பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? கல்வி போதிக்கும் ஆசிரியரை எவ்வாறு மதிக்க வேண்டும்? சக மாணவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும்? பிற உயிரினங்கள் மீது எவ்வாறு இரக்கம் காட்ட வேண்டும்? பிறருடைய உடமைகளும் உரிமைகளும் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன போன்ற பண்புகள் மாணவர்களுக்கு ஒவ்வொரு நேரமும் வலியுறுத்தப்பட்டு வரவேண்டும்.இப்படிப்பட்ட பயிற்சியின் மூலமாகத்தான் சிறந்த சந்ததிகளாக உருவாகுவார்கள். எந்த மாணவனிடத்திலா வது இதற்கு விரோதமான குணங்கள் காணப்படுமானால், அவனுடைய பாதிப்பு மற்ற மாணவர்களையும் தாக்கி விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு, அவன் மீது தனிக் கவனம் செலுத்தி, அவனை நல்லவனாக மாற்றி எடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுடைய கையில் இருக்கிறது. மாணவர்கள் எக்கேடுகெட்டால் என்ன, நமக்கு வேண்டியது சம்பளம் மட்டும் தான் என்ற எண்ணத்தில் ஆசிரியர்கள் செயல்படும் போது தான் மாணவர்கள் தறுதலைகளாக உருவாகுகின்றனர். இன்றைய கல்விக் கூடங்களில் உருவாகும் பெரும்பாலான மாணவ மாணவியரின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்படும்
சிறுசிறு பிரச்சினைகளை பூதாகரமாக ஆக்கி, அதைக் காரணம் காட்டி, வன்முறைகளிலும், தீவிரவாதச் செயல்களி லும் ஈடுபடுகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் அதிக மான கல்விக் கூடங்களில் வன்முறை சம்பவங்களை மாணவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மோச்சம் பள்ளி என்ற ஊரில் ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தேரிய வன்முறை சம்பவங்கள் நெஞ்சை உறையச் செய்கின்றன. அந்த பள்ளியில் பயின்றுவந்த ஒரு மாணவன் மீது அந்தப் பள்ளிக்கூட வாகனம் தவறுதலாக மோதிய காரணத்தினால் அந்த மாணவன் பலியாகி விடுகின்றான். இதைக் காரணம் காட்டி, அந்த பள்ளி மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் திரண்டு பள்ளி வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் அனைத்து வகுப்பறைக்குள்ளும் நுழைந்து அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். கணினி ஆய்வகத்திற்குள் சென்று அறுபதிற்கும் மேற்பட்ட கம்பியூட்டர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளனர். பள்ளி தாளாளரின் வீட்டைத் தேடிச் சென்று வீட்டிற்குள் புகுந்து வீட்டை சூறையாடியுள்ளனர். பள்ளிக் கூடத்திற்குள் சென்று பள்ளி தாளாளர் அறையை சூறையாடி மேஜையிலிருந்த ஆவணங்கள், பள்ளி ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் கள், பள்ளி நிர்வாக ஆவணங்கள் அனைத்திற்கும் தீவைத்து சாம்பலாக்கியுள்ளனர்.
தவறுதலாக நடந்த ஒரு சம்பவத்திற்காக மாணவர் களும், அவர்களுடைய பெற்றோர்களும் சேர்ந்து இவ் வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளிக்கூடத்தை தீவைத்து சாம்பலாக்கி விடுவதினால் இவர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா? மாண்ட மாணவனின் உயிர் மீண்டுவிட்டதா? இது தான் அவர்கள் தங்கள் பள்ளிக்கூடத்தில் பயின்ற பாடமா?மாணவர்கள் ஒழுக்கப்பயிற்சி பெறாதது தான் இதற்கெல்லாம் காரணம். வினாத் தாளில் கேட்கப் பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும், வெற்றி பெற்று கை நிறைய ஊதியம் கிடைக்கும் வேலை களில் அமர வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிலுகின்ற கார ணத்தினால் தான் ஒழுக்கத்தைப் பற்றியோ நற்பண்புகளைப் பற்றியோமாணவர்கள் கவலைப்படுவதில்லை. சமீப நாட்களாக பள்ளிக்கூடங் களிலும் கல்லூரிகளிலும் வன்முறைச் சம்பவங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், ராகிங் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முற்றிலுமாகஒழிக்க வேண்டுமானால் கல்வித் துறை மாணவர்களுக்கு நற்குணங் களைப் போதிக்கும் விதத்தில் பாடத் திட்டத்தை அமைக்க வேண்டும். அது சரியான முறையில் ஆசிரியர் களால் பயிற்றுவிக்கப்படுகின்றதா என்று கண்காணிக்க வேண்டும்.
1 comments:
http://kahatowita.blogspot.com/
Post a Comment