Banner 468 x 60px

 

Thursday, January 31, 2013

அல் - குவைதா, தலிபான் இயக்கங்களுக்கு ஒத்தாசை வழங்க இலங்கையில் தடை

0 comments



அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்) மீதான சமவாயம் என்னும் சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

ஐக்கிய நாடுகள் சபை இந்த பட்டியலை காலத்துக்கு காலம் மாற்றியமைக்கும். எமக்கு இந்த பட்டியலை ஐ.நா பின்னர் வழங்கும். இது பின்னர் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படும். அங்கத்துவ நாடுகள் யாவும் இவ்வாறு செய்யும் கடப்பாடு உடையன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டமூலத்தின்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் அமைப்புகளுடன் செயல்படும் எவரும் குற்றவாளியாவர். அல் - குவைதாவின் நிதிகளை முடக்குவது தொடர்பாக ஐ.நா சட்டம் இலக்கம் 45,1968இன் கீழ் இலங்கை அரசாங்கம் சில விதிகளை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் பல வகை உபாயங்களையும் குறிப்பாக தலிபானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இச்சட்டமூலம் குறிப்பிடுகின்றது.
Read more...

சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதில் சுதந்திரமாக செயற்பட முடிந்தால்...?

0 comments

NationalFlag0
எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், ஏமாற்றுதல், மோசடி, இலட்சியம் இல்லாத வாழ்க்கை முறை, போகத்துக்கு மட்டுமே பாவிக்கப்படும் பண்டமாகிய பெண், அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என்பதுவே நாகரிகம் என வாழ்வொழுன்கே சீரழிந்து போயிருந்த காலப்பகுதியிலே "பண்பாடுகளை பூரணப் படுத்தவே நான் அனுப்பப்பட்டேன்' என்ற மகுடத்துடன் ஒரு வழிகாட்டி உலகில் பிறப்பெடுக்கிறார்.

உலகுக்கே பண்பாட்டை எடுத்துக் காட்டி, வாழ்க்கையின் இலக்கை கற்றுத் தந்து, இழி நிலையிலிருந்த மனிதனை மாமனிதனாக வடிவமைத்துக் காட்டிய  அந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை ஞாபகப் படுத்துகின்ற காலப்பகுதியில் அவர் கற்றுத் தந்த பண்பாடுகளை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பதில் நாம் எவ்வளவு தூரம் சாதித்திருக்கின்றோம்?

ரபீஉல் அவ்வல் பன்னிரண்டாம் நாள், சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட எமது தாயகத்தில் தேசிய விடுமுறை நாள். இலங்கையின் விடுமுறைகளில் எல்லா மதத் தலைவர்களினதும் பிறந்த தினத்தை விடுமுறையாகக் கணிப்பிடுவது என்ற தீர்மானத்தின் படி இயேசு நாதர் பிறந்த தினம் (நத்தார்), புத்தர் பிறந்த தினம் (வெசாக்), முஹம்மத் நபி பிறந்த தினம் (மீலாத்) என விடுமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நத்தார் காலத்தில் மாதம் முழுவதும் முழு நாடுமே கிறிஸ்தவ மயமானதுபோல இயேசு நாதரும் கிறிஸ்தவ மதமும் எல்லா ஊடகங்களையும் ஆட்கொள்கின்றன.
வெசாக் காலங்களிலே புத்தரின் பண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்ற நிகழ்வுகளும் அவரது வரலாற்றை காட்சிப் படுத்தும் தொரனங்களுமாக நாட்டில் பௌத்தம் மிகைத்து விடுகிறது.
இந்த நிலையில் உலகுக்கே வழிகாட்டியாக  வந்த நபிகளாரின் தேசிய விடுமுறையை பயன்படுத்துவதா கூடாதா என்ற சர்ச்சையில் முஸ்லிம்கள் மட்டும் வாய்ப்புக்களை தவற விட்டுக்கொண்டிருப்பது அறிவு பூர்வமானதாகத் தெரியவில்லை.

முஹர்ரத்திலே ஹிஜ்ரத்தையும் ரஜபிலே மிஃராஜையும் நினைவு படுத்துகிறோம். அல்குர்ஆன் இறங்கிய ரமலானில் முழு மாதத்திலும் குர்ஆனைப் பற்றிப் பேசுகிறோம். அதனுடனான நெருக்கத்தை அதிகரிக்கிறோம். அதனை ஓதவும் விளங்கவும் நடைமுறைப்படுத்தவும் அறைகூவல் விடுக்கின்றோம். ரபீஉல் அவ்வலின் முழு மாதத்திலும் ரசூலுல்லாவைப் பற்றிப் பேச, நெருக்கமாக ஏன் பின்னிட்கின்றோம் என்பதன் அர்த்தம் பிடிபடுவதில்லை.

மீலாத் விழா கொண்டாடலாமா? குறித்த தினம் நபிகளாரின் பிறந்த தினமா? அரபு நாடுகளில் இந்தப் பழக்கம் இருக்கின்றதா? என்ற சர்ச்சைகளை விட்டு விட்டு, நமக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தினத்தை மாற்று மதத்தினருக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதே விவேகமானவர்களின் வழியாக இருக்க முடியும்.
குறித்த தினத்தில் தான் நபியவர்கள் ஞாபகப் படுத்தப்பட வேண்டுமா? என்ற கேள்விகளை விட்டு, குறித்த தினத்தில்  நபியவர்களை ஞாபகப்படுத்துவை ஏன் மறுக்கின்றோம் என்பதற்கு நாம் விடை காண வேண்டும்.
ஏனைய தினங்களில் நபியவர்களை ஞாபகப்படுத்துவது மதம் சார்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டாலும், குறித்த தினத்தில் நபியவர்களை ஞாபகப்படுத்த நாம் எதைச் செய்தாலும் அது தேசிய அங்கீகாரம் பெரும் நிலையில் நாம் ஏன் இந்த வாய்ப்பை புறந்தள்ளி விடுகிறோம்? என்பதில் திருப்தியான விடை காண வேண்டும்.
நபியவர்களுக்கு எதிரான நிகழ்வுகளினால் உந்தப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்க முன்னர், நபியவர்கள் மீது அடுத்தவர்களும் ஆதரவு வைக்கக் கூடிய வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நாங்கள் இந்த நாட்களை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பாரம்பரிய வழிமுறைகளுக்கு அப்பாலும் சென்று நவீன பரம்பரைக்குப் பரிச்சயமான வழிமுறைகளைப் பாவித்து நாம் இதனை முன்னெடுத்திருக்க வேண்டும்.

நம்மைப்பற்றிய நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கான மற்றுமொரு அரிய வாய்ப்புத்தான் சுதந்திர தினம். றசூலுல்லாவைப் பற்றி எடுத்துச் சொல்வது எப்படிப் போனாலும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் ஜம்மியத்துல் உலமா பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இது பல்லின மக்கள் வாழும் ஜனநாயக சோசலிசக் குடியரசு என்பதையும் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு எமக்கிருப்பதையும் அழுத்திச் சொல்லும் தருணமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நாட்டை ஆக்கிரமித்துச் சுரண்டும் நோக்கில் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க வந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதையும், பிரிவினைவாத யுத்தமோ நாட்டுக்கு எதிரான கிளர்ச்சிகளோ செய்யாத தூய இலங்கையர்கள் நாங்கள் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும்.
சுதந்திரத்துக்கு பாடுபட்ட முஸ்லிம்களை நினைவு படுத்துவதோடு சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கைக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் செய்துவரும் பங்களிப்பினை கட்டாயமாக ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்களிளிருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக தீவிரக் குழுக்கலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் தமது தேச உணர்வை வெளிப்படுத்திக் கொள்ள இந்த சுதந்திர தினத்தைப் பயன்படுத்த முயல வேண்டும்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் தேசத்துக்கு தொண்டாற்றிய கல்விமான்கள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள், இரானுவ வீரர்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப்படும் தருணமாக இதனை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்த எல்லா நிகழ்வுகளிலும் பெரும்பான்மை இனத்தவரையும் இப்தாரில் கலந்து கொள்ளச் செய்தது போல பங்குபற்ற வைக்க வேண்டும்.
இந்த நாட்டை வளப்படுத்துவதில் முஸ்லிம்கள் இன்றியமையாதவர்கள் என்ற உணர்வை நாங்கள் கொடுக்க முடியுமாக இருந்தால் இம்முறைய சுதந்திர தினம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அல்லாஹ்  அருள் புரிவானாக.
Read more...

G.C.E A/l Results out. welpothuwewa school got best Result in our area.

0 comments


jw;NghJ ehlhsuPjpapy; gugug;ig Vw;gLj;jpf;nfhz;bUf;Fk; f.ngh.j cau;ju guPl;ir ngWNgWfs; New;W es;spuT ntspahfpd. nty;nghJntt ghlrhiyapy; ,Ue;J 18 khztu;fs; gy;fiyf;fofk; njupthFk; tha;g;G.


kh\h my;yh`; FUehfy; khtl;lj;jpy; Fspahgpl;ba Nju;jy; njhFjpapy; nfhnga;fNd vDk; gpuNjr rigf;F ngWik Nru;j;Jf;nfhz;bUf;Fk; mgptpUj;jp mile;JtUk; vopy; nfhQ;Rk; vkJ fpuhkk; nty;nghJntt vd;why; kpifahfhJ. ,f;fpuhkj;jpw;F vopY}l;b ngWik Nru;j;J moF ghu;g;gNj ,j;jha;. ,ts tUlhtUlk; jd;tapw;wpy; Foe;ijfis Rke;J rpwe;j Mrhd;fis nfhz;L gy;fiyf;fofj;jpw;F khztu;fis mDg;gpf; nfhz;bUf;fpwJ. nrd;w tUlk; 12 khztu;fis gy;fiyf;fofj;jpw;F njupTnra;ag;gl;ldu;. ,k;KiwAk; ,j;jhapd; Nritia kwf;ftpy;iy. ,k;Kiw 18 khztuf;fs; gy;fiyf;fofj;jpw;F njupTnra;ag;gLk; tha;g;ig ngw;Ws;sdu;. mj;jhapd; ngaiu Nfl;l Mtyha; cs;sPu;fs; Nghy mts; jhd; nty;nghJntt my;/,y;kpah K];ypk; k`h tpj;jpahyak;.
kpfr;rpwe;j ngWNgwhf 2A B (1.90 z score) ,id MI ,y;`hk; vd;w khztd; ngw;Wf;nfhz;Ls;shd;. gy;fiyf;fofj;jpw;F njupTnra;ag;gl;l midj;J khztu;fSf;Fk; vkJ SEEDS rhu;ghf kdkhu;e;j tho;j;Jf;fis njuptpj;Jf;nfhs;tNjhL ,jw;fhf mauhJ cioj;j vkJ mjpgu; MSS K];jgh cl;gl midj;J Mrpupau;fSf;Fk; SEEDS rhu;ghfTk; vkJ Cu; rhu;ghfTk; kdkhu;e;j ed;wpfis njuptpj;Jf;nfhs;fpNwhk;. 

 

Read more...

Wednesday, January 30, 2013

திருமணம் தீனில் ஒரு பகுதி

0 comments


திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ (இப்னு மாஜா)
 
‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
 
இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..
 
குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.
 
‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)
 
  கொடுப்பது  
 
கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.
 
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)
 
‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)
 
‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)
 
‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்ஸ’ (அல்குர்ஆன் 4:24)
 
‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்)
 
‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா? அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!!
 
Read more...

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி சாதனை படைத்தது ஈரான்

0 comments

செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான  மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடும் வகையில், உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியிருப்பதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
கவாஷ்கர் ராக்கெட் மூலம் குரங்கு அனுப்பப்பட்டதாகவும், அது 120 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பின்னர் பத்திரமாக திரும்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குரங்கு உயிருடன் திரும்பி வந்ததாக ஈரானின் உள்ளூர் தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளது. 
 
ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தவில்லை. நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் இந்த சோதனை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நாளில் சோதனை நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
 
கடந்த 2011-ஆம் ஆண்டு குரங்கை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது மீண்டும் அந்த முயற்சியில் வெற்றி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
எனினும் ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை மறுத்துள்ள ஈரான், அமைதியான ஆற்றலுக்காக மட்டுமே அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறது.
Read more...

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா

0 comments



ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரவிருக்கின்றது.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பேரவையின் கூட்டத்தொடரின் போதே இந்த தீர்மானத்தை கொண்டுவரவிருப்பதாக பிரதி உதவிச்செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஊக்குவிக்கும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பிலே 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானத்தை' கொண்டுவரவிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற் மனித உரிமைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டநிலையில் ஒருவருடத்திற்குள் மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருகின்றது.

பரிந்துரைகளை மந்தக்கதியில் அமுலாக்குவது தொடர்பிலேயே  நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கின்றது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குற்றப்பிரேரணை மற்றும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்கள் மற்றும் அறிவிப்புக்களை அமுல்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கரிசனை காட்டியுள்ளனர்.
Read more...

Tuesday, January 29, 2013

கூகுளின் அடுத்த 'X'

0 comments

புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கூகுளின்  'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/googlenexusaa.jpg
இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அறிமுகப்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் செம்சுங், எல்.ஜி. நிறுவனங்களுடன் இணைந்து நெக்சஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை கூகுள் வெளியிட்டிருந்தது.
இதேவேளை மொஸிலா நிறுவனமானது பயர்பொக்ஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஒன்றின் பெயர் Keon , மற்றொன்றின் பெயர் Peak.. டெவலப்பர்களுக்காகவே தற்போது மொஸிலா இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெவலப்பர்கள் இவ் இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை உருவாக்கும் பொருட்டே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதியின் பின்னர் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இவை விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மொஸிலாவானது ஸ்பெய்ன் நாட்டு நிறுவனங்களான கீக்ஸ் போன் மற்றும் டெலிபோனிகா ஆகியவற்றுடன் இணைந்தே இச் ஸ்மார்ட் போன்களை தயாரித்துள்ளது.

Read more...

கடலுக்கு அடியில் ஒரு உலகம்

0 comments


'கடலுக்கு கீழ் இன்றியமையாத வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் கலைஞர் ஒருவர் பிடித்துள்ள புகைப்படங்களானது பிரிட்டனில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீருக்கடியில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்பட கலைஞரான ஜோஸன் லேஸ்லி என்ற 42 வயது கலைஞரே இவ்வாறான புகைப்படங்களை பிடித்துள்ளார்.

இதற்காக அவர் கடலுக்கு அடியில் பல மணித்தியாலங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயல்பாகவே நீருக்கு அடியில் மனிதர்கள் இருப்பதை போன்று இக்கலைப்படைப்புகள் தத்தரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன.

மீன்களை வித்தியாசமாக காட்டவேண்டுமென்ற என்ற எண்ணத்தில் இவர் இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். அதனால் இவர் மனித உருக்களிலான விளையாட்டு பொம்மைகளை பெற்றுகொண்டு கடலுக்கு அடியில் சென்றுள்ளார். இதன்போது மீன்களுக்கு இடையில் அவற்றினை வைத்து வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை பிடித்துள்ளார்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் இராணுவ வீரர்கள்,  சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் என வெவ்வேறு  வகையான காட்சிகள் காணப்படுகின்றன.

அதிகமான காட்சிகள் கடலுக்கடியில் காணப்படும் மணலில் வைத்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.




Read more...

Monday, January 28, 2013

Visvaroofamum Muslimgalum Moulavi Abdul Basith

0 comments
 



Read more...

உங்கள் சிறுநீரகத்திலும் கற்கள் உருவாகலாம்; அவதானமாக இருங்கள்

0 comments


இன்று இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அதிகரித்துக் கொண்டு வரும் ஒரு நோயாக விளங்குவது தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் என்பது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு, மற்றும் அவ்வாறு கழிக்கும்போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதற்கெல்லாம் மூலக்காரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். ஆமாம் மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3 – 4 லீற்றர் வரைக்குமான நீரை அருந்த வேண்டும். அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் எல்லாம் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந்நீரை அப்படியே பருகாது அதனை சூடாக்கி அந்நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.

உங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

அவ்வாறு இக்கல் உருவாகி சிறுநீர் அடைபடுமானால் அதனை வைத்தியர்கள் UltraSound Scan செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அச்சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.

இதற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணம் நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால் அது சிறுநீரில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவுகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.

இதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமா? ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள். இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக் கொள்ளலாம்.
Read more...

புதிய 10 அமைச்சர்கள், 6 பிரதி அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள் நியமனம்

0 comments

Baseer0புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று திங்கட்கிழமை (28.01.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நான்கு முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும், மூன்று போருக்கு பிரதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களது விபரம் வருமாறு:
01) சுசில் பிரேமஜயந் - சுற்றாடல் அமைச்சர்
02) சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
03) பவித்ரா வன்னியாராச்சி - மின் சக்தி அமைச்சர்
04) அனுர பிரியதர்ஷன யாப்பா - பெற்றோலிய வளத்துறை அமைச்சர்
05) லக்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை- அபிவிருத்தி அமைச்சர்
06) லக்மன் யாப்பா அபேவர்தன - நிதி திட்டமிடல் அமைச்சர்
07) ஜயரத்ன ஹேரத் - பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர்
08) துமிந்த திஸாநாயக்க - கல்வி சேவைகள் அமைச்சர்
09) காமினி விஜித் விஜித்த முனி சொய்சா - வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
10) பசீர் சேகுதாவுத் - உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர்
திட்ட அமைச்சர்கள் :
1) நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
2) ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

பிரதி அமைச்சர்கள்:
1) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
2) எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
3) பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
4) அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
5) சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
6) சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை
Baseer
Hisbullah
Faizal
Cader
Read more...

Thursday, January 24, 2013

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

0 comments

By அஷ்ஷெய்க் அகார் முகம்மத் (நளீமி)
இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.
 
ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
 
சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
 
மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும் கொடுத்திருந்தோம்.
 
இது தொடர்பான ஒரு நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.(ஆதாரம் : திர்மிதி)
 
திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானதுளூ ஒருவர் குடும்ப வாழ்வை துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லாவகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப்பாதையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)
 
மணவாழ்வின் பயன்கள்
 
இளைஞர்களை திருமணத்திற்கு தூண்டும் வகையில் திருமணத்தினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசுகின்றது.
 
மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானது. அதைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதும், கௌரவமானதும். பாதுகாப்பானதுமான வழியாக திருமணம் அமைந்திருப்பதாக இஸ்லாம் கருதுகின்றது. குழந்தைச் செல்வத்தைப் பெறுவது திருமணத்தின் மற்றுமொரு விளைவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். திருமணத்திற்கூடாக குழந்தைச் செல்வம் பெறப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கிய எதிர்ப்பார்ப்பு என்பதனாலேயே நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடிய பெண்களை திருமணம் முடிக்குமாறு தூண்டினார்கள்.
 
மனஅமைதியும் உளத்திருப்தியும் திருமணத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொரு நன்மையாகும். எந்த மனிதனும் வாழ்க்கைத்துனையின்றி மனஅமைதியை பெறுவது சிரமசாத்தியமானதாகும். ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கூடாக இணைகின்ற போதே இருவரது வாழ்வும் நிறைவு பெறுகின்றது. இவ்வுண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:
 
நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் அன்பையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
 
தாய்மை உணர்வையும் (ஆழுவுர்நுசுர்ழுழுனு) தந்தை உணர்வையும் (குயுவுர்நுசுர்ழுழுனு) பெறுவதற்கான வழியாக விளங்குவதும் மணவாழ்வாகும். சகோதரன் (டீசழவாநசாழழன) சகோதரி (ளுளைவநசாழழன) முதலான உறவுகள் தோன்றுவதும் திருமணத்தின் வழியிலாகும். இத்தகைய உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. சுறுசுறுப்பு, ஊக்கம், உற்சாகம், பொறுப்புணர்ச்சி முதலான மனித வாழ்வு வளம் பெற தேவையான பண்புகளை மணவாழ்வு வளர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமணம் முடித்தவர்களின் ஆயுள் பிரமச்சாரிகளின் ஆயுளை விட கூடியதாக அமைகிறது என்பதும் ஆய்வுகளுக்கூடாக தெரியவந்துள்ளது. அன்றாட வாழ்வின் பொறுப்புக்களை கணவன் மனைவிக்கிடையேயும் குடும்பத்தின் ஏனையஉறுப்பினர்களுக் கிடையேயும் அழகாக பகிர்ந்து கொண்டு நிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும் திருமண வாழ்வு வழியமைத்துக் கொடுக்கின்றது.
 
சீரான குடும்பங்கள் இணைந்தே பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு சிறப்பான சமூகம் தோன்ற முடியும் என்ற வகையிலும் குடும்ப வாழ்வில் நுழைவாயிலாக விளங்கும் திருமணம் முக்கியத்துவம் பெறுகின்றது.
 
திருமணம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு
 
மணவாழ்வில் நாட்டமும் அதற்குரிய சக்தியும் கொண்டவர் தொடர்ந்தும் திருமணம் முடிக்காமல் இருந்தால் தான் வழிதவறி விடக்கூடும் என அஞ்சும் போது அவர் திருமணம் செய்து கொள்வது கட்டாய கடமையாகும். மணவாழ்வில் நாட்டம் இருந்தும் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இத்தகையவர்களுக்கு நபியவர்கள் பின்வருமாறு வழிகாட்டினார்கள். இளைஞர்களே! உங்களில் மணம்முடிக்க சக்தி பெற்றவர் மணமுடிக்கட்டும். அது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவியாக அமையும். மணமுடிக்க முடியாத நிலையில் இருப்பவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையை அறுக்கக்கூடியதாக இருக்கும்.
 
பின்வரும் அல்குர்ஆன் வசனமும் இத்தகையவர்களுடைய கவனத்திற்குரியதாகும்.
 
(திருமணம் செய்து கொள்ளும் வசதியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ் தனது பேரருளால் அவர்களை வசதிபடைத்தவர்களாக ஆக்கும் வரை அவர்கள் கற்புடன் நடந்து கொள்ளவும்.) (24: 33)
 
ஒருவருக்கு மணவாழ்வில் நாட்டமும் அதற்கான சக்தியும் வசதியும் இருந்த போதிலும் மணமுடிக்காத போது தான் வழிதவறிவிடலாம் என்ற பயம் இல்லாத போது அவர் திருமணம் செய்து கொள்வது சுன்னத்தாகும். இத்தகையவர் கூட மணவாழ்வில் நுழைவதையே இஸ்லாம் வரவேற்கின்றது, வலியுறுத்துகின்றது. ஒரு வணக்கவாளியின் வணக்கம் அவர் திருமணம் முடிக்காதவரை முழுமையடையாது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்று சிந்தனைக்குரியதாகும்.
தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவரும், குடும்பத்திற்கு தேவையான வாழ்க்கைச் செலவை வழங்க முடியாதவரும் திருமணம் முடித்தல் ஆகாது என்பதும் ஷரீஆவின் நிலைப்பாடாகும்.
 
மணவாழ்க்கை நடாத்தக் கூடிய சக்தி, வாய்ப்பு வசதிகள் இருந்தும் மணவாழ்வை துறந்து பிரமச்சாரியாக வாழ்வதை, துறவரம் பூணுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையைப் புறக்கணித்து வணக்க வழிபாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய சில நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு கண்டித்து நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் காணலாம். உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இந்த வகையில் நபியவர்களால் வழிப்படுத்தப்பட்டவர்களாவர்.

இஸ்லாமிய திருமண ஒழுங்குகள்:

துணைத் தெரிவு
 
திருமணம் என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒருவகைத் துவக்கமாகும். மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். கணவன் என்பவன் மனைவியின் வாழ்க்கைத் துணைவனாவான். ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் தான் இல்லற வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் அம்சங்கள் பல காணப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இஸ்லாம் துணைத் தெரிவில் நற்குணத்திற்கும் நன்னடத்தைக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையையும் கொடுக்குமாறு வழிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நோக்கில் ஓர் ஆண் தனக்குரிய துனையைத் தெரிவு செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.
 
நற்பண்புகளும் நன்னடத்தையும்
 
இறை நம்பிக்கையும் மறுமைப் பற்றிய விசுவாசமும் இல்லாத ஒருவரிடம் நற்பண்புகளையோ நன்னடத்தையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த வகையில் துணைத் தெரிவில் மார்க்கப் பற்று கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். இது பற்றிப் பேசும் சில நபிமொழிகள் பின்வருமாறு.
 
   1. மார்க்கப் பற்றுடையவள் மூக்கறுப்பட்ட அடிமையாக இருப்பினும் அவளே சிறந்தவள் (இப்னு மாஜா)
   2. மார்க்கமுள்ள பெண்ணை தேடி அடைந்து கொள், இல்லாத போது நீ அழிந்து விடுவாய் (புகாரி, முஸ்லிம்)
   3. உலகம் என்பது இன்பப் பொருளாகும். அதன் இன்பப் பொருட்களுள் சிறந்தது சாலிஹான பெண்ணாகும் (முஸ்லிம்)
 
அழகும் அடக்கமும் பணிவும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு பெண்ணே இஸ்லாமிய நோக்கில் சாலிஹான பெண்ணாக கொள்ளப்படுகின்றாள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்;தில் சிறந்த, சாலிஹான பெண்ணுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் சொன்னார்கள்.
'நீ அவளைப் பார்த்தால் உன்னை மகிழ்விப்பாள். நீ அவளுக்கு கட்டளையிட்டால் உடன் கட்டுப்படுவாள். நீ அவளை வைத்து சத்தியம் செய்தால் அதனை நிறைவேற்றி வைப்பாள். நீ வீட்டில் இல்லாத போது தன்னையும் உன் பொருளையும் பாதுகாத்துக் கொள்வாள். (நஸாஈ)
 
குழந்தைப் பாக்கியமுடையவளாக இருத்தல்

சந்ததியை விருத்தி செய்தல் மணவாழ்வின் நோக்கங்களுள் ஒன்றாகும். எனவே ஒருவர் தனக்குரிய துணையைத் தெரிவு செய்கின்ற போது குழந்தைகளைப் பெறக்கூடிய பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
 
அதிக அன்பும் குழந்தைப் பேறும் கொண்ட பெண்களை மணமுடிப்பீர்களாக. மறுமையில் நான் ஏனைய சமூகங்களுக்கு முன்னால் உங்களது எண்ணிக்கையை வைத்து பெருமைப்படுவேன்.
 
ஒரு பெண் குழந்தைப் பேறுடையவளா என்பதை அவளது குடும்பத்தில் திருமணம் முடித்துள்ள ஏனைய பெண்களை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.
 
அழகு
 
அழகை விரும்புவது மனிதர்களின் இயல்பான பண்பாகும்.  அழகுணர்ச்சி என்பது அல்லாஹ்வின் பண்பாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பின்வரும் நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது.
 
(அல்லாஹ் அழகானவன். அவன் அழகை நேசிக்கின்றான்.)
அழகை அடைந்து கொள்ளாத உள்ளம் நிறைவு பெறாது. அழகு என்பது ஒவ்வொருவரதும் பார்வை, நோக்கு, இரசனை, விருப்பு வெறுப்பு முதலானவற்றைப் பொறுத்து வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்த வகையில் திருமணத்தின் போதும் ஒருவர் தனது துணையின் அழகை கவனத்திற் கொள்வது பிழையானதல்ல. ஒரு முறை அல்முகீரா இப்னு ஷுஃபா (ரழி) என்ற நபித் தோழர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முன்வந்தார். இது பற்றி நபியவர்களிடம் அவர் குறிப்பிட்ட போது அவர்கள் பின்வருமாறு ஆலோசனைக் கூறினார்கள்.
நீர் போய் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அதுவே உங்கள் இருவர் மத்தியிலும் அன்பும் பிணைப்பும் நிலைப்பதற்கு வழியமைக்கும்.
திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்து அவதாணிப்பதற்காக குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அனுப்பி வைப்பதற்கும் ஸுன்னா அனுமதி வழங்கியிருப்பதைக் காணலாம்.
 
கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்தல்
 
ஒப்பீட்டு ரீதியில் ஏலவே திருமணம் முடித்த ஒரு விதவையை விட கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்வது நல்லது என்பது நபியவர்களின் வழிகாட்டலாகும். ஒரு முறை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் ஒரு விதவையைத் திருமணம் முடித்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அந்நபித்தோழரைப் பார்த்து,'உமக்கு ஒரு கன்னிப் பெண் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தனது மரணமான தந்தைக்கு பல சிறு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களை பராமரிப்பதற்கு ஒரு விதவைப் பெண்ணே பொருத்தமானவள் என்றும் அதனால்தான் தான் ஒரு விதவையை மணம் முடித்ததாகவும் விளக்கம் சொன்னார்.

வயது, குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்த்து, பொருளாதார நிலை முதலானவற்றை கவனத்திற் கொள்ளல்
 
இல்லற வாழ்வு வெற்றிகரமாக அமைய மேற் குறித்த அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் மணமுடிக்க விரும்பிய போதும் அவர்களுக்கு மணமுடித்து வைக்காமல் அலி (ரழி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தமை கவனிக்கத்தக்கதாகும்.
ஒரு பெண்ணும் தனக்குரிய வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.
 
ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாதுளூ கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும் என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள் (புகாரி, அஹ்மத்)
 
ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மாணிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொருத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும் (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)
 
மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்;திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க ஷவலி முனைகின்ற போது அதனை மறுக்கின்ற நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.
 
ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும். பொருள் விடயத்திலேயே ஷரீஅத் இத்தகைய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதாக இருந்தால் முழு வாழ்வுடனும் தொடர்பான திருமண விடயத்தில் எவ்வாறு ஷவலி தான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையைப் பெறுவார்?!! உயிர், பொருளை விட மேலானது. திருப்தியில்லாத நிலையில் துவங்கும் குடும்ப வாழ்வினால் விளையும் கேடுகளுக்கு முன்னால் பொருள் நஸ்டம் அலட்டிக் கொள்ளத்தக்கதல்ல.
 
ஆயினும் ஒரு யுவதி அனுபவ குறைவினாலும் முதிர்ச்சியின்மைக் காரணமாகவும் சிலபோது தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்வதில் தவறு இழைத்து விட வாய்ப்புண்டு. இதனால் ஷரீஅத், தனது பொறுப்பில் இருக்கும் யுவதிக்கான கணவனைத் தெரிவு செய்து மணமுடித்து வைக்கும் பொறுப்பை தந்தை முதலான ஷவலி களுக்கு வழங்கியுள்ளதோடு தனது ஷவலி யின் தெரிவை ஏற்கும் உரிமையையும் மறுக்கும் உரிமையையும் அந்தப் பெண்ணுக்கு அளித்துள்ளது. அவ்வாறே தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவனை தனது பொறுப்பில் உள்ள பெண் தெரிவு செய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் ஷவலி க்கு வழங்கியுள்ளது.
 
ஆயினும் இன்று நடைமுறையில் ஒரு பெண் தனக்குரிய கணவனை சுதந்திரமாக தெரிவு செய்யும் உரிமையை பல போது இழந்து விடுகின்றாள். அவளது விருப்பு, வெறுப்பை விட தாய், தந்தையின் விருப்பு, வெறுப்பே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. தான் விரும்பாத போதும் தந்தையின் விருப்பம், தாயின் தெரிவு என்பதற்காக ஒருவருக்கு வாழ்க்கைப்படும் நிலை பெண்களில் பலருக்கு ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
 
இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்றோர் இது விடயத்தில் மிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
 
ஒரு தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு ஷவலி யாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும்ளூ இல்லாத போது செல்லுபடியாகாது. இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும்.
 
ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான ஷவலி மாரே தீர்மாணிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.
 
ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்கு தகுதியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்கு தகப்பன் முதலான ஷவலி மாருக்கு உரிமையுண்டு என்பதே இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
எனவே, ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பெற்றோர் முதலானோர் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தனது பொறுப்பில் உள்ள பெண் பிள்ளையின் சார்பில் அவளுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது ஷவலி கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
 
திருமணம் என்பது ஒருவகை அடிமைத்தளையாகும். எனவே ஒருவர் தனது பெறுமதிமிக்க பெண்ணை தான் யாரிடம் ஒப்படைக்கின்றார் என்பதனைக் கவனத்திற் கொள்ளட்டும் என்பது நபி வாக்காகும். (பைஹகி)
 
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பின்வரும் கூற்று கனயீர்ப்பைப் பெறவேண்டிய ஒன்றாகும்.
 
பெண்பிள்ளைத் தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவள் திருமணத்திற் கூடாக தப்பிக் கொள்ள முடியாத ஒரு வகை அடிமையாக மாறுகின்றாள். ஆனால் ஓர் ஆணைப் பொறுத்தவரையில் அவனுக்கு இலகுவில் விவாகரத்தைப் பெரும் வாய்ப்புண்டு.
 
இந்த வகையில் ஒருவர் தன் கீழ் இருக்கும் பெண்ணுக்கு ஒரு பாவியையோ அல்லது அநியாயக்காரனையோ அல்லது குழப்பவாதியையோ திருமணம் செய்து வைப்பது பெரும் குற்றமாகும். பிழையான தெரிவை செய்ததற்காக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உற்பட வேண்டியிருக்கும்.
 
எவர் தனது பெண்ணை ஒரு பாவிக்கு திருமணம் முடித்து வைக்கின்றாரோ அவர் அவளுடனான தனது இரத்த உறவை அறுத்தவராவார் (இப்னு ஹிப்பான்) என்பது நபிமொழியாகும்.
 
சுருங்கக் கூறின் ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
 
மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், நன்னடத்தை
 
சன்மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாத, பாவங்களை தவிர்ந்து நடக்காத ஒரு பாவிக்கு கற்பொழுக்கமுள்ள ஒரு பெண்ணை திருமண முடித்து வைக்கலாகாது. 'பாவத்தில் விடாப்பிடியாக இருக்கும் ஒருவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கலாகாது எனக் கூறுகின்றார்கள் இமாம் இப்னு தைமியா அவர்கள்.
 
ஒரு முறை ஒருவர் ஹஸன் (ரழி) அவர்களிடம் வந்து, 'எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளை நான் யாருக்கு திருமணம் முடித்து கொடுக்கட்டும் என வினவினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழும் ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பீராக. அத்தகையவன் அவளை விரும்பிவிட்டால் கண்ணியமாக நடாத்துவான் அவளிள் வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ அவளுக்கு அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.
 
பின்வரும் நபி மொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையை திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும்.

மணவாளனின் குடும்பப் பின்னணி
 
அறபிகள் குடும்பப் பின்னணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவர். குடும்பம், குலம், கோத்திரம் பார்ப்பதை சட்ட அறிஞர்கள் ஷகபாஅத்| எனும் பெயரில் வழங்குவர். தகுதிபார்த்தல், பொருத்தம் பார்த்தல் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு திருமணத்தின் போது தகுதி பார்க்க முடியுமா? எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து மார்க்கப் பற்றும் நற்குணமும் நன்னடத்தையும் ஒரு மணவாளனுக்கு போதுமான தகமைகளாகும். இதனாலேயே அபீசீனிய அடிமையாக இருந்த பிலாலுக்கு குறைஷியரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களின் சகோதரி திருமணம் முடித்து வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகளான ஸைனபை தனது அடிமையாக இருந்த ஸைதுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.எந்தவொரு முஸ்லிம் ஆணும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பொறுத்தமானவர்ளூ தகுதியுடையவர் என்ற மிக முற்போக்கான மார்க்கத் தீர்ப்பை இமாம் இப்னு ஹஸ்ம் வழங்கியுள்ளார்.
 
ஆயினும் நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் முதலான உளவியல் பிரச்சினைகள் உருவாகி குடும்ப வாழ்வு சிக்கலாகி விடக் கூடாது என்பதற்காகவே சில இமாம்கள் திருமணத்தின் போது தகுதி பார்த்தலை ஒரு நிபந்தனையாக குறிப்பிட்டார்கள்.
 
மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் ஏலவே திருமணம் முடிக்காத ஒருவரை மணவாளனாகத் தெரிவு செய்வது வரவேற்கத்தக்கது. அவ்வாறே அவரின் பொருளாதார வசதியை கவனத்திற் கொள்வதும் பிழையானதல்ல. ஆனால் மார்க்கப்பற்றும் நற்குண, நல்லொழுக்கமுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெறல் வேண்டும்.
 
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் இஸ்லாம் கூறும் இத்தகைய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயற்பட்டால் திருப்தியான, நிறைவான இல்லற வாழ்வு கிட்டும். இவை புறக்கணிக்கப்படும் போது குடும்ப வாழ்வு கசக்கும்ளூ கவலையும் கைசேதமுமே கடைசி வரைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
 
Courtesy: http://www.sheikhagar.org
Read more...

டெங்கு காய்ச்சலும்:தடுக்கும் வழிமுறைகளும்

0 comments

டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
 
நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
 
டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். 
 
ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் கொள்கின்றனர்.. இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சில முக்கிய தகவல்களை அறிந்துகொள்வது அவசியமாகும்
 
டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை நுளம்புகள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 
டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
 
இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
 
டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.
 
டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
 
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
 
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
 
ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.
Read more...

புதிதாக கட்டப்படும் பள்ளிகள் ஜிஹாதுக்கான பங்கர்கள்: பொதுபலசேனா

0 comments









புதிதாக நாட்டில் நிர்மாணிக்கப்படும் அனைத்து பள்ளிவாசல்களும் ஜிஹாதுக்கான பங்கர்கள் என பொதுபலசேனா  குற்றஞ்சாட்டியது. கொழும்பில் இன்று மாலை அவ்வமைப்பின் தலைவரும், செயலாளரும் இணைந்து தமது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இக்குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பள்ளிவாசல்களை புதிதாக அமைப்பதற்கு முஸ்லிம்களில் வஹாபிகள் முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவை ஜிஹாத்துக்கான பங்கர்களாக பயன்படுத்தப்படவுள்ளன. நாம் பாரம்பரிய  முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாதை ஊக்குவிக்கும் வஹாபி மற்றும் சலபி பிரிவினரின்  செயற்பாடுகளையே  எதிர்க்கிறோம்.
முதலில் எமது நாட்டுப்பிரதமரை நாட்டிலிருந்து விரட்டவேண்டும். அல் சபாப் அமைப்புக்கு நிதி உதவி வழங்கும்   சவூதி அரேபிய புலனாய்வுத்துறை தலைவரான ஜமான் அல் சஹ்ரானுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிரதமரே. ஜமானின்  நிதிப்பங்களிப்பிலேயே பீஸ் ரி.வி. இயங்குகின்றது. தற்போது நாட்டில் 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜிஹாதை ஊக்குவித்து வருகின்றன. இவர்கள் மூலமே ஜிஹாத்துக்கான நிதி வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.எமது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை நாம் பாதுகாப்போம் என தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் உயர் பதவி வகிக்கும் உலமாக்கள் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் மீதும் பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் ஹக்கீம், ஹசன் அலி எம்.பி. ஆகியோருக்கு எதிராகவும் பொதுபலசேனாவின் தலைவரும் செயலாளரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அத்துடன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அடுத்துவரும் 7 நாட்களுக்குள் கலாசார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன தமக்கு வழங்க வேண்டும் என  தெரிவித்துள்ள பொதுபலசேனா தவறும் பட்சத்தில்  தமது அமைப்பு  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரித்தது.
Read more...

Wednesday, January 23, 2013

கூகுளின் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு!

0 comments


 


இணைய ஜாம்பவானான கூகுள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய திட்டமொன்றில் முதலிடவுள்ளது.

இம்முதலீட்டை ஐக்கிய இராச்சியத்திலேயே மேற்கொள்ளவுள்ளது.
லண்டனில் சுமார் 10 இலட்சம் சதுர அடியில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் பணியை கூகுள் இதன் மூலம் முன்னெடுக்கவுள்ளது.
http://www.virakesari.lk/image_article/moneygooglea.jpg
இக் கட்டிடமானது கூகுளின் ஐக்கிய இராச்சியத்துக்கான தலைமையகமாக செயற்படவுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகள் இவ்வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு  2016 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளன.
தற்போது கூகுளின் ஐக்கிய இராச்சியத்துக்கான அலுவலகங்கள் விக்டோரியா மற்றும் ஹோல்போர்ன் பிரதேசங்களில் செயற்பட்டு வருகின்றன.
எனினும் புதிய கட்டிடத்தை நிர்மாணித்ததன் பின்னர் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்படுமென கூகுள் தெரிவிக்கின்றது.
கூகுள் போலவே மற்றைய தொழிநுட்ப நிறுவனங்களான அப்பிள், பேஸ்புக் போன்றவையும் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது - அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி)

0 comments


Rauff-Zain0பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்வதே இஸ்லாத்தின் அடிப்படை. முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழும் ஏனைய சமூகங்களுடன் சகிப்புடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. இந்த சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது என அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி) தெரிவித்தார்.

மர்கஸுஸ் ஸலாமாவின் இரு மாதங்களுக்கிடையில் நடைபெறும் “ஹதீஸுஸ் ஸுலஸா“ நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (22.01.2013) மாலை 7.00 மணிக்கு ஸலாமா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இஸ்லாம் யுத்தத்தின் அல்லது வன்முறையின் மதம் என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையுமில்லை. இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும் என்பதுதான்.
அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக் குறிக்கும் “ஹர்ப்“ எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால், “சில்ம்“ எனப்படும் சமாதானத்தைக் குறிக்கும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இஸ்லாம் கூறும் சமாதான சகவாழ்வின் ஐந்து அடிப்படைகளை எடுத்துக் கூறினார்.
  1. இஸ்லாத்தின் கொள்கைச் சுதந்திரம். இஸ்லாம் மதச் சுதந்திரத்தை முழுமையாக அங்கீகரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ உரிமை உண்டு. ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது. மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இந்த கொள்கைச் சுதந்திரம் உள்ளதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
  2. மனிதர்கள் அனைவரும் கண்ணியமானவர்கள். “ஆதத்தின் சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்திவிட்டோம். கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்தோம்” என அல்குர்ஆன் மனித கண்ணியத்தை பறைசாற்றுகின்றது.
  3. மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பினங்கள். “மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம் பின்னர் பல்வேறு கோத்திரங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நீங்கள் பரஷ்பரம் ஒருவரைப் புரிந்து கொள்வதற்காக“
  4. மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள். றஸூல் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்னரும் “அல்லாஹ்வே நீயே ஒரே இறைவன் என நான் சாட்சி பகர்கின்றேன். முஹம்மத் உனது தூதர் எனவும் சாட்சி பகர்கின்றேன். மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என சாட்சி பகர்கின்றேன்“ எனப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 5 விடுத்தம் பர்ளான தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ், இறைத்தூதரைத் தெடர்ந்து இந்த சகோதரத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது.
  5. மனித குலத்திற்கு நன்மை பயப்பது ஒவ்வொரு மனிதர் மீது கடமை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பத்தினர். அவர்களில் அல்லாஹ்வின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவர். (நஸாயி, அபூதாவூத்)
மேற்கூறிய ஐந்த அடிப்படைகளையும் வலியுறுத்தும் வகையில் ஸூறதுல் மும்தஹினாவின் எட்டாவது வசனம் அமைந்துள்ளது.
“மார்க்கத்தில் உங்களோடு யுத்தம் செய்யாதவர்கள் மற்றும் உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு உபகாரம் செய்வதை, நீதி செய்வதை விட்டு அல்லாஹுதஆலா உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவேரை விரும்புகின்றான். (மும்தஹினா-8) எனத் தெரிவித்தார்.
Rauff-Zain1
Read more...