ஒரிறையின் நற்பெயரால்
ஏனைய
மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட
அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம் வலியுறுத்தும்
அளவிற்கு ஒற்றுமை குறித்து எந்த ஒரு கிரகந்தந்தகளும்,கோட்பாடுகளும் கூறாதது
உண்மையே!அதை விட உண்மை அவ்வொற்றுமைக் குறித்து முஸ்லிம்கள் போதிய
விழிப்புணர்வு அடையாததே!
அல்லாஹ் தன் மறையில்

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும்
கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு
கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச்
சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(8:46)
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே,
உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும்
உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)
இவ்வாறு
மிக அழகாக,ஆழமாக ஒற்றுமையின் அவசியத்தையும் அவ்வாறு அதனை விடுக்கும்போது
ஏற்படும் விளைவையும் விரிவாக தெளிவுறுத்தி என்றும் ஒற்றுமையோடு வாழ ஏதுவாக
"நீங்கள் யாவரும் சகோதரர்களே" என சகோதரத்துவத்தின் அடிப்படை வேரை தன்னுள்
தக்கவைத்த சிறப்பு இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.மேலும் சகோதரத்துவம் என்ற
ஒரு நிலைப்பாட்டை முன்னிறுத்தி மட்டுமே உலகளாவிய ஒற்றுமையே நிலை
நாட்டமுடியும் என்பதே அறிவுச்செறிந்தவர்கள் இன்று அனுபவபூர்வமாக
ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே தான் மனித மனங்களைப் படித்த மா நபி முஹம்மது
(ஸல்)அவர்கள் மற்ற எந்த தலைவர்களும் வலியுறுத்தாத அளவிற்கு ஒற்றுமை
பற்றியும்,சகோதரத்துவம் பற்றியும் மிக அதிகமாக
இயம்புயிருக்கிறார்கள்.மேலும் நிரந்தர ஒற்றுமைக்கு கேடு உண்டாக்கும்
அனைத்து சுயநல வாசல்களையும் சகிப்புதன்மை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
என்ற சகோதரத்துவ சாவிக்கொண்டு பூட்டியதே பூமான் நபி அவர்களின் சிறப்பு.
"ஒரு
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.அவனுக்கு அநியாயம் செய்யக்
கூடாது.காட்டிக் கொடுக்கக் கூடாது.யார் தன் சகோதரனின் தேவையை
நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.யார் ஒரு
முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு
நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின்
குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்)
அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என
நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன்
வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய
சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி
(ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி
புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப்
பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை
மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை
அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது
கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி
ஆக,தனக்கு நன்மைப்பயக்கும் அனைத்து செய்கைகளும் தனது
உள்ளத்தாலும், செயல்களாலும் பிறிதொரு மனிதனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற
உயர்ந்த சிந்தனையே உலகிற்கு தந்த அந்த மாநபி வழிவந்தவர்களாகிய -நாம் இன்று
இருக்கும் நிலை சற்று கவலைக்குறியதாய் தான் இருக்கிறது என்பதில்
சந்தேகமில்லை. இறையும்,மறையும் ஒன்றென ஏற்றுக்கொண்ட நாம் உலகளாவிய
"ஒற்றுமையென்னும் ஆணிவேர் நமக்குள் ஆழமாய் உன்றிருந்தப்போதிலும் தம்மில்
வளர்ந்த தன்னலம் என்ற விழுதுகள் நம்மை பல்வேறாய் வி(பி)ரிந்து
கிடக்கச்செய்கிறது.பாலஸ்தீனிலும்,ஆப்கானிலும் நம் சகோதரர்கள் படும்பாட்டை
உரக்கச்சொல்லக்கூட திரானியற்று தம் உமிழ் நீரை உறிஞ்சுவோர் நம்மில்
பலர்.அதனிலும் அவர்கள் நிலைக்கூற முன் செல்வோர் கூட தாம் சார்ந்த இயக்கத்தை
முன்னிருத்தி சொல்ல முனைவதுதான் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று
யாரும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில்
ஒற்றுமைக் குறித்து ஓராயிரம் முறை எழுதினாலும், பேசினாலும் உள்ளூர் நிலையென
வரும்போது ஒரு சார்புக்கொள்கை பக்கமாக பேச தலைப்படுவது தான்
வருத்தப்படக்கூடிய விசயம்!
அறியாமை மற்றும் தன்னலம் போன்ற
அடிப்படையே மையமாக வைத்து ஒருவர் செயல்படும்போதுதான் இது போன்ற
ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் உருவாக்கத்திற்கு காரணம். இதை மிகப்பெரிய
ஆயுதமாக கொண்டு இன்று உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையே சீர்குலைக்க யுத
நஸ்ரானிய சக்திகள் முயல்கின்றன என்பதை விட அதில் வெற்றியும்
பெற்றிருக்கின்றன என்பதே இங்கு சரி!அத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம்
பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும்
கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும்
வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே
அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்! அத்தகையே உலக ஒற்றுமையே நம் உயிருடன்
உணர்வாய் கலக்க எல்லாம் அறிந்த நாயன் அருள்பாலிப்பானாக!
ஒற்றுமையின் இலக்கணமாக நாம் இல்லாவிட்டாலும் உலகளாகவிய ஒற்றுமை நமது இலக்காக இருக்கட்டும். "
0 comments:
Post a Comment