Banner 468 x 60px

 

Tuesday, December 11, 2012

கானா ஜனாதிபதியாக மஹமா மீண்டும் தேர்வு

0 comments

கானா ஜனாதிபதியாக மஹமா மீண்டும் தேர்வு

கானா ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோன் மஹமா வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப் பட்டது. அதில் தற்போதைய ஜனாதிபதி மஹமா 50.7 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சித் தலைவர் நானா அகுபொ அட்டோ 47.74 வீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சி, ஆளும் கட்சி தேர்தல் ஆணைய அதிகாரிகளை விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அனைத்து தரப்பும் மக்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஆணை கடவுளின் ஆணை என்றும் ஜனாதிபதி மஹமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.
ஆபிரிக்காவில் மிக வேகமாக வளர்ந்துவரும் கானா அந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு சில நாடுகளில் ஒன்றாகும்.

0 comments:

Post a Comment