றவூப் ஸெய்ன்
விஞ்ஞான பாடப் புத்தகம் பற்றிய கவனயீர்ப்பு
டாவினுக்கு முன்னர் பிரான்ஸில் வாழ்ந்த உயிரியல் அறிஞரான லாமாக்தான் பரிணாமத் தத்துவத்தை முதலில் முன்வைத்தவர். அதுவே டார்வினின் கருத்துகளுக்கு ஊக்கமளித்தது. எவ்வாறாயினும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு விஞ்ஞான முறை சோதனைகளுக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. பரிணாமக் கருதுகோள்களைப் பொறுத்த வரையில் உய்த்தறி முறையில் எதிர்வுகூறலைப் பெற்று சோதிப்பது கடினம். மேலும் இக்கருதுகோளை தனித்தனி உயிரினங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தவும் முடியாது.
டார்வினின் பரிணாமத் தத்துவம் அல்குர்ஆனின் உயிர்த் தோற்றம் பற்றி கருத்துகளுக்கு முரண்பட்டு நிற்கின்றன. இப்பின்னணியில் உயிர்த் தோற்றம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துகளை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
1. உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து படைத்தோம். (21:30)
2. உயிர்ப் பிராணிகள் ஒவ்வொன்றையும் அல்லாஹ் நீரைக் கொண்டே படைத்தான். அவற்றில் சில தம்வயிற்றினால் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் சில இரு கால்களால் நடக்கின்றன. இன்னும் சில நான்கு கால்களால் நடக்கின்றன. இவ்வாறுதான் அல்லாஹ் விரும்பியவற்றை தான் விரும்பியவாறு படைத்திருக்கின்றான். (24:45)
மனிதன் பரிணாமம் அடைந்தான் என்ற கருத்து அல்குர்ஆன் முன்வைக்கும் மனிதன் பற்றிய கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும். உயிர்த் தோற்றம் பற்றி பல்வேறு இடங்களில் குர்ஆன் சித்தரித்துள்ளபோதும் அதில் மனிதனின் தோற்றம் பற்றி சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கின்றது.
3. மண்ணிலிருந்தே உங்களை நாம் சிருஷ்டித்தோம். (22:05)
4. காய்ந்தால் சத்தம் கேட்கக் கூடிய பிசுபிசுப்பான களிமண்ணினால் நிச்சயமாக நாமே படைத்தோம். (22:...)
5. தட்டினால் சுட்ட பாத்திரத்தைப் போல சத்தம் கேட்கக் கூடிய களிமண்ணினால் அவன் மனிதனை சிருஷ்டித்தான். அவன் ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணால் படைத்தான். (37:7)
6. மனிதனை நாம் களிமண்ணின் ஒரு வளர்ச்சிக் கட்டத்திலிருந்து படைத்தோம். (22:05)
7. அவன் பூமியிலிருந்து உங்களைத் தோற்றுவித்து அதிலே உங்களை வாழவைத்தான். (11:61)
மேற்கூறிய வசனங்கள் மண்ணின் மூலமே அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான் என்பதை விளக்குகின்றன. அதாவது, மண்ணிலுள்ள மூலக் கூறுகளால் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். மனிதனைப் பற்றிய இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. விஞ்ஞானரீதியில் நோக்கினால் ஒரு மனிதனின் இடை 100 கி.கி. என வைத்துக் கொண்டால் அதில் ஒட்சிசன், காபன், ஐதரசன், கல்சியம், பொஸ்பரசு என்பவை முறையே 65 கிலோ, 18கி. 10கி. 2கி, 1கி எனவும் சோடியம், பொட்டாசியம், அயடீன், கந்தகம் என்பவை ஒரு கிலோவாகவும் உள்ளது. அதேபோன்று மிருகப் பண்புகளிலிருந்து காலப்போக்கில் மனிதத்தன்மை பெற்றான் என்ற பரிணாமக் கருத்தும் அல்குர்ஆனின் கருத்துக்கு முரண்படுகின்றது. ஏனெனில் தோன்றியதிலிருந்து இன்று வரை மனிதன் ஒன்றாகவே உள்ளான்.
மனிதன் ஓர் உயர்ந்த நோக்கில் விசேடமான அமைப்பில் படைக்கப்பட்டுள்ளான் என்ற கருத்தையும் குர்ஆன் முன்வைக்கின்றது.
நபியே! உமதிறைவன் மலக்குகளை நோக்கி நான் பூமியில் எனது பிரதிநிதியை படைக்கப்போகிறேன் என்று கூறிய சமயத்தில் இறைவனே பூமியில் இரத்தத்தை ஓட்டி, அக்கிரமம் செய்பவர்களையா படைக்கப்போகின்றாய்? எனக் கேட்டனர். அதற்கு நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன் எனக் கூறினான். மேலும் ஆதமுக்கு எல்லா பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (2:31)
இது மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ அந்தஸ்தைக் காட்டுகின்றது. மேலும் அல்லாஹ்வின் ஆன்மா மனிதனுக்கு விசேடமாக வழங்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் குர்ஆன் முன்வைக்கின்றது. மலக்குகளை நோக்கி அல்லாஹ் நான் மனிதனை களி மண்ணிலிருந்து படைக்கப் போகிறேன் என்று கூறிய சமயத்தில் நான் அவனை ஒழுங்குற அமைத்து எனது ஆன் மாவிலிருந்து அவனுக்கு ஊதினால் நீங்கள் அவனுக்கு சிரம் பணியுங்கள் என்று கூறினான். (38:71)
மனிதன் அழகானதொரு தோற்றத்தில் படைக்கப்பட்டிருப்பது அல்லாஹ்வின் திட்டமிட்ட நோக்கத்தை காட்டுகின்றது. நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான தோற்றத்தில் படைத்தோம். (95:05)
இவ்வாறு படைக்கப்பட்ட மனிதனுக்கு அல்லாஹ் கண்ணியமளிக்கின்றான். ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். தரையிலும் கடலிலும் நாம்தாம் அவர்களைச் சுமந்து செல்கிறோம். நல்ல ஆகாரங்களையும் அவர்களுக்கு நாமே அளிக்கின்றோம். நாம் சிருஷ்டித்தவற்றில் அனேகமானவற்றை விட அவர்களை மேலாக்கி வைத்திருக்கின்றோம். (54:4)
நிச்சயமாக நாம் மனிதனை களிமண்ணினால் ஒரு வளர்ச்சிக் கட்டத்திலிருந்து படைத்தோம். பின்னர் இந்திரியமாக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாக்கினோம். பின் அந்த இரத்தக் கட்டியை மாமிசப் பிண்டமாக்கினோம். பின்னர் அதிலிருந்து எலும்பை உற்பத்தி செய்து அதைச் சூழ தசையால் போர்த்தினோம். பின் அதனை வேறொரு படைப்பாக உருவாக்கினோம். (23:12)
இவ்வசனத்திற்கு அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் தரும் விளக்கம் பின்வருமாறு:
மனிதன் விந்தணு கருக்கட்டியதிலிருந்து பூரணத்துவம் பெறும் வரை வளர்ந்து செல்லும் படிக்கட்டங்கள் அனைத்தும் விலங்கினங்களின் கட்டங்களை ஒத்திருக்கின்றன. எனினும், இறுதி நிலையில் மிருகங்கள் அவற்றுக்குரிய தன்மையில் நிலைத்திருக்க மனிதன் மாத்திரம் அல்லாஹ்வின் ஆன்மாவைப் பெற்று மனிதத்துவம் என்ற பண்போடு வளர்ச்சியடைகின்றான். எனவே, பரிணாம வளர்ச்சியூடாக மனிதன் மனிதன் என்ற பண்பைப் பெறவில்லை. திட்டமிட்ட அல்லாஹ்வின் படைப்பாற்றல் மூலமாகவே அவன் அப்பண்பைப் பெறுகின்றான் என்பதையே அவனை வேறொரு படைப்பாக உருவாக்கினோம் என்ற வார்த்தைகள் காட்டுகின்றன.

0 comments:
Post a Comment