
இந்த புர்கா, நிகாப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை நெத் எப்.எம் இன் அன்லிமிடட் நிகழ்ச்சியின் ஊடாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மக்களுக்கு தெளிவு படுத்தி விட்டது. இந்த முயற்சி புர்கா பற்றி தெளிவு படுத்துவதற்கு அல்ல மாறாக இந்நாட்டில் மிகப்பிரசித்தமான மற்றும் அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக குரல் கொடுப்பதாக பகிரங்கமாக தம்மை தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற பெலும்கல நிகழ்ச்சி ஊடக பிரசித்திபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த அந்த இரு ஊடகவியலாளினாலும் புர்கா தொடர்பிலான மேற்படி நிகழ்ச்சியை நடத்துவதற்கு மேற்சொன்ன அவர்களின் வாதத்தினைப் பற்றி தெளிவு பெறுவதாகும்.
எவராவது ஒருவர் ஏதாவது ஒரு ஆடையை மோசமான முறையில் பயன்படுத்தினால் அதற்கான குற்றத்தினை சுமத்த வேண்டியது அந்த ஆடை மீதிலா? அல்லது அந்த ஆடையை மோசமான வழியில் பயன்படுத்திய குறித்த நபர் மீதிலா? உங்களது விமர்ன அறிவிற்கு அழைப்பு விடுத்தவனாக இலங்கை வரலாற்றில் கருப்பு அடையாளத்தினை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு பற்றியும் அனைத்து வித ஆடைகளும் எமது நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுருத்தலாக அமைகின்றது என்பது பற்றியும் குறித்துக் காண்பிக்க முனைகின்றேன்.
S.W.R.D.பண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தது காவி உடைக்குள் ஆயுதத்தை ஒழித்து வைத்திருந்த புத்த பிக்கு ஒருவரினால் அல்லவா?
சுமித்த ஹாமுதுரு அவர்கள் பல்வேறு குற்றச் செயல்களின் பங்குதாரியாகவே பாதுகாப்பு கெடுபிடிக்குள் அகப்பட்டார், அவர் அதுவரையும் தான் செய்த குற்றச் செயல்களை மறைத்து வந்தது தன்னுடைய காவி உடையினால் அல்லவா?
பெலும்கல நிகழ்ச்சியின் ஊடகாவே சுட்டிக்காட்டியது போன்று ருவன்வெல்ல சோபித ஹிமி தனது வியாபாரத்தினை வெற்றிகரமாக செய்துகொண்டுபோனது காவி உடையின் பின்னால் இருந்து அல்லவா?
இவை சில உதாரணங்கள் மாத்திரமே, என்றாலும் காவி உடை பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதாக எமக்கு வாதிட முடியுமா? பிக்கு ஒருவர் காவி உடையை பிழையாக பயன்படுத்தினார் என்பதற்காக அனைத்து பிக்குமார்களையும் இழிவாக கருத முடியுமா? காவி உடையை தடைசெய்வதற்காக சட்டங்களை இயற்றத்தான் முடியுமா? அது தொடர்பில் கருத்துக்கணிப்பொன்றை மேற்கொள்ள முடியுமா?
இன்னும் முன்சென்று நோக்கினால் கடந்த வாரம் கொள்ளையர்களினால் பொலிஸ் சீருடை அணிந்து கொண்டு கோடிக்கணக்கான பணம் கொள்ளையிடப்பட்டது. இவ்வாரான சம்பவங்கள் இலங்கையில் சாதாரணமான விடயம், அவ்வாராயின் பெலும்கல நிகழ்ச்சியின் பிரகாரம் பொலிஸ் சீருடை இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலா?
இராணுவத்தினரின் சீருடையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள், கொள்ளைச் சம்பவங்கள் ஏராளம். எனவே இராணு சீருடை பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதனால் அதனை தடைசெய்வோமா? நெத் எப்.எம்.
தொழிலதிபர்கள் என்பதாக கூறிக்ககொண்டு கோட் சூட் போட்டுக்கொண்ட பலர் அந்த உடையின் பின்னாலிருந்து கொண்டு மேற்கொள்கின்ற குற்றச் செயல்கள், லஞ்சம், ஊழல் என்பவற்றை தடைசெய்வதற்கு நெத் எப்.எம் இன் படி கோட் சூட்களை தடைசெய்ய வேண்டுமா?
உள்ளாடை, கஞ்சா அபின் போன்ற போதைப்பபொருள்கள் மாத்திரமல்லாது நிறுவணங்களில் இருந்து பொருட்கள், உடைகள் போன்றவற்றை திருடிக் கெண்டு செல்வதற்கு பயன்படுத்தும் விசேடமான வழிமுறை. மிகவும் சொற்பமானவர்கள் உள்ளாடைகளை மோசமான வழிகளுக்கு பயன்படுத்துவதனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதனால், நாளைய தினத்தில் நெத் எப்.எம் பெலும்கல நிகழச்சி ஒன்றை நடத்தத் தயாரா? அந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களுக்கும் உள்ளாடை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டுகோள்விடுத்தும், அத்துடன் அதுதொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டால் சிறப்பாயிருக்கும்.
மேற்சொன்ன கருத்துக்கள் ஊடான குற்றவாளிளை நீதியின் முன் நிறுத்துவதை விடுத்து அக்குற்றச் செயலை செய்ய பயன்படுத்திய ஆடையை நீதியின் முன் கொண்டுவருவது என்பது எவ்வளவு தூரம் மடத்தனமானதும் எந்தவித அடிப்படைகளுமற்றதுமன வாதம் என்பது தெளிவாகியிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
மேலும் நெத் எப்.எம் பெலும்கல குழுவினருக்கு ஒரு ஆலோசனையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை அமைத்துக் கொள்கின்றேன். அதாவது இந் நாட்டின் பாதுகாப்புக்கும், இறைமைக்கும் எந்தவிதத்திலும் அச்சுருத்தலாக அமையாத ஆடை ஒன்று காணப்படுவதுடன், அந்த ஆடையினை நெத் எப்.எம். பெலும்கல ஊடாக மக்களுக்கு அறியப்படுத்துவதுடன் நின்றுவிடாது அதனை சட்டமுறையாக்குவதில் முன்னின்று நெத் எப்.எம் தன் புகழை பல்திசைகளிலும் பரவச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆம்! பிறக்கும் போது அணிந்து வந்த ஆடையை எமது நாட்டுமக்களுக்கு அறிமுகப்படுத்துவோம்!
0 comments:
Post a Comment