தேசியப் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் அரசாங்கம் புரட்சி கரமான மாற்றங்களை ஏற்படுத்தி, கொழும்பிலும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாத்திரமே விஞ்ஞானக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற் கான வசதிகளையும் பட்டதாரி ஆசிரியர்களையும் பெருமளவில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கடந்த காலத்து மாயையை இல் லாமல் செய்வதற்கு இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன.
கொழும்பு மற்றும் பிரதான நகரங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கே கிரிக்கெட், உதைபந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வசதிகளும், மைதானங் களும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
வசதியுள்ள பிரதேசங்களின் மாணவ, மாணவியரை விட பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விளையாட்டுத் துறையில் இன்று சிறப்புற்று விளங்குகின்றார்கள்.
முன்னர் கொழும்பு பாடசாலைகளிலும் பிரதான நகரங்களின் பாடசா லைகளிலும் இருந்து வந்த மாணவர்களுக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று சனத் ஜய சூரிய, ரங்கன ஹேரத் போன்றவர்கள் கிராமத்துப் பாடசாலைகளில் இருந்து வந்து இலங்கையின் கிரிக்கெட் அணியில் சிறப்புற்று விள ங்குவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
இது பற்றி ஒரு நல்ல யோசனையை அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள் ளார். அரசியலில் இருந்து கல்வித்துறை விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த இந்த இளைஞர், கல்வித்துறையை சில அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவது நல்ல தல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை நாம் உள்ளூரில் இருந்தே தயாரிக்கப்படும் முன்மாதிரியான ஒரு திட்டத்தினால் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் எமது கல்வித் திட்டமும் ஆக்கபூர்வமான முறையில் மாற்றம் செய்யப்பட வேண் டும் என்றும் அவர் கூறினார்.
1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டம் பற் றிக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ எம்.பி., கல்வி நிர்வாகி களும் பெற்றோரும் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளின் அபிவி ருத்திக்கு முன்னுரிமை அளிக்கும் தப்பான போக்கை மறந்து நாட் டில் உள்ள சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்து இந்நா ட்டு மாணவ, மாணவிகளின் கல்வி அறிவைப் பெருக்கக் கூடிய ஒரு நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று கூறினார்.
இதேவேளையில் பிரதிக் கல்வி அமைச்சர் விஜித்விஜயமுனி சொய்சா, அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக 306 பில்லி யன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் இதில் பெரும்பகுதி கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு பகிர்ந்துகொடுக்கும் செயற்பாடு இனிமேல் கையாளப்பட மாட்டாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார்.
கல்வித்துறைக்கு அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் முழுத் தொகையும் நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள குறிப்பாக வடக்கு கிழக்கி லும், தென்னிலங்கையிலும், மலையகத்திலும் உள்ள சகல அரசாங் கப் பாடசாலைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண் டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கை இன்று கல்வித்துறையில் உயர்நிலையில் இருக்கின்றது. எங்கள் நாட் டில் உள்ள வயது வந்தவர்களில் 98 சதவீதமானோருக்கு இன்று எழுத வாசிக்கும் அளவுக்கு கல்வித்துறை வியாபித்துள்ளது. அத்து டன் நாட்டின் சனத்தொகையில் 38 சதவீதமானோருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் அதாவது கணனி இயந்திரங்களை நிர்வகிப்பதில் நல்ல தேர்ச்சி இருக்கின்றது.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இன்று அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து சகல பாடசாலைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்பிப்பதற்குத் தேவையான கணனி இயந்திரங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் கணனி இயந்திரங்களை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு செல்வம் படைத்திருக்காத பெற்றோரின் பிள்ளைகளுக்கு கணனிக் கல்வி அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் வகை செய்கின்றது.
"நனச" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து பிள்ளைகள் இன்று கணிதம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய பாடங்களை இலகுவில் கற் றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார்கள். பாடசாலைப் பிள் ளைகளுக்கு கணனி இயந்திரங்களை இயக்குவதற்கான மென்பொ ருள் சாதனம் ஒன்று இப்போது பாடசாலைகளுக்கு விநியோகிக்கப் படுகின்றது. இந்நிகழ்ச்சிகள் தமிழிலிலும் ஒளிபரப்பப்படுகின்றன.
ஒரு பிள்ளைக்கு ஒரு மடிக்கணனி என்ற திட்டத்தின் கீழ் இன்று 17 பாடசாலைகளில் 1463 பிள்ளைகளுக்கு மடிக்கணனிகள் வழங்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தை அடுத்த சில வருடங்களில் விஸ்தரித்து சகல பிள்ளைகளுக்கும் ஒரு மடிக்கணனியை வழங்குவதற்கும் அர சாங்கம் திட்டமிட்டுள்ளது.
எங்கள் நாட்டின் எதிர்காலத்தை வளம் மிக்கதாக மாற்றும் பொறுப்பை மாணவ, மாணவியரே ஏற்கவுள்ளார்கள். எனவே, அவர்களின் கல் வித்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் நல்ல பல திட்டங்களை அர சாங்கம் நடைமுறைப்படுத்தி வருவது உண்மையிலேயே நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு செயற்பாடாகும்.
0 comments:
Post a Comment