இலங்கை அழகிய தீவின் முஸ்லிம்களின் இஸ்லாமிய வரலாறும்,பூர்வீகமும் பல
வரலாற்றுக் கதைகள்,சான்றுகள் மூலமும் அறிந்து கொண்டாலும் இன்னும் நம்மால்
உறுதியாக நாம் பழங்காலத்தினரா அல்லது வழித் தோன்றல்களா என்றும் கூற
முடியாத நிலமை இருந்தும் ஒரு சில வரலாறுகளின் படி ஆதம் மலையின் பாதம் அது
ஆதம் (அலை) அவர்களின் பாதமே என்று ஒரு வாதத்திட்கு எடுத்த்துக் கொண்டாலும்
அதனை நிரூபிப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் சொல்லலாம்.
இருந்த போதிலும் இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் முதன் முதல் எப்போது எவ்வாறு நிகழ்வுற்றது என்பதனை சரியாகக் கணித்துக் கூற முடியாத போதிலும் இலங்கையில் இஸ்லாத்தின் பரவலுக்கு வழிகோலிய அறேபியர் கிறுஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதல் இலங்கையுடன் வர்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
மூன்று புறத்திலும் நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டிருந்த அறேபியா தனது மேற்கெல்லையில் நாகரிக வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும், கிழகெல்லையில் பல்வேறு துறைகளிலும் நன்கு வளர்ச்சி கண்டிருந்த பாரசீகத்துடனும் வர்தகத்தொடர்பைக் கொண்டிருந்தது. பாரசீகத்துடனான வர்தகத் தொடர்பு கடற்பாதை மூலமே நடைபெற்றது. ஏடன் துறைமுகத்தூடாகவும், பாரசீகத்தின் கரையோரமாகவும் அவர்கள் கொண்டிருந்த வர்தகத் தொடர்பு இந்தியாவுக்கு அவர்கள் செல்லவும் வழிகோலியது. மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் இந்தோனேசியா வரை சென்ற கிழகாசிய நாடுகளுக்குமிடையிலான வர்தகப் பாதயை அவர்கள் இணைப்பவர்களாக இருந்தனர். இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்திருந்ததால் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே அறேபிய வர்தகர் இலங்கையுடன் தொடர்புகொண்டிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வழங்க முயற்சித்த முஸ்லிம் நேசன் தனது 1898.10.22ஆம் இதழில், ஹுசைன் இப்னு முஹம்மது என்பவர் கோவை செய்த அல்கியாபாகறி எனும் நூலின் முதலாம் பாகத்தின் 184ஆம் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகப் பின்வரும் செய்தியைத் தந்துள்ளது. ஹிஜ்ரி 6ஆம் வருடத்துக்கு சரியான கி.பி 628ஆம் ஆண்டில் வஹ்ப் இப்னு அபிஹப்சா எனும் பெயருடைய ஓர் அஸ்ஹாபியை நபிகளார் இலங்கை அரசனிடத்தில் அனுப்பியதாகவும் அவர் நபிகளாரின் கடிதத்தை இலங்கை மன்னனிடம் கொடுத்ததாகவும், அதில் அம்மன்னனுக்கு இஸ்லாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிரிந்ததாகவும், அதனால் அவ்வஸ்ஹாபிக்கு மார்க்கத்தை பரப்புவதற்கு அனுமதியளித்து பள்ளி ஒன்றைக்கட்டவும் விரும்பியோர் அம்மதத்தை ஏற்கவும் சுயாதீனம் கொடுத்தார். அவர் ஏற்கனவே இங்கிருந்த அறேபியருக்கும் பிறருக்கும் உபதேசித்து சிலரை தம்மதத்தவராக்கி ஹிஜ்ரி10இல் அறேபியாவுக்கு சென்றார் என்றும் சொல்லப் படுகிறது .
எனினும் நாகரீகமும்,பொருளாதாரமும்,கலாச்சாரமும்,கல்வியும் வளர்ந்து
வந்ததனால் பல கோணங்களிலும் இஸ்லாமிய இலங்கை
அறிவாளிகள்,ஆசான்கள்.கொள்கைசார் நிபுணத்த்துனர்கள் வெவ்வேறு விதமான
சிந்தனைகளின் மூலம் சிலர் மத்திய கிழக்கை மய்யமாகவும்,ஒரு சிலர் இந்திய
தீவை ஒரு மய்யமாகவும் இன்னும் சிலர் பாகிஸ்தான்,பங்களாதேஷம் போன்ற
நாடுகளின் அடிச்சுவடுகளைக் கொண்டு இஸ்லாத்த்தை மெருகூட்டினர் என்று கூட
சொல்லலாம், அது இன்று பல பிரிவுகளாக பிரிந்து பல் வேறு கோணத்தில்
சிந்தனையையும் ,பிளவுகலைம் எற்படுத்தி மக்கள் மத்தியில் பல
குளறுபடிகலையும் உண்டாக்கியுள்ளன என்பது காலப் பொருத்தமே.
மேலும் அல்குர்ஆன் இப்படி கூறும்போது ஏன் நமக்குள் பல ஜமாஅத்துக்கள் என்ற வினாவும் எழத்தான் செய்கின்றது .’’…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்….’’(050:3)
இலங்கை தீவில் பூத்த இஸ்லாத்தின் காய்,கனிகளை கயவர்களும்,கள்வர்களும் கல்லெறிந்து,பொல்லேரிந்து பறிப்பதற்கு முன் நாம் விதைத்து பூத்துக் கனிந்த கனிகளை மாற்றான் தோட்டத்து மல்லிகை பறிப்பதுபோல் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் நமக்கான தனித்துவத்தை உரிமையுடன் பரஸ்பரமாய் ஒன்றாய் அம்மரத்தின் நிழலில் கீழ் நின்று பறிக்கலாமே..!
இதித்தீவில் வெறுமனே இஸ்லாம் வாளால் அல்லது யுத்தத்தால் பரப்பிய ஒரு மார்க்கமல்ல மாறாக அது அனதரவற்ற நிலையில் தோன்றியது என்பற்கும் அரேபியர்களின் வருகை மூலமும் அகிம்சை வழியில் தோன்றியதே என்று நாம் பல வரலாற்று சான்றுகளின் மூலமும்,கதைகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
எல்லா ஜமாத்துக்களும் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குங்கள் என்றே சொல்கிறது மாறாக கல்லையோ,மண்ணையோ வணங்குகள் என்று ஒரு போதும் சொல்லவில்லையே,அவ்வமயம் ஒவ்வொரு ஜமாத்துக்களும் நம் இத்தீவில் இஸ்லாம் இன்னும் வலுவாக வேரூண்டி நிற்பதட்கு வெவ்வேறு பரிணாமங்களில் சமூக சீர்திருத்தங்களையும்,விழிப்புணர்ச்சிகளையும் செய்திருக்கிறார்கள் என்பதை மறைக்கவோ மறுக்க முடியாது,
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குறைஷிக் காஃபிர்களை கூட வெறுத்து,ஒதிக்கி நடக்கவில்லை அவர்களையும் சகோதரர்களாகவே பார்த்த்தார்கள் சம காலத்தைப் போன்று கொள்கை,கோட்பாடு,பேதம் பார்த்த்திருந்தால் இன்று உலகெங்கும் பரவும் இவ் இஸ்லாத்தை வெளிச்சத்த்தில் பார்த்த்திருக்க முடியுமா என்று கூட கேள்வி எழுகின்றது.
…இன்றைய
தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும்
நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும்
உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்)
தேர்ந்தெடுத்துள்ளேன்…(050:3)
எல்லா இடங்களிலும் இஸ்லாம் தான் எம் மார்க்கம்,வேதம்,கொள்கை,கோட்பாடு
என்று சொல்கிறதே தவிர வேறு எந்த கூட்டத்தையோ,குழுவினரையோ குறிப்பிட்டு
இதுதான் கொள்கை என்று நிச்சயமாக குறிப்பிடவில்லை. சில்லறைக் காசுப்
பிரச்சினை,பிளவுகளுக்காக பல செல்லாக் காசுகளாக பெரிது படுத்தாமல் நமக்குள்
நாம் இருவர் என்று ஒரு ஐக்கியமான முறையில் தீர்த்த்துக் கொள்ளலாமே..
ஆக நம்மிடத்த்தில் சில வாதப் பிரதி வாதம் இருந்தாலும் அது சம காலத்திட்கு தகுந்த கால, நேரமாக கருத முடியாது ஆதலால்,சிறு சிறு பிளவுகள் இருந்தாலும் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் நம் இலங்கை தீவில் அகிம்சை வழியில் தோன்றிய இஸ்லாத்தை இன்னும் வலுவாக கட்டி எழுப்புவோம் இன்ஷா அல்லாஹ்……..!
சுஹைர் அலி (கபூரி)
இருந்த போதிலும் இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் முதன் முதல் எப்போது எவ்வாறு நிகழ்வுற்றது என்பதனை சரியாகக் கணித்துக் கூற முடியாத போதிலும் இலங்கையில் இஸ்லாத்தின் பரவலுக்கு வழிகோலிய அறேபியர் கிறுஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதல் இலங்கையுடன் வர்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
மூன்று புறத்திலும் நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டிருந்த அறேபியா தனது மேற்கெல்லையில் நாகரிக வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும், கிழகெல்லையில் பல்வேறு துறைகளிலும் நன்கு வளர்ச்சி கண்டிருந்த பாரசீகத்துடனும் வர்தகத்தொடர்பைக் கொண்டிருந்தது. பாரசீகத்துடனான வர்தகத் தொடர்பு கடற்பாதை மூலமே நடைபெற்றது. ஏடன் துறைமுகத்தூடாகவும், பாரசீகத்தின் கரையோரமாகவும் அவர்கள் கொண்டிருந்த வர்தகத் தொடர்பு இந்தியாவுக்கு அவர்கள் செல்லவும் வழிகோலியது. மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் இந்தோனேசியா வரை சென்ற கிழகாசிய நாடுகளுக்குமிடையிலான வர்தகப் பாதயை அவர்கள் இணைப்பவர்களாக இருந்தனர். இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்திருந்ததால் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே அறேபிய வர்தகர் இலங்கையுடன் தொடர்புகொண்டிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வழங்க முயற்சித்த முஸ்லிம் நேசன் தனது 1898.10.22ஆம் இதழில், ஹுசைன் இப்னு முஹம்மது என்பவர் கோவை செய்த அல்கியாபாகறி எனும் நூலின் முதலாம் பாகத்தின் 184ஆம் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகப் பின்வரும் செய்தியைத் தந்துள்ளது. ஹிஜ்ரி 6ஆம் வருடத்துக்கு சரியான கி.பி 628ஆம் ஆண்டில் வஹ்ப் இப்னு அபிஹப்சா எனும் பெயருடைய ஓர் அஸ்ஹாபியை நபிகளார் இலங்கை அரசனிடத்தில் அனுப்பியதாகவும் அவர் நபிகளாரின் கடிதத்தை இலங்கை மன்னனிடம் கொடுத்ததாகவும், அதில் அம்மன்னனுக்கு இஸ்லாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிரிந்ததாகவும், அதனால் அவ்வஸ்ஹாபிக்கு மார்க்கத்தை பரப்புவதற்கு அனுமதியளித்து பள்ளி ஒன்றைக்கட்டவும் விரும்பியோர் அம்மதத்தை ஏற்கவும் சுயாதீனம் கொடுத்தார். அவர் ஏற்கனவே இங்கிருந்த அறேபியருக்கும் பிறருக்கும் உபதேசித்து சிலரை தம்மதத்தவராக்கி ஹிஜ்ரி10இல் அறேபியாவுக்கு சென்றார் என்றும் சொல்லப் படுகிறது .

மேலும் அல்குர்ஆன் இப்படி கூறும்போது ஏன் நமக்குள் பல ஜமாஅத்துக்கள் என்ற வினாவும் எழத்தான் செய்கின்றது .’’…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்….’’(050:
இலங்கை தீவில் பூத்த இஸ்லாத்தின் காய்,கனிகளை கயவர்களும்,கள்வர்களும் கல்லெறிந்து,பொல்லேரிந்து பறிப்பதற்கு முன் நாம் விதைத்து பூத்துக் கனிந்த கனிகளை மாற்றான் தோட்டத்து மல்லிகை பறிப்பதுபோல் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் நமக்கான தனித்துவத்தை உரிமையுடன் பரஸ்பரமாய் ஒன்றாய் அம்மரத்தின் நிழலில் கீழ் நின்று பறிக்கலாமே..!
இதித்தீவில் வெறுமனே இஸ்லாம் வாளால் அல்லது யுத்தத்தால் பரப்பிய ஒரு மார்க்கமல்ல மாறாக அது அனதரவற்ற நிலையில் தோன்றியது என்பற்கும் அரேபியர்களின் வருகை மூலமும் அகிம்சை வழியில் தோன்றியதே என்று நாம் பல வரலாற்று சான்றுகளின் மூலமும்,கதைகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
எல்லா ஜமாத்துக்களும் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குங்கள் என்றே சொல்கிறது மாறாக கல்லையோ,மண்ணையோ வணங்குகள் என்று ஒரு போதும் சொல்லவில்லையே,அவ்வமயம் ஒவ்வொரு ஜமாத்துக்களும் நம் இத்தீவில் இஸ்லாம் இன்னும் வலுவாக வேரூண்டி நிற்பதட்கு வெவ்வேறு பரிணாமங்களில் சமூக சீர்திருத்தங்களையும்,விழிப்பு
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குறைஷிக் காஃபிர்களை கூட வெறுத்து,ஒதிக்கி நடக்கவில்லை அவர்களையும் சகோதரர்களாகவே பார்த்த்தார்கள் சம காலத்தைப் போன்று கொள்கை,கோட்பாடு,பேதம் பார்த்த்திருந்தால் இன்று உலகெங்கும் பரவும் இவ் இஸ்லாத்தை வெளிச்சத்த்தில் பார்த்த்திருக்க முடியுமா என்று கூட கேள்வி எழுகின்றது.

எல்லா இடங்களிலும் இஸ்லாம் தான் எம் மார்க்கம்,வேதம்,கொள்கை,கோட்பா
ஆக நம்மிடத்த்தில் சில வாதப் பிரதி வாதம் இருந்தாலும் அது சம காலத்திட்கு தகுந்த கால, நேரமாக கருத முடியாது ஆதலால்,சிறு சிறு பிளவுகள் இருந்தாலும் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் நம் இலங்கை தீவில் அகிம்சை வழியில் தோன்றிய இஸ்லாத்தை இன்னும் வலுவாக கட்டி எழுப்புவோம் இன்ஷா அல்லாஹ்……..!
சுஹைர் அலி (கபூரி)
0 comments:
Post a Comment