அது என்னவெனில் கையடக்கத்தொலைபேசி பாவனையானது தொற்றக் கூடியது என்பதாகும்.
அதாவது ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியை எடுக்கும் போது அதனைப் பார்க்கும் மற்றுமொருவரும் அதையே செய்வதாக ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் நமது பார்வையில் படுமொருவர் கையடக்கத்தொலைபேசியை உபயோகிப்பாராயின் நமக்கும் நமது கையடக்கத்தொலைபேசியினை உபயோகிக்கும் ஆவல் எழுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இவ் ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்கும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டே இவ் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் வயதானவர்களிடையே இவ் ஆராய்ச்சியின் முடிவு மாறுபட்டதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயதானோர் பொதுவாக கையடக்கத்தொலைபேசிகளில் அதிகளவு தங்கியிருப்பதே இதற்கான காரணமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://issuu.com/kavinthan/docs/cell_phone_use_is_contagious/
1

1
0 comments:
Post a Comment