
முதற்கட்ட வாக்களிப்பின் போது, புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக 56.8 வீத வாக்குகளும் இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது 71.4 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்ந எகிப்தின் புதிய அரசியலமைப்பு சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சர்வதேச அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள், “தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் சாசனம் எகிப்தின் வரலாற்றிலே மிகச் சிறந்த ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அரசியலமைப்பு 100 சட்ட நிபுணர்கள் சேர்ந்து பல மாதங்கள் கலந்தாலோசித்தே பின்பே உருவாக்கப்பட்டுள்ளது.
எகிப்திய புரட்சிக்கு பின்னர், முபாரக்கின் எச்ச சொச்சங்கள் எகிப்தின் ஜனநாயக மாற்றத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலையிலேயே இந்த அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.
எகிப்தின் ஜனாதிபதியாக கலாநிதி முர்ஸி பொறுப்பேற்றதன் பின் நடைபெறும் மிக முக்கியமான நகர்வுகளில் ஒன்றாக இது கணிக்கப்படுகிறது.
எகிப்தின் ஸ்திரப்பாட்டுக்கும் அதன் எழுச்சிக்கும் இந்த புதிய அரசியலமைப்பு காலாய் அமையும் என்பது இஸ்லாமிய வாதிகளின் கருத்தாக உள்ள
து
து
0 comments:
Post a Comment