யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம்
கிரிமிட்டியாவ ரயில்வே கடவையில் சம்பவம்
‘யாழ்தேவி’ ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். அம்பன்பொல, கிரிமிட்டியாவ பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் நான்கு சிறார்களும், கண வன், மனைவி மற்றும் அவரது நண்பியும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். கிரிமெடியாவ பிரதேசத்திலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியான பியகம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யு. எம். உதய ஆசிரி விஜேகோன் என்பவர் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் தனது குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான பெண் மற்றும் மேலும் 2 பிள்ளைகளையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஏழு பேரும் நேற்று நெலும்பத் வெவ பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். குறித்த முச் சக்கர வண்டி கிரிமெட்டியாவ பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த யாழ்தேவி ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராத விதத்தில் ரயிலில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாரிய சத்தத்துடன் சுமார் 300 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதில் அந்த முச்சக்கர வண்டியில் இருந்த ஏழு பேரும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்துச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது. ரயிலுடன் மோதுண்ட முச்சக்கர வண்டி முற்றாக சுக்கு நூறாகி யுள்ளது.
இதில் சிலர் ஸ்தலத்தில் உயிரிழந் துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்து விழுந்து கிடந்த நிலையில் பிரதேசவாசி களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், எந்தவித பலனும் இன்றி அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
0 comments:
Post a Comment