(பதுளையிலிருந்து மொஹமட் பாயிஸ்)
மஹியங்கனையில் முஸ்லிம் பள்ளிவாசலோ அல்லது சமய மதத்தளமொன்றோ இல்லை அங்கு
எனது சொந்தக்கட்டிடமொன்றில் எனது குடும்பத்தினர்கள் வழிப்பாடுகளில்
ஈடுப்பட்டவர்களே தவிர பள்ளிவாசல் இல்லை என சீனிமுஹமது ஹாஜியார் ஒப்பமிட்டு
பத்திரிகைகளில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே நாம் சீனி ஹாஜியாரை தொலைபேசி மூலம்
தொடர்புக் கொள்ள நாள் முழுவதும் முயற்சித்தப் போதும் அவரது தொலைபேசி
துண்டிக்கப்பட்டு இருந்தது விடாமுயற்சியால் இரவு மீண்டும் தொலைபேசி தொடர்பை
மேற்கொண்டப்போது அவர் வாகன மொன்றில் பயணித்துக் கொண்டு இருப்பதாகவும்,
தொலை பேசி அழைப்புக்கு பதில் அளிக்கமுடியாது எனவும் தெரிவத்தார். அதனுடன்
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதனையடுத்து மகியங்கனை முஸ்லிம்கள்
தொழுதுவந்த இடத்திற்கு முன்னின்று செயற்பட்டவரும், சீனிமுஹம்மது அவருடன்
குறித்த விடயங்கள் தொடர்பில் இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படும்
சுலைமான் ஹாஜியாருடன் தொலைபேசி தொடர்பை மேற்கொண்டேன். அதன்போது அவர்
தெரிவித்த விடயங்கள் மஹியங்கனை பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு முக்கியக்
காரணம் மீடியாக்களேயாகும். ஊடகங்கள் யாரும் மஹியங்கனைக்கு பிரச்சினைப்படும்
போது வரப்போவதில்லை. நீங்கள் எல்லாம் செய்த வேலைகளினாலேயே இந்த நிலை
ஏற்பட்டது.
மஹியங்கனையில் பள்ளிவாசல் உண்டா? என கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்
மஹியங்கனையில் முஸ்லிம் பள்ளிவாசல் என்று ஒன்று இல்லை அப்படி யார் சொன்னது.
இதைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லாமே நீங்கள் மீடியாக்கள் செய்த
வேலைத்தான் என்றார்.
சரி தற்போது நடந்தவை நடந்து முடிந்து விட்டது. முன்னால் ஜனாதிபதி பிரேமதாச
காலத்தில் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட காணியில் மீண்டுமொரு பள்ளிவாசலை
அமைக்கலாமே என கேட்ட போது தற்போது அதில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர்
கட்டிடம் ஒன்றை அமைத்து அதனை சொந்தமாக்கி கொண்டுள்ளார். அதில் எதையும்
செய்ய முடியாது. ஆம் அப்படியென்றால் மஹியங்கனை புண்ணிய பூமிக்கு வெளியே
முஸ்லிம்கள் கூடுதலாக நடமாடும் பிரதேசம் ஒன்றில் பள்ளிவாயில் ஒன்றை அமைக்க
முயற்சி செய்யலாமே. என்று கேட்டப்போது இங்குள்ள காணிகள் எமது தாய்
தந்தையருக்கு சொந்தமானதல்ல என தெரிவித்தார். அத்துடன் அவரது தொலைபேசி
துண்டிக்கப்பட்டது.
எல்லா விடயங்களும் அரங்கேறி விட்டன. அனைத்தும் நீரில் கரைத்த சீனியை
போன்றது. இரவு காத்த கிளிளை போன்றும் ஆகியுள்ளது. இருப்பினும் இங்கு ஓரிரு
நாட்கள் தொழுகை நடாத்தப்படவில்லை. சுமார் 21 வருட காலங்கள் தொழுகை
நடைப்பெற்றுள்ளது. அதிலும் அண்மை காலத்தில் இடம்பெற்ற தேர்தல் ஒன்றின் போது
மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் மஹியங்கனைக்கு வருகை தந்த போது அவரை கொண்டு
தேர்தல் களத்தில் குறித்த அமைச்சர் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் ஒப்புதலின்
பேரில் முதலாவது ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. அன்றே ஒரு தூர நோக்கோடு
இந்த பிரச்சினையை நோக்கியிருந்தால் இந்த நிலை இங்கு ஏற்பட்டிருக்காது.
ஐவேளை தொழுகையை மாத்திரம் அங்கு நிறைவேற்றி வந்திருந்தால் நிலைமை
வேறாகியிருக்கலாம். இதற்கு அப்பால் பள்ளிவாசலுக்கு அண்மித்த கட்டிடத்தையும்
இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் அன்பளிப்புகளால் சுமார் 80 இலட்சம் ரூபா
செலவில் (தெரிவிக்கப்படுகிறது) பள்ளிவாசலுக்கு என்று ஏன் வாங்கப்பட்டது.
அதுமாத்திரமல்ல தற்போது தொழுகை நடாத்தப்பட்டு வரும் இடமும் நவீன வசதிகளுடன்
புணர்நிர்மாணிக்கப்பட்டது ஏன். அன்று தொட்டே பள்ளிவாசலை வகுப் சபையில்
பதிவு செய்யுமாறு பல தரப்பினரும் கூறிய போதும் அதற்கு செவிடன் காதில் ஊதிய
சங்கு போன்று எவ்வித அக்கரையும் இல்லாமல் நிர்வாக சபையினர் செயப்பட்டமை
இந்த நிலைமையை உள்நோக்காக கொண்டா பள்ளிவாசல் பெயரில் பிரதேச சபையில் நீர்
கட்டண பற்றுச்சீட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏன் பள்ளிவாசல்
பெயரில் பற்றுசீட்டு வழங்கப்படவேண்டும். பள்ளிவாசல் என்ற தோரணையில்
இவர்களின் உள்நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள வேண்டியா இவைகள்
மேற்கொள்ளப்பட்டது. பள்ளிவாசல் மூடப்படுவதற்கு முன்னைய வாரத்தில் ஹராம்
ஆக்கப்பட்ட மிருகத்தின் உடற்பாகங்கள் வீசப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட போது
அவைகளை உடனடியாக அங்கிருந்து ஊடகங்களுக்கு தெரிவித்து விடயத்தை
பூதாகரமாக்கியவர்கள் யார்?
அதனையடுத்து பள்ளிவாசல் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹகீமுடன் பேச்சுவார்த்தை
மேற்கொண்டு புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியானது. அப்படியென்றால்
பள்ளிவாசல் என்ற விடயமாக ஏன் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்.
பள்ளிவாசல் பூட்டப்பட்ட பிறகு பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெறாதென்று
அதன் கதவில் அறிவித்தல் தொங்க விடப்பட்டது ஏன். இந்த நிலையில் அங்கிருந்து
ஊடகங்களுக்கு உடனுக்குடன் பள்ளிவாசல் பெயரை பயன்படுத்தி செய்திகளை
கொடுத்தவர்கள் யார்? பள்ளிவாசல் மூடியவுடனேயே சம்பந்தப்பட்ட மாகாண சபை
அமைச்சருடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடாத்தி சாதகமான நிலையை
ஏற்படுத்தியிருக்கலாம். அவைகள் ஒன்றும் செய்யாமல் அனைத்தையுமே உலகறிய
செய்தவர்கள் பள்ளிவாசல் ஒன்று இல்லை என்ற அளவிற்கு வங்ரோத்து நிலையை
அடைந்திருப்பதற்கான பின்நோக்கம் எது என்பது தெளிவில்லை. இதற்கு அரசியல்
காரணங்களும், அல்லது தனது சொந்த சுயநலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதற்காக இறை இல்லமாம் அல்லாஹ்வின் பள்ளிவாசலை காட்டி கொடுத்து
விட்டார்களா? முஸ்லிம்களின் வரலாற்றில் எப்பொழுதும் கோலைகளாக இருந்ததில்லை.
என்பது எமது முன்னோர்களின் வரலாறுகள் சான்று பகர்கின்றன. போராட்டங்களும்
தியாகங்களுமே வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஸகாத் எனும் தூயக்கடமை சரியாக
மேற்கொண்டால் எமது உடமைகளும் சொத்துக்களும் பாதுகாக்கப்படும் என்று இறைவன்
கூறியிருப்பது இவர்களுக்கு தெரியவில்லையா. அனைத்தும் இடம்பெற்று முடிந்து
விட்டது. மஹியங்கனை ஊடாக பயணிக்கும் முஸ்லிம்களும் பல்வேறு தேவைகளுக்காக
அங்கு வரும் முஸ்லிம்களும் இன்று தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத
துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு இவர்கள் இறைவனிடம் பொறுப்பு
சொல்லி ஆக வேண்டும்.
பள்ளிவாசல் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட நிதிகள் மற்றும் ஏனைய சொத்துகள்
இலங்கையில் உள்ள பொது பைத்துல் மஹல் ஒன்றுக்கு அவை வழங்கப்பட வேண்டும்.
பள்ளிக்கென்று வாங்கப்பட்ட கட்டிடத்தை அநாவசிய கட்டிடமாக கருதி அதிகார
தரப்பினர் அகற்ற முன்பதாக அதனை விற்று அதன் நிதியை முஸ்லிம் தர்ம நிதிக்கு
ஒப்படைக்கப் பட வேண்டும். இவ்வாறான முறையற்ற பதிவில்லாத எமது மதத்தளங்களை
பராமறிப்பவர்கள் அவைகளை தமது சொந்த சொத்தாக பயன்படுத்தாது உடனடியாக அவைகள்
வக்பு செய்யப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பங்கரகம்மன
முஸ்லிம் பெண் உயிர் தியாகம் இன்றும் வரலாற்றில் பேசப்படுவது
முஸ்லிம்களுக்கு புகழ் சேர்த்த ஒரு விடயமாகும்.
ஆனால் அதே வரிசையில் மஹியங்கனை பள்ளிவாசல் இந்த நாட்டு முஸ்லிம்களின்
வரலாற்றில் ஒரு கறுப்பு யுகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்றால்
மிகையாகாது. இனிமேலும் இந்நாட்டு முஸ்லிம்கள் கோழைகளாக வாளாது தலை
நிமிர்ந்து தனது சொத்துக்களுக்காகவும், தனது வியாபாரத்திற்காகவும் உலகளாவிய
இன்பங்களுக்காகவும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தாரை வார்க்க கூடாது.
மஹியங்கனை பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினை என்பது எமது
வரலாற்றின் ஒரு ஏடாக இன்று அமைந்துவிட்டது.
0 comments:
Post a Comment