Banner 468 x 60px

 

Friday, December 14, 2012

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னர் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்றுதல்

0 comments


Muhasabahஹஜ்ஜுக்கு செல்ல முன்னர் ஒருவர் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகள் விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதனைக் கூறமுடியுமா?
கலாநிதி ஹுஸாமுத்தீன் அபானாஷெய்க் பின் பாஸ்
இஸ்லாமிய சகோதரர்களே! நீங்கள் வினவிய வினாவையிட்டு நாம் சந்தோஷப்படுகிறோம். இது இஸ்லாம் உலகின் குழப்பமான பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வு வழங்கக் கூடியதாகும் என்ற உமது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அல்லாஹ் இதன் மூலமாக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை இஸ்லாத்தின் ஒளியின் பால் வழிகாட்டலாம்.
ஹஜ்ஜுக்காக தயாராகுவது மிகமுக்கியமான ஒரு விடயமாகும். அது ஹஜ்ஜை மிகச்சரியான முறையில் நிறைவேற்றுவதற்கும் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவிசெய்யும். யார் ஹஜ் கடமையை நிறைவேற்ற விரும்புகிறாரோ அவர் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறை வேற்றிட வேண்டுமென முஸ்லிம் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹஜ் செய்ய விரும்புபவர் மற்றவருக்குரியவற்றை அவர்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்.
இதனோடு சேர்த்து பலஸ்தீன குத்ஸ் பல்கலைக்கழக பிக்ஹ் விரிவுரையாளர் கலாநிதி ஹுஸாமுத்தீன் மூஸா அபானா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
அல்லாஹுதஆலா குறிப்பிடுகிறான்:
"அன்றியும்உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும்நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து (எந்த) ஒரு பகுதியையும்அநியாயமாகத் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்." (02: 188)
"முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்." (05: 01)
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: "முறையீடு செய்பவர்கள் தமது முறைப்பாட்டுக்கான நீதியை நீதி வழங்கும் நாளில் பெற்றுக்கொள்வார்கள். கொம்பில்லாத ஆடு கொம்புள்ள ஆட்டின் அநியாயத்துக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும்."
"யார் ஒருவரிமிருந்து பணத்தை மீளச்செலுத்தும் நோக்கத்தில் பெறுகிறாரோஅல்லாஹ் அவருக்கு சார்பாக அதனை செலுத்தி விடுவான். யார் அந்தப்பணத்தை வீணாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பெறுகிறாரோஅல்லாஹ் அவரையே வீணாக்கிவிடுவான்." (புஹாரி)
அல்லாஹுதஆலாவின் தூதர் (ஸல்) அவர்கள்: "வங்குரோத்துக்காரன் யாரென்று தெரியுமா?" என வினவஸஹாபாக்கள்: "வங்கு ரோத்துக்காரன் என்பவன் தீனாரோசெல்வமோ இல்லாத மனிதனாகும்" என்றார்கள். அதற்கு நபியவர்கள்: "எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் யாரென்றால் மறுமையில் தொழுகைநோன்புஸகாத்தோடு வருவான். ஆனால்அவன் மற்றவர்களுக்கு ஏசியிருப்பான்மற்றவர்களைப் பற்றி புறம் பேசியிருப்பான்மற்றவர்களின் சொத்துக்களை வீணாக சாப்பிட்டிருப்பான்மற்றவர்களின் இரத்தத்தை வீணாக ஓடச் செய்திருப்பான்மற்றவர்களுக்கு அடித்திருப்பான். எனவேஅவனது நன்மைகள் மற்றவர்களுக்கு வழங்கப்படும். அவனது நன்மைகள் போதாமல் போனால்மற்றவர்களின் பாவங்கள் இவருக்கு வழங்கப்படும். இறுதியாக அவன் நரகில் எறியப்படுவான்." (முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் உரிமையாளர்களின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டுமென பல ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. மேலும்ஒரு முஸ்லிம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விரும்பினால் மற்றவர்களின் கடமைகளை நிறைவேற்றி விடவேண்டுமென இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இமாம் நவவி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"ஒரு முஸ்லிம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விரும்பினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் போராட விரும்பினால் அல்லது இதனைப் போன்றவற்றைச் செய்ய விரும்பினால்,அவர் முதன் முதலாக அனைத்து பாவமானமோசமான காரியங்களிலிருந்தும் தூரமாக வேண்டும். அத்தோடு உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்முடியுமானளவு அதிகமான கடன்களை அடைத்துவிட வேண்டும்மற்றவர்கள் நம்பிக்கையாக ஒப்படைத்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்மற்றவர்களோடு உள்ள பங்குடமைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்சாட்சிகளுக்கு முன் தனது வாரிசுத்சொத்தை எழுத வேண்டும்அவரால் கடனை நிறைவேற்ற முடியாது போனால் கடனை நிறைவேற்றும் ஒருவரை நியமித்து விட்டுச் செல்லவேண்டும்அவர் திரும்பி வரும் வரை அவரின் குடும்பத்திற்கும் அவரின் பராமரிப்பின் கீழ் இருப்போருக்கும் போதுமானளவு பணத்தை விட்டுச்செல்ல வேண்டும்." (அல் மஜ்மூஃ - பாகம் 04, பக்கம் 385)
இந்தக் கேள்விக்கு மறைந்த சவுதி அரேபிய முப்தி ஷெய்க். அப்துல் அஸீஸ் பின் பாஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"ஒரு முஸ்லிம் ஹஜ் கடமையை அல்லது உம்றாவை நிறைவேற்ற விரும்பினால்அவர் தனது குடும்பத்துக்கும் தனது நண்பர்களுக்கும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறும் அவனது ஏவல்களை ஏற்றுவிலக்கல்களைத் தவிர்ந்து வாழ வேண்டும் என்றும் உபதேசிக்க வேண்டும். அவன் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றையும் தனக்கு மற்றவர்கள் தர வேண்டியவற்றையும் சாட்சிகளுடன் எழுத வேண்டும் மற்றும் அனைத்துப் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹுதஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
"முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி)நீங்கள் வெற்றி பெறும் பொருட்டுநீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்." (24: 31)
உண்மையான தவ்பா என்பது பாவங்களை விட்டு தவிர்ந்திருப்பதிலும்அதற்காக வருந்துவதிலும்,அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூணுவதிலும்தான் இருக்கிறது. தவ்பாவுக்கான நான்காவது நிபந்தனை மக்களின் உரிமைகள்உயிர்உடமைகள்கண்ணியம் என்பவற்றில் தவறிழைத்திருப்பின் அவர் ஹஜ்ஜுக்காக செல்ல முன்னர் உடமைகளை ஒப்படைத்து,பாவமன்னிப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
"எவரொருவர் தனது சகோதரரிடம் கடன்பெற்றிருப்பின் எந்த தீனாரோ அல்லது திர்ஹமோ பிரயோசனப்படாத நாள் வரமுன்னர் இன்றே தீர்த்துக் கொள்ளுங்கள். (அவ்வாறில்லையாயின்) மறுமையில் அவரின் நன்மையிலிருந்து எடுத்து மற்றவருக்கு வழங்கப்படும். அவரிடம் நன்மைகள் இல்லையாயின் மற்றவர்களின் பாவங்கள் இவருக்கு சேர்க்கப்படும்."
எனவேஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்ல முன்னர் முதலாவதாக மற்றவருக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அல்லாஹுதஆலாவே அனைத்தையும் அறிந்தவன்.

0 comments:

Post a Comment