நார்ட் கோடார்ட், இதற்குமுன் உளவுத்துறையின் உயரதிகாரியாகவும் இருந்துள்ளார்,என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்ட "நியூ யார்க் டைம்ஸ்" பல்வேறு புள்ளி விவரங்களையும் - காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
2000ம் ஆண்டு முதலே இஸ்லாத்தை ஏற்பது அதிகரித்திருப்பாதாக கூறும் பத்திரிகை, பிரான்சின் முஸ்லிம் விரோத போக்கும் இதற்கான ஒரு முக்கிய காரணம் எனக்கூறுகிறது.
சமீப காலங்களில் மட்டும் 12 முஸ்லிம்களை தீவிரவாத குற்றச்சாட்டின்பேரில் கைது செய்துள்ளது,பிரான்ஸ் அரசு.
அதில் 3 நபர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்.
ஹிஜாபுக்கு தடை உள்ளிட்ட முஸ்லிம் விரோத காரணங்கள் தான், பிறர் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டுகோலாக அமைவதாக கூறும் ஆய்வு, இப்படி மதம் மாறுவோரால், அரசு பல நெருக்கடிகளை சந்திக்கவேண்டியுள்ளதாக தெரிவிக்கிறது.
கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்களே அதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.
கடந்த 2008க்குப்பிறகு, ஒவ்வொரு பள்ளிவாசலிலும், 150-200 நபர்கள் வரை முஸ்லிமாகியுள்ளதாக ஆவணங்கள் உள்ளன.
2012ம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் 130 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக கூறும் ஆய்வு, அதற்கான காரணத்தையும் கூறுகிறது.
தங்கள் குடும்பத்தில் பெற்றோர்கள் மத்தியில் இணக்கமின்மை, போட்டி மனப்பான்மை, சண்டை சச்சரவுகள் போன்ற மன உளைச்சலை சந்திக்கும் பிள்ளைகள், முஸ்லிம் தம்பதிகளின் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் குடும்பவியல் வாழ்க்கை முறையால் கவரப்படும் இளைஞர்கள் தான், அதிக எண்ணிக்கையில் இஸ்லாத்தை ஏற்பதாகவும், நியூ யார்க் டைம்ஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment