December 27, 2012 -
மசுரங் எனப்படும் ஒரு வகை நெல்லில் இருந்து புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்கான இரசாயனக் கலவை அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழில்நுட்ப பரிசோதனை மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக புத்தலகோட நெல் ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மனித உடலில் அவ்வப்போது புற்றுநோய் உயிரணுக்கள் உருவாகி அழிகின்றமை வழமையாகும் என நிலையத்தின் தலைவர் கலாநிதி நிமல் திசாநாயக்க கூறியுள்ளார்.
எனினும் மசுரங் எனப்படும் நெல்லினால் பெறப்படும் அரிசியை உட்கொள்ளும்போது புற்றுநோய் உயிரணுக்கள் துரிதமாக அழிவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நெல்லில் புற்றுநோய் எதிர்ப்புக்கான இரசாயனக் கலவை அடங்கியுள்ளமை ஆய்வுகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment