![]() இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் வழியில் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான எரிபொருள் நிலையம் அமைக்க 5 இலட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லொன்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணில் சுற்றி திரியும் அந்த விண்கல் அட்லஸ் 5 ரொக்கெட் மூலம் இழுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அட்லஸ் 5 ரொக்கெட்டுடன் விண்கல்லை பிடிக்கக்கூடிய பெரிய கூண்டு ஒன்றும் அந்த ரொக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்படவுள்ளது. அது விண்கல்லை பிடித்து அப்படியே இழுத்து சென்று சர்வதேச விண்வெளி மையம் அருகே நிலை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாசா மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், விண்கல்லொன்றை நகர்த்தும் முதலாவது மனித முயற்சியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. |
---|
Monday, December 31, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment