Banner 468 x 60px

 

Monday, January 21, 2013

நிலையான தர்மம்

0 comments

sadaqahகேள்வி: எனது தந்தை மரணித்து விட்டார். அவருக்காக நான் அல்குர்ஆன் மனனத்திற்கான மத்ரஸா அல்லது மரங்களை நடுதல் போன்ற நிலையான தர்மங்களை செய்ய விரும்புகிறேன். இது சரியானதா?

பதில்: ஷெய்க் வஹீத் ஆதிப்
நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியவை ஒரு அடியான் மரணித்த பிறகும் அவனுக்கு தொடர்ந்தும் கூலி தரக்கூடியவையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: "ஒரு மனிதன் மரணித்தால் பின்வரும் மூன்று விடயங்களைத் தவிர அவனது அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டுவிடும். ஒன்று: நிலையான தர்மம். இரண்டு: பிரயோசனமான அறிவு. மூன்று: துஆ கேட்கக் கூடிய ஸாலிஹான பிள்ளை." (முஸ்லிம்)
அல்குர்ஆன், ஸுன்னாவிலே வந்துள்ள சில நிலையான தர்மங்களுக்கான சாதனங்கள் வருமாறு:
01. கிணறு அமைத்தல், நீர் புகட்டுதல்: றஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "மிகச் சிறந்த ஸதகா நீர் புகட்டுவதாகும்." (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)
02. உணவளித்தல்: நபி (ஸல்) அவர்களிடம் "இஸ்லாத்தில் சிறந்தது எது?" என வினவப்பட்டபோது அவர்கள்: "உணவளிப்பது, அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவது" என பதிலளித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)
03. பள்ளிவாயில்கள் அமைத்தல்: நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "யார் அல்லாஹுதஆலாவின் திருப்தியை நாடி பள்ளிவாயிலை அமைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகை அமைக்கிறான்." (புஹாரி, முஸ்லிம்)
04. அறிவு வளர்ச்சிக்கு செலவழித்தல், அல்குர்ஆன் பிரதிகளை விநியோகித்தல், வழிப் போக்கர்களுக்கும் அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுத்தல் போன்றவை.
றஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு முஃமின் மரணித்த பின்னரும் அவனுக்கு தொடர்ந்து நன்மை தரக்கூடியது கற்பிப்பதும் அறிவைப் பரப்புவதும் ஆகும் அல்லது அவன் விட்டுச் செல்லும் ஸாலிஹான பிள்ளை அல்லது அவன் வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லும் அல்குர்ஆன் பிரதியாகும் அல்லது கட்டிய பள்ளிவாயிலாகும் அல்லது வழிப்போக்கனுக்கு அமைத்துக் கொடுத்த வீடாகும் அல்லது அமைத்துக் கொடுத்த குளமாகும் அல்லது தனது செல்வத்திலிருந்து ஆரோக்கியமான நிலையில் வழங்கிய ஸதகாவாகும். இவை அவன் மரணித்த பிறகும் அவனுக்கு நன்மையைக் கொண்டு தரும்." (இப்னு மாஜா)
சகோதரனே! சில வேளைகளிலே ஸதகா செய்வது மிகச் சிறந்ததாக இருக்கும். இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "றஸூல் (ஸல்) அவர்கள் அதிகமாக தர்மம் செய்பவராக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை றமழானில் சந்திக்கும்போது மிக அதிகமாக தர்மம் செய்பவராக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் றமழானிலே ஒவ்வொரு நாள் இரவும் நபியவர்களை சந்தித்தது, அல்குர்ஆனை படித்துக் கொடுப்பவராக இருந்தார்கள். றஸூல் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்வார்கள்." (புஹாரி, முஸ்லிம்)
அவ்வாறே துல் ஹஜ்ஜின் ஆரம்ப 10 நாட்களில் செய்யும் ஸதகாவுக்கும் நன்மை காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "இந்த (பத்து) நாட்களில் செய்யும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரியவை ஆகும்." அப்போது ஸஹாபாக்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனை விடவுமா?" என வினவினார்கள். அதற்கு நபியவர்கள்: "அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனை விட. ஆனால், அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தோடு சென்று, பின்னர் தனது உயிரும் உடமையும் இழந்தவரைத் தவிர." (புஹாரி)
சகோதரனே! தர்மம் செய்வது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கும் மிகச் சிறந்த அமல் என்பதனை அறிந்திருப்பாய்.
மனிதர்கள் மிகக் கடுமையான தேவையில், தெளிவான வறுமையில் இருக்கும்போது உதவுவது மிகச் சிறந்த தர்மமாகும்.
"அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். (அது) ஓர் அடிமையை விடுவித்தல் அல்லது பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். உறவினரான ஓர் அநாதைக்கோ அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்)." (90:10-16)
ஒரு அடியானுக்கான அல்லாஹுதஆலாவின் மிகப் பெரிய அருள் அவன் பணம் படைத்தவனாகவும் கொடை கொடுப்பவனாகவும் இருப்பதாகும். அவனது அருளின் பூரண தன்மை அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் விடயத்தில் உதவியாக இருப்பதாகும். "மிகச் சிறந்த செல்வம் ஸாலிஹான மனிதனில் கையில் இருக்கும் செல்வமாகும்." (அஹ்மத், அதபுல் முப்ரத்- புஹாரி)

0 comments:

Post a Comment