Banner 468 x 60px

 

Sunday, March 24, 2013

இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால்...!

0 comments


 (எச்.பைஸ் - அல் அஸ்ஹர் பல்கலைழக்கழகம்)
இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும்  ஒரு சூழ்  நிலையில் உள்ளனர். இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில் உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதேயே காரணம் காட்டி இலங்கை முஸ்லிம்களை முடக்க நினைப்பதை ஒரு போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இடமளிக்க கூடாது.
இன்னும்  குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் இலங்கை வாழ் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்து  இருக்கும் ஒரு ஒரு நிலையே உள்ளது. எனவே இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால் அது இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க முற்பட்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே  இல்லை என்று சொல்லும் அளவுக்கு விபரீதம் கடுமையாக இருக்கும்.
எனவே இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்படும் போது அதோடு சேர்த்து பின்வரும் விடயங்களும் தடை செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
1.       அந்த இயக்கம் சார்ந்த பள்ளிவாயல்கள் அனைத்தும் சீல் வைத்து மூடப்படும்.
2.       அந்த இயக்கம் சார்ந்த அரபு மதரசாக்கள் சீல் வைத்து மூடப்படும்.
3.       அந்த இயக்கம் சார்ந்த தொண்டு  நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு அவர்களின் சமூக சேவை செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
4.       அந்த இயக்கம் சார்ந்த மார்க்க அறிஜெர்கள் உளவுத்துறையினரால் நாளா பக்கமும் கண்காணிப்புக்கு உட்படுப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள்.
5.       அந்த இயக்கம் சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.
6.       அந்த இயக்கத்தின் இணையத்தளங்கள் ,ஈமெயில்கள் அனைத்து வித தொலை தொடர்புகள் போன்றை இடை நிறுத்தப்படும்.
7.       அந்த இயக்க மார்க்க அறிஜெர்களின் மார்க்க உரை , உபதேசங்கள் ,ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படும்.
8.       அந்த இயக்கத்தினரின் மக்கள் தொடர்பாடல்கள் உளவுத்துறையால் நுண்ணியமாக அவதானிக்கப்படும்.
9.       இந்த இயக்கத்தினர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஆர்ப்பாட்டங்கள் செய்வது , சமூக பிரச்சினைகள் பேசுவது இது போன்ற சமூக நல நிகழ்வுகள் இடை நிறுத்தப்படும்.
10.    அந்த இயக்கத்தின் போது உடைமைகள் பறிமுதல் செய்யப்படும்.
11.   அந்த இயக்க நிகழ்ச்சிகள் , மார்க்க உரைகள் சீடிகளாக , புத்தகங்களாக விற்பனை செய்வது தடை செய்யப்படும்.
இங்கே நான் குறிப்பிட்டது ஒரு சில விடயம் மாத்திரம் தான் இதையும் தாண்டிஇன்னும் சொல்வதாக இருந்தால்  அவர்களது வீட்டில் தடுத்து வைத்தல் , கைது நடவடிக்கை ,சிறை வாசம் ,ஏன் தூக்கு தண்டனை கூட நிறைவேற்றப்படலாம். இதல்லாம் ஒரு இயக்கத்தை தடை செய்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக  அரங்கேற்றப்படும்  .இப்படி நடவடிக்கை மேற்கொண்டால் இலங்கை முஸ்லிம்களின் மூன்றில் ஒரு பகுதி குரல் முடக்கப்படும். பின்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குறையும் என்பது அவர்களது நம்பிக்கை .ஏனென்றால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர் . அது மாத்திரமல்லாமல்   இவ்வாறு அரங்கேற்றும் போது நமது சமூகம்  இதை பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் தான் உள்ளது . அந்தளவுக்கு  விரோதம் நம் மக்கள் மத்தியில்  வளர்ந்து காணப்படுகின்றது.
அதேபோல  இன்று இருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள்  இலங்கையில் நடக்கும் எல்லா பிரச்சினைகளையும்  இது ஒரு இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தி எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற ஒரு நிலைக்கு வருவார்களாக இருந்தால் காலப்போக்கில் அது அனைத்து இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை . ஏனென்றால் இது ஒரு இயக்கத்தை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாக தெரியவில்லை மாறாக இலங்கை வாழ் முஸ்லிம்களை இல்லாமல் செய்ய எடுக்கும் ஆரம்ப நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது.
இலங்கை முஸ்லிம்களை நேரடியாக வெளியேற்றுவது சற்று பிரச்சினையான விடையம் என்பதால் ஒரு இயக்கத்தில் கையை வைத்து தமது நடவடிக்கையை மேற்கொள்வது அவர்களுக்கு சுலபமாக இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கும் வகையில் தான் இன்று நமது முஸ்லிம்களின் நிலையும் உள்ளது  . அந்தளவுக்கு இயக்கத்தால் பிரிந்த நாம் விரோதத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம் . இந்த நிலை  இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே இல்லாமல் செய்ய துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கு உதாராணமாக ஒரு கதையை கூட சொல்ல முடியும். அதாவது ஒரு காட்டில் வாழும் மூன்று பசுக்களும் ஒரு சிங்கம் பற்றிய கதைதான் அது. அந்த காட்டில் வாழ்ந்த மூன்று பசுக்களும் ஒன்றாக இணைந்து தமது அனைத்து நடவடிக்கைகளையும் மேட்கொண்டதால் அந்த சிங்கத்தால் இந்த பசுக்களை வேட்டையாட முடியவில்லை. ஆதலால் அது ஒரு திட்டம் தீட்டி இந்த பசுக்களை பிரிக்க முனைகிறது .  அதற்கு அந்த சிங்கம் கையில் எடுத்த ஆயுதம் அந்த பசுக்களின் நிறத்தை ஆகும். அந்த மூன்று பசுக்களுக்கும் மத்தியில் நிற பேத வேற்றுமையை உண்டு பண்ணி அவைகளை பிரித்து விடுகிறது.
இப்போது அந்த மூன்று பசுக்களும் பிரித்து விட்டன . இந்த தருனத்தில் தனது திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி தனது வேட்டையை ஆரம்பிக்கின்றது. 
முதலில் ஒரு பசுவை வேட்டையாடியதும் மற்ற இரு பசுக்களும் சந்தோசமடைகின்றன. தங்கள் எதிரி அழிந்து விட்டான் என்று. ஆனால் இது தங்கள் அழிவின் ஆரம்பம் என்பதை தங்களுக்குள் இருந்த விரோதம் மறைத்து விட்டன . இறுதியில் மூன்று பசுக்களும் வேட்டையாடப்படுகின்றன .சிங்கம் தனது திட்டத்தில் பூரண வெற்றியடைந்து சந்தோச பூரிப்பில் வாழ்ந்து வந்தது.
இதே பாணிதான் இன்று இலங்கையிலும் அரங்கேற்றப்படப்போகின்றன. இதை நாம் அறியாமல் அரை தூக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். இந்த தூக்கத்தில் இருந்து விழித்து இந்த சூழ்ச்சி வலையில் நாம்  மாட்டிக்கொள்ளாமல் தங்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இலங்கை முஸ்லிமுக்கும் இருக்கிறது. அதற்கு இயக்கம் ஒரு தடையாக இருக்க கூடாது .ஒரு இயக்கத்தின் மீதுள்ள விரோதம் நம் இருப்பை இல்லாமல் செய்ய உதவியாக இருக்க கூடாது . இயக்கத்தால் வேறுபட்ட நாம் இருப்பை தக்க வைக்க ஒன்றிணைய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் இறைவன் துணைபுரிவான் .

0 comments:

Post a Comment