Banner 468 x 60px

 

Tuesday, February 19, 2013

கோட்டா மட்ட கிரிக்கட் சுற்று போட்டியில் வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய அணி இரண்டாம் இடம்

0 comments
கொபெய்கனே கோட்டா மட்ட பாடசாலைகளக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டி வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய திறந்த வௌியரங்கில் பெப்ருவரி மாதம் 18,19 ம் திகதிகளில் நாள் பூராகவும் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டிக்கு வெல்பொதுவெவ அணியும் பண்ணவ மத்திய கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டன. இறுதி போட்டியில்  பண்ணவ மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றுக்கொண்டது. வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியால அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய திறந்த வௌியரங்கு



Read more...

Friday, February 15, 2013

உலமாக்கள் தமது பொறுப்பை உணர்வார்களா?

0 comments

இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த  பேரினவாதிகளும் பௌத்த மேலாதிக்கவாதிகளும் தற்போது அரசியல் நெருக்கடிகளோடு இணைந்தவாறு முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் மீது சேறு பூசிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாம் காட்டியவாறு முஸ்லிம்கள் செயற்படுவதற்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
முஸ்லிம்கள் தாம் எதிர்கொண்டு வரும் இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கத்திடம் பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ளார்கள். அப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அரசாங்கம் உறுதியளித்தது. ஆயினும், முஸ்லிம்களின் மீதான நெருக்கடிகள் குறைவதாகத் தெரியவில்லை.
இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அமைவாகவே முஸ்லிம்கள் தமது எல்லா நடவடிக்கைகளையும் அமைத்துக்கொள்ளல் வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள் ஹலாலான உணவுகளையே  உண்ணுதல் வேண்டும். இன்று ஹலால் உணவு என்ற விடயத்தினை பௌத்த பிக்குகளின் தலைமையிலான குழுவினர் பூதாகாரப்படுத்தியுள்ளார்கள்.
இதனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை  ஹலால் பற்றிய  தெளிவை மக்களுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றது. ஆயினும், சில உலமாக்களின் ஹலால் பற்றிய விளக்கம் மக்களுக்கு போதிய தெளிவை வழங்குவதற்கு பதிலாக குழப்பங்களை  ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அண்மையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் ஹலால் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம் தெளிவற்றதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மொழியிலான இவ்வாறான மார்க்க விளக்கங்களுக்கு செல்கின்றவர்கள் அந்த மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்றவராகவும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களில் தெளிவுள்ளவராகவும் இருப்பது அவசியமாகும். அந்நிய மதத்தவர்களின் தப்பான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்காக முயற்சிகளைச் செய்து ஈற்றில் ஏற்கனவே இருக்கின்ற தப்பான அபிப்பிராயங்களையும் அதிகரிக்கச் செய்வதாக  இருக்கக்கூடாது. ஆதலால், உலமா சபை இதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். தவறும் பட்சத்தில் கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாக மாறி விடும்.
இதேவேளை, உலமா சபை தனியே பள்ளிவாசல், ஹலால் போன்ற விவகாரங்களை மட்டும் கையாளாது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பிற்போக்குத் தனங்களையும் மக்களுக்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இது உலமாக்களின் கடமை என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். இதற்கு குத்பா போன்றவைகளை பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு  அரசியல் ரீதியான அழுத்தங்கள் அவசியமாகும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனைச் செய்யாது பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் அமைச்சர் பதவிகளுக்காக அலைந்து திரிகின்றார்கள். அந்த பதவிகளை முஸ்லிம்களின் கௌரவமாக கூறிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை  ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் ஏற்படும் அரசியல் பலத்தினைக் கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராமல் முஸ்லிம்களை கட்சி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரித்து வைத்து இலாபமடைந்து கொண்டிருக்கின்றார்கள்.மட்டுமன்றி, மக்களுக்கு பொய்களையே  கொள்கைகளாகக் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் இந்த குறுகிய சிந்தனைகளினால் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தலைநிமிர்ந்து  நிற்க முடியாது. இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இல்லையாயின் அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களைக் கொண்டு வருதல் வேண்டும். இதில் உலமா சபையின் பங்களிப்பு முக்கியமாகும். மார்க்க  விடயங்களைச் சொல்லுவதுதான் தங்கள் பணி என்று ஒதுங்கி இருக்க முடியாது.
மறுபுறத்தில் உலமாக்களும் தங்களிடையே காணப்படும்  கொள்கை ரீதியான முரண்பாடுகளை இல்லாமல் செய்து ஒற்றுமைப்பட வேண்டும். கொள்கைகளை மையப்படுத்தி பள்ளிவாசல்களை அமைப்பதனை தவிர்த்தல் வேண்டும். பல இடங்களில் அடுத்தடுத்து பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மோதல்களில் ஈடுபட்டு பொலிஸ், நீதிமன்றம் வரை செல்லுகின்றார்கள். முஸ்லிம்களே பள்ளிவாசல்களை உடைத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்மையில், தன்னை அலரி மாளிகையில் சந்தித்த முஸ்லிம் குழுவிடம் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு  எதிரான முறைப்பாடுகளை முஸ்லிம்களே தம்மிடம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இக்கருத்தை முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்தல் வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை உலமாக்களிடையே காணப்படும் முரண்பட்ட கொள்கைகளை  முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும்.
இவ்வாறான விடயங்களில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தமது கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். வெள்ளம் வரும் முன் அணை கட்டுதல் வேண்டும். ஆனால் வெள்ளம் தலைக்கு மேலால் போய்க் கொண்டிருக்கின்றது. இனியும் முஸ்லிம்களின் துறைசார்ந்த தலைவர்கள் சமூகத்தினைப் பற்றி கவலை கொள்ளாது இருக்க முடியாது.
ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்புக்கள்  தொடர்பில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் அல்லவா?
Read more...

பல முனைகளில் உரையாடலைத் தொடங்குவோம்

0 comments

Editorialவரலாறு நெடுகிலும் சகவாழ்வைப் பேணி வந்த சமூகம் என்ற பெருமிதம் எம்மிடையே நிலவுகிறது. அது உண்மைதான். எனினும், தனித்துவத்தைக் காக்கப் போகிறோம் என்ற அதீத கவனம் காரணமாக, ஒதுங்கி ஓரமாய்த் தனித்துப் போன பக்கங்களும் நமது வரலாற்றில் உள்ளன.

முஸ்லிம் சமூகம், ஒருவகையான தப்பித்துச் செல்லும் ஒதுங்கும் மனோபாவத்திற்குள் (Escapism) அகப்பட்டிருக்கிறது என்று நேர்ப் பேச்சில் ஒரு ஆய்வாளர் தெரிவித்திருந்தார். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், இதில் பல உண்மைகள் உள்ளன.
பிரச்சினைகள் என்று வருகின்றபோது, அதனைச் சரியாக உணர்ந்து எதிர்கொள்ளும் திராணியும் தெளிவும் நமக்கு மிகவும் அவசியம். ஆனால், இந்த உறுதியான மனநிலையிலிருந்து அடிக்கடி நம்மில் பலர் சறுக்கி வருகின்றனர். தப்பித்துச் செல்வதை வசதியான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
எமக்கு வித்தியாசமான கருத்துகள் இருக்கும்போது, ஒதுங்கிப் போவது நல்ல வழிமுறையல்ல. நாசூக்காகவும் நாகரிகமாகவும் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அறவே வெளிப்படுத்தப் பொருத்தமில்லாத சூழலில், அதனைத் தவிர்ப்பதுதான் நல்லது.
ஆனால், பேச வேண்டிய இடத்தில் கூட பேசாமல் மௌனியாய் இருந்துகொண்டு, அதற்கு நியாயம் கற்பிக்கும் போலி அறிவுஜீவிகள் பலரைக் காண்கிறோம். இவர்களை விட சாமான்ய மனிதர்கள் எவ்வளவோ மேல். அவர்களுக்கு இப்படி அறிவு முலாம் பூசத் தெரியாது. வெளிப்படையாகப் பேச மட்டுமே தெரியும்.
உரையாடல் (Dialogue), புரிந்துணர்வை வளர்க்கும் மிகச் சிறந்த ஆயுதமாகும். இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.
ஸாலிஹான அமல்’ என்ற கருத்தை நாம் அடிக்கடி பேசுகிறோம். நற்செயல்கள் என்று இதற்குப் பொதுப்படையாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், பொருத்தமான தருணத்தில், பொருத்தமான பணியை செய்வது (Right Time, Right Action) என்பதே இதன் சரியான அர்த்தமாகும். தூய்மையான எண்ணத்துடன் இந்தப் பணியை முன்னெடுத்தால் அது ஒரு இபாதத்தாக (வணக்க வழிபாடாக) அமையும்.
ஏனையவர்கள் எம்மைக் குறித்து என்ன மனப் பதிவைக் கொண்டுள்ளார்கள்? நாம் அவர்கள் குறித்து என்ன மனப் பதிவைக் கொண்டுள்ளோம்? இரு தரப்பினரும் தெளிவுபெற வேண்டிய இடங்கள் எவை? வேறுபடும் இடங்கள் எவை? உடன்படும் இடங்கள் எவை? இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? இவ்வாறான பல கேள்விகளுக்குரிய பதில்களைத் தேட, உரையாடல் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
இப்போது பிற சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்களுடனான உரையாடல்கள் நடந்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இதனை சமூகத்தின் உயர் மட்டங்களில் மட்டுமல்லாது, அடி மட்டங்கள் வரை விஸ்தரிக்க வேண்டும். பல முனைகளிலும் உரையாடல்களைத் தொடங்கி,  அதன்  பயன்களை உடனடியாகவும் நீண்ட காலத்திலும் அறுவடை செய்வோம்.
Read more...

Thursday, February 14, 2013

How to Inspire Our Children to Gain Knowledge

0 comments

by Shumaila Mahmood
How to Inspire Our Children to Gain Knowledge - article
Step 1: Check your intention:
Ask yourself ‘why am I doing this?’ Every journey we decide to embark upon must be for the sake of Allah (glorified and exalted be He). This will help you to stay focused and will earn you reward, inshaAllah.
Step 2: Make dua:
Ask Allah (glorified and exalted be He) to help you succeed in teaching your children.
Step 3: Plan, plan, plan:
Make a list of the things you would like to teach your child. Make this as detailed as you can. This is to help you realise how much there is to cover. The purpose here is not to get overwhelmed but to help you plan. If there are topics that you feel you do not have sufficient knowledge in, use this as motivation to seek this knowledge for yourself first. Get the help of others, this will provide others with the opportunity to gain reward.
Step 4: Choose one item for each day:
Plan out how you will cover the topics over the course of the month. Yes, challenge yourself, but remember you cannot possibly cover it all in just 1 month. The idea is that you want to make this a part of your life.
Step 5: Take action:
For each item on your list, plan how you will teach it to your child. Identify resources or people you may require well in advance. Start now. Do not procrastinate!
Step 6: Get your child involved:
Create a large colourful calendar where you can add things to. Make it colourful, and have a system where your child can tick things off.
Step 7: Make it fun:
Use games to make it fun. For example, if you are getting your child to memorise some of the 99 names of Allah (glorified and exalted be He), you could create a matching pairs game and set up a competition between different members of your family.
Step 8: Make it interactive:
The more your child engages with the content, the more likely they are to remember and learn the information. Use a variety of activities to teach a particular topic. We all learn in different ways so build this into your activities. For example include reading, writing, moving around. Just ensure the activities are engaging. Get others involved, invite friends/ family over to help you achieve this. Remember: for this to be successful, you must stick to a plan otherwise it will simply result in a social gathering and you will not have achieved your goal.
Step 9: Build a reward system:
This could include rewarding your child with certificates, a day trip etc. Make sure that the focus does not shift to the reward rather than acquiring knowledge, You want to build the desire to want to seek knowledge in your child, rather than focusing on getting a new game for their X-box. Step 10: Always review progress: Get your child to provide feedback on how they are finding the process or your technique. For example, you can use the ’2 star and wish’ approach we often use in schools. At the end of each day give your child a card. The 2 star category represents 2 things they liked about the activity and the wish represents what they want more of or anything they would like to try. A nice idea could be to get everyone in your household to fill one out and put it in a secret ballot box. At the end of the day when you are reviewing your day’s progress, read the comments and take them on board for the next day or the near future.
Source : Productive Muslim
Read more...

5 Benefits of Volunteering

0 comments

5 Benefits of Volunteering - article

1.  Causes you to be organized
“The Prophet  (peace and blessings of Allāh be upon him) walked briskly, literally leaning forward as if going downhill” [Abu Dawud].
Like the Prophet  (peace and blessings of Allāh be upon him), the serious volunteer is someone who has little time to waste. They want to be able to fit in as much time as possible doing work for the sake of Allah, whether it be raising money for the orphans and needy children or helping at their local mosque. They realise that the more organised and efficient they are, the more time they can spend raising money and not just concentrating on themselves. They can’t afford to leave things to the last minute. They need to have things planned, schedules in place, deadlines met so that they can maximize the number of those precious hours for the sake of Allah.
2. Encourages self-assessment
“Verily, by Allah, we think that every believer blames himself. He says (questioning himself), `What did I intend by my statement? What did I intend by my eating? What did I intend in what I said to myself?’ However, the sinner proceeds ahead and he does not blame himself” [Hassan Al-Basri in reference to the interpretation of Surah Al-Qiyamah, verse 2].
It is only when you open the doors to constructive criticism, that you are able to make changes that allow you to be the best volunteer you can possibly be and make changes that benefit others. For instance, Charity Week publishes a detailed warts-and-all Annual Report that includes what percentage of the money donated was banked and where every penny was spent. Keeping detailed accounts – for any organization – is not just a commitment to transparency that encourage us, but a realisation that true self-improvement can only take place after self-assessment. We aim to be our own harshest critic and strongest competitor.
3. Promotes competition in the good
When the Prophet  (peace and blessings of Allāh be upon him) was asked whether the verse in the Quran,
“And those who give whatever they (have to) give while their hearts are trembling” referred to people who committed sins, he replied: “No. They are those who fast, pray, and give charity whilst fearing that (these deeds) may not be accepted (by Allah). They are those who compete with one another in good deeds”[Bukhari].
There’s nothing like friendly competition to encourage people. The Prophet  (peace and blessings of Allāh be upon him) knew this and utilised it himself to great effect in the battle of Hunain and during other occasions throughout his life. We should encourage Muslims to compete with each other in a way that encourages excellence whilst still fostering brotherhood. Each institution and each person must be motivated to do better, work harder, and sleep less so that they can be at the forefront of helping others.
4. Is the best motivation
“The Prophet  (peace and blessings of Allāh be upon him) said,‘I and an orphan’s guardian, whether he is a relative or a non-relative, will be like these two in the Garden,’ and then the transmitter indicated the index and middle fingers”[Sahih Muslim].
Even the best of us can find our desire to gain more productive habits is hard to maintain 24/7. This is because, although we understand the benefits that accrue from being productive, they are essentially centred around ourselves. If the motivation was centred around other people then suddenly the effort intensifies. A father will be able to tolerate much hardship but cannot bear to see his son do so for even a second. For example, which of these scenarios would you be more motivated for: 1) If I ask you to lose 5kg of weight so that you can be more healthy, or 2) If I ask you to lose 5kg of weight because if you don’t, you cannot provide bone marrow for your unwell younger brother? In the former you will find a hundred excuses, but in the second you would do within two weeks. Similarly, volunteer work shifts the focus from us as individuals to us as an Ummah. Each second of being unproductive means that someone out there is suffering when we could have helped.
5. Provides a vision
“Ali said,’Judge as you used to judge, for I hate differences (and I do my best) till the people unite as one group, or I die as my companions have died’”[Bukhari].
Productivity is pointless unless it is pointed in the right direction and there is a vision to your actions. Whilst being productive and organised is important, the ultimate importance is given to the vision, or end goal. At Charity Week for example, the vision is uniting the Muslim youth upon Islam; and strengthening the ummah is noble goal for any organisation. Your own vision should be pushed relentlessly at every level, every meeting, and every minute. We must continually remind ourselves that we have a goal, and that goal is achievable and a necessity if the Ummah is going to become united once more. It is the vision that keeps us awake when others sleep, that keeps us going when others stop and that keeps us together when others fall apart. To be truly productive, we must make our every movement, decision and step in accordance with achieving the vision. And when we get this right, the barakah of Allah pours forth like the heavy rain on a barren plain.
In conclusion, the best way to become a truly productive Muslim is to work continually for the creation of a productive (and united) Muslim Ummah. May Allah grant us this and His pleasure. Ameen.
Charity Week is a volunteer-led project that aims to promote Muslim unity upon Islam amongst young Muslims. It is open to all (including non-Muslims) and aims to be the benchmark for Muslim student work in all aspects. For 365 days a year, a team of dedicated brothers and sisters organise to help set up a week long fundraising competition. Those who get involved get a crash course in being productive that is unique and life-changing. It currently takes place in the UK, however, aims to expand abroad.  If you are inter
Read more...

"""""பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்! """"""

0 comments


அன்றைய
  இரவு ....

அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி).

பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து;

அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர்.

நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.


நள்ளிரவு நெருங்கியிருக்கும்.....

நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு மிகவும் அசதியாக இருந்தது. ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

வீட்டின் உள்ளே பேச்சு சப்தம் கேட்டது. “மகளே! சற்று எழுந்து அந்தப் பாலில் தண்ணீர் கலந்து வையேன்

ஊர் அடங்கியிருந்த நேரம். தாயொருவள் மகளிடம் பேசியது தெளிவாய்க் கேட்டது.

என்ன, பாலில் தண்ணீர் கலப்பதா? அப்படியானால் கலீஃபாவின் கட்டளை?”

அது என்ன கட்டளை?”

பாலில் தண்ணீர் கலந்து விற்பதை நம்மூர் பால்காரர்கள் பின்பற்றும் முன்பே இப்பழக்கம் தொன்றுதொட்டு உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது போலும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது பெரும் குற்றம் என்பது இஸ்லாத்தின் நிலை. அதனால் உமருடைய கட்டளைப்படி அவரின் சேவகர் ஒருவர் மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்திருந்தார், “பாலில் தண்ணீர் கலப்படம் செய்யக் கூடாது என்பது கலீஃபாவின் உத்தரவு


மகள், தாய்க்கு அந்தக் கட்டளையை நினைவுறுத்தினாள்.

அது சரி! உமரோ அந்த சேவகனோ காணவியலாத இடத்தில் நம் வீட்டிற்குள் நீ இருக்கிறாய். எழுந்து தண்ணீரைக் கலந்து விடு; யாரும் அறியப்போவதில்லைஎன்றாள் அந்தத் தாய்.

அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! பொது இடங்களில் அமீருக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனிமையில் அவரது உத்தரவுகளுக்கு மாறு செய்பவளுமாக நான் என்றுமே நடந்து கொள்ளமாட்டேன்என்று திட்டவட்டமான பதில் வந்தது.

மக்கள் மத்தியில், பகலில், சட்டத்திற்கும் உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடப்பது மக்களுக்கு நிர்பந்தமாகக்கூட ஆகிவிடுகிறது. ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் ஒருவர் இறைவனுக்கும் அவனது சட்டத்திற்கும் பயந்து நடந்துகொண்டால் அது ஒழுக்கத்தின் மேன்மையை அல்லவா எட்டிவிடுகிறது? அதுதானே இறையச்சம்!

தாய்க்கும் மகளுக்குமான இந்த உரையாடலைக் கேட்டு அசதியிலிருந்த உமர் அசந்துவிட்டார்.

அஸ்லம் இந்த வீட்டின் கதவின்மேல் அடையாளமிட்டு இந்த வீடு எங்கிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்.”

தெருப்பெயர், கதவு எண் போன்ற அடையாளங்கள் இல்லாத காலத்தில் அதுதான் அவர்களுக்கு எளிய முறை. அஸ்லம் அவ்விதமே குறியிட்டுவிட, பின்னர் தொடர்ந்தது அவரது அன்றைய இரா உலா.

மறுநாள் -

அஸ்லமை அழைத்தார் உமர். “நேற்று குறியிட்டுவிட்டு வந்த அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இரவில் உரையாடிக் கொண்டிருந்தது யார், யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆண் துணையிருக்கிறதா என்றும் அறிந்து வாருங்கள்

அவர்கள் இருவரும் தாயும் மகளும் என்பதையும் மகளுக்குத் திருமணமாகவில்லை; தாயார் கணவனை இழந்தவர் என்பதையும் அறிந்துவந்துச் சொன்னார் அஸ்லம். அடுத்து என்ன நடக்க வேண்டும்?

நமக்குப் பழக்கமான ஆட்சிமுறைப்படி அரசாங்க உத்தரவை மீறுவதற்கு ஊக்குவித்த அந்தத் தாய்க்குத் தண்டனையோ அபராதமோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு நற்சான்றிதழ், ஒரு பதக்கம், வேண்டுமானால் சற்றுத் தாராளமாய்க் கொஞ்சம் பணமுடிப்பு என்று அளித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலீஃபா உமர் தம் மகன்களை அழைத்தார். முந்தைய இரவு நடந்தவற்றையும் அஸ்லம் அறிந்து வந்து சொன்னதையும் கூறிவிட்டு,

உங்களின் தந்தைக்கு மட்டும் வயது முதிர்ச்சி ஏற்பட்டிருக்காவிடில் அவர் இந்தப் பெண்ணை மணமுடிப்பதில் நீங்கள் எவரும் அவருடன் போட்டியாளராக வரமுடியாது. எனவே உங்களில் யாருக்காவது மணமுடிக்கப் பெண் தேவையா?” என்று கேட்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “எனக்கு மனைவியிருக்கிறார். இப்பொழுது வேறு திருமணத்துக்குத் தேவையற்றவனாய் இருக்கிறேன்என்று சொல்லிவிட்டார்.

மற்றொரு மகன் அப்துர் ரஹ்மானும் அதே பதிலையே கூறினார்.

ஆஸிம் மட்டும், “தந்தையே! எனக்கு மனைவியில்லை. எனவே அப்பெண்ணை மணமுடித்து வையுங்கள்எனக் கேட்டுக் கொண்டார்.

மிக்க நன்றுஎன்று அந்தப் பெண்ணுக்குத் தம் மகன் ஆஸிமை மணமுடித்துக் கொடுத்தார் உமர்.

இங்கு சற்று மூச்சை இழுத்துவிட்டு, இலேசாய்ச் தலையையும் சொறிந்து கொண்டு யோசிக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா உமர். அவர் தம்முடைய மகன்களுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகள், பெருங்குடி மக்கள், செல்வந்தர்கள் போன்றோரிடமிருந்து பெண்களைத் தேடித் தேடி பெற்றுத் தந்திருக்கலாம். அவ்விதம் மணமுடிக்க எவ்வித மறுப்புமின்றிப் பெண்களும் தயாராய் இருந்திருப்பார்கள்.

கடைக்குச் சென்றால் கண்ணைப் பறிக்கும், மனதை மயக்கும் ஒரு பொருளை வாங்கியே தீரவேண்டும் என்று நமக்கெல்லாம் ஓர் உத்வேகம் பிறக்குமே அப்படி, போற்றுதற்குரிய இறையச்சத்துடன் ஒரு பெண் மதீனாவில் உள்ளதை உணர்ந்த அந்தநொடி, அந்தப் பெண் தம் வீட்டிற்கு உரியவர் என்று தீர்மானித்து விட்டார் உமர். அடுத்து என்ன செய்தார்? அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை! ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா?’ தீர்ந்தது விஷயம்.

ஏன் இப்படி?

இறையச்சம், ஒழுக்கம் போன்ற மாண்புகளில் இணைந்து உருவாகிறதே - அது வாழ்க்கை. உலக மகா வாழ்க்கை! மறுமையின் சிறப்பிற்கு இம்மையில் அடித்தளம் அமைக்கும் வாழ்க்கை. அத்தகு இல்லறம் உலகின் சிறந்த வாரிசுகளை ஈன்றெடுக்கும்; இறைவனின் பாதுகாவல் அவர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பது உமரின் நம்பிக்கை.

என்ன ஆயிற்று? பின்னர் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்விற்கு அத்திருமணம் முன்னுரை எழுதியது.

அந்தப் பெண்ணுக்கும் ஆஸிமுக்கும் மகளொருவர் பிறந்தார். அந்த மகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் வேறு யாருமல்ல. பின்னாளில் நேர்வழி சென்ற கலீஃபாக்கள் வரிசையில் ஐந்தாமவர் என்று இஸ்லாமிய உலகு போற்றுமளவுக்கு ஆட்சி புரிந்த 'இரண்டாவது உமர்', உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)தாம் அவர்.

இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தை வாசிக்கும்போது இத்தகு ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்கும் அமைய வேண்டுமே என்று எழும் ஆசையும் ஆதங்கமும் நியாயமானவையே. தப்பே இல்லை. ஆனால் அதனுடன் மற்றொன்றும் நமக்கு நினைவில் இருத்தல் வேண்டும். அவர்களெல்லாம் நல்லதொரு நாளில் வானில் இருந்து குதித்து பூமிக்கு வந்தவர்களல்லர். நபி (ஸல்) வழி எவ்வழி, அவ்வழி என் வழி என்று உணர்ந்தார்கள்; அதை இழுத்து சுவாசித்து வாழ்ந்தார்கள். அவ்வளவுதான்!

தலைவர்கள் உருவானார்கள்!

நன்றி : இணையம்
Read more...