Banner 468 x 60px

 

Tuesday, December 25, 2012

முஸ்லிம் சமூகத்திற்கான மூல உபாயத் திட்டத்தின் (Strategic Plan) தேவை

0 comments


Strategic-Plan0சிராஜ் மஷ்ஹூர்
முஸ்லிம் சமூகம் தாமாக முன்வந்து (Proactive) செயற்படுவது குறைவு. அது அதிகமான சந்தர்ப்பங்களில் எதிர்வினையாற்றும் (Reactive) சமூகமாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு விவகாரம் (Issue) வந்த வண்ணமே உள்ளது.
அதனை உடனுக்குடன் எவ்வாறு எதிர் கொள்வது பற்றியே எமது சிந்தனையும் செயற்பாடுகளும் சுருங்கியுள்ளன. செயற்படுபவர்கள் மட்டுமல்லசும்மா இருந்து கொண்டு விமர்சிப்பவர்களது நிலையும் இதுதான். எல்லோரும் அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிச் சூழலுள் சிறைப்பட்டிருக்கின்றனர். 
குறுங்காலப் பிரச்சினைகள் (Short Term Issues) என்ற வட்டத்திலிருந்துநடுத்தர- நீண்டகால இலக்குகளை (Mid Term & Long Term Targets) நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிப்படுத்த வேண்டியுள்ளது. தொலைநோக்கோடு செயற்படும் தலைமைகளே (Visionary Leaders) இன்று எமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.
ஒரே வகையான பணியை பலரும் திரும்பத் திரும்ப செய்வதை மிகப் பரவலாக அவதானிக்கலாம். இதனால் மனித வளங்களும் பௌதிக வளங்களும் பொருளாதாரமும் நேரமும் பெருமளவு விரயமாகின்றது. அத்துடன் விஞ்ஞானபூர்வமாக நவீன உத்திகளுடன் செயற்படுவதற்கான திறனும் புத்தாக்க சிந்தனையும் எம்மத்தியில் குறைவாகவே உள்ளது.
2012 இல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற பல சம்பவங்களின் பின்புலத்தைக் கவனமாக ஆராய்ந்தால்முஸ்லிம் சமூகம் நீண்ட கால நோக்கில் பாரிய அபாயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் எனக் கருத முடியும். அதற்கான நோய்க் குறிகள் மிகத் தெளிவாக வெளித் தெரிகின்றன. நோய் முற்ற முன்னே இதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்.
போர்க் கால இலங்கையில் ஆயுதப் போராட்டக் குழுக்களே முக்கிய இலக்காக இருந்தன. அதன் விளைவாக தமிழ் சமூகம் பெருமளவு இழப்புகளை எதிர்கொண்டது. முஸ்லிம் சமூகமும் சிங்கள சமூகமும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன. இப்போது அந்த நிலமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Strategic-Plan1போருக்குப் பிந்திய இலங்கை எவ்வாறு வடிவம் கொள்ளும் என்பதற்கான அறிகுறிகளே இப்போது மேலெழுந்துள்ளன. இப்போது முஸ்லிம் சமூகம் குறிவைக்கப்படுவதை உணர முடிகிறது. எமக்கெதிரான  எதிர்மறை வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதை,ஆழ்ந்து நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.
இதனை நுணுக்கமாக அடையாளம் கண்டு,இப்போதே பரிகாரம் காண வேண்டும். நிலமை  மோசமடைந்ததன் பின்னர் தடுமாறி நிற்பதை விட,ஆழ்ந்த கவனத்தோடு முன்னோக்கி நகரும் மூல உபாயங்கள் எமக்கு மிகவும் இன்றியமையாதவை.
முஸ்லிம் சமூகத்தின் அக முரண்பாடுகளைத் தணித்தல்முரண்பாட்டு முகாமைத்துவம்மாற்றுக் கருத்துகளையும் பன்மைத்துவ அணுகுமுறையையும் மதித்து செயற்படும் பக்குவம்எமது பலவீனங்களை இனங்கண்டு நீக்குதல்குறைந்தபட்சம் உடன்பட முடியுமான பொது வேலைத் திட்டத்தை அடையாளம் காணல்அதில் ஒன்று பட்டு உழைத்தல்நம்மிடையே நிலவும் சங்கடமான மௌனத்தைக் கலைத்தல் போன்ற நடவடிக்கைகள் உள்நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும்.
நேச சக்திகளை அடையாளம் கண்டுஅவர்களது உள்ளங்களை வெல்லுதல்முரண்பாடான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளோருடன் உரையாடல்களை மேற்கொள்ளல்,புரிந்துணர்வை வளர்த்தல்பொது வேலைத் திட்டங்களில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக மாறுதல்நாட்டை வளப்படுத்தப் பங்களித்தல்நாட்டைக் கட்டியெழுப்ப உதவிக் கரம் நீட்டல்முரண்பாடுகளைத் தீர்க்க உதவுதல் போன்ற  வெளிநோக்கிய நடவடிக்கைகளும் அவசியம்.
இந்த வகையில் சமூகத்தின் உள்ளேயும் வெளியேயுமான (Intra and Inter Community) செயற்பாடுகளில் நாம் நமது பார்வையை செலுத்த வேண்டும். அதன் பின்னர் இவற்றை முதன்மைப்படுத்தி (Prioritization) அந்த முன்னுரிமைகளில் எமது கவனத்தைக் குவிமையப்படுத்த வேண்டும்.
அடுத்தவர்களின் குறைகளைத் தேடும் எதிர்மறை மனோபாவத்திலிருந்து (‡Negative Attitude) எமது சமூகத்தை விடுவித்துநேர்மைய அணுகுமுறைக்கு (Potive Approach) பழக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அறுவடை பாரியதாய் மாறும்.
இந்தப் பின்னணியில் எமது சமூகத்திற்கென்று தனியான மூல உபாயத் திட்டமொன்று (Strategic Plan) இன்றியமையாததாக மாறியுள்ளது. இதற்கு யார் முன்கையெடுப்பது என்ற வாதப் பிரதிவாதங்கள் இப்போது தேவையில்லை. எண்ணங்களை (Ideas) செயல்களாக (Action) மொழி மாற்றுவதற்கான மிகச் சிறந்த தருணம் இதுதான். இனியும் நாம் தாமதிக்க முடியாது.
எமது நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்துஅதற்கான மூல உபாயங்களை வகுக்க வேண்டும். அது நடைமுறைச் சாத்தியமான திட்டமாக வரையப்பட வேண்டும். அந்த செயற் திட்டம் சமூகத்தின் எல்லா மட்ட நிறுவனங்கள்இயக்கங்கள்தலைமைகள்ஆளுமைகள்,ஆய்வறிவாளர்கள்செயற்பாட்டாளர்கள்... என்ற விரிந்த வட்டத்தின் முன்னே வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான உரையாடல்கலந்துரையாடல் மூலம்தேசியபிராந்தியஉள்ளூர் மட்ட செயற்பாடுகள் அனைத்தும் எமது மூல உபாய இலக்குகளை நோக்கிய வகையில் முன்னெடுக்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும்இந்தப் பொது இலக்குகளை நோக்கி பங்களிப்புச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த வேலைத் திட்டம் பரவலாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால்,நமது சமூகத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாய் அமையும். இந்த இலக்குகளை நோக்கி வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவோம்.
 

0 comments:

Post a Comment