
இத்தாலி ஆடம்பர கப்பலில் இருந்த 29 பயணிகள் மாயம்
ஜிக்லியே தீவுக்கு அருகே பாறையில் மோதி கடலில் மூழ்கிய இத்தாலியின் ஆடம்பரக் கப்பலில் பயணித்த 29 பயணிகள் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும்பணியில் மீட்பாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 16 பேர் காணாமல் போனதாக இத்தாலி நிர்வாக முன்னதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது 29 பேர் காணாமல் போயுள்ளதாக அது கூறியுள்ளது.
இவர்களில் கப்பல் ஊழியர்கள் 4 பேரும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி பயணிகளும் அடங்குகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பில் அவசர நிலையை இத்தாலி அரசு பிர கடனம் செய்துள்ளது. இதில் கப்பலில் இருக் கும் எண்ணெய் கசி வதை தடுக்க இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கப்பலை தவறாக செலுத்தியது மற்றும் பொடுபோக் காக செயற்பட்ட குற் றச்சாட்டில் கப்பலின் தலைமை மாலுமியை இத்தாலி பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment