Banner 468 x 60px

 

Tuesday, November 27, 2012

160 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த டார்வினின் புத்தகம் கண்டுபிடிப்பு

0 comments


பரிணாம கோட்பாட்டை உரு வாக்கிய சார்ல்ஸ் டார்வினி னால் சேகரிக்கப்பட்ட புதை படிவங்கள் அடங்கிய புத்தகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
160 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல்போயிருந்த இந்த புத்தகம் லண்டனில் உள்ள ரோயல் ஹொலெவே பல்கலைக் கழகத்தின் ஒரு பழைய அலுமாரிக் குள் இருந்து கண்டெடுக்கப்பட் டுள்ளது.
தூசுபடிந்து காணப்பட்ட இந்த அலுமாரியை வேறு தேவைக் காக திறந்தபோது இந்த அரிய புத்தகம் கண் டெடுக்கப்பட்டதாக அந்த பல்கலைக் கழகத்தின் மருத்துவர் பொல் கொள்லான்ஸ் குறிப் பிட்டார்.
சால்ஸ் டார்வின் தனது 20 வயதுகளில் 5ஆண்டு தென் அமெரிக்கா சுற்றுப்பயணத் தின் போது இந்த புதைபடிவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவை 1830 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டவையாகும். எனினும் இந்த புத்தகம் 160 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போயிருந்தது.
இவ்வாறு கண்டுபிடிக்கப் பட்ட இந்த புத்தகத்தில் 314 புதை படிவங்கள் உள்ளன.
இதில் சிலி நாட்டு கடற்கரை யில் இருந்த கண்டெடுக்கப் பட்ட 40 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் இருந்த தாவரங்களின் படிவங்களும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment