கடந்த செப்டம்பர் மாதத்தில் மற்றொரு மருத்துவ முகாமில் கலந்துக் கொள்ளக் கிடைத்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட இன்னொரு விடயம்தான் விதைகள், கொட்டைகளை (Nuts and Seeds) போதுமான அளவில் உட்கொள்வதில்லை என்பதாகும்.
விதைகள் மிகவும் ருசியான, போஷாக்கு சேறிந்த உணவாகும். இறைவன் மனிதனுக்கு அளித்த அற்புதமான அருட்கொடையாகும்.
* விதைகள், கொட்டைகள் என எவற்றை குறிப்பிடுகின்றீர்கள்?
நிலக் கடலை, மரமுந்திரி (கஜு), பாதாம், வட்டக்கா விதைகள், எள்ளு, சூரியகாந்தி விதைகள் போன்றன இலங்கையில் கிடைக்கும் விதை வகைகளாகும். உலகளாவிய ரீதியில் இன்னும் பல விதை வகைகள் காணப்படுகின்றன. வட்டக்கா விதைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக பயன்படுத்துகின்றபோதும் இலங்கையில் அதனை பயன்படுத்துவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
* விதைகள், கொட்டைகளிலுள்ள போஷாக்கு கூறுகள் எவை?
பொதுவாக எல்லா விதைகளிலும் (Nutrients) மிகவும் செறிந்து காணப்படுகின்றன. இதை Power House of Nutrients என கூறுவார்கள். குறிப்பாக கூறுவதாக இருந்தால்,
01. புரதம்: விதைகளில் காணப்படும் புரதம், தாவரப் புரதங்களிலே மிகச் சிறந்ததாகும் (Best among Plant Proteins). ஒரு அவுன்ஸில் 6 கிராம் புரதம் கிடைக்கிறது.
02. இதயத்துக்கு நலன் தரக்கூடிய கொழுப்பு (Heart Healthy fat):
விதைகளில் கொழுப்பு, எண்ணெய் அதிகமாக காணப்படுவதால் அதன் கலோரி பெறுமானம் அதிகமாகும். 100 கிராம் விதைகளில் சராசரியாக 500 கி. கலோரிகள் காணப்படுகின்றன.
ஆனால், அதில் காணப்படும் கொழுப்பமிலங்கள் இதயத்துக்கும் குருதிக் குழாய்களுக்கும் நன்மையை கொண்டுவரும். இவை Mono and Poly Unsaturated கொழுப்பமிலங்களாக காணப்படுகின்றன. Omega-3 கொழுப்பமிலமும் நிறைந்து காணப்படுகின்றது.
03. பல விட்டமின்கள் காணப்படுகின்றன: குறிப்பாக, விட்டமின் பீ வகைகள், போலிக் அசிட், விட்டமின் ஏ, ஈ, Antioxidants என்பன காணப்படுகின்றன.
04. கனியுப்புகள்: Zinc, கல்சியம், பொஸ்பரஸ், மக்னீசியம், சேலேனியம், கொப்பர் போன்றன காணப்படுகின்றன.
05. நார் (Fibre): நார்ப் பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன.
* விதைகளின் மருத்துவ ரீதியான நன்மைகள் எவை?
01. விதைகளிலுள்ள Antioxidants, Amino Acids என்பன குருதிக் குழாகளின் உறுதிக்கும் சிறந்த தொழிற்பாட்டிற்கும் உதவும்.
02. விதைகளில் காணப்படும் Omega-3 மற்றும் Omega-9, அமினோ அமிலங்கள், கனியுப்புகள் என்பன இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
தினமும் 1.5 அவுன்ஸ் விதைகளை உட்கொள்வது இதயநோய் வருவதை தடுக்கும் என அமெரிக்காவின் FDA (Food and Drug Authority) சிபாரிசு செய்கின்றது. குறைந்தது வாரத்திற்கு 5 நாட்கள் விதைகள் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் 35 வீதமளவு குறைகின்றது என British Medical Journal (1998) ஆவு தெரிவிக்கின்றது.
03. உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை கூட்டுவதற்கு உதவும். விதைகளில் காணப்படும் புரதம் குறிப்பாக, L- Arginine வகை அமினோ அமிலங்கள் இதற்கு உதவும்.
04. கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கும்: விதைகளிலுள்ள Omega-3, Omega-9 கொழுப்பமிலம், நார் என்பன LDL கொலஸ்ட்ரோலை (மோசமானது) குறைப்பதோடு, HDL கொலஸ்ட்ரோலை (நல்லது) அதிகரிக்கச் செய்யும். (Journal of Nutrition)
05. புற்று நோய்கள் வருவதைக் குறைக்கும்: புற்று நோய் தாக்கத்தை குறைப்பதற்கு தாவர புரதங்கள் உதவுவதாக அமெரிக்க புற்றுநோய் அமைப்பு (American Cancer Association) குறிப்பிடுகின்றது.
* இவ்வாறான மருத்துவ ரீதியான நன்மைகளை தரும் விதைகளை எந்தளவு உட்கொள்ள வேண்டும்?
ஒருவர் சராசரியாக 50 கிராம் அளவில் தினமும் உட்கொள்வது அவசியமானது. அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், அதிக கலோரி இருப்பதால் உடல் நிறை அதிகரிக்கும்.
* விதைகளை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை?
எமது நாட்டில் பொதுவாக உப்பு அல்லது சீனி, எண்ணெ சேர்த்து சாப்பிடும் பழக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும். நிலக் கடலை உடகொள்ளும்பொது அதன் நிறம், சுவை, மணம் மாறுபட்டிருந்தால் உட்கொள்ளக் கூடாது. Aflatoxins எனும் நச்சுப் பதார்த்தம் பழுதடைந்த, சரியாக களஞ்சியப்படுத்தாத நிலக்கடலையில் காணப்படும். இது ஈரலைப் பாதிக்கும்.
* எமது உணவுப் பழக்கத்தில் விதைகளை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம்?
* வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும்போது விதை வகைகளை பரிமாறுவது சிறந்ததும் இலகுவானதுமாகும்.
* எமது அமர்வுகளில், கூட்டங்களில் இதனைப் பரிமாறலாம்.
* சிறுவர்களுக்கு சிறுவயிதிலிருந்தே பழக்கலாம்.
* எமது உணவுத் தயாரிப்பில் நிலக்கடலை, மர முந்திரி (கஜு), எள்ளு, பாதம் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கலாம்.
* உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்களை சந்திக்கும்போது கேக், பிஸ்கட் போன்றவற்றை அன்பளிப்பு செய்வதைத் தவிர்த்து விதைகளை அன்பளிப்புச் செய்யலாம்.
0 comments:
Post a Comment