அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கரையோர பிரதேச மக்கள் கடும் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக GREENCO சுற்றாடல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எதிர் கொண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக காத்தான்குடியின் ஆற்றங்கரை பிரதேசங்களில் நுளம்புகள் பெறுகியுள்ளன என்று அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உயிர்கொல்லி நோய்கள், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாலும் அவ்அமைப்பு எச்சரித்துள்ளது.
புதியகாத்தான்குடி பிரதேசத்தில் சில வீதிகளிலும், வீடுகளிலும் இன்னும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும் உரிய முறையில் திட்டமிடப்படாமல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொங்கிறிட் வீதிகளினால் வெள்ளம் வழிந்தோடாமல் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலங்களில் இவ்வாறான வெள்ள அணர்த்தங்களை எதிர்கொள்வதற்காக அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ள அணர்த்தத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு மற்றும் நுளம்பு பெருக்கம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் GREENCO அமைப்பு அறிவித்துள்ளதோடு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் GREENCO சுற்றாடல் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
.
0 comments:
Post a Comment