
எதிர் வரும்மூன்று வருடங்களுக்குள் பூகோளத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களதும் தகவல்களை உறிஞ்சி தனக்குள் வைத்திருக்க எதிர்பார்க்கும் மேகக் கணிமையின் ஒரு சில விடயங்களை மாத்திரம் சிறிது ஆராய்வோம்.

ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை(Hardware, Software Infrastructure) அமைப்பதின் மூலதனச் செலவை தவிர்த்துகணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து பயன்பாட்டுக் கட்டண(Usage Fee) முறையில் தனது தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம்.
உதாரணமாக ஒவ்வொருவரும் நீரைபெற்றுக்கொள்ள கிணறுதோன்றி, மோட்டார் வாங்கி, தனி அறை அமைத்து, அதை பராமரிக்க ஆள் வைக்க செலவளிப்பதை விட மிக இலகுவான முறையில் அரசாங்க குழாய் அமைப்பூடாக (Pipe Line) அலகு (Unit) முறையில் நீரை பெற்றுக் கொள்ள முடியும்.
Vmware, Sun Microsystems, Rackspace US, IBM, Amazon, Google, BMC, Microsoft, மற்றும் Yahooஆகியவை பிரதான மேகக் கணிமை சேவை வழங்குநர்களாவர்.
மேகக் கணிமை என்பது விசையியக்க ரீதியாக (Dynamically) அளவிடக்கூடிய மற்றும் மெய் நிகராகப்பட்ட மூலாதாரங்கள் இணையத் தளம் (Virtualized resources) மூலமாக சேவையாக வழங்கப்படக் கூடிய கணக்கீட்டு முறையாகும். இதனூடாக பின்வரும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
- சேவை உள்கட்டுமானம் (Infrastructure as a service-IaaS)
- சேவையாக மென்பொருள் தளம் (Platform as a service-PaaS)
- சேவையாக மென்பொருள் (Software as a service-SaaS)
இதற்குதரவு நடுவங்கள் (Data Centers), கணினி வலையமைப்பு (Network), மெய்ந்நிகர் மென்பொருட்கள், இயக்கு தளங்களும் மென்பொருட்களும் போன்றன கூறுகளாகும்.
பயனர்களின் (Users) சுதந்திரம் வரம்பிற்குட்படுவதற்காகவும், அவர்களை கிளவுட் கம்ப்யூட்டிங் வழங்குநரை சார்ந்திருக்கும்படி செய்வதற்காகவும் கிளவுட் கம்ப்யூட்டிங் விமர்சிக்கப்படுகிறகு, வழங்குநர் விருப்பத்திற்கேற்ப வழங்கும் பயன்பாடுகளையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் சில விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வகை மாதிரியாக, பயனர்களுக்கு புதிய பயன்பாடுகளை நிறுவிக்கொள்ளும் சுதந்திரம் இல்லை என்பதோடு இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டரிமிருந்து அங்கீகாரம் பெறவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இது சுதந்திரத்தையும் படைப்பாக்கத்திறனையும் (Creativity) வரம்பிற்குட்படுத்துகிறது.
எமது சமூகத்தைப் பொருத்தவரை சமூக வலைப்பின்னல் அமைப்புகளான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ஏற்கனவே தனிப்பட்ட விபரங்கள், சொந்தங்கள், நண்பர்கள், வைபவங்கள் உட்பட அன்றாட எமது செயற்பாடுகளும் போடோக்களுடன் பதிவேற்றப்பட்டு யூதர்களின் கையில் இருக்கும் நிலையில் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநர்கள் எமது நிறுவனங்களதும், ஊழியர்களதும் இரகசியங்கள், சூத்திரங்கள், வரவு, செலவு, பதவி, சம்பளம், வங்கிக்கணக்கு, அடையாள அட்டை இலக்கம் உட்பட ஒட்டு மொத்த விபரத்தையுமே உறிஞ்சி, எமது எதிரிகளிடமும், அரசாங்கங்களிடமும் ஒப்படைத்து எம்மை உளவு பார்த்து பெரியதொரு ஆபத்துக்கு இழுத்துச்செல்கிறது என்பதை சிந்தித்து அடுத்த நகர்வை நகர்த்த வேண்டி இருக்கிறது.
படம் - விக்கிபீடியா
0 comments:
Post a Comment