Banner 468 x 60px

 

Tuesday, December 11, 2012

யானைகளின் இலத்தியிலிருந்து உலகின் விலை உயர்ந்த கோப்பி

0 comments
 
By HSM Ihthisham
2012-12-11


யானைகளின் இலத்தியைப் பயன்படுத்தி உலகிலேயே விலை உயர்ந்த கோப்பியை தயாரித்து கனேடியர் ஒருவர் புதுமை படைத்துள்ளார்.

பிளேக் டின்கின் (42) என்ற இக் கனேடியர் 20 தாய்லாந்து யானைகளுக்கு அவரை விதைகளை உண்ணக் கொடுத்த பின் அவற்றிலிருந்து பெறப்பட்ட இலத்தியைப் பெற்று இந்தக் கோப்பியை தயாரித்து வருகிறார்.

மேற்படி பிளெக் ஐவெரி கோப்பியானது அரிய சுவையுடன் பருகுவதற்கான ஆவலை தூண்டக்கூடிய சுகந்தமான மணத்துடனும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்தக் கோப்பியைத் தயாரிப்பதற்கு தேவையான சாணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு யானைக்கும் மாதம் ஒன்றுக்கு 625 ஸ்ரேரிங் பவுணை செலவிட வேண்டியுள்ளதாக டின்கின் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோப்பியின் 1 இறாத்தலின் விலை 312 ஸ்ரேலிங் பவுண்களாகும்.




0 comments:

Post a Comment