இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை நெறியை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். கட்டுக்கோப்பு என்பது மார்க்க அடிப்படையிலானது என்றும் தலைமைத்துவ அடிப்டையிலானது என்றும் இருவகையில் பிரிக்கலாம். ஷரீஆ அடிப்டையிலான கட்டுக்கோப்புக்குள்ளேயே இஸ்லாமிய அடிப்படையிலான தலைமைத்துவக் கட்டுக்கோப்பும் உள்வாங்கப்படுகிறது என்பது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாகும்.இவைகளுக்கு மத்தியில் அண்மைகாலமாக ஒரு தேசிய ஷூறா அமைப்பின் தேவை பற்றியும் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்தில் பேசப்பட்டு வருவதையும், அதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது பரிசீலனைக்கு எடுத்தக் கொண்டதும் மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். துறை சார்ந்தோரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அ.இ.ஜ.உ எடுத்துக் கொள்வதில்லை என்ற தொடரான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இது ஒரு சிறந்த முடிவாகும் என பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை சுமந்து செயற்படுகிறது என்பதே வெளிப்படையான உண்மையாகும். முஸ்லிம்களின் மார்க்கக் கிரியைகளுக்கு மாத்திரம் வழிகாட்டுதலோடு மாத்திரம் நின்று விடாமல், சமூகப் பிரச்சினைகள் மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அனர்தத்தங்களின் போது உதவுதல் போன்ற இன்னும் பல பணிகளை இது இந்நாட்டு மக்களுக்காக புரிந்து வருகிறது.
சென்ற 02.03.2013 அன்று ஹோட்டல் ரன்முத்துவில் நடைபெற்ற அ.இ.ஜ.உ மற்றும் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு நல்லதொரு முடிவை முன் வைக்கும் என நம்புகிறோம். இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் மிகத் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
தலைவர் அல்லது தலைமைத்துவப் பண்புகள்:
தலைமைத்துவத்தை கொண்டிருக்கும் மனிதரிடத்தில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அடிப்படை நான்கு பண்புகள் கட்டாயமானதாகும்.- இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கம்.
- இக்லாஸ் எனும் மனத்தூய்மை.
- முன்மாதிரி மிக்க வாழ்க்கை.
- இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான அர்ப்பணிப்பு.
சமூக அங்கீகாரமும், அடிபணியும் மக்களும் தேவை:
இந்தக் கூட்டு தலைமைத்துவம் எனும் போது பொது மக்களுக்கு மந்தமாகவே தென்படுகிறது. இதுவொரு அசாத்தியமற்ற செயற்பாடாகவும், பொருத்தமற்ற காரியமாகவும் மக்கள் பார்க்கின்றனர். ஏனெனில் பொது மக்கள் உலமாக்களுக்குக் கட்டுப்பட்டு பழக்கப்பட்ட சமூகம். ஒரு நாள் உலமாக்களை குறை கூறினாலும் மறுநாளே உலமாக்களுக்கே கட்டுப்படுவோம் என வாதிடுபவர்கள் எமது சமூகம். ஆகவே ஒரு தலைமைக்கு சமூக அங்கீகாரம் தேவை என்பது மிக முக்கியமானது.
இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம். தமது ஒரு சொல்லை சொல்லுவதற்கு நபித் தோழர் அபூஹ{ரைரா (றழி) அவர்களை மக்கள் மத்தியில் அனுப்பும் போது தமது காலணியையும்; கொடுத்த அனுப்பினார். ஆதாரத்திற்காகவும் அவர் சொல்லும் சொல்லுக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்க வெண்டும் என்பதற்காகவேமே நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள். சிலர் “நாம் கூடி ஒரு தலைவரை நிமித்து விட்டால் மக்கள் எல்லோரும் கட்டுப்படுவார்கள்” என நினைக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இது வெறும் பலனற்ற முயற்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மட்டுமின்றி மக்கள் மத்தியிலே பல தேவையில்லாத பிரிவினைகளையும் உருவாக வாய்பில்லை என சொல்லவும் முடியாது.
தேசிய சூறா அமைப்பின் முறையும், நோக்கமும்:
அப்படியானால் உலமாக்கள் தானா எல்லாவற்றையும் செய்ய வேண்டும்? என்ற ஒரு கேள்வி இங்கு உருவாகிறது. அப்படியும் அல்ல. ஆனால் ஜம்இய்யாவை தலைமையிலிருந்து இல்லமலாக்கவும் முடியாது. அல்லது துறைசார்ந்தோரை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைத்துக் கொள்ளலாமே என்றால் அதுவும் முடியாத காரியமாகும். ஏனெனில் அ.இ.ஜ.உ சபையானது ஒரு கட்டமைப்பின் கீழும், ஒரு சட்ட யாப்பின் அடிப்படையிலும் ஒரு சாராரை அங்கத்தினராகக் கொண்டு இயங்குகின்ற ஒரு அமைப்பாகும்.
இதனடிப்படையில் அமைக்கப்படுகின்ற “தேசிய அமைப்பு” அல்லது “தேசிய ஷ{றா கவுன்சில்” தனிமையான ஒரு சுதந்திர அமைப்பாக அமையப் பெற வேண்டும். அதற்கு ஒரு தனிமையான சட்ட யாப்பு இருக்கும். அது அவ்வப்போது தேவைப்படுகின்ற விவகாரங்களை ஆலோசனை செய்யும். சமூக விடயங்களோ அல்லது சமூகமயமாக்கப்பட்ட மார்க்க விவகாரங்களோ பற்றி இது ஆராயும்.
கவுன்சிலுக்கான அங்கத்துவம் கீழ்வருமாறு தெரிவு செய்யப்படும்:
- தப்லீக் ஜமாத்
- ஜமாஅத்தே இஸ்லாமி
- தவ்ஹீத் ஜமாத்
- தரீக்காக்களின் சம்மேளனம்
- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் -
- முஸ்லிம் சட்டத்தரணிகள் அமைப்பு
- முஸ்லிம் ஊடக அமைப்புக்கள்
- இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள்
- மற்றும் துறைசார்ந்த நிபுனர்கள்
ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், கவுன்சிலுக்குமான உறவு:
இவ்விரண்டும் சமூகத்தின் இரு கண்களைப் போலவே இயங்கும். எப்பொழுதும் தமது முரண்பாடுகளையோ அல்லது கருத்து வேற்றுமைகளையோ சமூகத்திற்கு மத்தியில் கொண்டு வந்து விமர்சிக்காமல் தாமே கலந்துரையாடல்கள் மூலம் அவைகளை முடிவுக்கு கொண்டு வந்து சமூக நலனுக்கான காரியங்களை ஆற்ற வேண்டும். நேரடியாக மார்கத்துடன் தொடர்புபடாத எக்காரியத்தையும் இரு சாராரும் சேர்ந்தே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
தற்போதையள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலும், சில மும்மொழிவுகளும்:
உண்மையில் இது முஸ்லிம் சமூகத்திற்காக வேண்டி தொடராக ஜம்இய்யாவுடன் இணைந்தும், தனிமையாகவும் செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றால் மிகையாகாது. தம்மோடு சுமார் நூற்றுக்குட்பட்ட அமைப்பக்கள் சேர்ந்து செயற்பட உடன்பட்டாலும் தொடர்ந்தும் பாடுபடுவதற்கு இதன் தலைவர், செயலாளர் எற்பட ஒரு சிலரே இருக்கின்றனர். ஆனாலும் தாம் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சென்ற நாட்களில் இவர்களின் முயற்சி எடுத்துக் கூறத்தக்கது. பொதுப் பணிகளில் இவர்கள் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள் என்ற வகையிலும், அ.இ.ஜ.உ வுடன் பல விடங்யங்களில் கூட்டாக இருந்து செயற்பட்டவர்கள் என்ற வகையிலும் புதிய அமைப்புக்களை உருவாக்காமல் மேற்படி புதிய உறுப்பினர்களை இதனோடு இணைத்து செயற்படலாம். அல்லது சில நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க புதிதாகவே உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இவர்களும் இதனுள் உள்வாங்கப்படுவது தமது செயற்திட்டங்களை துரிதபடுத்த பெரிதும் உதவும் என எண்ணுகிறேன்.
“எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்”
T.Haidar Ali Al-Haleemi (J.P. All Island)
0 comments:
Post a Comment