உலகின் மிகச் சிறிய முட்டை?
.jpg)
வட ஹம்ப்லேன்ட்டை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வளர்த்து வந்த கோழியொன்று உலகிலேயே மிகச் சிறிய முட்டை என கருதப்படும் முட்டையை இட்டுள்ளது.
வட ஹம்ப்லேன்ட், ஹம்சாக் பகுதியை சேர்ந்த போல் ரே என்ற 52 வயது நபரின் கோழி பண்ணையிலேயே இந்த முட்டை இடப்பட்டுள்ளது.
இம்முட்டை 5 கிராம் நிறை கொண்டதாக காணப்படுகின்றது. 2 சென்றி மீற்றர் அகலமும் 2.5 சென்றி மீற்றர் நீளமும் கொண்ட இந்த முட்டை உலகின் மிகச் சிறிய முட்டை என்ற கின்னஸ் சாதனையை படைக்கலாமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தனது கோழி பண்ணையில் இவ்வாறு முட்டை இடப்பட்டுள்ளதை அவதானித்த மேற்படி ஹோட்டல் உரிமையாளர் ஆச்சர்யமடைந்ததுடன் அதனை மிகவும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார்.
'கின்னஸ் உலக சாதனை நிலையத்தை நான் தொடர்புகொள்ள வேண்டுமென எனது நண்பர்கள் தெரிவித்தனர்' என அவர் தெரிவித்துள்ளார்.
7.3 கிராம் நிறையுடைய முட்டையே உலகின் மிகச் சிறிய முட்டை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments:
Post a Comment