Banner 468 x 60px

 

Monday, November 26, 2012

0 comments
Islamic Questions And Answers

கேள்வி: ஜின்கள் பாம்பு வடிவில் உருவெடுத்து வருவதாக சொல்கிறார்கள்.இதற்கு குர் ஆன்,ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?

பதில் : கீழ்வரும் ஹதீஸ்களின் அடிப்படையில் இந்தக் கருத்தை சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' மதீனாவில் இஸ்லாத்தை தழுவிய ஜின்கள் சில உள்ளன.உங்களில் ஒருவர் அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புக்களில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்பு செய்யட்டும்.அதற்கு பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால் அதை அவர் கொன்று விடட்டும்.ஏனெனில் அது ஷைத்தான் ஆகும். அறிவிப்பவர் :அபூ சயீத் அல் குத்ரி (ரலி)இநூல் : முஸ்லிம் -4504)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள் ''இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளையும்இகுரங்குகளையும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன.'' அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)இ நூல் : அஹ்மத் (3085) தப்ரானி(4364) 

ஆனால் இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது இது மதீனாவிற்கு மாத்திரம் நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு மட்டும் உரிய சட்டமாகும்.ஏனெனில்
உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.இந்த வகை உயிரினங்களுக்கு வழித்தோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும்.எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.அதை கீழுள்ள ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன் !

கேள்வி:பாத்திஹா ஓதுவதற்கு என படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஹராமா?

பாத்திஹாக்கள் என்பது இஸ்லாத்தின் அனுமதிக்கப்பட்ட விஷயம் அல்ல! பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் உருவாக்கியவையே! நபி(ஸல்) அவர்களின் அனுமதி இல்லாத எச்செயலையும் நாமும் புறக்கணிக்கவே வேண்டும். மூமின்கள் வீணான காரியங்கள் நடைபெறும் போது அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆனில் 28:3 வசனம் மூலம் புரிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்களை நான் விருந்துக்கு அழைத்தேன். வீட்டில் இருந்த உருவப்படங்களைக் கண்டதும் நபி(ஸல்) திரும்பிப் போய் விட்டனர் என்று அலி(ரலி) அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

தவறான செயல்பாடுகள், குர்ஆன் - ஹதீஸ் அனுமதிக்காத விருந்தோம்பல்களை நாம் புறக்கணிக்கத்தான் வேண்டும்.

இதுபோன்ற புறக்கணிக்கும் போது தான், சம்பந்தப்பட்ட செயல் உடையவர் தன் தவறை உணருவார். இத்தவறை விட்டு விட முன்வருவார். நாம் போய் அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த உணவையும் உட்கொண்டு விட்டு, பிறகு 'அது கூடாது' என்று கூறினால் நகைப்புக்குரியதாகவே அமையும்.

0 comments:

Post a Comment