Wednesday, December 27, 2012 - 12:30

உலகில் மிக நீளமான அதிவேக ரயில் மார்க்கத்தை சீனா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
பீஜிங்கிற்கும் கங்சூ நகருக்கும் இடையில் இந்த அதிவேக ரயில் மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து 298 கிலோமீற்றர்கள் நீளம் கொண்ட இந்த மார்க்கத்தில் 35 இடங்களில் மாத்திரமே ரயில்கள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய ரயில் பாதையின் மூலம் 22 மணித்தியாலங்களுக்கான பயணம் 10 மணித்தியாலங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
உலக தொழில்நுட்பத்தின் முக்கிய ஒரு விடயமாக சீனாவினால் புதிய ரயில் மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் முன்னாள் தலைவர் மாசேதுங்கின் ஜனன தினத்தை நினைவு கூரும் வகையில் அதிக நீளமான ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment