Banner 468 x 60px

 

Thursday, May 2, 2013

உங்கள் குழந்தைகள் நாளைய தலைவர்கள் (Child Phsycology) (Sheik Naleem)

0 comments
0-2 வயதில் உள-சமூக தேவைகள்

                ஒரு குழந்தை பிறந்த பின்னர் தாய்ப் பாலூட்டல், உரிய போஷாக்குமிக்க உணவை வழங்குதல்,ஓய்வு கொடுத்தல், பாதுகாப்பளித்தல் போன்றன பற்றி தாய் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறே ஓர் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் விருத்திக் கட்டங்களை சரியாகப் புரிந்து அதற்கேற்ப பொருத்தமான செயற்பாடுகளை, பயிற்சிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சி என்பதை உடல் தேவைகளை நிறை வேற்றிக் கொடுப்பதாகும் என தவறாக விளங்கி வைத்துள்ளனர். பிள்ளையின் உடலியல் வளர்ச்சி, அதற்கு தேவையான போஷாக்கு, உடற்பயிற்சி என்பன முக்கியமானதாகும். அதனை விட முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பகுதி குழந்தையின் உள-சமூக, மனவெழுச்சி வளர்ச்சிக் கட்டங்களாகும். பிள்ளையின் உள-சமூக மனவெழுச்சி வளர்ச்சிக் கட்டங்கள் சமனிலையாக விருத்தியுறும் போதே பிள்ளை சமநிலை மிக்க ஆளுமை (balanced personality) யாக வளர்ச்சியடையும். எனவே இந்தப் பகுதியை ஓரளவு நோக்குவோம்.


                பிறப்பு முதல் இரண்டு வயது வரையுள்ள பருவத்தில் உள-சமூக மனவெழுச்சித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெற்றோர் முயல வேண்டும். அத் தேவைகள் அனைத்தையும் இரு வடிவங்களில் நிறைவேற்றலாம்.

01. தூண்டல் பற்றிய தேவை
02. உறவு பற்றிய தேவை

                அனைத்துக் குழந்தைகளும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரினதும் நடத்தைக் கோலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும். எனினும் எல்லாக் குழந்தைகளுக்குமான ஓர் பொதுவான வளர்ச்சி முறையொன்று உள்ளது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொது விருத்திக் கட்டங்களை சரியாகப் பெற்றோர் புரிந்து கொண்டால் அதற்கேற்ற தூண்டலை வழங்கி தொடர்புகளை கட்டியெழுப்ப முடியும். எனவே ஆரம்பப் பருவத்திலுள்ள (0-2) குழந்தையின் உள-சமூக விருத்திக் கட்டங்களை கீழ்வருமாறு விளக்குகின்றனர்.

       உள-சமூக விருத்தி
கருத்துப் பரிமாற்றமும் மொழியும்

பிறப்பின் போது - பசித்தால் அழும்
3மாதத்தில் - சுகமாக இருக்கும் போது மகிழ்ச்சியான சத்தத்தை  வெளிப்படுத்தும்
5மாதத்தில் - சிறு ஒலியை எழுப்பும் (ஙாஙா)
9மாதத்தில் - பல்வறு விடயங்களுக்கு வித்தியாசமான சத்தங்களை வெளிப் படுத்தும்.
1வருடத்தில் - எளிய தனிச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கும் (அம்மா)
18 மாதத்தில் - சில சொற்களை சேர்த்துச் சொல்லும்.

சமூக நடத்தைகள்

2மாதத்தில் - சிரிக்கும் போது அதுவும் சிரிக்கும்
9மாதத்தில்; - 'இல்லை' என்பதைப் புரிந்து மறுமொழி தெரிவிக்கும்
1வருடத்தில் - வேண்டும் போது எளிய செயல்களை செய்யும்.
2வருடத்தில் - சிறிதொரு செயலைச் செய்து, அதற்கு பாராட்டுதல் கிடைத்தால் மகிழ்ச்சியடையும்

தற்பாதுகாப்பு

பிறப்பின் போது - தாய்ப்பாலை உறிஞ்சிக் குடித்தல்
3மாதத்தில் - எல்லாவற்றையும் வாயில் போடுதல்
7மாதத்தில் - கடின உணவுகளை விழுங்கும்
10மாதத்தில் - சுயமாக சாப்பிடத் தொடங்கும்
12மாதத்தில் - கோப்பையைப் பிடித்து சுயமாக பருகத் தொடங்கும்
2வருடத்தில் - ஆடைகளை அணியும்

அவதானமும் உற்சாகமும்

2மாதத்தில் - சிரித்தால் சிரிக்கும்
4மாதத்தில் - விளையாட்டுப் பொருட்கள், பல் வேறு சத்தங்களில் மீது அவதானம்   செலுத்துதல்
8 மாதத்தில் - தனது பொறுப்பாளர்களோடு
நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்        கொள்ளல் (தாய்,ஆச்சி)
1வருடத்தில் - விளையாட்டில் நீண்ட நேரம் கவனம் செலுத்தல்
18 மாதத்தில் -  பல்வேறு பொருட்களை பிரித்து அறிந்து கொள்ளும்.

விளையாடுதல்

1மாதத்தில் - கையில் ஒன்றைக் கொடுத்தால் பற்றிக் கொள்ளும்.
3மாதத்தில் - தனது உடலோடு விளையாடும். (ஆடையை வாயில் போடல்,          விரல்களுடன் விளையாடல்)
5 மாதத்தில் - சிறிய பொருட்களோடு விளையாடும்.
9 மாதத்தில் - 'ஒழிந்து விளையாடல்'          விளையாட்டுக்களை செய்யும்.
1 வருடத்தில் - அடுத்தவரைப் பின்பற்றும்.
2 வருடத்தில் - அடுத்த பிள்ளைகளோடு விளையாடத் தொடங்கும்.

அறிவும் கற்றலும்

பிறப்பின்போது - பசி அல்லது அசௌகரியமான நிலையின் போது அழல்.
3 மாதத்தில் - தாயை இனங்காணல்.
5 மாதத்தில் - பலரை இனங்காணல்.
9 மாதத்தில் - தன்னிடமிருந்து காணாமற் போன விளையாட்டுப் பொருட்களைத் தேடல்.
1 வருடத்தில் - எளிய செயற்பாடுகளைப் பின்பற்றல்.
2 வருடத்தில் - பொருட்களை நோக்கி விரல் நீட்டல்.

                தூண்டல் பற்றிய தேவை

மேற்சொன்ன உள,சமூக விருத்திக் கட்டங்களை பெற்றோர் மிகச் சரியாக  விளங்கி அதற்கேற்ற தூண்டல்களை உரிய வேளையில் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். வயது விருத்திக்கேற்ற விருத்தியை பிள்ளை வெளிப்படுத்தாவிடின் அல்லது தாமதமாக வெளிப்படுத்தினால் பொருத்தமான தூண்டல்களைக் கொடுத்து அதனை சீர்செய்ய வேண்டுடியுள்ளது. உதாரணமாக குழந்தை வயதுக்கேற்ற சொற்களை, வாக்கியங்களை வெளிப்படுத்த வில்லையாயின் அல்லது தாமதமாக வெளிப்படுத்துவதாயின, குழந்தையோடு அடிக்கடி கதையுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இதனால் குழந்தை தூண்டப்படுகிறது. இவ்வாறு குழந்தையின் உள,சமூக விருத்தியானது பெற்றோரின் தூண்டலில்தான் தங்கியுள்ளது. தூண்டல் என்பது குழந்தையின் தேவையாகும். அது பூரணப்படுத்தப்படும் போதே சமநிலை கொண்ட ஆளுமையாக வளர்கிறது.

பிள்ளை எதிர்காலத்தில் விவேகமும், அறிவும், பண்பாடும் கொண்டதாக வளர்வ தற்கான அத்திவாரம் ஆரம்பப் பருவத்திலேயே இடப்படவேண்டும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே, உள வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் உள வளர்ச்சிக்குத் தேவையான பிரதான உணவு மூன்று வகைப்படும்.

       (i) மொழி  (கதைத்தல்)
       (ii) விளையாடல்
       (iii)அன்பு காட்டல்

இம் மூன்று வகையான உளத் தேவைகளையும் கீழ்வருமாறு குழந்தையிடம் தூண்டலாம்.
  • பிறந்ததிலிருந்து குழந்தையோடு கதைத்தல், கொஞ்சி விளையாடல்

  • முகத்தைப் பார்த்து சிரித்தல்


  • குழந்தை சொல்வதற்கு முயற்சிக்கின்ற விடயத்துக்கு செவிமடுத்தல்

  • அடுத்தவர்களோடு சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்பளித்தல். (ஸ்பரிசம்  செய்தல்,சிரித்தல், கதைத்தல்)


  • பிள்ளையிடம் அடிக்கடி கவனம் செலுத்தல்

  • (புறக்கணிக்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் பிடிப்பின்றி வளரும்)


  • குழந்தை ஒன்றைச் செய்வதன் மூலம் தான் கற்றுக் கொள்கிறது. அதனால் விளையாடுவதற்கும் ஆய்வு  செய்வதற்கும்  சுதந்திரமாக இடமளிக்க வேண்டும்.

  • குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தல் முத்தமிடல்,கட்டி அணைத்தல்,ஸ்பரிசம்

0 comments:

Post a Comment