
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வதை
இலங்கையில் உள்ள சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் எதிர்த்து வருகின்றன.
உண்மையில் சுன்னத் செய்வதின் முக்கியத்துவம் மற்றும் சுன்னத் செய்வதின்
மூலம் ஏற்படும் உடல் ஆரோக்கியம் போன்றவற்றை இவர்கள் விளங்கியிருந்தால் இது
போன்ற சிறப்பான சமுதாயத்திற்கு தேவையான காரியங்களை எக்காரணம் கொண்டும்
எதிர்க்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் சுன்னத் எடுக்கும் வழமை
இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்கள் இறைவன் மூலம்
தனக்கு வழங்கப் பெற்ற தூதுத் துவத்தை எத்தி வைப்பதற்கு முன்பாகவே அக்கால
யூதர்கள் சுன்னத் செய்து தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீக்கிக்
கொள்ளும் வழமையை கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றின் ஒளியில் நாம் இன்றும்
காணக்கிடைக்கின்றது.
சுன்னத் (விருத்த சேதனம்) செய்வது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்
முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன்
பகுதியை வெட்டி அகற்றிக் கொள்வதினால் மனிதர்களுக்கு ஏற்படும் பல கொடிய
நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றார்கள். காரணம் ஒருவர்
சிறுநீர் கழித்தால் அவருடைய ஆணுறுப்பில் இருந்து அந்த சிறுநீர் அனைத்தும்
வெளியாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் தங்கி நிற்கும் சிறுநீரால் பல நோய்த்
தொற்றுகள் ஏற்படும்.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறை மூலமாக
தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை அகற்றி விடுவதினால் சிறுநீர் கழிக்கும் போது
சிறுநீர் எங்கும் தேங்கி நிற்காது முழுமையாக வெளியாகிவிடும். அதனால்
எவ்விதமான நோய்த் தொற்றுக்கும் அவர்கள் ஆளாகுவதில்லை.
ஆனால் சுன்னத் முறைப்படி ஆணுறுப்பின் முன் தோலை நீக்காதவர்கள் சிறுநீர் கழித்த பின்னர் அணுறுப்பின் முன் தோலில் சிறுநீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் அந்த இடத்தில் இயற்கையாகவே நோய்க் கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களுக்கும் அவர்களை ஆளாக்கிவிடுகின்றது. இது இன்றைய நவீன விஞ்ஞானத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.
ஆனால் சுன்னத் முறைப்படி ஆணுறுப்பின் முன் தோலை நீக்காதவர்கள் சிறுநீர் கழித்த பின்னர் அணுறுப்பின் முன் தோலில் சிறுநீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் அந்த இடத்தில் இயற்கையாகவே நோய்க் கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களுக்கும் அவர்களை ஆளாக்கிவிடுகின்றது. இது இன்றைய நவீன விஞ்ஞானத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.
உடலுறவை இன்பகரமாக மாற்றும் சுன்னத் முறைமை
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறைப்படி தங்கள்
ஆணுறுப்பின் முன் தோலை நீக்கிக் கொள்வது திருமண பந்தத்தின் பின் தனது
மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றது.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் முறைப்படி தங்கள்
ஆணுறுப்பின் முன் தோலை நீக்குவதினால் ஆணுறுப்பின் கூச்சத் தன்மை
நீக்கப்பட்டு சகஜ நிலைக்கு மாறிவிடுகின்றார்கள். இது தனது மணைவியுடன்
உடலுறவில் ஈடுபடும் போது எவ்விதமான கூச்சத் தன்மைக்கும் வழி செய்யாமல்
இன்பமாக இல்லறத்தில் ஈடுபடும் சந்தர்பத்தை இது வழங்குகின்றது.
ஆணுறுப்பின் முன் தோலை அகற்றாமல்
இருக்கும் போது ஆணுறுப்பில் இயற்கையாக இருக்கும் கூச்சத் தன்மை அப்படியே
தங்கி நிற்கும். உடலுறவில் ஈடுபடும் போது இந்தக் கூச்சத் தன்மையின்
அதிகரிப்பினால் அவசரமாக ஆண்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை அடைந்து
விடுவார்கள். இதன் மூலம் பெண்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய போதிய
இன்பம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதுடன் சில நேரம் அவர்களை வேறு ஒரு ஆணைத்
தேடிச் செல்லும் விபச்சார நிலைக்கும் இது தள்ளி விடுகின்றது.
இவற்றை தடுத்து கவுரவமான, இன்பகரமான
வாழ்வுக்கு வழிசெய்யும் இஸ்லாத்தின் கட்டளையை நாம் ஏற்று இதனை
செயல்படுத்தும் போது இதன் தத்துவத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
பௌத்த மத குருமார் சுன்னத்தை எதிர்ப்பது ஏன்?
இலங்கையில் உள்ள சில பௌத்த கடும் போக்கு
இயக்கங்கள் முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கிக்
கொள்ளும் சுன்னத் முறைமை தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்து வருகின்றார்கள். உண்மையில் சுன்னத் செய்வதின் உள்ளார்ந்த இன்பமும்,
உடல் ஆரோக்கியமும் இவர்களுக்க வார்த்தையில் நாம் சொல்வதினால் விளங்காமல்
இருப்பதில் ஒரு சிரிய நியாயமும் இருக்கின்றது. காரணம் திருமணம் செய்து
மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்குத் தான் சுன்னத் செய்வதின் இன்பம்
தெரியவரும்.
திருமணமே தேவையில்லை என்று துரவரம்
மேற்கொள்பவர்கள் சுன்னத் செய்வதின் இன்பத்தை எப்படி அறிந்து கொள்ள
முடியும்? அதன் இன்பதும், உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியமும் இவர்களுக்கு
தெரியாத அல்லது விளங்காத காரணத்தினால் தான் அல்லது தெரிந்து கொண்டே
வீம்புக்காக மறுக்க வேண்டும் என்ற குரோத எண்ணம் கொண்டதினால் தான் சுன்னத்
முறைமையை மறுக்கின்றார்கள் என்பது வெள்ளிடை மலை.
சிறுநீரகப்பை பாதிப்பை தடுக்கும் சுன்னத் முறைமை
டாக்டர் டோனால்டு இதைப் பற்றி மேலும்
குறிப்பிடும் போது சுன்னத் செய்து கொள்வதன் மூலம் உடல் நலத்தை அதிக அளவில்
பாதுகாத்துக் கொள்ள முடியும். சுன்னத் செய்து கொண்டவர்களின் சிறு நீரகப்பை
,கிட்னி பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்படும் அளவை விட, சுன்னத் செய்து
கொள்ளாதவர்களின் சிறு நீரகப்பை , கிட்டி 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படும்.
எயிட்ஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு சுன்னத் முறையே
பிராஸ் நியூஸ் ஏஜென்ஸ் பத்திரிகையில் அகில
உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான கனடாவைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்
பிளம்மர் ஆண்கள் சுன்னத் செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால்
எய்ட்ஸ் நோயினை அதிக அளவில் தடுக்கலாம் என்று குறிப்பிடுகின்றார்.
அதே போல் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த
டாக்டர் பீட்டர் பையோர் அவர்கள் எயிட்ஸ் நோயின் பரவுதல் தொடர்பாக
குறிப்பிடும் போது எச்.ஐ.வி. ஆண்களுக்கு பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன்
தோல் பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி
பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான காரணியாக திகழ்கிறது என்பதனை
கண்டு பிடித்ததாக கூறுகின்றார்.
முஸ்லிம் ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன்
தோலை நீக்குவதின் மூலம் செய்யப்படும் சுன்னத் முறைமை பற்றி டாக்டர்
டோனால்டு குறிப்பிடும் போது எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் மியூகடகஸ்
மெம்ப்ரெய்ன் என்ற தோலின் மேற்பகுதி மூலமாக உடலுக்குள் செல்கின்றது.
சுன்னத் முறை மூலம் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்யாவிட்டால்
முன்தோலின் வெதுவெதுப்பும் , ஈரத்தன்மையும் வைரஸை பெருகச் செய்து.
உடலுக்குள் செல்லும் வழியைத் தேடிக் கொள்ளும் வரை அந்த இடத்தில்
பாதுகாப்படுகிறது.
சுன்னத் செய்வது எயிட்ஸ் நோயைத் தடுக்கும்.
சுன்னத் செய்வது எயிட்ஸ் நோயைத் தடுக்கும்.
22.07.2007 அன்று BBC வெளியிட்ட செய்தி
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான
மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில்
நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த
சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற
கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள்
பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும்
முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால்
முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற
விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.
தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம்
பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில்
கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது. இவ்வாறு
கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது
செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.
இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா?
அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா?
என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத்
தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று
கூறுகின்றது. கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக
இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம்தான்.
சுன்னத் செய்வது பற்றி BBC உலக சேவை கடந்த 18.08.2011 வெளியிட்டுள்ள தகவல்
உலகெங்கும் மூன்று கோடியே முப்பது
லட்சத்துக்கும் அதிகமானோர் H.I.V யினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸை
குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை
தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள்
நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு
பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க
முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட
சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே
விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேயிலும் அந்நாட்டு அரசாங்கம்
இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள்
பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின்
அரசாங்கம் நம்புகிறது. (B.B.C)
விருத்த சேதனம் பற்றி அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஆய்வு
ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும்
பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை
மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல்
குறிப்பிடுகிறார்.
சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும்
உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன.
ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே
தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு
விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின்
தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக்
குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
சுன்னத் முறை குறைந்ததினால் அமெரிக்காவில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிப்பு
ஆண்கள் சுன்னத் செய்வது பற்றி அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்
கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரான் தோபியான் தலைமையில் செய்யப்பட்ட
ஆய்வில் அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டு 79 சதவீதமாக இருந்த சுன்னத்
செய்வர்களின் எண்ணிக்கை தற்போது 55 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால்
எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககையும், ஆண்குறி புற்று
நோயளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகாரித்துள்ளது. சுன்னத்
செய்யாததினால்; ஏற்படும் பாதிப்புக்களினால் அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு
4 மில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் அமெரிக்காவிற்கு நஷ்டம்
ஏற்படுகின்றது.
இலங்கையை ஆரோக்கிய நாடாக மாற்றுவோம்
இலங்கையில் இதுவரை 250 பேர் எயிட்ஸ்
நோயினால் இறந்தும் 3000 பேர் பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் மற்றும்
1463 பேர் ஒரினச் சேர்க்கையாளர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு
இருக்கின்றார்கள், இதில் 15 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்தான்
அதிகமானவர்கள் ஆகும். இதில் மேல் மாகணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக
காணப்படுகின்றார்கள் எனவும் இலங்கையின் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின்
பணிப்பாளர் டாக்டர் எதிரிசிங்க குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் எயிட்ஸ் நோய் மேலும் பரவாமல்
தடுக்க வேண்டும் என்றால் இலங்கையில் வாழும் அனைத்து ஆண்களும் சுன்னத் செய்ய
வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கமே வலியுறுத்த வேண்டும். இல்லாமல் பௌத்த மத
குருமார்கள் சொல்வதைப் போல முஸ்லிம் ஆண்கள் மேற்கொள்ளும் சுன்னத் முறைமையை
தடை செய்வதைப் பற்றி சிந்தித்தால் இலங்கை எயிட்ஸ் நோயின் பாதிப்பால்
இன்னுமொரு அமெரிக்காவாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
(ரஸ்மின் MISC)
0 comments:
Post a Comment