Banner 468 x 60px

 

Thursday, April 4, 2013

உஸ்மான் ரழி அவர்களும், சுயநலமற்ற அரசியலும்

0 comments
(எச்.பைஸ் - அல் அ;ஹர் பல்கலைக்கழகம்) 
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நபியவர்களின் மதீனா வாழ்க்கையிலிருந்து சமூக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , புவியியல் ரீதியாகவும் விஷ்திரமடைய ஆரம்பிக்கிறது . அந்த வகையில் உமர் ரழி அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமாக மிகப்பெரிய நிலப்பரப்பு இஸ்லாத்தின் கீழ் வருகின்றது . இவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் இஸ்லாத்தின் கீழ் வருகின்ற அதேவேளை உமர் ரழி அவர்களின் உயிரும் உலகை விற்று பிரிகிறது . ஆனால் அதற்கு முன் இந்த சாம்ராஜ்ஜியத்திட்கு ஆறு பேரில் ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று முக்கிய ஆறு பேரை  நியமனம் செய்கிறார்கள் . இறுதியில் அதில் ஒருவராக இருந்த உஸ்மான் ரழி அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார்கள் .
உஸ்மான் ரழி அவர்களின் ஆட்சி ஆரம்ப காலப்பகுதியில் நல்ல முறையில் சென்றாலும் இறுதி காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது . இந்த பிரச்சினைகள் முன் சென்ற ஜனாதிபதிகளுக்கு அதாவது அபூபக்கர் ரழி , உமர் ரழி போன்றவர்களுக்கு  ஏற்படாத ஒன்றாகவே இருந்தது. ஏனென்றால் இது மிகப்பெரிய அரசியல் உள்நாட்டு பிரச்சினையாக உருவெடுத்து இருந்தது . எந்தளவுக்கு என்றால் இறுதியில் உஸ்மான் ரழி அவர்கள் வீட்டிலேயே முற்றுகை இடப்பட்டு கொலை செய்யப்படும்  அளவுக்கு பிரச்சினை முற்றி காணப்பட்டது.
எனவே அந்த வகையில் இங்கே நான் குறிப்பிட விரும்புவது உஸ்மான் ரழி அவர்கள் இப்படி  இந்த வீட்டு முற்றுகையில் இருந்த போது நடந்த ஒரு சிறு விடயம் அவர்களின்  அரசியலில் கடுகளவேனும் சுயநலம் இருந்ததில்லை என்பதற்கு ஆதாரம் எனபதில் சற்றும் சந்தேகமில்லை . அப்படி பட்ட ஒரு விடயம் தான் அது .ஆனால் இது இன்றைய நம் முஸ்லிம் தலைவர்கள் ,ஆட்சியாளர்கள் ,மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்களிடம்  சற்றும் எதிர் பார்க்க முடியாத ஒரு விடயம் தான் அது .
உஸ்மான் ரழி அவர்கள் வீட்டு  முற்றுகையில் இருக்கும் போது பலரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார்கள் . அந்த உதவிகள்  அனைத்தையும் உஸ்மான் ரழி அவர்கள் மறுத்து விடுகிறார்கள் .அதே வரிசையில் இஸ்லாத்தின்  வீரத்தளபதி அலி ரழி அவர்களும் உஸ்மான ரழி அவர்களிடம் நீங்கள் அனுமதி தந்தால் இந்த முற்றுகையாலர்களை அடக்கி உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்றார்கள் . இது அலி ரழி அவர்களால்  முடியும் என்பதும் உஸ்மான் ரழி அவர்களுக்கு தெரியும் .ஆனால் இந்த நேரத்தில் உஸ்மான் ரழி அவர்கள் அலி ரழி அவர்களுக்கு சொன்ன பதில் தான் என் இந்த தலைப்பின் கருப்பொருளும் ஆகும் .
நிச்சயமாக இஸ்லாமிய உணர்வு இல்லாத ஒரு அரசியல்வாதியிடம் இப்படி ஒரு பதிலை நாம்  சற்றும் எதிர்பாக்க முடியாது .ஏனென்றால் இன்றைக்கு நாங்கள் பார்க்கும் சகல வித உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை மிக படு மோசமாக உள்ளது . அந்தளவுக்கு பதவி ஆசையும் , சொகுசு வாழ்க்கையும் அவர்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது .
தன் ஆட்சி மட்டுமல்லாமல் தன் உயிரே போகும் நிலையிலுள்ள உஸ்மான் ரழி அவர்கள் அப்படி என்னதான் அலி ரழி அவர்களுக்கு சொன்னார்கள் . 

இது தான் உஸ்மான் ரழி அவர்கள் அலி ரழி அவர்களுக்கு சொன்ன அந்த அரபு வாசகம் :  
ما أحب أن يهراق دم بسببي 
இதன் தமிழ் வாசகம் என்னவென்றால்:
 ( எனக்காக இரத்தம் ஓட்டப்படுவதை நான் விரும்ப வில்லை )
இந்த வாசகம் உஸ்மான் ரழி அவர்களிடம் வந்தது என்பது ஒரு ஆச்சரியமான விடயமாக கருத  முடியாது ஏனென்றால் அவர்கள் ஆன்மீகத்துடன் கலந்த அரசியலை நம் உத்தம நபியிடம் கற்றுக்கொண்டது தான் இப்படி ஒரு பதிலை அவர்களால் சொல்ல முடிந்தது  .நிச்சயமாக இது ஒரு சாதாரண அரசியல் வாதியிடம் இப்படி ஒரு வார்த்தை வருவது அதிசயமாக இருக்கும் போது ஒரு நாட்டின் முஸ்லிம் ஜனாதிபதியிடம் இதை எதிர் பார்ப்பது இரவில் சூரியனை தேடும் நிகழ்வாகும் . ஏனென்றல் இதைதான் இன்று நாம் எகிப்து , துனிசியா , லிபியா . சிரியா போன்ற நாடுகளில் நாம் கண்டது . 
இந்த நாட்டு ஆட்சியாளர்களால் தம் ஆட்சியை தக்க வைக்க எத்தனை உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன . எண்ணி கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு உயிர்கள் பறிக்கப்பட்டன . அது மட்டுமல்லாமல் இன்று வரைக்கும் தம் ஆட்சியை தக்க வைக்க பல உயிர்கள் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன .இன்னும் இது தொடரும் என்பதிலும் சந்தேகமில்லை.
. ஏனென்றால் இன்றை ஆட்சியாளர்கள்  ஆட்சிக்காக வாழ்பவர்கள். ஆனால் உஸ்மான் ரழி அவர்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்தவர்கள் . ஆட்சிக்காக மற்றவர்களின் உயிர்களை துச்சமாக நினைக்கும் இவர்கள் எங்கே ? மற்ற உயிர்களுக்காக தன் ஆட்சியை மட்டுமல்லாமல் தன் உயிரையும் துச்சமாக நினைத்த அந்த உஸ்மான் ரழி அவர்கள் எங்கே ?
இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் தன் ஆட்சியை தக்க வைக்க மக்கள் உயிரை காவு கொடுக்கும்  இந்த முஸ்லிம் தலைவர்கள் தன் ஆட்சி மடுமல்லாமல் தன் உயிரையும் துறக்க நினைத்த அந்த உஸ்மான் ரழி அவர்களின் ஜனநாயகத்தை பெற்றுக்கொள்ளாத வரை நம் முஸ்லிம் சமூகம் எந்த கோணத்திலும் முன்னேறுவதை எதிர் பார்க்க முடியாது .
அல்லாஹ் நம் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு உஸ்மான் ரழி அவர்களின் ஆன்மீகத்துடன் கலந்த அரசியல் சிந்தனை கிடைக்க உதவி செய்வானாக ! 

0 comments:

Post a Comment