Banner 468 x 60px

 

Tuesday, December 25, 2012

சிரிய அரசாங்கம் எதிர்வரும் ஜனவரிக்கு முன்பு வீழ்ந்துவிடும்

0 comments


wwwww
சிரிய அரசாங்கம் எதிர்வரும் ஜனவரிக்கு முன்பு வீழ்ந்துவிடும் என்று சிரிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான சிரிய தேசிய கூட்டணியின் உறுப்பினர் காலித் கவ்ஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.சிரிய ஜனாதிபதி பஷ்ஷார் அல் அஸத் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதுடன் தனது இடத்தை மாற்றிக் கொள்கிறார்.முன்னால் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூஸைனும் அவரது கடைசி நாட்களில் இவ்வாறு நடந்து கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கிய பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்த கவ்ஜா பெரும் நம்பிக்கையீனம் பஷ்ஷார் அஸதை பீடித்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கூட்டுப்படுகொலைகளை செய்திருக்க மாட்டார். எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்பே அவருடைய ஆட்சி கவிழ்க்கப்படும் என  தெரிவித்தார்.
தற்போது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாடு உள்ளது. சிரியாவின் 70 வீதமான நிலப்பரப்புக்கள் சிரிய எதிரணியினர் வசம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரிய நெருக்கடிக்கு துருக்கிய தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுத்திட்டம் குறித்த ஊடகங்களின் அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த அவர், அது குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றார். தற்போது பஷ்ஷார் அஸதின் ஆட்சியின் கடைசி தருணங்களே பேசுபொருளாயிருக்கிறது. அஸதுடன் தொடர்பான எந்த அரசாங்கத்தையும் சிரிய மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஷ்ஷார் அல் அஸத் சிரிய மக்களுக்கு எதிராக சில இடங்களில் இரசாயன ஆயுதங்களை பாவித்திருக்கிறார். பஷ்ஷாரும் அவரது இரு மாமனாரும் அஸதின் சகோதரரொருவரும் மட்டுமே தற்போது சிரியாவில் தங்கியுள்ளனர். அவரது ஏனைய குடும்பத்தவரகள் அமெரிக்காவிலும் கிரேக்கத்திலும் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.

0 comments:

Post a Comment