சிறுபான்மைக்கான எல்லா வசதிகளையும், உரிமைகளையும் தரும் என ஒருபோதும் உதிர்பார்க்கமுடியாது. எனவே அந்த வகையில் அமையும் போராட்டம் சிறுபான்மையின் சக்தி அழிவுக்கும், உண்மையான சமூகப் புணரமைப்புக்கான போராட்டத்தை விட்டு வெகுதூரம் கொண்டு செல்லவுமே உதவும். இந்த வகையில் சுயதன்னிறைவுக்கான வழிமுறைகள் பற்றி சிந்தித்தல் மிக அவசியமானது.

ழூ மாற்றம் என்பது பல கட்டங்களைத் தாண்டிச் செல்லக் கூடும். பல தலைமுறைகளை அது எடுத்துவிடலாம். ஆய்வாளர்கள் கீழ்வருமாறு இதனைப் பிரிக்கிறார்கள்.

தலைமுறை ஒன்று :

ழூ கோளாறுகளையும் குறைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு சமூகத்திற்கு அதனை உணர்த்துதல், தம் பாரிய வீழ்ச்சி நிலை பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துதல்.
ழூ சமூகத்தின் வீழ்ச்சி நிலை கண்டு, அதனை விழிப்புறச் செய்வதுவே ஒரு பாரிய வேளைத் திட்டம். அது சில போது ஒரு தலைமறையையே எடத்து விடக்கூடும்.

 இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம்.

தலைமுறை இரண்டு :

ழூ நம்பிக்கை, உள நிலைசார் சீர்கேடுகளை சீர்படுத்தல்.

ழூ நம்பிக்கைப் பகுதியில் தோன்றும் குறைநிறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை முஸ்லிம் சமூகம் என்ற நிலையை விட்டே அகற்றி விடக் கூடியவை.

ழூ சரியான நம்பிக்கையின் முதல் முதல் விளைவு  உளப்பரிபக்குவம். ஆன்மீகப் பலம் ஒரு சமூகம் சீர்படலுக்கும் தனித்தன்மை காக்கப்படவும் உறுதியுடன் போராடவும் ஆன்மீகம் ஆற்றும் பங்கு மகத்தானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்நிலையை சீர்செய்ய ஒரு தலைமுறை சென்று விடல் இயல்பு.

தலைமுறை மூன்று :

ழூ சமூகத்தில் கலாச்சார, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கான கொள்கை முன்வைத்தல்.

தலைமுறை நான்கு :

ழூ முழமையாகச் சமூகத்தைக் கட்டமைத்தல்.

தலைமுறை ஐந்து :

ழூ விளைவுகள் காணல்.

 இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம்.

 இறுதியில் ஓர் அம்சத்தை குறிப்பிட விரும்புகிறோம். மாற்றம் பற்றி சிந்திக்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய அதிமுக்கிய விடயம் சமூகத்தின் அக நிலையாகும். அங்கு பழக்கங்களாகவும், வழக்குகளாகவும், மாறிவிட்ட பல பிழையான அம்சங்களுள்ளன. பிழையான வேறு சில நிறுவனங்கள் எம் வாழ்வில் நிலைத்து வேரூன்றியும் விட்டன. இவற்றுக்கெதிரான அகப் போராட்டம் மிகப் பெரியது, மிகவும் கடினமானது.

 இது இளைஞர்களின் பங்களிப்பு பற்றி முன்வைக்கப்பட்ட சிந்தனை. இதன் ஒவ்வொரு பகுதியும் விரிந்த விளக்கங்களை வேண்டி நிற்பனவாகும். கட்டுரை மிக நீண்டு விடும். தலைப்பை விட்டு வெளியே சென்று விடவும் கூடும் என்பதால் ஓரளவு சுருக்கி அமைத்தோம்.
Read more...

Wednesday, April 24, 2013

​பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கு

0 comments
பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கும் கடந்த 2013.04.07 ம் திகதி ஞாயிறு வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதனை SEEDS நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக பெண்களுக்கான விஷேட சொற்பொழிவு இல்லற வாழ்வில் மனைவியின் கடமைகளும் குழந்தை வளர்பில் பெற்றோரின் பங்கும் என்ற தலைப்பில் ஹாதிய்யா கலாபீட விருவுரையாளர் சகோதரி அஸ்மியா வினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்டமாக உயர்கல்வியை தொடந்து கொண்டிருப்பவர்களுக்கான ஆளுமைவிருத்திக் கருத்தரங்கு Dr. MTM அலவி அவர்களினால் இஸ்லாமும் கல்வியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் வெல்பொதுவெவ பிரதேசத்தில் உயர்கல்வியை தொடர்கின்ற மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
மூன்றாவது கட்டம் பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் இருவர் விரிவுரையாற்றினர். முதலாவது உரை Dr. MTM அலவி அவர்களினால் மாணவர் சமூகமும் நெறிபிறழ்வுகளும் எனும் தலைப்பிலும் அடுத்து Dr.  ஹுஸ்னி ஜாபிர்  அவர்களினால் " நாம் எவ்வாறு எம்மை சாதனையாளர்களாக மாற்றுவது " எனும் தலைப்பிலும் விரிவுரைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு ஊரிலுள்ள பெரும்மனம் படைத்த உள்ளங்கள் உதவிகளை செய்தனர் அத்தகையோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
 Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்




  Dr.  ஹுஸ்னி ஜாபிர் அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்




 சகோதரி அஸ்மியா  அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்


 
Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்





Read more...

Monday, April 22, 2013

இஸ்லாத்தில் ஷுராவின் முக்கியத்துவம்..!

0 comments
(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி )


‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன் வசனம் ஆலோசனைகளை (ஷூரா) செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும். நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தில் முடிவொன்றை எடுப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்களை இறக்கி வழிகாட்டலாம். அதுவும் இல்லாத போது அவர்கள் அல்லாஹ்வின் உள்ளார்ந்த வழிகாட்டலின் பேரில் சுயமாக முடிவுகளை எடுக்கலாம். தனது தோழர்களின் அபிப்பிராயங்களைப் பெற வேண்டிய தேவை எதுவுமில்லை . அப்படியிருந்தும் தோழர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்ற கட்டளை நபி(ஸல்) அவர்களிடம் ஆலோசிக்கும் பண்பும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வரும் தலைவர்களும் பொறுப்புக்களை வகிப்பவர்களும் நபி ஸல் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிறரது கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.

வஹீயினால்மாத்திரம் தீர்மானிக்க முடியுமான விடயங்கள் உள்ளன. அவற்றில் ஷூரா செய்ய முடியாது. ஆனால் மனித சிந்தனைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இஜ்திஹாதுக்கு உட்பட்ட விடயங்களில் ஆலோசனை பெறவும் வழங்கவும் முடியும்.

ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்க முன்னர் அல்லது ஈடுபட முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும். பலரது அனுபவங்கள் சாறாக பிழியப்பட்டு அங்கு வழங்கப்படுகின்றது. அதில் அல்லாஹ்வின் அருள் இருக்கும். ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றிக்கூற வந்த நபி (ஸல்) அவர்கள் ''''உன்னிடம் அவன் ஆலோசனை கேட்டால் ஆலோசனை வழங்குவீராக.'''' (முஸ்லிம்) என்றார்கள். ஆலோசனை கேட்கப்படுபவர் நம்பிக்கை நாணயமானவராக இருக்க வேண்டும். (திர்மிதி) என்றும் கூறினார்கள். மறுமை நாளில் பாக்கியசாலிகளான வலப்பாரிசத்தவர்கள் உலகில் வாழும் போது ''''சத்தியத்தையும் அன்பையும் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பார்கள்'''' (90:17) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அந்த வகையில் பரஸ்பரம் ஆலோசித்துக் கொள்வது, பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். இந்தப் பண்பினால் சமூகத்தின் ஐக்கியம் பாதுகாக்கப்பட்டு ஒருவர் மற்றவரை மதிக்கும் தன்மை வளரும். இறுதி விளைவுகளுக்கு எல்லோரும் சேர்ந்து பொறுப்பாளர்களாவார்கள். மாறாக ஒரு சிலர் மாத்திரம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அவை அரைகுறையாக இருக்கும் என்பதுடன் பலரும் சந்தேகப்படுவதற்கும் கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் வழி வகுக்கும்.

சிறிய விடயங்களில் கூட ஷூரா

இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அற்பமாகக்கருதும் இடங்களில் கூட ஷூரா செய்யும் படி அது பணிக்கின்றது.

01. கணவனும் மனைவியும் தமது குழந்தைக்கு பால் மறக்கடிக்க முனைந்தால் அதற்காக இருவரதும் பரஸ்பர ஒப்புதலும் கலந்தாலோசனையும் தேவை என்கிறது குர்ஆன்.
'''' (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரும் தத்தமது பரஸ்பர விருப்பத்தின் பேரிலும் ஆலோசனையின் பேரிலும் பால் குடிமறக்க நாடினால் அவ்விருவர் மீதும் குற்றமில்லை'''' (2.233) என அல்லாஹ் கூறுகின்றான்.
02. ''''பெண்களிடம் அவர்களது புத்திரிகள் விடயமாக ஆலோசனை கேளுங்கள்'''' (அபூதாவூத்) என்ற நபி (ஸல்) அவர்களது கட்டளையானது மகள்மாரின் நிச்சயதார்த்தத்துக்கு முன்னர் கணவன்மார் தமது மனைவிமார்களது ஆலோசனையைப் பெற வேண்டும் என்கிறது.
03. சுலைமான் (அலை) அவர்கள் பல்கீஸ் அரசிக்கு கடிதமொன்றை எழுதினார்கள். அக் கடிதத்தில் அவ்வரசி தனது மேலாண்மையை விட்டு விட்டு முஸ்லிமாக சுலைமான் (அலை) அவர்களிடம் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது அவர் தனது பிரதானிகளைப் பார்த்து ''''எனது பிரதானிகளே எனது விடயத்தில் நீங்கள் தீர்ப்பு (ஆலோசனை) கூறுங்கள். எனக்கு இது விடயமாக நீங்கள் (சாட்சியம் கூற) சமூகமளிக்கும் வரை நான் தீர்க்கமான முடிவுக்கு வரமாட்டேன் என்று கூறினாள் (27:32) இவ்வாறு தொடரும் வசனங்களில் இரு தரப்பாருக்கும் இடையிலான உரையாடல் பற்றி விளக்கமாக தெரிவிக்கப்படுகின்றது. இதிலிருந்து முற்காலங்களில் படை நடத்துதல், ஆட்சி செய்தல் போன்று கருமங்களில் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளமை பற்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

நபிகளார்(ஸல்) அவர்களது வாழ்வில் ஷூரா

01. பத்ர் யுத்தம் இடம்பெற முன்னர் நபி (ஸல்) அவர்கள் முதலில் முஹாஜிர்களிடம் ஆலோசனை பெற்றார்கள். அதன் பின்னர் தனது படையில் பெரும்பான்மையினராக இருந்த அன்ஸார்களிடம் வந்த அவர்கள் ''''மக்களே எனக்கு ஆலோசனை கூறுங்கள் '''' என்றார்கள். அன்ஸார்களின் சார்பில் பேசிய சஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் தமது தரப்பின் பூரண ஒத்துழைப்புக் கிட்டும் என்பதைத் தெரிவித்தார்கள்.

02. பத்ர் படை எந்த இடத்தில் பாளையமிட்டிருக்க வேண்டும் என்ற விடயத்திலும் நபி (ஸல்) தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றார்கள். முதலில் அன்னார் ஓர் இடத்தைத் தெரிவு செய்த வேளை அதனை அவதானித்த யுத்தமுறைகள் பற்றிய நிபுணரான அல்ஹப்பாப் இப்னுல் முன்திர் (ரழி) அவர்கள் ‘‘நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து முந்தவோ பிந்தவோ எம்மால் முடியாத அளவுக்கு அது அல்லாஹ் உங்களைத்தங்கும் படி கட்டளையிட்ட இடமா அல்லது மனிதர்களது பகுத்தறிவுக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுள்ளதா?’’ எனக்கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '''' பகுத்தறிவுப் பிரயோகத்துக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுண்டு'''' என்றார்கள். அது கேட்ட அல்ஹப்பாப் (ரழி) அவர்கள் அப்படியானால் இது பொருத்தமான இடமல்ல. யாரசூலல்லாஹ்…. மக்களை அழைத்துக் கொண்டு வாருங்கள். குறைஷிப்படை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் நாம் தங்குவோம். அங்கு ஓர் நீர் தடாகம் அமைப்போம் என்று கூறினார். அந்த ஆலோசனையை அப்படியே அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள் ''''நீர்தான் அபிப்பிராயத்தை வெளியிட்டீர்'''' என்று கூறியதுடன் அதன்படியே நடந்தார்கள். (ரஹீகுல் மக்தூம்)

03. பத்ர் கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பது சம்பந்தமாகவும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களது அபிப்பிராயங்களைப் பெற்றார்கள்.

04. உஹத் யுத்தத்தில் ஈடுபட முன்னர் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அணுகி ஆலோசனை கேட்டார்கள். '''' நான் எது செய்ய வேண்டும் என எனக்கு ஆலோசனை கூறுங்கள்'''' என்றார்கள். யுத்தத்தில் சம்பந்தப்படத் தேவையில்லை என அன்ஸார்கள் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால் மற்றும் பலரது கருத்து வேறு விதமாக அமைந்தது. இறுதியில் யுத்தம் செய்வது என நபி(ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள் . உஹதில் ஈற்றில் தோல்வி ஏற்பட்டாலும் உஹதின் பின்னர் '''' அவர்களை நீர் மன்னிப்பீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. விடயங்களில் அவர்களிடம் ஆலோசனை பெறுவீராக (3:159) என்ற வசனம் இறக்கப்பட்டது. உஹதுக்கு முன்னர் தோழர்களிடம் ஆலோசனை கேட்ட நபிகளாருக்கு தொடர்ந்தும் அவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி இவ்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

05. நபி (ஸல்) அவர்கள் கூட ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் தனது தோழர்களுக்கு சில கட்டளைகளையிட்ட போது அவர்கள் அவற்றை அமுலாக்கத்தயங்கிய சந்தர்ப்பத்தில் அன்னார் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தனது மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் தான் ஆலோசனை கேட்டது மாத்திரமின்றி அதன்படியே அவர்கள் முடிவெடுத்தார்கள்.

நபித் தோழர்களது பண்புகள் பற்றிக் கூறும் அல்குர்ஆன் (42:36- 38) ஈமான், தவக்குல், பெரும் பாவங்களைத் தவிர்த்தல், கோபம் வந்தால் மன்னிப்பது, தமது ரட்சகனின் கட்டளைகளுக்கு அடிபணிவது, தொழுகையை நிலை நிறுத்துவது, தமது காரியங்களை ஆலோசனையின் பேரில் அமைத்துக்கொள்வது, அல்லாஹ் வழங்கிய சொத்து செல்வங்களிலிருந்து செலவு செய்வது ஆகிய எட்டுப் பண்புகள் அவர்களிடம் இருப்பதாக கூறுகிறது. இங்கு ஆறாவது பண்பாக தொழுகையை நிலைநிறுத்துவதையும் எட்டாவது பண்பாக ஸகாத் கொடுப்பதையும் கூறும் அல்லாஹ் தொழுகைக்கும் ஸகாத்துக்கும் இடைப்பட்ட பண்பாக ‘அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது தன்மையாகும்’ என்று ஏழாவது பண்பாக ஷூராவைக் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஷூராவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இமாம் இப்னு கதீர் குறிப்பிடுகிறார்.

அல்குர்ஆனில் '''' அஷ்ஷூரா'''' (கலந்தாலோசிப்பது 42) என்ற பெயரிலான தனியான அத்தியாயமே உள்ளது. ''''அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது தன்மையாகும். (42:38) என்ற வசனம் மக்காவில்தான் இறக்கப்பட்டது என்று கூறும் ஷஹீத் சையித் குதுப் அவர்கள், ஷூரா எ ன்பது அரச விவகாரங்களுடன் மட்டும் குறுகியதல்ல. முஸ்லிம் சமூகத்தின் வாழ்வின் சகல பகுதிகளுக்கும் விரிந்தது என்பதை இது காட்டுகிறது என்றார்.
முஸ்லிம் சமூகத்தில் ஏதாவது ஒரு முக்கிய தகவல் பரிமாறப்படும் போது சிலர் அதன் நம்பகத் தன்மையைப் பற்றி அலசி ஆராயாமல் துறைசார் நிபுணர்களிடம் அதுபற்றி கேட்டறிய முன்னர் அத் தகவலை சமூகத்தில் பரப்பக் கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறும்போது, ''''அவர்களுக்கு பாதுகாப்போடு அல்லது அச்சத்தோடு தொடர்பான ஒரு விடயம் (தகவல்) எட்டுமானால் அதனை அப்படியே பரப்பிவிடுவார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமும் அவர்களில் அதிகாரமுள்ளவர்களிடமும் தெரிவித்திருந்தால் அவர்களிலிருந்து அதனை ஆய்வு செய்பவர்கள் அதனை (நன்கு) அறிந்துகொள்வார்கள். (4:83) என்கிறான்.
இங்கு வந்துள்ள ‘உலுல்அம்ர்’ எனப்படுவோர் துறைசார்ந்தவர்களாக, சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பவர்களாவர். சமூகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விடயங்களில் முடிவுகளை எடுக்க முன்னர் இப்படியானவர்களை அணுகி ஆலோசனை பெறுவதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

குலபாஉர்ராஷிதூன்கள்

அபூபக்கர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலப்பிரிவில் ஏதாவது முக்கிய அம்சங்களில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை வந்தால் முதலில் குர்ஆனிலும் சுன்னாவிலும் தீர்வுகளை தேடுவார்கள். அங்கு தீர்வு இல்லாதபோது இதுபோன்ற பிரச்சினைகள் ஏதாவது நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஏற்பட்டு அதற்கு அன்னார் தீர்வுகளை வழங்கியமை பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா என தோழர்களிடம் விசாரிப்பார்கள். இல்லை எனப் பதில் வந்தால் மக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்.

உமர் (ரலி) அவர்கள் சிரேஷ்ட சகாபாக்களை மதீனாவிலிருந்து வெளியே சென்று குடியேற அனுமதிக்கவில்லை.
அடிக்கடி அவர்களை கலந்தாலோசிக்கத் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்தார்கள். அவர்களது அவையில் இளம் வயதினரான அல்லது வயது முதிர்ந்த அல்குர்ஆனில் தேர்ச்சிபெற்ற (குர்ராஉ)வர்கள் தான் இருந்தார்கள் என ஸஹீஹுல் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நிஹாவந்த்’ போருக்கு முன்னர் உமர் (ரழி) அவர்கள் முக்கியமான தோழர்களுடன் கலந்தாலோசித்தார்கள். ‘''ஷூரா இன்றி எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்திலும் நலவே கிடையாது’'' என்றும் அவர்கள் ஒரு தடவை கூறினார்கள்.

ஷூராவின் துறைகள்

ஷூரா என்பது பல்துறை சார்ந்தவர்களது அனுபவங்களையும் அறிவுகளையும் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும். ஒருவர் சகலகலா வல்லவராக இருப்பது சாத்தியமில்லை. வித்தியாசமான பல கோணங்களில் சிந்திப்பவர்களது கருத்துக்கள் கேட்கப்படும் போது சமூகம் வளர்ச்சி காணும். இமாம்குர்துபீ அவர்கள் இப்னு குவைஸ் மின்தாத் எனப்படும் மாலிகி மத்ஹப் இமாம் குறிப்பிடுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்கள். ''''ஆட்சியாளர்கள் தமக்குக் குழப்பமான சன்மார்க்க விடயங்களில் மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும். யுத்தங்களுடன் தொடர்பான விடயங்களை படையிலுள்ள முக்கியஸ்தர்களிடமும், சமுதாய நலன்கள் பற்றி மக்களுக்கு மத்தியிலுள்ள முக்கியஸ்தர்களிடமும் நாட்டின் நலன், அதனை வளப்படுத்துவது பற்றிய விடயங்களை அமைச்சர்கள், கவர்னர்களிடமும் கேட்க வேண்டும்'''' என்கிறார்கள்.
தற்காலத்திலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், தொடர்புசாதனம், உளவியல் என்று துறைகள் பலதரப்பட்டவையாக இருப்பதால் பல்துறை சார் நிபுணர்களது ஆலோசனைகள் பெறப்பட்டட பின்னரே மிக முக்கிய தீர்மானங்களுக்கு முஸ்லிம் சமூகம் வர வேண்டும்.

முழு இலங்கையையும் தழுவிய ஷூரா சபை ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியம் பற்றிப் பேசப்படும் இக்காலப் பிரிவில் அத்தகைய ஷூரா சபையின் இலக்குகள், அதற்கு தெரிவு செய்யப்படவுள்ளவர்களுக்கான தகைமைகள் அவர்களது பணிகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் போன்ற சமூக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களது அனுசரணையும் ஆதரவும் இத்தகைய ஒரு ஷூரா சபையின் உருவாக்கத்தின்போது நிச்சயம் தேவைப்படுகிறது. இத்தகைய ஒரு சபையை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்பது பற்றி பலரும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுவருவரு பாராட்டத்தக்கதும் காலத்தின் தேவையுமாகும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு மாத்திரமல்ல எதிர்காலத்திற்கான காத்திரமான திட்டங்களை வகுப்பதற்கும் பிற சமூகங்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் இது அவசியப்படுகிறது.

எமது முக்கிய தருணங்களின்போது நாம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் ரசூலும் எமக்கு கட்டளையிட்டிருப்பதால் ஷூராவின்பொழுது அல்லாஹ்வின்
Read more...

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி உயிர் வாழும் ஓர் அறிவுப் பாரம்பரியம்

0 comments

கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர். இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நிற்கும் தன்னிகரற்ற ஆளுமை.

தான் வாழும் சமூகம் குறித்து ஆழ்ந்த அனுபவமும் கூர்ந்த பார்வையும் மிகுந்தவர். இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் அடியாழம் வரை சென்று சமகாலத் தேவைகளுக் கேற்ப சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர். எதையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை (அஸாலா) வழிநின்று அதேவேளை சமகாலத்தின் செல்நெறிகளை (முஆஸிரா) கருத்திற் கொண்டு நோக்குபவர். இதனால் சட்டப் பகுதியில் முஜ்தஹிதுல் முத்லக் என்ற அந்தஸ்தை எட்டியவர்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக பேனை முனையில் போராடி வரும் கர்ளாவி, நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவரது பேச்சும் பிரச்சாரமும் எழுத்தும் அரபுலகோடு சுருங்கவில்லை. தமது அடையாள நெருக்கடிக்கு (Identity Crisis) முகங்கொடுத்து,இஸ்லாமிய பண்பாட்டை பேணுவதில் போராடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க முஸ்லிம்களை நோக்கியும் அவரது சிந்தனைகள் நீண்டன.

இஸ்லாம் எல்லா காலத்திற்கு முரிய தெய்வீகத் தூது. அது ஒரு வாழும் கொள்கை, நடைமுறைச் சாத்தியமான வாழ்க்கைத் திட்டம். கால, வர்த்தமான, தேசிய எல்லைகளைத் தாண்டி எப்போதும் இளமையாய் வாழும் சிந்தனை. இதுதான் கர்ளாவியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தினதும் அடிநாதம்.

அல்-அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த கர்ளாவி கல்வி அடைவுகளில் எப்போதும் முன்னணி யிலேயே நின்றார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பின்னர் அல்-அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953ல் 180 பட்டதாரி மாணவர் களுள் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.

1957ல் மொழித்துறை மற்றும் இலக்கியத்துக்கான உயர் கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960ல் உஸூலுத்தீன்  பீடத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறைகளில் முதுகலைக்குச் சமனான உயர்கல்விச் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக 1973ல் "ஸகாத்தும் சமூகப் பிரச்சினை யைத் தீர்ப் பதில் அதன் பங்கும்" என்ற தலைப்பில் தனது கலாநிதிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.

யூஸுப் அல் கர்ளாவி பள்ளிவாசல் ஒன்றின் கதீபாக சிறிது காலம் பணியாற்றிய பின்னர் எகிப்திய வக்ப் அமைச்சின் கீழுள்ள இமாம்களுக்கான கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயலாற்றினார். அதனைத் தொடர்ந்து அல்-அஸ்ஹரின் வெளியீட்டு முயற்சிகளை மேற்பார்வை செய்யும் தஃவா செயலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.1961ல் கட்டார் மார்க்கக்கல்வி நிறுவனத்தின் தலைவரானார். 1973வரை அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் அயராது உழைத்தார். 1973ல் கட்டார் பல்கலைக்கழகத்தில் ஷரீஆத் துறையை நிறுவி அதனை வளர்த்தெடுக்கும் பொறுப்பையும் ஏற்றார். 1981 முதல் 1999 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார்.

கட்டார் பல்கலைக்கழகத்தில் 1999ல் சுன்னா மற்றும் ஸீறா ஆய்வு நிலையத்தை நிறுவி இன்று வரை அதன் பணிப்பாளராக உழைத்து வருகின்றார். கலாநிதி கர்ளாவி இஸ்லாமிய கல்விக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பிரச்சாரப் பணிக்காக நவீனகால தஃவா உத்திகளையும் சாதனங்களையும் நன்கு கையாண்டு தனது பேச்சாலும் எழுத்தாலும் அரை நூற்றாண்டுக்கு மேல் போராடி வருவர். தற்போது ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்களின் சிந்தனை ஒருமைப்பாட்டையும் இஸ்லாமிய அடையாளத்தையும் நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய சபையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

மக்காவிலுள்ள றாபிததுல் ஆலமில் இஸ்லாமியின் கீழ் இயங்கும் சட்டமன்றத்திலும் (மஜ்மஉல் பிக்ஹி) ஜோர்தானிலுள்ள இஸ்லாமிய நாகரிகத்துக்கும் ஆய்வுக்குமான மன்றத்திலும் இஸ்லாமிய உலகில் பல்வேறு பிக்ஹ் துறை ஆய்வு நிலையங்களிலும் தஃவா இயக்கங்களிலும் அங்கம் வகித்து வருகின் றார். இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் மட்டுமன்றி சமூக நலன் புரிப் பணிகள்,இலக்கிய ஆய்வுகள் என கலாநிதி கர்ளாவியின் பங்கு விரிந்து செல்கின்றது. ˆOxford இலுள்ள இஸ்லாமிய ஆய்வு நிலையத்திலும் இஸ்லா மாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக செயற்குழுவிலும் அவர் அங் கம் வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது முஸ்லிம் அறிஞர் களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகப் (JUMS) பணியாற்றுகின்றார்.

16 வயது முதலே தனது கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு மார்க்கப் பிரச்சார உரைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்தார்.19வது வயதில் இஃவா னுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இமாம் ஹஸனுல் பன்னாவின் ஆன்மீகப் பாசறையில் வளர்ந்த நவீனகால இஸ்லாமிய அறிஞர்களில் கலாநிதி கர்ளாவியும் ஒருவர். இஹ்வான்களின் இரண்டாவது பொது வழி காட்டியாக இருந்த இமாம் ஹஸன் ஹுழைபியின் பணிப்பின் பேரில் எகிப்தின் அலெக் ஸாந்திரியா முதல் உஸ்வான், சினாய்ப் பாலைவரை அவர் தஃவா பயணங்களில் ஈடுபட்டார். இதனால் சிரியா, ஜோர் தான், லெபனான் போன்ற நாடுகளிலும் கர்ளாவியின் கருத்துக்களும் சிந்தனைகளும் பெரும் செல்வாக்கைப் பெறலானது. இதனால் அவர் அறபு ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கு ஆளாகியதோடு பலமுறை இருண்ட சிறைகளிலும் தள்ளப்பட்டார். 1941, 1954, 1967, 1973 போன்ற ஆண்டுகள் அவரது வாழ்வில் மிகவும் துயரம் மிகுந்தவை. இந்த ஆண்டுகளில் அவர் பல மாதங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழிக்க வேண்டியிருந்தது.

மஸ்ஜித்களின் குத்பா மிம்பர்களை மட்டுமன்றி நவீன வெகுசன தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக அவர் பயன்படுத்துகின்றார். மாநாடுகள், கருத்தரங்குகள், விரிவுரைகள்,ஐரோப்பிய நாடுகளில் நடாத் தப்படும் விஷேட கலந்துரையாடல்கள், பல்கலைக்கழகங்கள், என கர்ளாவி யின் தஃவாக் களம் விரிந்த எல்லை கொண்டது.

அஷ்ஷெய்க் அல்லாமா கர்ளாவியின் தஃவா உத்திகள் முற்றிலும் நவீன தஃவா முறையியலைத் தழுவியதொன்றாகும். சமகாலத்தில் தஃவாவின் அடிப்படைகள் தஃவா முறையியல் (பிக்ஹுத் தஃவா) என்னும் தனிப்பெரும் கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய பிக்ஹுத் தஃவாவை செம்மையான ஒரு தனிக்கலையாக வளர்த்தெடுத்ததில் கர்ளாவியின் சிந்தனைக்கும் கருத்துகளுக்கும் ஒரு காத்திரமான பங்கிருக்கின்றது என்பதை இலகுவில் புறக்கணிக்க முடியாது.

அழைப்பாளனின் அறிவுப் பின்னணி, கோளாறு எங்கே? இஸ்லாமி இயக்கங்கள் முதன்மைப்படுத்த வேண்டியவை போன்ற நூல்கள் நவீன இஸ்லாமிய இயக்கங்களையும் இஸ்லாமிய எழுச்சியையும் வழிநடாத்து வதில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள் எனலாம். கர்ளாவியின் உணர்ச்சிபூர்வமான உரைகள் உறங்கும் உள்ளங்களை உலுப்பி விடும் தன்மை வாய்ந்தவை. அவரது மிம்பர் பிரசங்கம் கேட்பவர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. தீவிரவாதத்தை நிராகரிக்கும் இவர் எப்போதும் நடுநிலையான போக்கைக் கொண்டவர்.

கர்ளாவி 100க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார் இவரது நூல்கள் இஸ்லாமிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவற்றுள் சில பத்துக்கு மேற்பட்ட தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. கணிசமானவை ஆங்கிலம், பிரெஞ்சு, உருது,போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. கலாநிதி கர்ளாவி ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள தோடு விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். இஸ்லாமிய உலகில் இவர் ஓர் அரிய எழுத்தாளர். இவரைப் போன்று எழுதியவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

சமகாலத்தின் தேவைகளுக்கும் ஷரீஆவின் நெகிழ்வுகளுக்குமிடையில் ஒர் அற்புதமான சமநிலையை அவர் பேணியுள்ளார். எந்த கருத்தாழ மிக்க சிந்தனையையும் எளிய மொழிநடையில் முன்வைப்பது இவரது எழுத்தின் சிறப்பம்சம் எனலாம். ஒரு அழைப்பாளனின் உத்வேகமும் சட்ட அறிஞரின் நுணுக்கமும் சீர்திருத்தவாதியின் விரிந்த பார்வையும் இவர் எழுத்துக்களில் சம விகிதத்தில் இழையோடுவதைக் காணலாம்.

பொருளாதாரம், அரசியல், சட்டம், சமூகம், அகீதா, வரலாறு, தப்ஸீர்,ஹதீஸ், பிக்ஹுத் தஃவா, கல்வி, இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் பல்வேறு நூல்களை அவர் எழுதிப் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளார். சில பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக கற்பிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

Qaradawi in Tahrir Square
கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி உஸூலுத்தீன் துறையைச் சார்ந்த அகீதா, தப்ஸீர் ஆகிய பகுதிகளிலேயே தனது கல்வியைப் பூர்த்தி செய்தவர். இத் துறையில் கல்வி கற்ற அவரால் எவ்வாறு மிகப் பெரும் சட்ட மேதையொன்றாக மாற முடிந்தது. இதுவொரு சுவாரஸ்யமான விடயம். உண்மையில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி பள்ளிவாயலில் கதீபாகப் பணியாற்றிய காலத்திலும் தாயியாகப் பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்த காலத்திலும் அவரிடம் பிக்ஹு சார்ந்த பிரச்சினைகளை முன் வைத்தே மக்கள் விளக்கம் கேட்டனர். தான் சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடமிருந்து வந்த சட்டப் பிரச்சினைகளே கர்ளாவியை மிகப் பெரும் சட்ட அறிஞராக மாற்றியது.

இவ்வகையில் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களைப் பற்றியும் மத்ஹப்களைப் பற்றியும் அவர் விரிவாக ஆராய்ந்ததன் விளைவாக ஒரு முஜ்தஹித் என்ற அறிஞனின் அளவிற்கு புலமைப் பெற்றார். சட்டத்துறையில் ஒரு வர் பெற முடியுமான கடைசி நிலை இதுவே.

கர்ளாவி எல்லா மத்ஹபுகளின் சட்டம் வகுக்கும் ஒழுங்குகளையும் ஆராய்ந் துள்ள போதும் அவர் ஒரு தனித்த, சுதந்திர சிந்தனையாளராகவே விளங்கு கின்றார். கர்ளாவி பிறந்த கிராமம் ஷாபி மத்ஹபை பின்பற்றும் பிரதேசம். இவர் மிக ஆழமாக கற்றது ஹனபி மத்ஹபின் சட்ட மரபுகளையே. எனினும் அவர் மத்ஹப்களிலேயே முற்று முழுதாகத் தங்கியிருக்கும் குறுகிய சிந்த னைக்கு அப்பால் பிக்ஹை காலத்தின் தேவைக்கேற்ப முன் வைக்கும் அபார திறமையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறார்.

இஜ்திஹாத் பணியைப் பொறுத்தவரை மத்ஹப் மரபுகளிலிருந்து விலகி சுதந்திரமாக குர்ஆனையும் சுன்னாவையும் ஆராய்கின்ற அதேவேளை மத்ஹபிலிருந்து காலத்திற்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் போக்கையும் அவர் பின்பற்றுகின்றார். சமகால, சமூக-அரசியல், பொருளாதார மாற்றங்களால் நேர்ந்த பிரச்சினைகளை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டு அதற்கான தீர்வுகளை இஸ்லாதின் மூலாதாரமான குர்ஆனிலும் சுன்னாவிலும் தேட முயல்வதுதான் இவரது இஜ்தி ஹாதின் சிறப்பம்சமாகும்.

கர்ளாவியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்ட அறிஞனும் தனித்து இயங்காமல் கூட்டு இஜ்திஹாத் மேற்கொள்வது மிகப் பயனுள்ளதாகவும் பொருத் தமானதாகவும் இருக்கும் எனக் கருதுகின்றார். இத்துறையில் அவர் எழுதிய அல் இஜ்திஹாத் பீ ஷரீஆ இஸ்லாமிய்யா என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி எனலாம். கர்ளாவியின் இஜ்திஹாத் அடிப்படையைப் பற்றி விரிவாக ஆராயலாம். இங்கு இவ்விடயம் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தை ஒரு பாடத்திட்டமாக கற்கும் எந்த ஒரு மாணவனுக்கும் கர்ளாவி என்பவரை தெரியாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு அவரது சிந்தனை வீச்சும் பார்வைப் பரப்பும் மிக விரிந்தவை. இத்தகைய மகத்தான மனிதர்களின் ஆயுளை அல்லாஹ் இன்னும் பல்லாண்டு நீடித்து வைக்க நாம் பிரார்த்திப்போமாக.


நன்றி: மீள்பார்வை
Read more...

Thursday, April 4, 2013

உஸ்மான் ரழி அவர்களும், சுயநலமற்ற அரசியலும்

0 comments
(எச்.பைஸ் - அல் அ;ஹர் பல்கலைக்கழகம்) 
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நபியவர்களின் மதீனா வாழ்க்கையிலிருந்து சமூக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , புவியியல் ரீதியாகவும் விஷ்திரமடைய ஆரம்பிக்கிறது . அந்த வகையில் உமர் ரழி அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமாக மிகப்பெரிய நிலப்பரப்பு இஸ்லாத்தின் கீழ் வருகின்றது . இவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் இஸ்லாத்தின் கீழ் வருகின்ற அதேவேளை உமர் ரழி அவர்களின் உயிரும் உலகை விற்று பிரிகிறது . ஆனால் அதற்கு முன் இந்த சாம்ராஜ்ஜியத்திட்கு ஆறு பேரில் ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று முக்கிய ஆறு பேரை  நியமனம் செய்கிறார்கள் . இறுதியில் அதில் ஒருவராக இருந்த உஸ்மான் ரழி அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார்கள் .
உஸ்மான் ரழி அவர்களின் ஆட்சி ஆரம்ப காலப்பகுதியில் நல்ல முறையில் சென்றாலும் இறுதி காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது . இந்த பிரச்சினைகள் முன் சென்ற ஜனாதிபதிகளுக்கு அதாவது அபூபக்கர் ரழி , உமர் ரழி போன்றவர்களுக்கு  ஏற்படாத ஒன்றாகவே இருந்தது. ஏனென்றால் இது மிகப்பெரிய அரசியல் உள்நாட்டு பிரச்சினையாக உருவெடுத்து இருந்தது . எந்தளவுக்கு என்றால் இறுதியில் உஸ்மான் ரழி அவர்கள் வீட்டிலேயே முற்றுகை இடப்பட்டு கொலை செய்யப்படும்  அளவுக்கு பிரச்சினை முற்றி காணப்பட்டது.
எனவே அந்த வகையில் இங்கே நான் குறிப்பிட விரும்புவது உஸ்மான் ரழி அவர்கள் இப்படி  இந்த வீட்டு முற்றுகையில் இருந்த போது நடந்த ஒரு சிறு விடயம் அவர்களின்  அரசியலில் கடுகளவேனும் சுயநலம் இருந்ததில்லை என்பதற்கு ஆதாரம் எனபதில் சற்றும் சந்தேகமில்லை . அப்படி பட்ட ஒரு விடயம் தான் அது .ஆனால் இது இன்றைய நம் முஸ்லிம் தலைவர்கள் ,ஆட்சியாளர்கள் ,மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்களிடம்  சற்றும் எதிர் பார்க்க முடியாத ஒரு விடயம் தான் அது .
உஸ்மான் ரழி அவர்கள் வீட்டு  முற்றுகையில் இருக்கும் போது பலரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார்கள் . அந்த உதவிகள்  அனைத்தையும் உஸ்மான் ரழி அவர்கள் மறுத்து விடுகிறார்கள் .அதே வரிசையில் இஸ்லாத்தின்  வீரத்தளபதி அலி ரழி அவர்களும் உஸ்மான ரழி அவர்களிடம் நீங்கள் அனுமதி தந்தால் இந்த முற்றுகையாலர்களை அடக்கி உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்றார்கள் . இது அலி ரழி அவர்களால்  முடியும் என்பதும் உஸ்மான் ரழி அவர்களுக்கு தெரியும் .ஆனால் இந்த நேரத்தில் உஸ்மான் ரழி அவர்கள் அலி ரழி அவர்களுக்கு சொன்ன பதில் தான் என் இந்த தலைப்பின் கருப்பொருளும் ஆகும் .
நிச்சயமாக இஸ்லாமிய உணர்வு இல்லாத ஒரு அரசியல்வாதியிடம் இப்படி ஒரு பதிலை நாம்  சற்றும் எதிர்பாக்க முடியாது .ஏனென்றால் இன்றைக்கு நாங்கள் பார்க்கும் சகல வித உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை மிக படு மோசமாக உள்ளது . அந்தளவுக்கு பதவி ஆசையும் , சொகுசு வாழ்க்கையும் அவர்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது .
தன் ஆட்சி மட்டுமல்லாமல் தன் உயிரே போகும் நிலையிலுள்ள உஸ்மான் ரழி அவர்கள் அப்படி என்னதான் அலி ரழி அவர்களுக்கு சொன்னார்கள் . 

இது தான் உஸ்மான் ரழி அவர்கள் அலி ரழி அவர்களுக்கு சொன்ன அந்த அரபு வாசகம் :  
ما أحب أن يهراق دم بسببي 
இதன் தமிழ் வாசகம் என்னவென்றால்:
 ( எனக்காக இரத்தம் ஓட்டப்படுவதை நான் விரும்ப வில்லை )
இந்த வாசகம் உஸ்மான் ரழி அவர்களிடம் வந்தது என்பது ஒரு ஆச்சரியமான விடயமாக கருத  முடியாது ஏனென்றால் அவர்கள் ஆன்மீகத்துடன் கலந்த அரசியலை நம் உத்தம நபியிடம் கற்றுக்கொண்டது தான் இப்படி ஒரு பதிலை அவர்களால் சொல்ல முடிந்தது  .நிச்சயமாக இது ஒரு சாதாரண அரசியல் வாதியிடம் இப்படி ஒரு வார்த்தை வருவது அதிசயமாக இருக்கும் போது ஒரு நாட்டின் முஸ்லிம் ஜனாதிபதியிடம் இதை எதிர் பார்ப்பது இரவில் சூரியனை தேடும் நிகழ்வாகும் . ஏனென்றல் இதைதான் இன்று நாம் எகிப்து , துனிசியா , லிபியா . சிரியா போன்ற நாடுகளில் நாம் கண்டது . 
இந்த நாட்டு ஆட்சியாளர்களால் தம் ஆட்சியை தக்க வைக்க எத்தனை உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன . எண்ணி கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு உயிர்கள் பறிக்கப்பட்டன . அது மட்டுமல்லாமல் இன்று வரைக்கும் தம் ஆட்சியை தக்க வைக்க பல உயிர்கள் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன .இன்னும் இது தொடரும் என்பதிலும் சந்தேகமில்லை.
. ஏனென்றால் இன்றை ஆட்சியாளர்கள்  ஆட்சிக்காக வாழ்பவர்கள். ஆனால் உஸ்மான் ரழி அவர்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்தவர்கள் . ஆட்சிக்காக மற்றவர்களின் உயிர்களை துச்சமாக நினைக்கும் இவர்கள் எங்கே ? மற்ற உயிர்களுக்காக தன் ஆட்சியை மட்டுமல்லாமல் தன் உயிரையும் துச்சமாக நினைத்த அந்த உஸ்மான் ரழி அவர்கள் எங்கே ?
இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் தன் ஆட்சியை தக்க வைக்க மக்கள் உயிரை காவு கொடுக்கும்  இந்த முஸ்லிம் தலைவர்கள் தன் ஆட்சி மடுமல்லாமல் தன் உயிரையும் துறக்க நினைத்த அந்த உஸ்மான் ரழி அவர்களின் ஜனநாயகத்தை பெற்றுக்கொள்ளாத வரை நம் முஸ்லிம் சமூகம் எந்த கோணத்திலும் முன்னேறுவதை எதிர் பார்க்க முடியாது .
அல்லாஹ் நம் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு உஸ்மான் ரழி அவர்களின் ஆன்மீகத்துடன் கலந்த அரசியல் சிந்தனை கிடைக்க உதவி செய்வானாக ! 
Read more...