Banner 468 x 60px

 

Wednesday, May 29, 2013

ஷூறா கவுன்ஸிலின் உருவாக்கத்திற்கு ஒன்றுபடும் முஸ்லிம் அமைப்புகள்

0 comments
கடந்த இரண்டாம் திகதி முதன் முறையாக முஸ்லிம் அமைப்புக்கள் தமது வேற்றுமைகளை மறந்துஇ இடைக் கால ஆலோசனை சபையொன்றை அமைப்பதற்கான அறிவித்தலை விடுப்பதற்காக வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் சந்தித்துக் கொண்டன. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பிரதான சவால்களை எதிர் கொள்வதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் காத்திரமானதொரு பாத்திரத்தை வகிப்பதும் இச்சபையின் நோக்கமாகும்.
    
 முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு பங்களிப்பதற்குப் பதிலாக, வெட்கக் கேடானதொரு சுமையாக சமூகத்திற்கு மாறியுள்ள நிலையில், இத்தகையதொரு தேவை தொடர்ந்தும் உணரப்பட்டு வந்தது. இத்தகையதொரு ஒழுங்கை உருவாக்கும் முயற்சிகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. துரதிஷ்டவசமாக, அம்முயற்சிகள் வெற்றி அளிக்காமல் போனதன் பிரதிபலனை சமூகம் இன்று அனுபவிக்கின்றது.      
 
 முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான பிரசாரப் புயலில் சிக்கி சமூகம் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், நம்பிக்கை, நாணயமானதொரு குழுவினர் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை கையில் எடுக்க வேண்டிய தேவை சமூகத்தில் பெரிதும் உணரப்பட்டது. குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பாசிசக் குழுவொன்று, மைய நீரோட்ட சிங்கள சமூகத்தை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் விதத்தில் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரங்கள் இத்தேவையைப் பெரிதும் உணரச் செய்தன.
   
 இதன் விளைவாக, சமூகத்தை இவ்விக்கட்டான கட்டத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில், இடைக் கால ஆலோசனை கவுன்ஸில் உதயமாகிறது.
 
 உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பலமான பின்புலத்தைக் கொண்ட இவ்வினவாத சக்திகளின் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் சொந்த இருப்பையே கேள்விக் குறியாக்கியுள்ள நிலையில், அச்சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் கவுன்ஸில் செயற்படும். இதன் நோக்கம் அமைப்பு மற்றும் இது தொடர்பான ஏனைய விபரங்களை ஏற்பாட்டாளர்கள் விளக்கினார்கள். இது தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டு கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கோரப்பட்டன. இது தொடர்பான விரிவான திறந்த கலந்துரையாடல் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம் பெறும். இதன் பிறகே இறுதி ஆலோசனைக் கவுன்ஸில் உருவாக்கப்பட இருக்கின்றது.
 
 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தரீகாக்கள் என பல்வேறு அமைப்புக்களோடு துறைசார் வல்லுனர்கள், புத்தி ஜீவிகள், வியாபாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
 
 எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஆலோசனை செய்வதற்கு இஸ்லாம் வழங்குகின்ற முக்கியத்துவத்தை தனது ஆரம்ப உரையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் யூசுப் முப்தி விளக்கினார். ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், ஷரீஆ கவுன்ஸில் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ், ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா, பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். சித்தீக், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் ஏ.எல்.எம். இப்றாஹீம், உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஈரானுக்கான முன்னாள் தூதுவர் எம்.எம். ஸுஹைர், சவூதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் ஜாவித் யூசுப், ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், ஷெய்க் இஸ்மாஈல் (ஸலபி), மௌலவி ஏ.எல்.எம். ஹாஷிம் மற்றும் மன்ஸூர் தஹ்லான் எனப் பலரும் இதன் போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
 
 இது காலத்திற்கு மிகவும் அவசியமானது என அனைவரும் ஒரே குரலில் இந்நகர்வை ஆதரித்தனர். ஷூறா சபை அமைப்பை அதன் இறுதி வடிவத்தில் உருவாக்குவதற்கு காலம் எடுக்கும் என்ற நிலையில், இடைக் கால ஷூறா சபையை அமைப்பதற்கு எடுத்த முடிவை அனைவரும் வரவேற்றனர்.
 
 அப்ரார் நிறுவனத் தலைவர் டாக்டர் முஸ்தபா அப்ரார் சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, இச்சபைக்கு முன்னால் இருக்கின்ற பணிகள் ஏராளம். எவ்வாறாயினும் சீனப் பலமொழி சொல்வது போன்று ஆயிரம் மைல் பயணம் முதல் காலடியின் ஆரம்பிப்பது போன்று ஏதோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார். 
 
 வித்தியாசமான பின்னணி கொண்ட துறைசார்ந்தவர்கள் கடந்த ஜனவரியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாடியதில் இருந்துதான் இதற்கான பணிகள் ஆரம்பித்தன. அதன் பிறகு ஒன்றுக்கு பின் ஒன்றாக பல கூட்டங்கள் இடம் பெற்றன. இவ்வாறான பல கூட்டங்களுக்குப் பிறகு, இந்நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்வதற்குப் பொறுத்தமான வித்தியாசமான துறைகளைச் சேர்ந்தஇ இருநூறு பேரின் பெயர்ப் பட்டியல்  மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டது.
 
  'பொது பல சேனாக்கள் எமது சமூகத்திற்குள்ளும் இருக்கின்றன' என ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் மௌலவி இப்றாஹீம் அவர்கள் குறிப்பிட்டது போன்ற நிலை சமூகத்தின் உள்ள நிலையில் சிறந்த மற்றும் தமது நலனை விட சமூகத்தின் நலனை முன்னிறுத்துகின்ற ஒரே சிந்தனை கொண்ட மனிதர்களை ஒன்று சேர்ப்பதற்கு மிகக் கவனமான தெரிவு முறை அவசியமாகிறது.
 
 இவ்விதம் பட்டியலைத் தயாரிப்பதற்கு அவர்கள் அவசரப்படவில்லை. பல குழுக்களாகப் பிரிந்து தனிநபர்கள், குழுக்கள், அமைப்புக்கள் எனப் பலரையும் தனித்தனியாகச் சந்தித்து இந்த விடயத்தை முன்வைத்தனர். இதற்குக் ஒட்டு மொத்த வரவேற்புக் கிடைத்தது. இதன் மூலம் தூண்டப்பட்டு இது தொடர்பிலான தகவல்களைத் திரட்டிய பிறகு தேசிய ஆலோசனை சபை ஒழுங்கை உருவாக்குவதற்கான இடைக் கால கமிட்டி ஒன்றை உருவாக்கினார்கள்.      
 
 எட்டு வித்தியாசமான மாதிரிகளை அடிப்படையாக வைத்து இடைக்கால ஷூறா கமிட்டி தனது ஆலோசனைகளை எடுத்தது. அவற்றை காலத்தின் தேவைக்கேற்ப சில ஒழுங்குகளை இஸ்லாமிய வரையறைக்குள் உருவாக்கியது. இதன் போது ஷரீஆ தொடர்பான எந்த அம்சத்தையும் சபை கலந்துரையாடவோ, முடிவுகளை எடுக்கவோ மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவோ இருக்கின்ற நிறுவனங்களை விட கூடிய முக்கியத்துவத்தை இது பெறவோ, அவற்றின் இருப்புக்கு அச்சுறுத்தலையோ இது விடுக்காது. வித்தியாசமான பின்னணி கொண்ட இடைக் கால ஷூறா கமிட்டியில் இருப்பவர்கள்தான் ஷூறா கமிட்டிக்கு வருவார்கள் என்றும் இல்லை.   
  
 இச்சபை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பரந்து பட்ட பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாகவும், ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டதாகவும் சுதந்திரமானதாகவும் அங்கீகாரம் கொண்டதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் அனைவரையும் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய இயலுமையைக் கொண்டதாகவும் இருக்கும்.
    
 இதன் அங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் தம்மை வரித்துக் கொண்டவர்களாகவும், சமூகத்தின் அபிவிருத்திக்காக இதய சுத்தியோடு தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவும், தமது நேரம், சக்தி என்பவற்றைச் செலவிடுவதற்குத் தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும். அத்தோடு ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது அது அங்கீகரித்த உறுப்பினராகவோ அல்லது குறிப்பிட்டதொரு துறையில் தேசிய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராகவும் தேசப்பற்றுள்ளவராகவும் தேசத்தின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதற்குத் தயாரானாவராகவும் அரசியல் சாராதவராகவும் இருக்க வேண்டும் என இச்சபைக்கான அங்கத்தவர்களின் தகைமைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளன.    
 .
Read more...

Thursday, May 23, 2013

முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வது ஏன்?

0 comments
sunnathஇலங்கையில் இஸ்லாம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இதுவும் ஒரு பிரதான குற்றச்சாட்டாகும். இஸ்லாமியர்களில் ஆண்கள் தங்கள் ஆண் குறியின் மொட்டுப் பகுதியை வெட்டி அகற்றி விடுவது (ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீங்குவது) சுன்னத் (கத்னா) என்றழைக்கப்படுகின்றது. மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், இன்பகரமான குடும்ப வாழ்வுக்கும் துணை செய்யும் விதமாகவே ஆண்களுக்கான சுன்னத் முறைமையை இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு கற்றுத் தந்திருக்கின்றது.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வதை இலங்கையில் உள்ள சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் எதிர்த்து வருகின்றன. உண்மையில் சுன்னத் செய்வதின் முக்கியத்துவம் மற்றும் சுன்னத் செய்வதின் மூலம் ஏற்படும் உடல் ஆரோக்கியம் போன்றவற்றை இவர்கள் விளங்கியிருந்தால் இது போன்ற சிறப்பான சமுதாயத்திற்கு தேவையான காரியங்களை எக்காரணம் கொண்டும் எதிர்க்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் சுன்னத் எடுக்கும் வழமை இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்கள் இறைவன் மூலம் தனக்கு வழங்கப் பெற்ற தூதுத் துவத்தை எத்தி வைப்பதற்கு முன்பாகவே அக்கால யூதர்கள் சுன்னத் செய்து தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீக்கிக் கொள்ளும் வழமையை கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றின் ஒளியில் நாம் இன்றும் காணக்கிடைக்கின்றது.
சுன்னத் (விருத்த சேதனம்) செய்வது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்
முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் பகுதியை வெட்டி அகற்றிக் கொள்வதினால் மனிதர்களுக்கு ஏற்படும் பல கொடிய நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றார்கள். காரணம் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவருடைய ஆணுறுப்பில் இருந்து அந்த சிறுநீர் அனைத்தும் வெளியாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் தங்கி நிற்கும் சிறுநீரால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படும்.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறை மூலமாக தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை அகற்றி விடுவதினால் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் எங்கும் தேங்கி நிற்காது முழுமையாக வெளியாகிவிடும். அதனால் எவ்விதமான நோய்த் தொற்றுக்கும் அவர்கள் ஆளாகுவதில்லை.
ஆனால் சுன்னத் முறைப்படி ஆணுறுப்பின் முன் தோலை நீக்காதவர்கள் சிறுநீர் கழித்த பின்னர் அணுறுப்பின் முன் தோலில் சிறுநீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் அந்த இடத்தில் இயற்கையாகவே நோய்க் கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களுக்கும் அவர்களை ஆளாக்கிவிடுகின்றது. இது இன்றைய நவீன விஞ்ஞானத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.
உடலுறவை இன்பகரமாக மாற்றும் சுன்னத் முறைமை
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறைப்படி தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கிக் கொள்வது திருமண பந்தத்தின் பின் தனது மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றது.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறைப்படி தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்குவதினால் ஆணுறுப்பின் கூச்சத் தன்மை நீக்கப்பட்டு சகஜ நிலைக்கு மாறிவிடுகின்றார்கள். இது தனது மணைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போது எவ்விதமான கூச்சத் தன்மைக்கும் வழி செய்யாமல் இன்பமாக இல்லறத்தில் ஈடுபடும் சந்தர்பத்தை இது வழங்குகின்றது.
ஆணுறுப்பின் முன் தோலை அகற்றாமல் இருக்கும் போது ஆணுறுப்பில் இயற்கையாக இருக்கும் கூச்சத் தன்மை அப்படியே தங்கி நிற்கும். உடலுறவில் ஈடுபடும் போது இந்தக் கூச்சத் தன்மையின் அதிகரிப்பினால் அவசரமாக ஆண்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். இதன் மூலம் பெண்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய போதிய இன்பம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதுடன் சில நேரம் அவர்களை வேறு ஒரு ஆணைத் தேடிச் செல்லும் விபச்சார நிலைக்கும் இது தள்ளி விடுகின்றது.
இவற்றை தடுத்து கவுரவமான, இன்பகரமான வாழ்வுக்கு வழிசெய்யும் இஸ்லாத்தின் கட்டளையை நாம் ஏற்று இதனை செயல்படுத்தும் போது இதன் தத்துவத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
பௌத்த மத குருமார் சுன்னத்தை எதிர்ப்பது ஏன்?
இலங்கையில் உள்ள சில பௌத்த கடும் போக்கு இயக்கங்கள் முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கிக் கொள்ளும் சுன்னத் முறைமை தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றார்கள். உண்மையில் சுன்னத் செய்வதின் உள்ளார்ந்த இன்பமும், உடல் ஆரோக்கியமும் இவர்களுக்க வார்த்தையில் நாம் சொல்வதினால் விளங்காமல் இருப்பதில் ஒரு சிரிய நியாயமும் இருக்கின்றது. காரணம் திருமணம் செய்து மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்குத் தான் சுன்னத் செய்வதின் இன்பம் தெரியவரும்.
திருமணமே தேவையில்லை என்று துரவரம் மேற்கொள்பவர்கள் சுன்னத் செய்வதின் இன்பத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும்? அதன் இன்பதும், உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியமும் இவர்களுக்கு தெரியாத அல்லது விளங்காத காரணத்தினால் தான் அல்லது தெரிந்து கொண்டே வீம்புக்காக மறுக்க வேண்டும் என்ற குரோத எண்ணம் கொண்டதினால் தான் சுன்னத் முறைமையை மறுக்கின்றார்கள் என்பது வெள்ளிடை மலை.
சிறுநீரகப்பை பாதிப்பை தடுக்கும் சுன்னத் முறைமை
டாக்டர் டோனால்டு இதைப் பற்றி மேலும் குறிப்பிடும் போது சுன்னத் செய்து கொள்வதன் மூலம் உடல் நலத்தை அதிக அளவில் பாதுகாத்துக் கொள்ள முடியும். சுன்னத் செய்து கொண்டவர்களின் சிறு நீரகப்பை ,கிட்னி பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்படும் அளவை விட, சுன்னத் செய்து கொள்ளாதவர்களின் சிறு நீரகப்பை , கிட்டி 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படும்.
எயிட்ஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு சுன்னத் முறையே
பிராஸ் நியூஸ் ஏஜென்ஸ் பத்திரிகையில் அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான கனடாவைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங் பிளம்மர் ஆண்கள் சுன்னத் செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸ் நோயினை அதிக அளவில் தடுக்கலாம் என்று குறிப்பிடுகின்றார்.
அதே போல் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் பையோர் அவர்கள் எயிட்ஸ் நோயின் பரவுதல் தொடர்பாக குறிப்பிடும் போது எச்.ஐ.வி. ஆண்களுக்கு பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன் தோல் பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான காரணியாக திகழ்கிறது என்பதனை கண்டு பிடித்ததாக கூறுகின்றார்.
முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்குவதின் மூலம் செய்யப்படும் சுன்னத் முறைமை பற்றி டாக்டர் டோனால்டு குறிப்பிடும் போது எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் மியூகடகஸ் மெம்ப்ரெய்ன் என்ற தோலின் மேற்பகுதி மூலமாக உடலுக்குள் செல்கின்றது. சுன்னத் முறை மூலம் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்யாவிட்டால் முன்தோலின் வெதுவெதுப்பும் , ஈரத்தன்மையும் வைரஸை பெருகச் செய்து. உடலுக்குள் செல்லும் வழியைத் தேடிக் கொள்ளும் வரை அந்த இடத்தில் பாதுகாப்படுகிறது.
சுன்னத் செய்வது எயிட்ஸ் நோயைத் தடுக்கும்.
22.07.2007 அன்று BBC வெளியிட்ட செய்தி
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.
தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது. இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.
இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது. கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம்தான்.
சுன்னத் செய்வது பற்றி BBC உலக சேவை கடந்த 18.08.2011 வெளியிட்டுள்ள தகவல்
உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் H.I.V யினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேயிலும் அந்நாட்டு அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. (B.B.C)
விருத்த சேதனம் பற்றி அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஆய்வு
ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.
சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
சுன்னத் முறை குறைந்ததினால் அமெரிக்காவில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிப்பு
ஆண்கள் சுன்னத் செய்வது பற்றி அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரான் தோபியான் தலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு 79 சதவீதமாக இருந்த சுன்னத் செய்வர்களின் எண்ணிக்கை தற்போது 55 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககையும், ஆண்குறி புற்று நோயளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகாரித்துள்ளது. சுன்னத் செய்யாததினால்; ஏற்படும் பாதிப்புக்களினால் அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 4 மில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் அமெரிக்காவிற்கு நஷ்டம் ஏற்படுகின்றது.
இலங்கையை ஆரோக்கிய நாடாக மாற்றுவோம்
இலங்கையில் இதுவரை 250 பேர் எயிட்ஸ் நோயினால் இறந்தும் 3000 பேர் பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் மற்றும் 1463 பேர் ஒரினச் சேர்க்கையாளர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள், இதில் 15 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்தான் அதிகமானவர்கள் ஆகும். இதில் மேல் மாகணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள் எனவும் இலங்கையின் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் எதிரிசிங்க குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் எயிட்ஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் இலங்கையில் வாழும் அனைத்து ஆண்களும் சுன்னத் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கமே வலியுறுத்த வேண்டும். இல்லாமல் பௌத்த மத குருமார்கள் சொல்வதைப் போல முஸ்லிம் ஆண்கள் மேற்கொள்ளும் சுன்னத் முறைமையை தடை செய்வதைப் பற்றி சிந்தித்தால் இலங்கை எயிட்ஸ் நோயின் பாதிப்பால் இன்னுமொரு அமெரிக்காவாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
(ரஸ்மின் MISC)
Read more...

Tuesday, May 14, 2013

WPL இறுதிப்போட்டிக்கு முன்னாள் இலங்கை அணித்தலைவர் அரஐூன ரணதுங்க கலந்து கொண்டார்

0 comments
WPL இறுதிப்போட்டிக்கு முன்னாள் இலங்கை அணித்தலைவர் அரஐூன ரணதுங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவர் அறிவுக்களஞ்சிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் மற்றும் WPL போட்டித்தொடரில் சிறந்த வீரர்களுக்கான பதக்கங்களையும் வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
 http://www.youtube.com/watch?v=w1r4P9ejLO4&list=FLDsbHlrMBgW2dnhClQ8O-Zg













Read more...

Thursday, May 9, 2013

பணம் இருந்தால்.....

0 comments
பணம் இருந்தால்.....
 

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

.பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.
Read more...

Tuesday, May 7, 2013

அமெரிக்கா விரிக்கும் புதிய சதிவலை

0 comments
editorஅமெரிக்கா ஒரு விடயத்தில் சம்பந்தப்படுகிறது என்றால், அதனை நின்று நிதானித்து நோக்க வேண்டும். ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, அந்நாட்டின் உள்விவகாரங்களில் தீயை மூட்டுவது சர்வதேச அரசியலில் சகஜம். இதற்கு ராஜதந்திர வியாக்கியானங்கள் பல உள்ளன. இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் தேசிய இனப் பிரச்சினையும், சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக இந்நாட்டை மாற்றுவதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருந்தன.



போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் நேரடியாகத் தலையீடு செய்வதற்கான வலுவான நியாயங்கள் இல்லாத கையறு நிலை அமெரிக்காவுக்கும் அதன் நேச சக்திகளுக்கும் ஏற்பட்டது. இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க எதிர்ப்புப் போக்கு ஆழமாக வெளிப்படுகிறது. சீன சார்புப் போக்கை வெளிப்படையாகப் பின்பற்றும் அரசியல் நகர்வு தீவிரம் பெற்றுள்ளது.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது. பனிப்போர் என்ற எல்லையைத் தாண்டி, நேரடி பலப் பரீட்சையாக அது தீவிரமடைந்துள்ளது.

இப்பின்னணியிலேயே இலங்கையின் ஒட்டுமொத்த நலனுக்கும் சவால் விடுக்கும் அதிதீவிர சிங்கள கடும்போக்கு சக்திகள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன. இது வெளிச் சக்திகளின் பலமான செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறது என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன.

உள்நாட்டு அதிகார சக்திகள் இதே இனவாதிகளுக்குத் தூபமிட்டு ஆதரவுக் கரம் நீட்டியதுதான் அபத்தமும் முரண்நகையுமாகும். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல், இவ் இனவாதிகளது அட்டகாசம் எல்லை மீறி, அதிகார சக்திகளின் நலன்களுக்கு ஆபத்தாக மாறியதால், அவர்கள் அமெரிக்காவுக்கு பொதியிடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் ஊகிக்கப்படுகிறது.

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு அமெரிக்கா ஏன் வீசா வழங்கியது என்பதில் உள்ள சந்தேகம் நியாயமானதே. தனிப்பட்ட விஜயம்தான் என்று அமெரிக்கா அதற்கு நியாயம் கற்பிக்கிறது. எத்தனையோ மிதவாதிகளான முஸ்லிம்களுக்கு வீசா வழங்க மறுக்கும் அமெரிக்கா, கடும்போக்கு வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டுவது ஏன்?

இந்த லட்சணத்தில், ராஜதந்திர வரையறைகளை மீறி, கிழக்கு முஸ்லிம்கள் சிலரை அமெரிக்கத் தூதர் சந்தித்திருக்கிறார். அதுவும் ஞானசார தேரர் இன்னும் அமெரிக்காவில் இருக்கும் நிலையில்தான் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.

இந்நாட்டின் முக்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சந்திப்பதில் அமெரிக்கத் தூதரகம் அளவுக்கு மீறி அக்கறை காட்டுவதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளன. அமெரிக்கா ஒரு விடயத்தில் மூக்கை நுழைக்கிறது என்றால் அதனை மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டும்.

சீன விரிவாதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மத்திரம் இலங்கை விவகாரத்திலும் பலமாக செயற்படுகிறது. இந்திய உளவுப் பிரிவினர் கிழக்கில் ஜிஹாத் குழுக்கள் இருப்பதாக அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருவது வழக்கம்.

கிழக்கில் ஜிஹாத் குழுக்கள் இருப்பதாக பொது பல சேனா தலைவர் விமல ஜோதி தேரரும் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இக்குழுக்களை தூபமிட்டு வளர்ப்பதாக வேறு அவர் குற்றம் சாட்டியிருந்தார். அப்பட்டமான பொய் என்று தெரிந்துகொண்டே அவர் அவ்வாறு கூறினார் அல்லது கூற வைக்கப்பட்டார்.

நோர்வே பொது பல சேனாவுக்கு நிதியுதவி வழங்குவதாக பரவலாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. நோர்வே இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது. ஆயினும், சந்தேகம் நீடிக்கவே செய்கிறது.

இந்த விடயங்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அமெரிக்கத் தூதுவர் கிழக்கு முஸ்லிம்களைச் சந்தித்தது மிகப் பெரும் ஆபத்தின் அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா ஒரு சதி வலையையே விரிக்கிறது. அமெரிக்காவின் பொறிக்குள் அகப்பட்ட யாரும் இலகுவில் மீட்சி பெற்றதாய் வரலாறு இல்லை. நாட்டில் அக்கறையுள்ள அனைத்துப் பிரஜைகளும் இந்த அபாயம் குறித்து கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
Read more...

ஆங்கில பாட ஆசிரியர் கருத்தரங்கு - 2013

0 comments
வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் சிடி அன்ட் கில்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களை உருவாக்குவதற்கான கருத்தரங்கு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2013.05.11,12 ம் திகதிகளில் வெல்பொதுவெவ பாடசாலையில் நடைபெறவுள்ளது. சனி,ஞாயிறு தினங்களில் நாள் பூராகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு ஆங்கில அறிவு சாதாரணமாக உள்ளவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற முடியும்.
Read more...

Thursday, May 2, 2013

உங்கள் குழந்தைகள் நாளைய தலைவர்கள் (Child Phsycology) (Sheik Naleem)

0 comments
0-2 வயதில் உள-சமூக தேவைகள்

                ஒரு குழந்தை பிறந்த பின்னர் தாய்ப் பாலூட்டல், உரிய போஷாக்குமிக்க உணவை வழங்குதல்,ஓய்வு கொடுத்தல், பாதுகாப்பளித்தல் போன்றன பற்றி தாய் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறே ஓர் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் விருத்திக் கட்டங்களை சரியாகப் புரிந்து அதற்கேற்ப பொருத்தமான செயற்பாடுகளை, பயிற்சிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சி என்பதை உடல் தேவைகளை நிறை வேற்றிக் கொடுப்பதாகும் என தவறாக விளங்கி வைத்துள்ளனர். பிள்ளையின் உடலியல் வளர்ச்சி, அதற்கு தேவையான போஷாக்கு, உடற்பயிற்சி என்பன முக்கியமானதாகும். அதனை விட முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பகுதி குழந்தையின் உள-சமூக, மனவெழுச்சி வளர்ச்சிக் கட்டங்களாகும். பிள்ளையின் உள-சமூக மனவெழுச்சி வளர்ச்சிக் கட்டங்கள் சமனிலையாக விருத்தியுறும் போதே பிள்ளை சமநிலை மிக்க ஆளுமை (balanced personality) யாக வளர்ச்சியடையும். எனவே இந்தப் பகுதியை ஓரளவு நோக்குவோம்.


                பிறப்பு முதல் இரண்டு வயது வரையுள்ள பருவத்தில் உள-சமூக மனவெழுச்சித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெற்றோர் முயல வேண்டும். அத் தேவைகள் அனைத்தையும் இரு வடிவங்களில் நிறைவேற்றலாம்.

01. தூண்டல் பற்றிய தேவை
02. உறவு பற்றிய தேவை

                அனைத்துக் குழந்தைகளும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரினதும் நடத்தைக் கோலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும். எனினும் எல்லாக் குழந்தைகளுக்குமான ஓர் பொதுவான வளர்ச்சி முறையொன்று உள்ளது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொது விருத்திக் கட்டங்களை சரியாகப் பெற்றோர் புரிந்து கொண்டால் அதற்கேற்ற தூண்டலை வழங்கி தொடர்புகளை கட்டியெழுப்ப முடியும். எனவே ஆரம்பப் பருவத்திலுள்ள (0-2) குழந்தையின் உள-சமூக விருத்திக் கட்டங்களை கீழ்வருமாறு விளக்குகின்றனர்.

       உள-சமூக விருத்தி
கருத்துப் பரிமாற்றமும் மொழியும்

பிறப்பின் போது - பசித்தால் அழும்
3மாதத்தில் - சுகமாக இருக்கும் போது மகிழ்ச்சியான சத்தத்தை  வெளிப்படுத்தும்
5மாதத்தில் - சிறு ஒலியை எழுப்பும் (ஙாஙா)
9மாதத்தில் - பல்வறு விடயங்களுக்கு வித்தியாசமான சத்தங்களை வெளிப் படுத்தும்.
1வருடத்தில் - எளிய தனிச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கும் (அம்மா)
18 மாதத்தில் - சில சொற்களை சேர்த்துச் சொல்லும்.

சமூக நடத்தைகள்

2மாதத்தில் - சிரிக்கும் போது அதுவும் சிரிக்கும்
9மாதத்தில்; - 'இல்லை' என்பதைப் புரிந்து மறுமொழி தெரிவிக்கும்
1வருடத்தில் - வேண்டும் போது எளிய செயல்களை செய்யும்.
2வருடத்தில் - சிறிதொரு செயலைச் செய்து, அதற்கு பாராட்டுதல் கிடைத்தால் மகிழ்ச்சியடையும்

தற்பாதுகாப்பு

பிறப்பின் போது - தாய்ப்பாலை உறிஞ்சிக் குடித்தல்
3மாதத்தில் - எல்லாவற்றையும் வாயில் போடுதல்
7மாதத்தில் - கடின உணவுகளை விழுங்கும்
10மாதத்தில் - சுயமாக சாப்பிடத் தொடங்கும்
12மாதத்தில் - கோப்பையைப் பிடித்து சுயமாக பருகத் தொடங்கும்
2வருடத்தில் - ஆடைகளை அணியும்

அவதானமும் உற்சாகமும்

2மாதத்தில் - சிரித்தால் சிரிக்கும்
4மாதத்தில் - விளையாட்டுப் பொருட்கள், பல் வேறு சத்தங்களில் மீது அவதானம்   செலுத்துதல்
8 மாதத்தில் - தனது பொறுப்பாளர்களோடு
நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்        கொள்ளல் (தாய்,ஆச்சி)
1வருடத்தில் - விளையாட்டில் நீண்ட நேரம் கவனம் செலுத்தல்
18 மாதத்தில் -  பல்வேறு பொருட்களை பிரித்து அறிந்து கொள்ளும்.

விளையாடுதல்

1மாதத்தில் - கையில் ஒன்றைக் கொடுத்தால் பற்றிக் கொள்ளும்.
3மாதத்தில் - தனது உடலோடு விளையாடும். (ஆடையை வாயில் போடல்,          விரல்களுடன் விளையாடல்)
5 மாதத்தில் - சிறிய பொருட்களோடு விளையாடும்.
9 மாதத்தில் - 'ஒழிந்து விளையாடல்'          விளையாட்டுக்களை செய்யும்.
1 வருடத்தில் - அடுத்தவரைப் பின்பற்றும்.
2 வருடத்தில் - அடுத்த பிள்ளைகளோடு விளையாடத் தொடங்கும்.

அறிவும் கற்றலும்

பிறப்பின்போது - பசி அல்லது அசௌகரியமான நிலையின் போது அழல்.
3 மாதத்தில் - தாயை இனங்காணல்.
5 மாதத்தில் - பலரை இனங்காணல்.
9 மாதத்தில் - தன்னிடமிருந்து காணாமற் போன விளையாட்டுப் பொருட்களைத் தேடல்.
1 வருடத்தில் - எளிய செயற்பாடுகளைப் பின்பற்றல்.
2 வருடத்தில் - பொருட்களை நோக்கி விரல் நீட்டல்.

                தூண்டல் பற்றிய தேவை

மேற்சொன்ன உள,சமூக விருத்திக் கட்டங்களை பெற்றோர் மிகச் சரியாக  விளங்கி அதற்கேற்ற தூண்டல்களை உரிய வேளையில் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். வயது விருத்திக்கேற்ற விருத்தியை பிள்ளை வெளிப்படுத்தாவிடின் அல்லது தாமதமாக வெளிப்படுத்தினால் பொருத்தமான தூண்டல்களைக் கொடுத்து அதனை சீர்செய்ய வேண்டுடியுள்ளது. உதாரணமாக குழந்தை வயதுக்கேற்ற சொற்களை, வாக்கியங்களை வெளிப்படுத்த வில்லையாயின் அல்லது தாமதமாக வெளிப்படுத்துவதாயின, குழந்தையோடு அடிக்கடி கதையுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இதனால் குழந்தை தூண்டப்படுகிறது. இவ்வாறு குழந்தையின் உள,சமூக விருத்தியானது பெற்றோரின் தூண்டலில்தான் தங்கியுள்ளது. தூண்டல் என்பது குழந்தையின் தேவையாகும். அது பூரணப்படுத்தப்படும் போதே சமநிலை கொண்ட ஆளுமையாக வளர்கிறது.

பிள்ளை எதிர்காலத்தில் விவேகமும், அறிவும், பண்பாடும் கொண்டதாக வளர்வ தற்கான அத்திவாரம் ஆரம்பப் பருவத்திலேயே இடப்படவேண்டும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே, உள வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் உள வளர்ச்சிக்குத் தேவையான பிரதான உணவு மூன்று வகைப்படும்.

       (i) மொழி  (கதைத்தல்)
       (ii) விளையாடல்
       (iii)அன்பு காட்டல்

இம் மூன்று வகையான உளத் தேவைகளையும் கீழ்வருமாறு குழந்தையிடம் தூண்டலாம்.
  • பிறந்ததிலிருந்து குழந்தையோடு கதைத்தல், கொஞ்சி விளையாடல்

  • முகத்தைப் பார்த்து சிரித்தல்


  • குழந்தை சொல்வதற்கு முயற்சிக்கின்ற விடயத்துக்கு செவிமடுத்தல்

  • அடுத்தவர்களோடு சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்பளித்தல். (ஸ்பரிசம்  செய்தல்,சிரித்தல், கதைத்தல்)


  • பிள்ளையிடம் அடிக்கடி கவனம் செலுத்தல்

  • (புறக்கணிக்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் பிடிப்பின்றி வளரும்)


  • குழந்தை ஒன்றைச் செய்வதன் மூலம் தான் கற்றுக் கொள்கிறது. அதனால் விளையாடுவதற்கும் ஆய்வு  செய்வதற்கும்  சுதந்திரமாக இடமளிக்க வேண்டும்.

  • குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தல் முத்தமிடல்,கட்டி அணைத்தல்,ஸ்பரிசம்
Read more...