
நீங்கள் உங்கள் மனைவியை உண்மையாக நேசிக்கிறீரா?..பார்க்கலாம்...!
- அவள் உன்னிடம் பாதுகாப்பை உணரட்டும்; தலாக்கைக் கொண்டு பயமுறுத்தி விடாதே.
- மனப்பூர்வமான உனது சலாத்தை அவளுடன் பகிர்ந்து கொள்.
- இலகுவில் உடைந்து விடும் குவளையைப் போல் அவளை மென்மையாக நடத்து.
- எப்போதும் தனிமையில் அவளை உபதேசி; அது சரியான அணுகுமுறையில், சரியான நேரத்தில், சரியான சூழ்நிலையாக இருக்கட்டும்.
- அவளோடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்.
- முடியுமான வரை அவளருகில் அமர்ந்து கொள், அவள் உள்ளம் குளிர்ந்து விடும்.
- கோபத்தை தவிர்ந்து கொள், எப்போதும் வுழுவுடனிரு.
- உன் தோற்றத்தை அவளுக்காக நன்றாக்கிக் கொள், அவளிடம் மணம் வீசக் கூடியவனாக இரு.
- கடுகடுப்பாய், கடுமையுள்ளம் கொண்டவனாக இருந்திடாதே, அவளை உடைத்திடுவாய்.
- எப்போதும் நல்ல செவிமடுப்பவனாக இரு.
- புகழ்வதை ஏற்படுத்திக் கொள், வாதாட்டத்தை விட்டு விடு.
- நல்ல பெயர்களால், அன்புக்குரிய புனை பெயரகளால், அவள் அழைக்கப்பட விரும்பும் பெயரகளால் அவளை அழை.
- மகிழ்ச்சிக்குரிய ஆச்சரியங்களால் அவளை ஆர்ப்பரிக்கச் செய்துவிடு.
- நாவை பாதுகாத்துக் கொள்; அதை பராமரித்துக் கொள்.
- அவளது சிறு குறைகளை எதிர்பாத்திரு; அவற்றை ஏற்றுக் கொள்; அவற்றுக்கு மேலால் அவளைப் பார்.
- அவளை மனதார வாழ்த்து.
- அவளது குடும்பத்துடன் நல்லுறவை வைத்துக் கொள்ள அவளை ஊக்கப்படுத்து.
- அவள் விரும்புகின்ற விடயத்தில் பேசு.
- அவளது சிறப்பை அவளது உறவுகளுடன் பகிர்ந்து கொள்.
- பரிசுகளால் உபசரி.
- வழமையிலிருந்து விலகு அவளை ஆச்சரியப்படுத்து.
- அவள் பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்.
- நல்லொழுக்கத்தைப் பேணிக் கொள்.
- பொறுமையை சோர்த்துக் கொள்; கர்பத்திலும் மாதவிடாயிலும் அதை கூட்டிக் கொள்.
- பொறாமையோடு, அவளை கண்ணியப்படுத்து.
- நளினமாக இரு.
- அவளுக்காக உனது மகிழ்சியை அர்ப்பணி.
- வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவு.
- உனது உறவுகளை நேசிக்க உதவி செய், ஆனால் வற்புறுத்தாதே.
- அவள் தான் உனது முன்மாதிரி மனைவி என்பதை அவளுக்குணர்த்து.
- உன்னுடைய துஆக்களில் அவளை மறந்துவிடாதே.
- இறந்த காலத்தை அல்லாஹ்விடம் விட்டு விடு, அவற்றை கிளறி நாற்றமுண்டாக்காதே
- நீ அவளுக்காக வேளை செய்வதாகவோ அவளுக்கு அனைத்தையும் கொடுப்பவனாகவோ
நடந்து கொள்ளாதே; அவற்றைக் கொடுப்பவன் அல்லாஹ்வே. நீ அவற்றை சுமந்து
செல்பவன் மட்டுமே.
- ஷைத்தானை எதிரியாகக் கொள், உன் மனைவியை அல்ல.
- மனைவிக்கு ஊட்டிவிடு.
- நீ பாதுகாக்க வேண்டிய விலை மதிக்க முடியாத முத்தென அவளைப் பராமரி.
- உன் புன்னகையை அவளுக்கு விலை மதிப்பாக்காதே.
- சிறிய விடயங்களைாப் புறக்கணித்து விடாதே, அவை பெரிதாக முன்னரே கவனித்துக் கொள்.
- அவளது யோசனைகளை நீ பாரட்டுவதாக உணர்த்து.
- அவளது ஆன்மிகப் பலத்தையும் அவளது திறமைகளையும் வளர்க்க உதவி செய்.
- பிள்ளைகளைப் பராமரிக்க அவளுக்கு உதவி செய்.
- ஒன்றாக அமர்ந்து சாப்பிட நேரம் ஒதுக்கு.
- வீட்டிலிருந்து வெளியேறும் போது கோபத்துடன் வெளியேறாதே.
- நீ பயணிப்பதாகவோ பயணம் முடிந்து வீடு திரும்புவதாகவோ அவளிடம் முன்கூட்டியே அறிவித்துக் கொள்.
- அவள் உறவு கொள்ளும் மனநிலையிலில்லாத போது அதனை மதிக்கக் கற்றுக்கொள்; எல்லை மீறி வழிதவறிவிடாதே.
- வாய்மொழியால் அவளுக்கு பரிசளி; வாழ்த்துவதில் கலைத்துவமாய் இரு.
- வீட்டின் இரகசியத்தையும் சுயத்தையும் பேணிக்கொள்.
- மார்க்க விடயத்தில் அவளை ஞாபகப்படுத்தவும் உன்னை ஞாபக்கடுத்தச் செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்.
- அவள் மீதான உனது கடமையை மதிப்பதோடு அவற்றை நிறைவேற்றவும் தவறிவிடாதே.
- நல்ல சந்தர்ப்பத்திலும் கெட்ட சந்தர்ப்பத்திலும் அவளோடு நல்லமுறையிலும் நியாயமாகவும் அன்பாகவும் வாழ்.
- அவளது ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் அக்கறை கொள்.
- நீ எப்போதும் சரியானவன்; முழுமையானவன் என்று கருதிவிடாதே.
- உனது சந்தோசத்தையும் துக்கத்தையும் அவளோடு பகிர்ந்து கொள்.
- அவளது பலவீனங்களில் கருணை காட்டு.
- உனது மனைவியை முத்தமிடு; அவளுடன் முன் விளையாட்டுக்களில் ஈடுபடு; மிருகத்தைப் போல் அவள் மீது பாயாதே.
- உங்களளுக்கிடையிலான முறுகள்களை வெளியே கொண்டு செல்லாதே.
- அவள் உன் மீது தங்கியிருக்குமளவு உறுதியான ஆதரவைக் கொடு.
- அவள் இருக்கும் விதமாகவே ஏற்றுக் கொள்.
- அவளைப் பற்றிய நல்லெண்ணத்துடனே இரு.
- முடியுமான போது அவளுக்காக சமைத்துக் கொடு.
- இரவில் நீங்கள் முடியுமான போது தொழுது கொள்வதற்காக
உங்கள் வீட்டில் நல்ல; சுத்தமான; தனியானதோர் இடத்தை ஒதுக்கி விடுங்கள்.
- பெண்கள் மலர்களை விரும்புவாரகள்; நீ அவளுக்காக வைத்த பரிசுப் பொதிக்குச் செல்லும் பாதையில் சில மலர்களையும் துாவி விடு.
- உனது செய்தியை அவள் எதிர்பார்த்திருக்கையில் அவளுக்கு நல்லதாக ஒர் செய்தியை அனுப்பி விடு.
- உனது மனைவிக்கு குறுஞ் செய்தி அனுப்வோ மின்னஞசல் அனுப்பவோ காரணம் தேடிக் கொண்டிராதே. அதில் உன் காதலையும் சேர்த்துக் கொள்.
- அவளோடு தனியாக வெளியே செல்ல ஒர் நாளை ஒதுக்கிக் கொள்; முடியுமாயின் பிள்ளைகளையும் தவிர்த்துக் கொள்.
- உன் மனைவியின் குடும்பத்துக்காக ஏதேனும் செய். அது ஒர் பரிசாக
இருக்கமுடியும். அல்லது அவளது சகோதரனுக்கான ஒர் உதவியாக இருக்கலாம்.
எதுவாயினும் அது உனது புள்ளியை உயர்த்தும்.
- உனது உரிமைகள் பற்றி ஞாபகப்படுத்துவதும் கேட்பதுமாக எப்போதும் நச்சரித்துக் கொண்டிராதே.
- அவளுக்காக கடைகளுக்குச் செல்; அவளுக்கு தேவையானது, அவள் விரும்பியதை வாங்கிக் கொடு.
- அவளது நண்பிகளை சந்திக்க; அவர்களுடன் பொமுதொன்றைக் கழிக்க ஆவண செய்து கொடு.
- அவளது பெற்றோருக்கு அவளது உடன் பிறப்புக்களுக்கு வாழ்த்துச் சொல்ல அவளை ஞாபகப்படுத்து.
- முடியுமாயின் அவளது குடும்பத்தில் கஷ்டப்பவோருக்கு உதவி செய்.
- அவள் வாசிக்கும் புத்தகத்தினுல் காதல் கவிதைகளை, குறிப்புக்களை எழுதிவை.
- அவள் மார்க்க விடயமாக தான் வாசித்த ஒன்றை உன்னிடம் கூறும் போது அவற்றைப் புறந்தள்ளி விடாதே; அவற்றை எடுத்துக் கொள்.
- அவளுக்காக முடியுமான, சமயலுக்குத் தேவையான தாவரங்களைக் கொண்ட ஒர் மூலிகைத் தோட்டத்தை அமைத்துக் கொடு.
- தேவையான போது அவளது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணிளை நவீனமயப்படுத்திக் கொடு.
- உனது குழந்தைகளுக்கு தங்கள் தாயை மதிக்கக் கற்றுக் கொடு.
- அவள் தவறுவிடும் போது அவற்றை நகைச் சுவையோடு அணுகு.
0 comments:
Post a Comment