இப்பெண்கள் கர்ப்பம் தரித்த வேளையில் தொடர்ந்து ஒருவகை மதுபானத்தை அருந்துவதால் இவ்வாறு குழந்தைகள் அங்கவீனர்களாக பிறப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அங்கவீனமான குழந்தைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் மாதாந்தம் 250 ரேங்க்களை (3,705 இலங்கை ரூபா) தொகையாக வழங்கி வருகின்றது.
இதனை கருத்தில்கொண்ட மேற்படி பெண்கள் தமது குழந்தைகளை வேண்டுமென்றே அங்கவீனர்களாக பிரசவிப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்; கீழ் வாழும் மக்கள் உள்ளனர்.
இவர்கள் தமது நாளாந்த வருமானத்தை பெறுவதிலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்நிதியினை எப்படியாயினும் அதிகரித்துகொள்ள வேண்டுமென்ற நோக்கில் கர்ப்பிணியாக இருக்கும் போதே இவர்கள் தமது குழந்தைகளை அங்கவீனர்களாக்க முயலுகின்றனர்.
மேற்படி பெண்கள் பெட்டரி அசிட் கலந்த ஒருவகை மதுபானத்தை அருந்துகின்றனர்.
இவ்வாறான மதுபானங்கள், மேற்படி கிராமத்தில் 'சீ பீன்ஸ்' என்ற அழைக்கப்படும் கூடாரங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
'இந்த மதுபானத்தை அருந்தாவிட்டால் நான் நோயாளியை போன்று இருப்பேன்' என கர்ப்பிணிப்பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'நான் நாளொன்றுக்கு 6 அல்லது 7 போத்தல்கள' மதுவை அருந்திவிடுவேன்' என மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் இச்செயற்பாடு காரணமாக இப்பகுதியில் அங்கவீனமாகி பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2002 ஆம் ஆண்டு அதிகரித்துக் காணப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகள், பேச்சுத் திறன் அற்றவர்களாக, உடல் குறைபாடு உடையவர்களாக, நடத்தை மற்றும் கற்றல் செயற்பாடுகளில் வித்தியாசமான நடத்தைகோலங்களை வெளிபடுத்துபவர்களாக காணப்படுகின்றனர் என அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment