Banner 468 x 60px

 

Tuesday, November 27, 2012

0 comments

ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்






வானியல் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக இன்று புதன்கிழமை சூரிய கிரகணம் ஏற்பட்டது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய இந்த சூரிய கிரகணம், அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாகத் தெரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் இந்த கிரகணத்தை கண்டு மகிழ்ந்துள்ளனர்.

கிரகணம் ஆரம்பித்தவுடன் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து பார்வையாளர்களை சற்று நேரம் திகைக்க வைத்துள்ளது. பின்னர் கிரகணம் மறைந்தவுடன் மேகங்கள் சூழ்ந்துகொண்டுள்ளன.அந்த இருள் தொடர்ந்து நீடித்ததாகவும் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் 150 கிலோமீற்றர் வரை இது பரவி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கிழக்கு இந்தோனேஷியா, அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும், நியூசிலாந்து, பப்புவா நியூகினியா மற்றும் சிலி, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும் இந்த சூரிய கிரகணத்தைக் காணக்கூடியதாக இருந்ததென்று கூறப்படுகின்றது.
இருப்பினும் அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவே, இந்த ஆண்டின் கடைசி சூரியகிரகணமென்றும் இனி 2015ஆம் ஆண்டு மார்ச் வரை மற்றுமொரு சூரியகிரகணம் நிகழாது என வானியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். 

0 comments:

Post a Comment