Banner 468 x 60px

 

Thursday, November 29, 2012

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?

0 comments

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?: மூளையைக் குடைந்து விடை கூறும் ஆராய்ச்சியாளர்கள்!

அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர்.

இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார்.

இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.



ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை.

அவரின் மரணத்திற்கு பின்னரும் அவரது மூளை மருத்துவரான தோம்ஸ் ஹார்வேயினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என அக்காலப்பகுதியிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் நவீன பௌதிகவியலின் தந்தையாகக் கருதப்படும் ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐன்ஸ்டைன் மற்றும் தமது மூளையைக் குடைந்து பதில் கண்டுபிடித்துள்ளார்கள் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் மற்றும் குழுவினர்.



அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனின் மூளையின் 14 அரிய புகைப்படங்களை சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு மற்றும் நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன சாதாரண மனித மூளையிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களது ஆராய்சியான The cerebral cortex of Albert Einstein: a descriptioன் and preliminary analysis of unpublished photographs தற்போது வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment