Banner 468 x 60px

 

Friday, December 14, 2012

புனிதமான பதவியை பிரதம நீதியரசர் ~pராணி மிகக் கேவலப்படுத்திவிட்டார்

0 comments

புனிதமான பதவியை பிரதம நீதியரசர் ~pராணி மிகக் கேவலப்படுத்திவிட்டார்

ஜனாதிபதி
  •  சொத்து விபரத்தை வெளியிடவில்லை

  •  நீதித்துறை சீரழிவுக்கு இவரே காரணம்

  •  தரக்குறைவான அதிகார துஷ்பிரயோகம்

  •  நீதித்துறை பக்கசார்பாக செயற்பட்டிருக்கிறது

"நீதித்துறையில் அதிஉயர் பதவிவகிக்கும் பிரதம நீதியரசர் தனது சொத்து விபரத்தை வெளியிடத் தவறிவிட்டார். இதன்மூலம் அவர் பெரும் குற்றம் இழைத்ததுடன் பிரதம நீதியரசர் பதவியின் கெளரவத்தையும் காப்பாற்ற தவறியுள்ளார். இவர் புனிதமான பிரதம நீதியரசர் பதவியை அரசியல் மயமாக்கி கேவலப்படுத்திவிட்டார்." இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் செய்திப்பிரிவு பொறுப்பாளர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார்.
அலரிமாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது; பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டார நாயக்க அப்பதவியின் கெளரவத்தை இழிவுபடுத்தக்கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறார். அரச ஊழியர்களும், பொதுத்துறையில் முக்கிய பதவி வகிப்பவர்களும் தங்கள் சொத்து விபரங்களை வருடா வருடம் வெளியிட வேண்டும். இவ்விதம் சொத்து விபரங்களை வெளியிடாது குற்றம் இழைத்த அரச ஊழியர்கள் பலர் சிறைத்தண்டனையையும் பெற்றிருக்கிறார்கள்.
நீதித்துறை இந்த பிரதம நீதியரசரின் நிர்வாகத்தின் கீழ் சீர்குலைந்து போயுள்ளது. மனைவி நீதிபதியாக இருக்கும் போது அவரது கணவன் அதே நீதிமன்றத்தில் வேறொரு பதவியில் பணி புரிகிறார்.
பிரதம நீதியரசர், நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஒரு பொறுப்பதிகாரி. மிகவும் தரக்குறைவான முறையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இவர் ஒரு இளம் பெண் நீதவானிடம் இருந்து தரக்குறைவான சேவை ஒன்றை கேட்டு அந்தப் பெண்மணி அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததனால் அந்தப் பெண் நீதவான் ஒருவருடத்தில் 7 இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அந்த பெண் நீதவான் காட்டுப் பிரதேசம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனால் அவர் பொலிஸாரின் பாதுகாப்பை கேட்டிருந்தார். அவ்விதம் நீதிச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றி பொலிஸ் மா அதிபரிடம் பாதுகாப்பு கேட்டதை அவ் ஆணைக்குழுவின் அதிகாரி ஒரு குற்றமாக கருதி அவரிடம் விளக்கமும் கேட்டிருக்கிறார்.
இவ்விதம், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநயாக்கவின் நிர்வாகத்தின் கீழ் நீதித்துறை பக்கச்சார்பாக செயற்பட்டிரு க்கிறதென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
சுவர்ணாதிபதி என்ற ஒரு நீதிபதி கலாநிதி ஷராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஆட்சேப மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதனால், பிரதம நீதியரசர் அவர் மீது வஞ்சம் தீர்க்கும் முகமாக அவருக்கு எதிராக செயற்பட்டதனால் அந்த நீதிபதி நாட்டை விட்டே சென்றுவிட்டார். அவரது சகோதரரும் ஒரு நீதிபதி. அவருக்கும் பிரதம நீதியரசர் வழக்கு விசாரணை செய்வதற்கு இடமளிக்க வில்லை.
பிரதம நீதியரசர் இவ்விதம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென்றும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறுகையில், பிரதீப் காரியவசம் ட்ரில்லியம் தொடர்மாடி கட்டிடத்தில் சொகுசு வீடொன்றை வாங்குவதற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து விலைக்கழிவு ஒன்றை பெற்றிருக்கிறார். அந்த நிறுவனத்தின் தலைவர் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் வாக்குமூலம் அளிக்கையில், பிரதீப் காரியவசத்தின் மனைவி நாட்டின் பிரதம நீதியரசராக இருக்கின்ற காரணத்தினால் நான் அவரை கெளரவிக்கும் முகமாகவே தாம் இந்த விலைக்கழிவை அளித்தேன் என்று கூறியுள்ளார்.
சாதாரண உடையில் தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்த ட்ரில்லியம் தொடர்மாடி கட்டிடத்திற்கு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க வந்திருந்த போது அவரை கெளரவமாக நடத்தவில்லை என்று அவர் செய்த குற்றச்சாட்டின் நிமித்தம் அங்கு பணிபுரிந்த ஒரு ஊழி யரை தாம் வேலை நீக்கம் செய்ததாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த ஊழியர் தனக்கு இவர்தான் பிரதம நீதியரசர் என்று தெரியாதிருந்ததென்று விளக்கம் அளித்தும் பிரதம நீதியரசரை திருப்தி அடையச் செய்வதற்காகவே அந்த அப்பாவி ஊழியரை அந்த நிறுவனத்தின் தலைவர் வேலை நீக்கம் செய்துள்ளார். இவ்விதம்தான் பிரதம நீதியரசர் தனது நீதி பரிபாலனத்தை தவறான முறையில் செயற்படுத்தினார்.
மத்திய வங்கியின் ஆளுநராக
பிரதம நீதியரசரை நியமித்திருப்பேன்
பிரதம நீதியரசர் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பு செய்த திறமையை நான் முன்கூட்டியே தெரிந்து கொண்டிருந்தால் அவருக்கு பிரதம நீதியரசர் பதவிக்கு பதில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை கொடுத்திருப்பேன் என்று ஜனாதிபதி ஒரு சந்தர்ப்பத்தில் நகைச்சுவையாகக் கூறினார்.

0 comments:

Post a Comment