முஸ் லிம் க ளுக் கெ தி ரான கோஷங்கள் கருத் துக்கள் ஓர ளவு வேக மாக எழுப் பப் படும் கால சூழலில் நாம் வாழ் கிறோம். ஆங் காங்கே சில கல் ல டிகள், நெருப்பு வைத்தல், பய மு றுத்தல் நட வ டிக் கைகள் இடம்பெற் றுள் ளன. இந் நிலையில் இந்த நிக ழ்ச் சி களை நாம் எவ் வாறு புரிந்து கொள் வது? எதிர் கொள் வது? என்ற கேள் விகள் பல மாக எழுந் துள் ளன. அது பற் றிய கருத் துப் பரி மா றல் களும் நடந்து வரு கின் ற ன.
முஸ் லிம் களின் பண் பா டின்மை, முஸ் லி மல் லா த வர் க ளோடு பழ கத் தெ ரி யாமைதான் இதற் கான அடிப் படைக் கார ணம்போல் பல இடங் களில் பேசப் ப டு கி றது. முஸ் லிம் களைப் பண் பாட்டு ரீதி யாக சரி யாக வளர்த் து விட்டால் போது மா னது எனவும் கருத்துச் சொல் லப் ப டு கி றது. இதில் உண் மை யி ருக் கி றது என் பதில் சந் தே க மில்லை. ஆனால் சிங் களத் தீவி ர ப் போக்காளர்களுக்கு நாம் காது கொடுத்தால் அவர்கள் கூறும் கருத் துக் களைக் கீழ் வ ரு மாறு தர லாம்.
*ஹலால் சான் றிதழ் ஊடாக சம் பா திக்கும் பணம் ஊடாக முஸ் லிம்கள் தம து மார்க் கத்தை வளர்க் கி றார்கள். வெளிநாட்டுத் தீவி ர வாத இயக் கங் க ளுக்கும் பணம் அனுப் பு கி றார் கள்.
*முஸ் லிம் களின் சனத் தொகை பெரு கி வ ரு கி றது. குறிப் பிட் ட தொரு காலப் பிரி வில் இந்த நாடே முஸ் லிம் களின் ஆதிக் கத் திற் குட் ப டும்.
*வெளிநாட் டுப் பணம் மூலமும் அவர்கள் இந்த நாட்டை இஸ் லா மி ய ம யப் ப டுத்த முயல்கி றார் கள். என வேதான் எங்கு பார்த் தாலும் பள் ளி களை அவர்கள் அமைத்துக் கொண்டு செல் கி றார் கள்.
*முஸ் லிம் கள் இயல் பி லேயே தீவி ர வா திகள். அவர் க ளது வேத நூலே அவர் களை அவ் வாறு பயிற் று விக் கி ற து.
இவை எல்லாம் எமக்கு ஒரு கருத் தைத்தான் கூறு கின்றன. நீங்கள் இந் நாட்டுப் பிர ஜை க ளல்ல. அப் படிப் பிர ஜைகளாக இருக்க வேண்டும் எனில் உங்க ளது தனித் துவம் என்று எத னையும் பேசா தீர்கள். பௌத்த கலா சா ரத் தையே ஏற்றுப் பின் பற் றுங் கள் என்பதுதான்.
ஒரு பௌத்த மத குரு அண் மையில் ''''பௌத்த உப தே சங் களைக் கேளுங்கள். பிரித் புனித நீரை அருந் துங்கள்'''' எனக் கேட்டுக் கொண் ட மையும் இப் போது பொது பல சேனா வினால் விநி யோ கிக் கப் படும் துண்டுப் பிர சு ரங் களும் இந்த உண் மை யையே சொல்கின் ற ன.
சுதந் தி ரத் திற்கு முன் பி ருந்தே குறிப் பாக ஆங் கி லே யர் ஆட் சி யி லி ருந்தே முஸ் லிம்,-சிங் க ள-,தமிழ் இன மோதல் ஆரம் பித் து விட் டது என் பது வர லாறு சொல் லும் மிகத் தெளிவான உண் மை. இந்த நாட்டின் முழு மேலா திக் கமும் தமக்கு இருக்க வேண்டும் என் ப துவே சிங் களத் தீவி ரப் போக்காளர்களின் எண்ணம். இந்தக் கருத் தாக் கத்தின் விளைவே 30 வருட கால சிங் க ள-,தமிழ் யுத்தம். அந்த யுத்தத் தின் போது முஸ் லிம்கள் அர சோடு நின் ற போதும், முஸ்லிம் நாடுகள் சில பாரிய உத வி கள் செய் த போதும் பின் னரும் சில உத வி களை முஸ்லிம் நாடுகள் செய் த போ தும், இவை எதுவும் தீவி ர வா தி களைத் திருப் திப் ப டுத் த வில் லை என் பதே உண் மை.
இந் நிலையில் மூன்று விட யங் களை நாம் கவ னத்திற் கொள்ள வேண்டும்.
1. சிங் கள பௌத்த தீவி ர வாதம் நீண்ட கால வர லா ற்றுப் பின் ன ணியை கொண் டது. எங்கா வது ஒரு கலகம் வெடித்தால் ஏதேனும் அற்பக் காரணம் அதற்குக் காட் டப் பட் டாலும் அடிப் ப டைக் கா ரணம் முஸ்லிம் சமூகம் பற் றிய நச் சூட் டப் பட்ட சூழ லே யாகும். ஒரு நெருப்புப் பொறி இதனைப் பற்ற வைத் து விட் டது. அவ் வ ள வு தான்.
2. யுத் தத்தின் பின்னர் மிகவும் திட் ட மிட்டு கவ ன மாக பௌத்த தீவி ர வா தம் இயங்கி வரு கி றது. அத னை மிகவும் சாதா ர ண மாகப் பார்ப் பது தவ றா ன து.
3. இந்தத் தீவி ர வா தத்தின் தலை மை களை விடவும் சிங்களப் புத்தி ஜீ வி களும் சிங் களப் பொது மக் களும் எமக்கு முக் கியம். அவர்கள் இக் கருத் துக் களால் பாதிக் கப் ப டாது காப் பது எவ் வாறு என் ப து எமது முதன் மைப் பட்ட வேலைத் திட் ட மா க இருக்க வேண் டும்.
இப் போது நாம் எம்மை நோக் கினால் பல் வேறு உண்மை களை அவ தா னிக்க முடியும். அவற்றின் பின் ன ணியில் சிங் களத் தீவி ர வா தத் திற்கு நாமே தீனி போ டு கி றோமா என சிந் திக்க முடி யும்.
1. முஸ்லிம் அல் லா தவர் (குப்ர்) பற்றி எம் மிடம் பாரம் ப ரி ய மா ன தொரு சிந் தனைக் கட் ட மைப் புள் ளது. அது பெரும் பாலும் ''காபிர் ஹர்பி'' -(போராடும் காபிர்-) பற் றி ய திரு மறை வச னங் களால் கட் ட மைக் கப் பட் டது. ''''முஸ்லிம் அல் லா த வரை விட்டு இயன் ற ளவு ஒதுங்கி வாழல்'''' என்ற சிந் த னை யை அது எம்மில் ஏற் ப டுத் தி விட் டது. அந் த வ கையில் வெளித் தோ ற்றம் முதல் எல் லா வற் றிலும் வேறு பட் ட வர் க ளாக இருக் கவே நாம் முய ல்கி றோம்.
2. ஒரு மூடுண்ட சமூக அமைப்பை இப் பின் ன ணி யில் நாம் கொண் டுள்ளோம். பள்ளி , குர்ஆன் மத் ர ஸா, அஹ திய் யா, மத் ரஸா, பைத்துஸ் ஸகாத், முஸ்லிம் பாட சாலை, போதாமைக்கு தனி அர சியல் கட்சி என்ற நிறு வ னங் களின் உள்ளே எம்மை மூடி மறைத்துக் கொண்டுள்ளோம். இப் பின் ன ணியில் ஒரு நிறு வனம், கூட்டம் என எங் கு போ னாலும் எம்மைத் தனி மைப் ப டுத் திக் கொள் வ தில் நாம் மிகக் கவ ன மாக உள் ளோம்.
3. சர் வ தேச முஸ்லிம் விவ கா ரங் களில் நாம் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத் து கிறோம். அவையே எமது உண் மை யான நாடு என்ற மனப் பிர மை யையும் ஏற் ப டுத் தி வி டு கி றோம்.
4. இஸ் லா மிய அரசு , கிலா பத், இஸ் லா மி ய ம யப் ப டுத்தல் என்ற பிர யோ கங் களை நாம் உரத்துச் சொல்லி வந் துள்ளோம். அதுவே எமது இலக்கு போன் ற தொரு மனப் பி ர மையை நாம் ஏற் ப டுத் தி யுள்ளோம்.
முதலில் நாம் கூறி யதுவே அடிப் ப டையில் எமது சிந் தனை அல் லது மன நிலைக்கட் ட மைப்பு. அதன் விளைவே ஏனை ய வையும் இன்னும் பல் வேறு எம் நடத் தை க ளும்.
பிரச் சி னை களை இவ் வாறு நாம் கவ ன மாகப் புரிந்து கொண்டால் தீர்வு பற்றி யோசித்தல் இல கு வா னது.
இங்கு இரு விட யங்கள் கவ னத்திற் கொள் ளப் பட வேண் டும்.
1. உட னடித் தீர் வுகள் காணப் பட வேண்டும். அதற்குப் பல் வேறு மட் டங் க ளி லான நட வ டிக் கைகள் எடுக் கப் பட வேண்டும். அத் தீர் வு களை பலரும் பல வி த மாகப் பேசி வரு கி றார்கள். இயங் கியும் வரு கி றார் கள்.
2. அடிப் படை நீண்ட காலத் தீர்வு பற் றியே நாம் ஆழ்ந்து ஆராய வேண்டும். அதுவே பிரச் சி னையை அடி யோடு ஓர ள வா வது தீர்ப் ப தாக அமை யும்.
இந்த இரண் டா வது பகு தியில் நாம் கூறவரு வ து என் ன வெ னில் ''குப்ர்'' முஸ்லிம் அல் லா தவர் பற் றிய எமது பாரம் ப ரிய சிந் தனைக் கட் ட மைப்பை மீள் ப ரி சீ லனை செய்து அதன் விளை வு க ளையும் மீள் ப ரி சீ லனை செய்ய வேண்டும் என்ப தை த் தான்.
நாம் இந்த நாட்டு நிலத்தில் மிகவும் ஐதாக வாழும் கடு மை யாகச் சிதறிப் போன ஒரு சமூகம். கிழக்கில் ஓர ளவு செறி வாக வாழ் ந் தாலும் அவர் க ளது பல் வே று தொடர் பு களை நோக் கும் போது அச் செறிவை முழுமை யா ன தொரு சாத க மான காரணி என்று கொள்வ தற் கில்லை. எனினும் கிழக்கு முஸ் லிம்கள் வித் தி யா ச மாக சிந் திக்க இட முள் ள து என் பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
சித றியும் ஐதா கவும் வாழும் எமது இச் சூழல் எம்மை எமது பாரம் ப ரிய வாழ் வ மைப்பை மீள் ப ரி சீ லனை செய்யத் தூண் டு கி ற து.
முஸ்லிம் சிறு பான்மை பற் றிய பின் ன ணி யி லி ருந்து இஸ் லா மிய மூலா தா ரங் களை நோக் கும் போதும் இந்த உண்மை தெளிவா கி ற து.
By அபூ நதா
0 comments:
Post a Comment