Banner 468 x 60px

 

Wednesday, February 13, 2013

மார்க்க அறிஞர்கள் அரசியல் நடவடிக்கைகளை விட்டும் தூரமாகுதல்

0 comments

Qaradawi0மதங்களுக்கிடையேயான உரையாடல் பற்றி ஆபிரிக்க நிறுவனங்களின் கருத்துக்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டன. அதிலே மார்க்க அறிஞர்கள் அரசியல்வாதிகளுக்கு வக்காளத்து வாங்காமல் இருப்பதற்காக அரசியல் செயற்பாடுகளை விட்டும் தூரமாகுவதாக கூறுகின்றனர். மட்டுமன்றி, அவர்கள் மார்க்க சாயல் கொண்ட கட்சிகளை தமக்காக உருவாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு ஒதுங்குவதாகவும் குறிப்பிடுகின்றனர். இது விடயமாக ஷரீஆ அறிஞர்களின் கருத்து யாது?

பதில்: கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்லாஹுதஆலாவுக்கே அனைத்துப்புகழும். ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக.
மார்க்கத்தை அரசியலை விட்டும் பிரித்து நோக்குவது இஸ்லாம் அறியாத ஒரு விடயமாகும். மாறாக, அது இந்த மார்க்கத்தில் ஒரு குறைபாட்டை உருவாக்கும் முயற்சியாகும். மார்க்க அறிஞர்கள் அரசியல்வாதிகளுக்கு வக்காளத்து வாங்குவதனை விட்டும் தவிர்ந்து கொள்வது கடமையான விடயமாகும். ஆனால், அதற்காக அவர்கள் அரசியலை விட்டும் முழுமையாக விலகி விடக்கூடாது. இதனை ஷெய்க். யூஸுப் அல்கர்ளாவி பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்:
இஸ்லாத்தில் மதகுருக்கள் என்ற ஒரு பிரிவினர் கிடையாது. மாறாக, மார்க்கக் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள்தான் காணப்படுகிறார்கள். எந்த வொரு முஸ்லிமுக்கும் அல் அஸ்ஹர் போன்ற இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாத்தை பயிலமுடியாவிட்டாலும் ஷெய்க்மார்களிடமோ அல்லது நூல்கள் மூலமாகவோ இஸ்லாத்தை கற்கமுடியும். இதற்கான வாயில் தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் என்பவர்கள் மற்ற மதங்களில் காணப்படுகின்ற மதகுருக்கள் போன்றவர்களல்லர். அவர்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் விடயத்திலும் பொதுவிவகாரங்களிலும் தமக்குரிய பங்கை நிறை வேற்ற வேண்டும். அவர்கள் அரசியலை விட்டும் தூரமாகி விடக் கூடாது. ஏனென்றால், அவர்கள் மார்க்கத்தைக் கற்று, அதில் தெளிவும் பெற்றிருக்கிறார்கள்.
அல்லாஹுதஆலா விதித்த சத்திய இஸ்லாம் என்பது அரசியல் வியூகமின்றி இருக்க முடியாது. நீங்கள் இஸ்லாத்தை அரசியலை விட்டும் பிரித்து நோக்குவது இஸ்லாத்தை வோறொரு மதமாக நோக்கியதாகக் கருதப்படும். அவ்வாறு நோக்கப்படும் மதம் இஸ்லாமாக இருக்கமுடியாது.
இஸ்லாத்துக்கென்று விதிகளும் சட்டங்களும் வழிகாட்டல்களும் காணப்படுகின்றன. அவை கல்வி, ஊடகம், ஷரீஆ, ஆட்சி, செல்வம், சமாதானம், யுத்தம் போன்றவற்றுக்கும் மனித வாழ்வில் தாக்கம் செலுத்தும் அனைத்து விடயங்களுக்குமான அரசியல் வியூகம் இஸ்லாத்திலே காணப்படுகின்றது. இஸ்லாம் ஏனைய தத்துவங்களுக்கும் கருத்துக் குழப்பங்களுக்கும் அடிபணிவதனை விரும்புவது கிடையாது. இஸ்லாத்தின் தலைமையில், மற்றவர்கள் பின்பற்றும் நிலையே காணப்படும்.
இஸ்லாத்திற்கும் இன்னொரு தலைமைக்கும் இடையே வாழ்வை பிரித்து நோக்குவதனை எமது மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாம்தான் தலைமையில் இருக்கும். மஸீஹ் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறியதாக வரும் கூற்றும் பொருத்தமற்றதாகும்: “கைஸருக்குரியதை கைஸருக்கும், அல்லாஹ்வுக்குரியதனை அல்லாஹ்வுக்கும் கொடுத்து விடுங்கள்."
இஸ்லாத்தின் தத்துவம் என்ன வென்றால் கைஸரும் கைஸருக்குரிய அனைத்தும் ஏகனான அல்லாஹ்வுக்கே உரியதாகும். வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அவனுக்கே உரியதாகும்.
ஒரு முஸ்லிமின் ஆளுமை அரசியல் வியூகமின்றி இருக்க முடியாது. அந்த முஸ்லிம் இஸ்லாத்தை விளங்கியுள்ளதில் அல்லது நடைமுறைப்படுத்துவதில் குழறுபடியிருப்பின் அவன் அரசியல் வியூகமின்றி காணப்படுவான்.
இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஒரு கடமையை விதித்துள்ளது. அதுதான் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தலாகும். இதனை முஸ்லிம்களுக்கும், பொதுமக்களுக்கும் உபதேசிப்பதாகும் என்ற தலைப்பில் இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. அதுவே மார்க்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையே சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உபதேசித்தல் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டுமே இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவதற்கான அடிப்படையான நிபந்தனைகள் ஆகும். இதனையே ஸூறதுல் அஸ்ர் தெளிவுபடுத்துகின்றது.

0 comments:

Post a Comment