Banner 468 x 60px

 

Saturday, December 29, 2012

அரசை கவிழ்க்க சதி: எகிப்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது விசாரணை

0 comments

அல் பரதி, அம்ர் மூஸா, சபாஹி மீது குற்றச்சாட்டு

எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்க்க சதி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு தொடர்பில் எதிர்ப்பாளர்களின் முன்னணி தலைவர்கள் மீது விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை ஆரம் பிக்கப்பட்டதாக செய்திகள் தெரி விக்கின்றன. இதில் எதிர்க்கட்சித் தலைவர்களான நோபல் விருது வென்ற ஐ. நா. வின் அணு கண்காணிப்புப் பிரிவு முன்னாள் தலைவர் மொஹமட் அல் பரதி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அம்ர் மூஸா மற்றும் ஹம்தீன் சபாஹி ஆகியோர் மீதே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களுள் அம்ர் மூஸா மற்றும் சபாஹி ஆகியோர் கடந்த ஜனா திபதித் தேர்தலில் மொஹமட் முர்சியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாவர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சாதாரண எகிப்து மக்களை நாட்டின் இறை யாண்மைக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்படத் தூண்டுவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இணைய தளத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
எனினும் முரண்பாடுகளைக் களைய எதிர்த்தரப்பினரை பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து ஒரு தினத்திலேயே மேற்படி மூவர் மீது விசாரணை ஆரம் பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசாரணை எதிர்ப்பாளர்களுக்கும் ஜனாதிபதி ஆதரவாளர்களுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது விசாரணைக் குள்ளாகியுள்ள மூன்று எதிர்க்கட்சி தலைவர்களும் இணைந்து அண்மையில் தேசிய மீட்பு முன்னணி என்ற கூட்டணியை அமைத்து ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களினால் வன்முறைகளும் பதிவாயின. குறிப்பாக எதிர்ப்பாளர்களும், முர்சி ஆதரவு இஸ்லாமியவாதிகளுக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றன.
மறுபுறத்தில் எகிப்தின் பாராளு மன்றத்துறை அமைச்சர் மொஹமத் மஹ்சூப் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
தனது நம்பிக்கைக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதால் தாம் பதவி விலகுவதாக மஹ்சூப் காரணம் கூறியிருந்தார். மஹ்சூப் நவீன இஸ்லாமிய சிந்தனை கொண்ட வாஸ்த் கட்சியை சேர்ந்தவராவார். இவரது பதவி விலகலுடன் இந்த வாரத்தில் அமைச்சரவையில் இருந்து இரண்டாமவர் இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இரு வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமையவே எகிப்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் ஹொஸ்னி முபாரக் அரசை அமைக்க சதி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அல் பரதி தலைமையிலான எதிர்க்கட்சியின் செயலாளர் நாயகம் இமாம் அபு காசி குறிப்பிடும் போது, “இந்த விசாரணை மூலம் அரசு தனது அரசியல் எதிர்ப்பாளர்களை இல்லாதொழிக்க முயற்சிப்பது தெளிவாகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் முர்சியும் முபாரக் போன்றே தனது எதிர்ப்பாளர்களை நடத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான சபாஹியின் பேச்சாளர் கூறும் போது, சபாஹி முபாரக் அரசிலும் இவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டார் என்றார்.
ஜனாதிபதி முர்சி கடந்த புதன்கிழமை தொலைக்காட்சி மூலமான தனது உரையில்:- நாட்டின் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர தேசிய பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அனைத்து தரப்பும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். எகிப்தில் அரசியலமைப்புக்கு எதிராக ஒருமாத காலமாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த டிசம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற இவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் முர்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மூண்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் எகிப்தின் புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக தொடர்ந்து போராட எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சட்டம் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் பெண்கள் மற்றும் சிறுப்பான்மையினரின் உரிமையை பாதுகாக்கத்தவறிவிட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றனர்.

0 comments:

Post a Comment