
அவன் உன்னுக்கு உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் சிறப்புக்குரியதே
அவனுக்கு அந்த சிறப்புக்குரிய சந்தர்ப்பம் தேவையில்லை.
அவனைக் காதலி!..... அவன் மஸ்ஜிதிலிருந்து நேரம் தாழ்த்தி வந்ததற்காக ..
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடன் சுவனத்திக்கு நேரகாலத்துடன் சொன்றுவிடுவதுதான்.
அவனைக் காதலி!... அவன் உனக்கு ஹிஜாபைக் கொண்டு எச்சரித்தற்காக...
அவனுக்கு வேண்டியதெல்லாம் நீ வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் அல்லாஹ்வின் அருள் உன்னை போர்த்திக் கொள்ளவேண்டுமென்பதே.
அவனைக் காதலி!..... அவன் பொறாமைப்படுவதற்காக ..
அனைத்துப் பெண்களிலிருந்தும் அவனுக்குத் தெரிவு இருந்தும், அவன் உன்னையே தனது மனைவியாக்கிக் கொண்டான்.
அவனைக் காதலி!..... அவன் வேளையை விட்டு தாமதித்து வருவதற்காக ..
குறைந்தது அவன் வீட்டுக்கு வருகிறான். நீ, அவனது அன்பான, ஆதரிக்கும் அவன்
தோளில் துயின்றெழவேண்டுமென்று.
அவனைக் காதலி!... உண்னைக் கோபிக்கச் செய்யும் அவனது சில அந்நியமான பழக்கங்களுக்காக..
உன்னிடம் கூட அவை இருக்கவே செய்கின்றன. சிலபோது அவற்றைவிட அதிகமாகவே.
அவனைக் காதலி!... அவன் உனது சமையலை பாராட்டாததற்காக ..
உன்னை மணந்த ஆரம்பத்திலே அவன் கூறிவிட்டான்; உன்னுடயதுதான் எப்போதும் சிறந்ததென்று.
அவனைக் காதலி!... அவன் ஒழுங்கற்றிருப்பதற்காக ..
அவன் தன்னை அலங்கரிப்பதை விட குடும்பத்துக்காக அதிகம் பிரயத்தனிப்பதில் சோலித்துவிடுகிறான்.
உண்மையில் அவன் மென்மையானவன்.
அவனைக் காதலி!... அவன் வீட்டில் உனக்கு உதாவுவதற்கு ..
அவன் குடும்பத்திற்காக வெளியில் ஹலாலாக உழைக்கிறான்.
அவனைக் காதலி!..... அவன் உனக்கு பதிலளிக்காததற்காக ..
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னை நோகடிக்காதிருப்பதே அல்லது
உனது நலன் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டிருப்பான்.
அவனைக் காதலி!... அவன் அழகாக இருப்பதற்காக ..
அவன் நீ பாரட்டப்படுவதற்குரிய உன்னவன்.
அவனைக் காதலி!..... அவன் அல்லாஹ்விற்காக வீட்டை விட்டு வெயியேறும் போது ..
அவன் உனக்காக இன்பங்கள் நிறைந்த ஒரு நிலையான வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறான்.
அவனைக் காதலி!..... நீ கோபித்திருக்கையில் எந்தக் கருத்தும் சொல்லாமலிருந்ததற்காக ..
உண்மையில் அவன் ஒரு நல்ல செவிமடுப்பாளன்.
அவனைக் காதலி!... அவன் நீ விரும்பாத ஒன்றைப் பரிசளித்தமைக்காக ..
புன்னகையுடன் கூறிவிடு நீ இதைத் தான் நாடினாயென்று
உண்மையில் அவன் உனக்காகவே தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டான்.
அவனைக் காதலி!... அவன் ஒரு கெட்ட பழக்கத்தை வளர்த்துக் கொண்டதற்காக ..
உனக்காக அவனிடம் நிறையவே இருக்கிறது. சாதுரியமாக, உன் பன்பால் அவனை மாற்றிக் கொள்ள அவனுக்குத் தவணை கொடு.
அவனைக் காதலி!... அவன் குழப்பத்துடன் மனமிழந்திருக்கும் போது ..
அவனுக்காக சாக்லட் வாங்கிக் கொடு; அவனது தலையையும் கால்களையும் அமத்தி விடு; அவன் ஆறுதற் பட அவனுடன் பேசு; உனதடிமையாகவே ஆகிவிடுவான்.
அவனைக் காதலி!... நீங்கள் செய்யும் எதுவுமே அவனை ஆஸ்வாசப்படுத்தாத போது ..
அது ஒரு புயல் போன்றதே, அது நடக்கும்; விரைவிலே சென்றுவிடும்.
அவனைக் காதலி!... அவன் வேகமாக வாகனம் செலுத்துவதற்காக ..
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னிடம் விரைவாகவே வந்துவிடுவதுதான்
அவனைக் காதலி!... அவன் ஒய்வெடுப்பதை நீட்டிக் கொண்டதற்காக ..
அவன் உனக்கு சிறந்த சேவை செய்வதற்காகவே தனக்கு வலுவேற்றுகிறான்.
அவனைக் காதலி!... அவன் உன்னிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறாததற்காக ..
உண்மையில் அவன், அதுவல்லாத பல வழிகளில் உன்னை நேசிக்கிறான்.
அவனைக் காதலி!... பானையோ பாலையோ வாங்கி வர மறந்து விட்டதற்காக ..
அவனுக்கு வேண்டியிருந்ததெல்லாம் உன்னிடம் விரைந்து வந்துவிட வேண்டுமென்தே.
அவனைக் காதலி!... அவன் உனக்கு பேச சந்தரப்பம் தராததற்காக ..
அவனுக்குத் தெரியும் உனதுள்ளத்தலில் இருப்பவை; நீ சொல்ல நினைப்பவை.
அவனைக் காதலி!... அவன் மதிப்பை வேண்டியதற்காக ..
உண்மையில் அவனே குடும்பத் தலைவன்.
அவனைக் காதலி!... அவன் குழந்தைகளைக் கண்டித்ததற்காக ..
அவன் நாடியதெல்லாம் அவர்களைத் திருத்தி, நல்ல பண்புள்ளவர்களாக வளர்வதை உறுதிசெய்வதே.
அவனைக் காதலி!... அவன் உன்னவன்; உனக்கு வேறு காரணிகள் தேவையில்லை.
இவை அனைத்தும் மனித நடத்தையின் ஒரு பகுதியே உனது கணவன் உனது வாழ்க்கையின் ஒரு பகுதியாவான். எனவே அவனை ஒரு அரசனைப் போல் நடத்து.
அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்:
'இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன' - (30:21)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எந்தப் பெண் தனது கணவன் திருப்தியுற்ற நிலையில் மரணிக்கிறாளோ அவள் சுவர்க்கம் நுழைவாள்” - இப்னு மாஜா
'உன்னுடைய கணவனை கவனிப்பதில் கவனம் செலுத்து, அவனே உனது சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்” – அஹ்மத்ஃநஸாயி
'ஒரு பெண் ஐவேளை தொழுது ரமலான் மாத நோன்பு நோற்று தனது கணவனுக்கு கட்டுப்பட்டு தனது கற்பையும் பாதுகாத்து கொள்வாளாயின் அவளுக்கு கூறப்படும். 'நீ விரும்பிய வாயிலால் சுவர்கத்தில் நுழை' என்பதாக.
'எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு தலை வணங்க அனுமதிக்கப்படவில்லை அவ்வாறிருந்திருப்பின் நான் மனைவிக்கு அவளது கணவனை தலை வணங்குவதற்கு கூறியிருப்பேன்.எனேனில் அவர்கள் மீது அவர்களது கணவன்மாறுக்கு இருக்கும் உரிமைகள் அத்தகையதாகும்” – பஸ்ஸார்
எனவே அந்த விஷேட பொழுதுகளுக்காக காத்திருக்காதே! அவன் சிறப்புக்குரியவன் என்பதை உன்னால் முடியுமான அனைத்து வழிகளாலும் உணர்த்த இன்றே விரைந்திடு.
இப்போதே அவனை கட்டியணைத்துக் கொள். அவர் ஏன்? என்று வினவினால் கூறு' எனேனில் நீங்கள் மிகவுமே சிறப்புக்குரியவர்.
நன்றி : சப்ராஸ் அன்வர்
தமிழில் : பஸ்லான் பாரூக்
0 comments:
Post a Comment