இளைஞர்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும் முகமாக SEEDS இனால் 2013.09.01 ஆம் திகதி ஞாயிறு அன்று இளைஞர்களுக்கான தலைமைத்துவ ஒரு நாள் பயற்சி முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சி நெறியில் 26 இளைஞர்கள் பன்கு கொண்டு பயன்பெற்றனர். இதன் போது விசேட ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வுகள் மற்றும் ஆளுமை விருத்தி குழு செயற்பாடுகள் என்பன நடைபெற்றன. தலைமைத்துவம் தொடர்பான விசேட கருத்தரங்குகளும் நடைபெற்றன. தற்கால இஸ்லாமிய உலகு தொடர்பான தகவல்களை அஷ்ஷெய்க இக்ராம் நஸீர் அவர்களும் இளைஞர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக அஷ்ஷெய்க் ராஸி அவர்களும் விஷேட உரையாற்றினர். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உதவிய எமது பள்ளி நிருவாகத்திற்கும், பாலர் பாடசாலை நிருவாகத்திற்கும், உதவி நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாகல்லாஹூ ஹைரன்.
At Morning Exercise
At Lunch
Current Situation in Muslim world
Youth Responsibilities speech
Group Activities
0 comments:
Post a Comment